தேவனுக்கே மகிமையுண்டாவதாக

உபாகமம் 24: 14

உன் சகோதரரிலும், உன் தேசத்தின் வாசல்களிலுள்ள அந்நியரிலும் ஏழையும் எளிமையுமான கூலிக்காரனை ஒடுக்காயாக.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம் உள்ளத்தில் அந்நிய அக்கினியோடு தேவ சந்நிதியில் வரலாகாது.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் சத்துருவினோடு போராடி வெற்றிப்பெற வேண்டுமானால் இருபது வயதுக்கு மேற்ப்பட்டவர்களாக இருந்து சத்தியத்திற்கு கீழ்படிந்து, தன்னை பரிசுத்தப்படுத்திக் கொண்டவர்கள் மட்டுமே சபைகளில் சத்துருவினை முறியடித்து ஜெயிக்கமுடியும்.  

அடுத்ததாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

எண்ணாகமம் 26: 52-65 

கர்த்தர் மோசேயை நோக்கி:

இவர்களுடைய பேர்களின் இலக்கத்திற்குத்தக்கதாய் தேசம் இவர்களுக்குச் சுதந்தரமாகப் பங்கிடப்படவேண்டும்.

அநேகம்பேருக்கு அதிக சுதந்தரமும் கொஞ்சம்பேருக்குக் கொஞ்ச சுதந்தரமும் கொடுப்பாயாக; அவர்களில் எண்ணப்பட்ட இலக்கத்திற்குத் தக்கதாக அவரவர்களுக்குச் சுதந்திரம் கொடுக்கப்படவேண்டும்.

ஆனாலும் சீட்டுப்போட்டு, தேசத்தைப் பங்கிடவேண்டும்; தங்கள் பிதாக்களுடைய கோத்திரங்களுக்குரிய நாமங்களின்படியே சுதந்தரித்துக்கொள்ளக்கடவர்கள்.

அநேகம்பேர்களாயினும் கொஞ்சம்பேர்களாயினும் சீட்டு விழுந்தபடியே அவரவர்களுடைய சுதந்தரங்கள் பங்கிடப்படவேண்டும் என்றார்.

எண்ணப்பட்ட லேவியரின் குடும்பங்களாவன: கெர்சோனின் சந்ததியான கெர்சோனியரின் குடும்பமும், கோகாத்தின் சந்ததியான கோகாத்தியரின் குடும்பமும், மெராரியின் சந்ததியான மெராரியரின் குடும்பமும்;

லேவியின் மற்றக் குடும்பங்களாகிய லிப்னீயரின் குடும்பமும், எப்ரோனியரின் குடும்பமும், மகலியரின் குடும்பமும், மூசியரின் குடும்பமும், கோராகியரின் குடும்பமுமே. கோகாத் அம்ராமைப் பெற்றான்.

அம்ராமுடைய மனைவிக்கு யோகெபேத் என்று பேர்; அவள் எகிப்திலே லேவிக்குப் பிறந்த குமாரத்தி; அவள் அம்ராமுக்கு ஆரோனையும் மோசேயையும் அவர்கள் சகோதரியான மிரியாமையும் பெற்றாள்.

ஆரோனுக்கு நாதாபும் அபியூவும் எலெயாசாரும் இத்தாமாரும் பிறந்தார்கள்.

நாதாபும் அபியூவும் கர்த்தருடைய சந்நிதியில் அந்நிய அக்கினியைக் கொண்டுவந்தபோது, செத்துப்போனார்கள்.

அவர்களில் ஒரு மாதத்து ஆண்பிள்ளை முதலாக எண்ணப்பட்டவர்கள் இருபத்து மூவாயிரம்பேர்; இஸ்ரவேல் புத்திரரின் நடுவே அவர்களுக்குச் சுதந்தரம் கொடுக்கப்படாதபடியினால், அவர்கள் இஸ்ரவேல் புத்திரரின் இலக்கத்திற்கு உட்படவில்லை.

மோசேயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் எரிகோவின் அருகேயிருக்கும் யோர்தானுக்கு இப்பாலே மோவாபின் சமனான வெளிகளில் இஸ்ரவேல் புத்திரரை எண்ணுகிறபோது இருந்தவர்கள் இவர்களே.

முன்பு மோசேயும் ஆசாரியனாகிய ஆரோனும் சீனாய் வனாந்தரத்தில் இஸ்ரவேல் புத்திரரை எண்ணும்போது இருந்தவர்களில் ஒருவரும் இவர்களுக்குள் இல்லை.

வனாந்தரத்தில் சாகவே சாவார்கள் என்று கர்த்தர் அவர்களைக் குறித்துச் சொல்லியிருந்தார்; எப்புன்னேயின் குமாரனாகிய காலேபும் நூனின் குமாரனாகிய யோசுவாவும் தவிர, வேறொருவரும் அவர்களில் மீதியாயிருக்கவில்லை.

கர்த்தர் மோசேயை நோக்கி எண்ணப்பட்ட ஆறு லட்சத்தோராயிரத்து எழுநூற்று முப்பது பேரின் இலக்கத்திற்கு தக்கதாய் தேசம் இஸ்ரவேலருக்கு சுதந்தரமாக பங்கிடப்பட வேண்டும்.  அநேகம் பேருக்கு அதிக சுதந்தரமும், கொஞ்சம் பேருக்கு கொஞ்ச சுதந்தரமும் பங்கிட்டு கொடுக்கப்பட வேண்டும்.  ஆனால் சீட்டுப்போட்டு சுதந்தரத்தை பங்கிட வேண்டும்.  தங்கள் பிதாக்களின் கோத்திரங்களுக்குரிய நாமங்களின் படியே பங்கிட வேண்டும்.  அநேகம் பேராயிருந்தாலும், கொஞ்சம்பேராயிருந்தாலும் சீட்டு விழுந்த படியே அவரவர்களுடைய சுதந்தரங்கள் பங்கிடப்பட வேண்டும்.  

மேலும் லேவியரின் குடும்பங்களில் எண்ணப்பட்டவர்கள் 

எண்ணாகமம் 26:58-60 

லேவியின் மற்றக் குடும்பங்களாகிய லிப்னீயரின் குடும்பமும், எப்ரோனியரின் குடும்பமும், மகலியரின் குடும்பமும், மூசியரின் குடும்பமும், கோராகியரின் குடும்பமுமே. கோகாத் அம்ராமைப் பெற்றான்.

அம்ராமுடைய மனைவிக்கு யோகெபேத் என்று பேர்; அவள் எகிப்திலே லேவிக்குப் பிறந்த குமாரத்தி; அவள் அம்ராமுக்கு ஆரோனையும் மோசேயையும் அவர்கள் சகோதரியான மிரியாமையும் பெற்றாள்.

ஆரோனுக்கு நாதாபும் அபியூவும் எலெயாசாரும் இத்தாமாரும் பிறந்தார்கள்.

மேற்க்கூறபட்ட வசனங்களை நாம் தியானிக்கும் போது நாதாபும், அபியூபும் கர்த்தருடைய சந்நிதியில் அந்நிய அக்கினியை கொண்டு வந்தபோது, அவர்கள் செத்தார்கள்.  பிரியமானவர்களே தேவனுடையை உபதேசம், அல்லாமல் வேறு உபதேசத்தோடு உள்ளத்தின் செயல்பாடுகள் இருந்தால், உள்ளமானது அந்நிய அக்கினியாகயிருக்கும்.  அந்நிய அக்கினியோடு நாம் தேவ சந்நிதியில்  இருப்போமானால் கர்த்தர் நம்மை நியாயந்தீர்ப்பார்.  

ஆனால் ஒரு மாதத்து ஆண்பிள்ளை முதலாக எண்ணப்பட்டவர்கள் இருபத்து மூவாயிரம் பேர்;  இஸ்ரவேல் புத்திரரின் நடுவே அவர்களுக்கு சுதந்தரம் கொடுக்கப்படாதபடியினால் இவர்கள் இஸ்ரவேல் புத்திரரின் இலக்கத்திற்கு உட்படவில்லை. மேலும் இப்போது எண்ணப்பட்டவர்களில் ஒருவரும் கர்த்தர் மோசேயையும், ஆரோனையும் வைத்து சீனாய் வனாந்தரங்களில் இஸ்ரவேல் புத்திரரை  எண்ணும் போது இருந்தவர்களில்  யோசுவாவையும், காலேபையும் தவிர வேறு யாரும் இல்லாமலிருந்தது.  காரணமென்னவென்றால் கர்த்தர் வனாந்தரத்தில் சாகவே சாவீர்கள் என்று சொல்லியிருந்தது போல, அநேகர் கீழ்படியாமையின் காரணமாக வனாந்தரத்தில் அழிக்கப்பட்டார்கள்.  

ஆகையால் பிரியமானவர்களே, அந்நிய அக்கினி என்பது உலகம்,ஆஸ்தி இவைகளால் உள்ளம் நிறைந்து இருக்கும் போது, அதனை விட்டு விடாமல் நாம் தேவ சந்நிதியில் வந்தால் அது ஏதேன் தோட்டத்தில் வந்த வலுசர்ப்பம் தான் நம் தோட்டமாகிய உள்ளத்தில் கிரியை செய்யும்.  அதனை குறித்து கர்த்தர் சொல்லுகிறார்: தோட்டத்தின் நடுவில் இருக்கும் கனியை புசிக்கக்கூடாது என்றும், அதனை புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்கிறார்.  இவ்விதமாக இஸ்ரவேலர் தங்கள் வாழ்க்கையில் தேவனுக்கு கீழ்ப்படியாமல் வழியில் அழிந்து போகிறார்கள்.  

பிரியமானவர்களே நம்முடைய உள்ளத்தில் ஒருபோதும் இவ்வித அந்நிய அக்கினிக்கு இடம் கொடாதபடி, நம் உள்ளத்தில் பரிசுத்த அக்கினியால் நிரப்பப்படும்படியாக ஒப்புக்கொடுப்போம்.           ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.