தேவனுக்கே மகிமையுண்டாவதாக

நியாதிபதிகள் 6:16

அதற்குக் கர்த்தர்: நான் உன்னோடேகூட இருப்பேன்; ஒரே மனுஷனை முறிய அடிப்பதுபோல நீ மீதியானியரை முறிய அடிப்பாய் என்றார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் நம்முடைய உள்ளத்தில் மீதியானிய கிரியைகள் தோன்றி நம்மை சரப்பனைகளினால் நெருக்காதபடி, நாம் கிறிஸ்துவினால் மீதியானியரை ஜெயிப்போம்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தருக்காக மிகவும் பக்தி வைராக்கியம் உள்ளவர்களாக இருக்கவேண்டும் என்றும், அப்படிப்பட்ட வைராக்கியம் காட்டினவன் ஆசாரியனாகிய ஆரோனின் குமாரனாகிய எலெயாசாரின் மகன் பினெகாஸ் என்பவன், இஸ்ரவேலனில் ஒருவன் மீதியானிய ஸ்திரீயை  கூட்டிக்கொண்டு, வந்த போது  அதனை கண்டவுடனே, அவர்கள் அறையிலே போய் அவர்களை குத்தி கொன்று போட்டான்.  அப்பொழுது இஸ்ரவேலர் பாகால் பேயோரை பற்றிக்கொண்டதால்  அவர்களிடத்தில் கர்த்தர் வாதையை அனுப்பியிருந்தார். அந்த வாதையை கர்த்தர், பினெகாஸ் பக்நி வைராக்கியத்தோடு வேசிதனத்தை அழித்ததால், அந்நேரம் நிறுத்தப்பட்டது. 

அப்போது கர்த்தர் மோசேயை நோக்கி 

எண்ணாகமம் 25:11-13  

நான் என் எரிச்சலில் இஸ்ரவேல் புத்திரரை நிர்மூலமாக்காதபடிக்கு, ஆசாரியனாகிய ஆரோனின் குமாரனான எலெயாசாரின் மகன் பினெகாஸ், என் நிமித்தம் அவர்கள் நடுவில் பக்திவைராக்கியம் காண்பித்ததினால், இஸ்ரவேல் புத்திரர்மேல் உண்டான என் உக்கிரத்தைத் திருப்பினான்.

ஆகையால், இதோ, அவனுக்கு என் சமாதானத்தின் உடன்படிக்கையைக் கட்டளையிடுகிறேன்.

அவன் தன் தேவனுக்காக பக்திவைராக்கியம் காண்பித்து, இஸ்ரவேல் புத்திரருக்காகப் பாவநிவிர்த்தி செய்தபடியினால், அவனுக்கும் அவனுக்குப் பின்பு அவன் சந்ததிக்கும் நித்திய ஆசாரிய பட்டத்திற்குரிய உடன்படிக்கை உண்டாயிருக்கும் என்று சொல் என்றார்.

மேற்க்கூறிய வசனப்பிரகாரம் தேவனுக்காக பக்தி வைராக்கியமாயிருந்தபடியால்  கர்த்தர் இஸ்ரவேல் புத்திரர் மேல் உண்டான என் உக்கிரத்தை திருப்பினேன்.  ஆகையால் என் சமாதானத்தின் உடன்படிக்கையை கட்டளையிடுகிறேன் என்கிறார்.  மேலும் பக்தி வைராக்கியத்தினிமித்தம் அவன் இஸ்ரவேலுக்காக பாவ நிவிர்த்தி செய்தபடியால், அவனுக்கும், அவனுக்கு பின் அவன் சந்ததிக்கும் நித்திய ஆசாரியத்துவ பட்டம் உண்டாயிருக்கும் என்றார்.  

பிரியமானவர்களே இதன்  விளக்கம் என்னவென்றால் நமக்காக பாவ நிவிர்த்தி செய்வது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து.  அவரே நம்முடைய பாவத்திற்காக பலியாகிறார்.  நம்முடைய உள்ளத்தில் அந்நிய ஸ்திரீயோடே வேசிதனம் பண்ணுவதை கர்த்தர் அழிக்கிறார். அந்நிய  ஸ்திரீ என்பது சத்திய ஆவியானவருக்கு மாறான அந்நிய உபதேசமாகிய துர் உபதேசம்.  இந்த உபதேசம் உலகத்தின் ஆவியாக இருக்கும்.  அதனை தான் 

1 கொரிந்தியர் 2:12-16  

நாங்களோ உலகத்தின் ஆவியைப்பெறாமல், தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்கு தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம்.

அவைகளை நாங்கள் மனுஷஞானம் போதிக்கிற வார்த்தைகளாலே பேசாமல், பரிசுத்த ஆவி போதிக்கிற வார்த்தைகளாலே பேசி, ஆவிக்குரியவைகளை ஆவிக்குரியவைகளோடே சம்பந்தப்படுத்திக்காண்பிக்கிறோம்.

ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான்.

ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான்; ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான்.

கர்த்தருக்குப் போதிக்கத்தக்கதாக அவருடைய சிந்தையை அறிந்தவன் யார்? எங்களுக்கோ கிறிஸ்துவின் சிந்தை உண்டாயிருக்கிறது.

மேற்க்கூறபட்ட கருத்துக்களை நாம் ஆராய்ந்து நம்மிடத்தில் உள்ள ஜென்ம  சுபாவத்தை மாற்ற வேண்டும்.  மேலும் மீதியானிய ஸ்திரீயினால் இஸ்ரவேலன் மடிந்து போன காரணத்தால் கர்த்தர் மோசேயிடம் மீதியானியரை நெருக்கி அவர்களை வெட்டிப்போடுங்கள் என்றும், பேயோரின் நிமித்தம் வாதையுண்டான நாளிலே  குத்துண்ட கஸ்பி என்னும் மீதியானிய பிரபுவினுடைய குமாரத்தியின் சங்கதியிலும், அவர்கள் இஸ்ரவேலருக்கு செய்த சர்ப்பனைகளினால் அவர்களை நெருக்கினதினால் கர்த்தர் மீதியானியரை அழிக்கும்படியாகவும், அவர்கள் ஆவி இனி எந்த விதத்திலும் நம்மை  சதி சர்ப்பனை செய்யாத படி நாம் காத்துக்கொள்ள  கர்த்தரின் கிருபையினால் கர்த்தர் நம்மை நிரப்பும்படியாக.

ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.