தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 106: 30, 31

அப்பொழுது பினெகாஸ் எழுந்து நின்று நியாயஞ்செய்தான்; அதினால் வாதை நிறுத்தப்பட்டது.

அது தலைமுறை தலைமுறையாக என்றைக்கும் அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது..

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் கர்ததருக்காக பக்தி வைராக்கியம் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இஸ்ரவேலருக்குள் பராக்கிரமசாலியாக எழும்புகிறார் என்பதனை குறித்து தியானித்தோம். 

அடுத்ததாக நாம் தியானிக்கிற கருத்துக்கள் என்னவெனில் 

எண்ணாகமம் 25:1-18 

இஸ்ரவேல் சித்தீமிலே தங்கியிருக்கையில், ஜனங்கள் மோவாபின் குமாரத்திகளோடே வேசித்தனம் பண்ணத்தொடங்கினார்கள்.

அவர்கள் தங்கள் தேவர்களுக்கு இட்ட பலிகளை விருந்துண்ணும்படி ஜனங்களை அழைத்தார்கள்; ஜனங்கள்ப் போய் புசித்து, அவர்கள் தேவர்களைப் பணிந்துகொண்டார்கள்.

இப்படி இஸ்ரவேலர் பாகால்பேயோரைப் பற்றிக்கொண்டார்கள்; அதனால் இஸ்ரவேலர்மேல் கர்த்தருடைய கோபம் மூண்டது.

கர்த்தர் மோசேயை நோக்கி: கர்த்தருடைய உக்கிரமான கோபம் இஸ்ரவேலை விட்டு நீங்கும்படி நீ ஜனங்களின் தலைவர் எல்லாரையும் கூட்டிக்கொண்டு, அப்படிச் செய்தவர்களைச் சூரியனுக்கு எதிரே கர்த்தருடைய சந்நிதானத்தில் தூக்கிப்போடும்படி செய் என்றார்.

அப்படியே மோசே இஸ்ரவேலின் நியாயாதிபதிகளை நோக்கி: நீங்கள் அவரவர் பாகால்பேயோரைப் பற்றிக்கொண்ட உங்கள் மனிதரைக் கொன்றுபோடுங்கள் என்றான்.

அப்பொழுது மோசேயும் இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் அனைவரும் ஆசரிப்புக் கூடாரவாசலுக்கு முன்பாக அழுதுகொண்டு நிற்கையில், அவர்கள் கண்களுக்கு முன்பாக இஸ்ரவேல் புத்திரரில் ஒருவன் ஒரு மீதியானிய ஸ்திரீயைத் தன் சகோதரரிடத்தில் அழைத்துக்கொண்டுவந்தான்.

அதை ஆசாரியனாகிய ஆரோனின் குமாரனான எலெயாசாரின் மகன் பினெகாஸ் கண்டபோது, அவன் நடுச்சபையிலிருந்து எழுந்து, ஒரு ஈட்டியைத் தன் கையிலே பிடித்து,

இஸ்ரவேலனாகிய அந்த மனிதன் வேசித்தனம்பண்ணும் அறையிலே அவன் பின்னாலே போய், இஸ்ரவேல் மனிதனும் அந்த ஸ்திரீயுமாகிய இருவருடைய வயிற்றிலும் ஈட்டி உருவிப்போக அவர்களைக் குத்திப்போட்டான்; அப்பொழுது இஸ்ரவேல் புத்திரரில் உண்டான வாதை நின்றுபோயிற்று.

அந்த வாதையால் செத்தவர்கள் இருபத்துநாலாயிரம் பேர்.

கர்த்தர் மோசேயை நோக்கி:

நான் என் எரிச்சலில் இஸ்ரவேல் புத்திரரை நிர்மூலமாக்காதபடிக்கு, ஆசாரியனாகிய ஆரோனின் குமாரனான எலெயாசாரின் மகன் பினெகாஸ், என் நிமித்தம் அவர்கள் நடுவில் பக்திவைராக்கியம் காண்பித்ததினால், இஸ்ரவேல் புத்திரர்மேல் உண்டான என் உக்கிரத்தைத் திருப்பினான்.

ஆகையால், இதோ, அவனுக்கு என் சமாதானத்தின் உடன்படிக்கையைக் கட்டளையிடுகிறேன்.

அவன் தன் தேவனுக்காக பக்திவைராக்கியம் காண்பித்து, இஸ்ரவேல் புத்திரருக்காகப் பாவநிவிர்த்தி செய்தபடியினால், அவனுக்கும் அவனுக்குப் பின்பு அவன் சந்ததிக்கும் நித்திய ஆசாரிய பட்டத்திற்குரிய உடன்படிக்கை உண்டாயிருக்கும் என்று சொல் என்றார்.

மீதியானிய ஸ்திரீயோடே குத்துண்டு செத்த இஸ்ரவேல் மனிதனுடைய பேர் சிம்ரி; அவன் சல்லூவின் குமாரனும், சிமியோனியரின் தகப்பன் வம்சத்தில் ஒரு பிரபுவுமாயிருந்தான்.

குத்துண்ட மீதியானிய ஸ்திரீயின் பேர் கஸ்பி, அவள் சூரின் குமாரத்தி, அவன் மீதியானியருடைய தகப்பன் வம்சத்தாரான ஜனங்களுக்குத் தலைவனாயிருந்தான்.

கர்த்தர் மோசேயை நோக்கி:

மீதியானியரை நெருக்கி அவர்களை வெட்டிப்போடுங்கள்.

பேயோரின் சங்கதியிலும் பேயோரின் நிமித்தம் வாதையுண்டான நாளிலே குத்துண்ட அவர்கள் சகோதரியாகிய கஸ்பி என்னும் மீதியான் பிரபுவினுடைய குமாரத்தியின் சங்கதியிலும், அவர்கள் உங்களுக்குச் செய்த சர்ப்பனைகளினால் உங்களை மோசம்போக்கி நெருக்கினார்களே என்றார்.

கர்த்தர் இஸ்ரவேலை ஆசிர்வதித்தப்பிறகு, பாலாக் அவன் வழியே போய் விட்டான்.  ஆனால் இஸ்ரவேல் சித்தீமிலே தங்கியிருக்கையில், ஜனங்கள் மோவாபின் குமாரத்திகளோடே வேசித்தனம் பண்ணினார்கள்.  மோவாபியர் தங்கள் தேவர்களுக்கு இட்ட பலிகளை புசிக்கும் படியாக இஸ்ரவேலரை அழைத்ததினால், இஸ்ரவேல் ஜனங்கள் போய் புசித்து, அவர்கள் தேவர்களை பணிந்துக்கொண்டார்கள்.   இப்படி இஸ்ரவேலர் பாகால் பேயோரை பற்றிக்கொண்டார்கள்.  அதனால் இஸ்ரவேலர் மேல் கர்த்தருக்கு கடும் கோபம் மூண்டது.    

இதனை மோவாபின் குமாரத்திகளோடே வேசித்தனம் பண்ணத்தொடங்கினார்கள் என்றால் இஸ்ரவேல் தனித்து வாசம் பண்ண வேண்டும் என்பது தேவனுடைய சித்தமாகயிருக்கிறது.  இதனை கெடுக்கவே நாள் பார்ப்பது, குறிச்சொல்லுதல் இவ்வித செயல்கள் இஸ்ரவேலிடம் வந்தது.  இதனை தான் கர்த்தர் வேசித்தனம் என்று சொல்கிறார்.  மேலும் பிற ஜாதிகளோடு கலந்து இருந்து  புசிக்கக்கூடாது என்பது கர்த்தருடைய கட்டளையாக இருக்கிறது.  என்னவென்றால்  

1 கொரிந்தியர் 10:18-22  

மாம்சத்தின்படியான இஸ்ரவேலரைப் பாருங்கள்; பலிகளைப் புசிக்கிறவர்கள் பலிபீடத்தோடே ஐக்கியமாயிருக்கிறார்களல்லவா?

இப்படியிருக்க, விக்கிரகம் ஒரு பொருளென்றும், விக்கிரகத்துக்குப் படைக்கப்பட்டது ஒரு பொருளென்றும் நான் சொல்லுகிறேனோ?

அஞ்ஞானிகள் பலியிடுகிறவைகளை தேவனுக்கு அல்ல, பேய்களுக்கே பலியிடுகிறார்களென்று சொல்லுகிறேன்; நீங்கள் பேய்களோடே ஐக்கியமாயிருக்க எனக்கு மனதில்லை.

நீங்கள் கர்த்தருடைய பாத்திரத்திலும் பேய்களுடைய பாத்திரத்திலும் பானம்பண்ணக்கூடாதே; நீங்கள் கர்த்தருடைய போஜனபந்திக்கும் பேய்களுடைய போஜனபந்திக்கும் பங்குள்ளவர்களாயிருக்கக்கூடாதே.

நாம் கர்த்தருக்கு எரிச்சலை மூட்டலாமா? அவரிலும் நாம் பலவான்களா?

மேற்க்கூறிய வார்த்தைகள் பிரகாரம் கர்த்தர் பேய்களுடைய பாத்திரத்தில் பானம் பண்ணக்கூடாது என்றும், தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகத்துக்கும் சம்பந்தம் இல்லை என்பதையும் நம்மிடம் விளக்கி காட்டுகிறார்.  ஆனால் இஸ்ரவேலர்,  மோவாபியர் அவர்கள் தேவர்களுக்கு பலியிட்டதை, புசித்து, அவர்கள் தேவர்களை பணிந்துக்கொண்டார்கள்.  அதன் காரணமாக அவர்கள் பாகால் பேயோரை பற்றிக்கொண்டார்கள் என்று எழுதப்பட்டிருக்கிறது.  இஸ்ரவேவர் பாகால் பேயோரை பற்றிக்கொண்டதின் காரணமாக, கர்த்தர் மோசேயிடம் கர்த்தரின் உக்கிர கோபம் இஸ்ரவேலை நீங்கும் படி இஸ்ரவேலின் தலைவரை எல்லாரையும் கூட்டிக்கொண்டு, அதில் இப்படி செய்தவர்களை சூரியனுக்கு எதிரே  கர்த்தரின் சந்நிதில் தூக்கி போடும்படி செய் என்றார்.  

அப்படியே மோசே இஸ்ரவேலின் நியாயாதிபதிகளிடம், பாகால் பேயோரை பற்றிக்கொண்ட உங்கள் மனிதரை கொன்ற பின்பு, மோசேயும், இஸ்ரவேல் புத்திரரும், ஆசரிப்பு கூடார வாசலில் நின்று அழுதுக்கொண்டிருந்தார்கள்.  அப்பொழுது அவர்கள் கண்களுக்கு முன்பாக இஸ்ரவேல் புத்திரரில் ஒருவன் ஒரு மீதியான ஸ்திரீயைத் தன் சகோதரரிடத்திலே அழைத்துக் கொண்டு வந்தான். அதனை ஆசாரியனாகிய ஆரோனின் குமாரனாகிய எலெயாசாரின் மகன் பினெகாஸ் கண்டு நடு சபையிலிருந்து எழும்பி ஒர் ஈட்டியை தன் கையினாலே பிடித்து, அந்த இஸ்ரவேலன் வேசிதனம் பண்ணும் அறையிலே போய் இருவருடைய வயிற்றிலே குத்திப்போட்டான்.  அப்பொழுது அவர்களுக்குள் இருந்த வாதை நின்று போயிற்று. வாதையினால் செத்துப்போனவர்கள் இருபத்து நாலாயிரம் பேர். 

பிரியமானவர்களே, நம் ஆவிக்குரிய வாழ்க்கையில் 

எபேசியர் 5:1-5 

ஆதலால், நீங்கள் பிரியமான பிள்ளைகளைப்போல தேவனைப் பின்பற்றுகிறவர்களாகி,

கிறிஸ்து நமக்காகத் தம்மை தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள்.

மேலும், பரிசுத்தவான்களுக்கு ஏற்றபடி, வேசித்தனமும், மற்றெந்த அசுத்தமும், பொருளாசையும் ஆகிய இவைகளின் பேர்முதலாய் உங்களுக்குள்ளே சொல்லப்படவுங்கூடாது.

அப்படியே வம்பும், புத்தியீனமான பேச்சும், பரியாசமும் தகாதவைகள்; ஸ்தோத்திரஞ்செய்தலே தகும்.

விபசாரக்காரனாவது, அசுத்தனாவது, விக்கிரகாராதனைக்காரனாகிய பொருளாசைக்காரனாவது தேவனுடைய ராஜ்யமாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்திலே சுதந்தரமடைவதில்லையென்று அறிந்திருக்கிறீர்களே.

மேற்க்கூறிய வசனங்களை தியானிக்கும் போது இவ்வித பொல்லாத கிரியைகள் இருந்தால் கிறிஸ்துவின் ராஜ்யத்தில் சுதந்தரமடைவதில்லை என்றார்.  மேலும் இஸ்ரவேலர் வேசிதனம் பண்ணினால் கர்த்தர் வாதையை நமக்குள் அனுப்புகிறார்.ஆனால் பக்தி வைராக்கியத்தோடு வேசிதனத்தை அழித்தால் வாதை நிறுத்தப்படும்.  

பிரியமானவர்களே இப்போது தேசத்தில்  இருக்கிற வாதை நிறுத்தப்பட வேண்டுமானால் விக்கிரகாராதனைக்கு விலகுகிறவர்களாக இருக்கவேண்டும். ஆதலால் நாம் யாவரும் வாதை தொடாதபடி தேவசித்தத்திற்கு ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.