தேவனுக்கே மகிமையுண்டாவதாக

மீகா 6:5

என் ஜனமே, மோவாபின் ராஜாவாகிய பாலாக் பண்ணின யோசனை இன்னதென்றும், பேயோரின் குமாரனான பிலேயாம் அவனுக்குப் பிரதியுத்தரமாகச் சொன்னது இன்னதென்றும், சித்தீம் தொடங்கி கில்கால்மட்டும் நடந்தது இன்னதென்றும், நீ கர்த்தருடைய நீதிகளை அறிந்துகொள்ளும்படி நினைத்துக்கொள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்மிடம் கிறிஸ்து பராக்கிரமம் செய்கிறவராக எழும்புவார்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் தேவனுடைய வாசஸ்தலமாக மாறுகிறோம் என்பதையும், அவ்விதம் தேவன் நம்மை எவ்விதம் மாற்றுகிறார் என்பதையும், வாசஸ்தலமாக நாம் மாறி விட்டால், நம்முடைய நன்மைகளையும், மற்றும் நம்முடைய கர்த்தர் எல்லாவற்றிலும் அவரே மேன்மைப்படுவார் என்பதையும் நாம் தியானித்தோம்.   

மேலும் அடுத்ததாக நாம் தியானிக்க போகிறது என்னவெனில் 

எண்ணாகமம் 24:8-16  

தேவன் அவர்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்; காண்டாமிருகத்துக்கொத்த பெலன் அவர்களுக்கு உண்டு; அவர்கள் தங்கள் சத்துருக்களாகிய ஜாதிகளைப் பட்சித்து, அவர்கள் எலும்புகளை நொறுக்கி, அவர்களைத் தங்கள் அம்புகளாலே எய்வார்கள்.

சிங்கம்போலவும் துஷ்ட சிங்கம்போலவும் மடங்கிப் படுத்துக்கொண்டிருக்கிறார்கள்; அவர்களை எழுப்புகிறவன் யார்? உங்களை ஆசீர்வதிக்கிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன், உங்களைச் சபிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்றான்.

அப்பொழுது பாலாக் பிலேயாமின்மேல் கோபம் மூண்டவனாகி, கையோடே கைதட்டி, பிலேயாமை நோக்கி: என் சத்துருக்களைச் சபிக்க உன்னை அழைத்தனுப்பினேன். நீயோ இந்த மூன்றுமுறையும் அவர்களை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்தாய்.

ஆகையால் உன் இடத்துக்கு ஓடிப்போ; உன்னை மிகவும் கனம்பண்ணுவேன் என்றேன்; நீ கனமடையாதபடிக்குக் கர்த்தர் தடுத்தார் என்றான்.

அப்பொழுது பிலேயாம் பாலாகை நோக்கி: பாலாக் எனக்குத் தன் வீடு நிறைய வெள்ளியும் பொன்னும் கொடுத்தாலும், நான் என் மனதாய் நன்மையாகிலும் தீமையாகிலும் செய்கிறதற்குக் கர்த்தரின் கட்டளையை மீறக் கூடாது; கர்த்தர் சொல்வதையே சொல்வேன் என்று,

நீர் என்னிடத்திற்கு அனுப்பின ஸ்தானாபதிகளிடத்தில் நான் சொல்லவில்லையா?

இதோ, நான் என் ஜனத்தாரிடத்திற்குப் போகிறேன்; பிற்காலத்திலே இந்த ஜனங்கள் உம்முடைய ஜனங்களுக்குச் செய்வது இன்னதென்று உமக்குத் தெரிவிப்பேன் வாரும் என்று சொல்லி,

அவன் தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: பேயோரின் குமாரன் பிலேயாம் சொல்லுகிறதாவது, கண் திறக்கப்பட்டவன் உரைக்கிறதாவது,

தேவன் அருளும் வார்த்தைகளைக் கேட்டு, உன்னதமானவர் அளித்த அறிவை அறிந்து, சர்வவல்லவரின் தரிசனத்தைக் கண்டு, தாழவிழும்போது, கண்திறக்கப்பட்டவன் விளம்புகிறதாவது;

மேற்க்கூறிய வசனங்களை நாம் தியானிக்கும் போது பிலேயாம் இஸ்ரவேல் ஜனங்களை ஆசீர்வதிக்கையில், உங்களை ஆசீர்வதிக்கிறவன் ஆசீர்வதிக்கபடுவான் என்றும், உங்களை சபிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்றான்.  அப்பொழுது பாலாக் பிலேயாமிடம் கோபமூண்டவனாகி, கையோடே கைத்தட்டி, பிலேயாமை நோக்கி:  என் சத்துருக்களை சபிக்க உன்னை அழைத்தனுப்பினேன், ஆனால் நீயோ அவர்களை மூன்று முறையும் ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்தாய், ஆகையால் உன் இடத்துக்கு ஓடிப்போ; உன்னை கனம்பண்ணுவேன் என்று சொல்லியிருந்தேன்.  ஆனால் நீ கனமடையாதபடி கர்த்தர் தடுத்தார் என்றான்.  

பிரியமானவர்களே பாலாக் என்பவன் சபிக்கப்பட்டவன் ஆனதால் இஸ்ரவேலை சபிக்கும்படியாகவே எண்ணம் கொள்ளுகிறான்.  காரணம் என்னவென்றால் அவனுக்குள் பொல்லாத ஆவி இருக்கிறதினால் அவன் பொறாமை உள்ளவனாக காணப்படுகிறான்.  அவ்விதம் சபிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளதால் கர்த்தர் அவனை சபிக்கிறார்.  ஆனால் பிறரை ஆசீர்வதிக்கவேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களை கர்த்தர் ஆசீர்வதிக்கிறார்.  ஆனால் பாலாக்கை போல சபிக்க வேண்டும் என்ற எண்ணம் நம்மில் யாருக்கும் வராதபடி ஜாக்கிரதையாகயிருப்போம்.  அல்லாமலும் பிறரை சபிக்க வேண்டும் என்ற எண்ணம் யாருக்கு வருமென்றால் 

சங்கீதம் 109 :16 - 20  

அவன் தயைசெய்ய நினையாமல், சிறுமையும் எளிமையுமானவனைத் துன்பப்படுத்தி, மனமுறிவுள்ளவனைக் கொலைசெய்யும்படி தேடினானே.

சாபத்தை விரும்பினான், அது அவனுக்கு வரும்; அவன் ஆசீர்வாதத்தை விரும்பாமற்போனான், அது அவனுக்குத் தூரமாய் விலகிப்போம்.

சாபத்தை அவன் தனக்கு அங்கியாக உடுத்திக்கொண்டான்; அது அவன் உள்ளத்தில் தண்ணீரைப்போலவும், அவன் எலும்புகளில் எண்ணெயைப்போலவும் பாயும்.

அது அவன் மூடிக்கொள்ளுகிற வஸ்திரமாகவும், நித்தமும் கட்டிக்கொள்ளுகிற கச்சையாகவும் இருப்பதாக.

இதுதான் என்னை விரோதிக்கிறவர்களுக்கும், என் ஆத்துமாவுக்கு விரோதமாய்த் தீங்கு பேசுகிறவர்களுக்கும் கர்த்தரால் வரும் பலன்.

மேற்க்கூறப்பட்   வசனங்களை நாம் தியானிக்கும் போது நாம் சாபத்தை அங்கியாக உடுக்காதபடி நம்முடைய தேவனாகிய கர்த்தரிடத்தில் நாம் நம்முடைய உள்ளம் தாழ்மைப்பட்டு அவரிடம், உமது நாமத்தினிமித்தம், என்னை ஆதரித்து, உமது கிருபை நலமானதினால் என்னை விடுவித்தருளும் என்று நாம் கர்த்தரிடம் கேட்டுக்கொள்வோமானால் 

சங்கீதம் 109: 28-31  

அவர்கள் சபித்தாலும், நீர் ஆசீர்வதியும்; அவர்கள் எழும்பினாலும் வெட்கப்பட்டுப்போவார்களாக; உமது அடியானோ மகிழக்கடவன்.

என் விரோதிகள் இலச்சையால் மூடப்பட்டு, தங்கள் வெட்கத்தைச் சால்வையைப்போல் தரித்துக்கொள்ளக்கடவர்கள்.

கர்த்தரை நான் என் வாயினால் மிகவும் துதித்து, அநேகர் நடுவிலே அவரைப் புகழுவேன்.

ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவர்களினின்று எளியவனுடைய ஆத்துமாவை இரட்சிக்கும்படி அவர் அவன் வலதுபாரிசத்தில் நிற்பார்.

மேற்க்கூறிய வசனங்களால் நம்மளிலிருந்த சாபத்தின் அங்கியை தேவன் மாற்றினால்,  கர்த்தரை என் வாயினால் துதித்து, அநேகர் நடுவில் அவரைப் புகழுவேன். ஆக்கினைக்குள்ளாக  தீர்க்கிறவர்களினின்று எளியவனுடைய ஆத்துமாவை இரட்சிக்கும் படிக்கு அவர் என் வலது பாரிசத்தில் நிற்பார். அதேபோல் பிலேயாம் பாலாக்கிடம் எனக்கு தன் வீடு நிறைய  வெள்ளியும், பொன்னும் கொடுத்தாலும்  என் மனதாய் நன்மையானாலும், தீமையானாலும் செய்கிறதற்கு கர்த்தருடைய கட்டளையை மீறாமல், கர்த்தர் சொல்வதையே  சொல்வேன் என்று உன் ஸ்தானாபதிகளிடம் நான் சொன்னேன் என்றும் நான் என் ஜனத்தாரிடத்திற்கு போகிறேன் என்றும், பிற்காலத்திலே இந்த ஜனங்கள் உம்முடைய ஜனங்களுக்கு செய்வதை தெரிவிப்பேன் என்று சொல்லி, 

கண் திறக்கப்பட்டவன் விளம்புகிறது என்னவென்றால் என்று நான்காம் முறையாக இஸ்ரவேலை ஆசீர்வதிக்கும் படியாக 

எண்ணாகமம் 24:17-25  

அவரைக் காண்பேன், இப்பொழுது அல்ல; அவரைத் தரிசிப்பேன், சமீபமாய் அல்ல; ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும், ஒரு செங்கோல் இஸ்ரவேலிலிருந்து எழும்பும்; அது மோவாபின் எல்லைகளை நொறுக்கி, சேத்புத்திரர் எல்லாரையும் நிர்மூலமாக்கும்.

ஏதோம் சுதந்தரமாகும், சேயீர் தன் சத்துருக்களுக்குச் சுதந்தரமாகும்; இஸ்ரவேல் பராக்கிரமஞ்செய்யும்.

யாக்கோபிலிருந்து தோன்றும் ஒருவர் ஆளுகை செய்வார்; பட்டணங்களில் மீதியானவர்களை அழிப்பார் என்றான்.

மேலும், அவன் அமலேக்கைப் பார்த்து, தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: அமலேக்கு முந்தியெழும்பினவன்; ஆனாலும் அவன் முடிவிலே முற்றிலும் நாசமடைவான் என்றான்.

அன்றியும் அவன் கேனியனைப் பார்த்து, தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: உன் வாசஸ்தலம் அரணிப்பானது; உன் கூட்டைக் கன்மலையில் கட்டினாய்.

ஆகிலும் கேனியன் அழிந்துபோவான்; அசூர் உன்னைச் சிறைபிடித்துக்கொண்டுபோக எத்தனைநாள் செல்லும் என்றான்.

பின்னும் அவன் தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: ஐயோ, தேவன் இதைச்செய்யும்போது யார் பிழைப்பான்;

சித்தீமின் கரைதுறையிலிருந்து கப்பல்கள் வந்து, அசூரைச் சிறுமைப்படுத்தி, ஏபேரையும் வருத்தப்படுத்தும்; அவனும் முற்றிலும் அழிந்துபோவான் என்றான்.

பின்பு பிலேயாம் எழுந்து புறப்பட்டு, தன் இடத்திற்குத் திரும்பினான்; பாலாகும் தன் வழியே போனான்.

மேற்க்கூறிய வாக்கியங்கள் பிரகாரம் எடுத்துரைத்து விட்டு, பிலேயாம் எழுந்து புறப்பட்டு போனான்.  பாலாக்கும் தன் வழியே போனான். மேற்க்கூறிய கருத்துக்கள் யாவும் கிறிஸ்துவை பற்றினதேயல்லாமல் வேறல்ல.  ஆதலால் நம்மளில் எழும்புகிறவர் ஒருவர் தோன்றுவார்.  இஸ்ரவேல் பராக்கிரமம் செய்யும்.  

இவ்விதமாக நாம் யாவரிடத்திலும் கிறிஸ்து எழும்பி, பராக்கிரமம் செய்து, எல்லா அந்நியரின் கிரியைகளை அழிந்து போகும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.