தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 84: 1

சேனைகளின் கர்த்தாவே, உமது வாசஸ்தலங்கள் எவ்வளவு இன்பமானவைகள்!

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் தேவனுடைய வாசஸ்தலமாகிறோம்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் தேவ ஆசீர்வாதம் பெற்றுக்கொள்ள வேண்டுமானால் நாம் பரிசுத்தப்பட வேண்டும் என்று தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

எண்ணாகமம் 23:13-30 

பின்பு பாலாக் அவனை நோக்கி: நீர் அவர்களைப் பார்க்கத்தக்க வேறொரு இடத்திற்கு என்னோடேகூட வாரும்; அங்கே அவர்கள் எல்லாரையும் பாராமல், அவர்களுடைய கடைசிப் பாளயத்தைமாத்திரம் பார்ப்பீர்; அங்கேயிருந்து எனக்காக அவர்களைச் சபிக்கவேண்டும் என்று சொல்லி,

அவனைப் பிஸ்காவின் கொடுமுடியில் இருக்கிற சோப்பீமின் வெளியிலே அழைத்துக்கொண்டுபோய், ஏழு பலி பீடங்களைக் கட்டி, ஒவ்வொரு பீடத்தில் ஒவ்வொரு காளையையும் ஒவ்வொரு ஆட்டுக்கடாவையும் பலியிட்டான்.

அப்பொழுது பிலேயாம் பாலாகை நோக்கி: இங்கே உம்முடைய சர்வாங்க தகனபலியண்டையில் நில்லும்; நான் அங்கே போய்க் கர்த்தரைச் சந்தித்துவருகிறேன் என்றான்.

கர்த்தர் பிலேயாமைச் சந்தித்து, அவன் வாயிலே வசனத்தை அருளி: நீ பாலாகினிடத்திற்குத் திரும்பிபோய், இவ்விதமாய்ச் சொல்லக்கடவாய் என்றார்.

அவனிடத்திற்கு அவன் வருகிறபோது, அவன் மோவாபின் பிரபுக்களோடுங்கூடத் தன்னுடைய சர்வாங்கதகனபலியண்டையிலே நின்றுகொண்டிருந்தான்; பாலாக் அவனை நோக்கி: கர்த்தர் என்ன சொன்னார் என்று கேட்டான்.

அப்பொழுது அவன் தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: பாலாகே, எழுந்திருந்து கேளும்; சிப்போரின் குமாரனே, எனக்குச் செவிகொடும்.

பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல; மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல; அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரா? அவர் வசனித்தும் நிறைவேற்றாதிருப்பாரா?

இதோ, ஆசீர்வதிக்கக் கட்டளைபெற்றேன்; அவர் ஆசீர்வதிக்கிறார், அதை நான் திருப்பக்கூடாது.

அவர் யாக்கோபிலே அக்கிரமத்தைக் காண்கிறதும் இல்லை, இஸ்ரவேலிலே குற்றம் பார்க்கிறதும் இல்லை; அவர்களுடைய தேவனாகிய கர்த்தர் அவர்களோடே இருக்கிறார்; ராஜாவின் ஜயகெம்பீரம் அவர்களுக்குள்ளே இருக்கிறது.

தேவன் அவர்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்; காண்டாமிருகத்துக்கொத்த பெலன் அவர்களுக்கு உண்டு.

யாக்கோபுக்கு விரோதமான மந்திரவாதம் இல்லை, இஸ்ரவேலுக்கு விரோதமான குறிசொல்லுதலும் இல்லை; தேவன் என்னென்ன செய்தார் என்று கொஞ்சக்காலத்திலே யாக்கோபையும் இஸ்ரவேலையும் குறித்துச் சொல்லப்படும்.

அந்த ஜனம் துஷ்ட சிங்கம்போல எழும்பும், பால சிங்கம்போல நிமிர்ந்து நிற்கும்; அது தான் பிடித்த இரையைப் பட்சித்து, வெட்டுண்டவர்களின் இரத்தத்தைக் குடிக்குமட்டும் படுத்துக்கொள்வதில்லை என்றான்.

அப்பொழுது பாலாக் பிலேயாமை நோக்கி: நீர் அவர்களைச் சபிக்கவும் வேண்டாம், அவர்களை ஆசீர்வதிக்கவும் வேண்டாம் என்றான்.

அதற்குப் பிலேயாம் பாலாகைப் பார்த்து: கர்த்தர் சொல்லுகிறபடியெல்லாம் செய்வேன் என்று உம்மோடே நான் சொல்லவில்லையா என்றான்.

அப்பொழுது பாலாக் பிலேயாமை நோக்கி: வாரும், வேறொரு இடத்திற்கு உம்மை அழைத்துக்கொண்டு போகிறேன்; நீர் அங்கேயிருந்தாவது எனக்காக அவர்களைச் சபிக்கிறது தேவனுக்குப் பிரியமாயிருக்கும் என்று சொல்லி,

அவனை எஷிமோனுக்கு எதிராயிருக்கிற பேயோரின் கொடுமுடிக்கு அழைத்துக்கொண்டு போனான்.

அப்பொழுது பிலேயாம் பாலாகை நோக்கி: இங்கே எனக்கு ஏழு பலிபீடங்களைக் கட்டி, இங்கே எனக்கு ஏழு காளைகளையும் ஏழு ஆட்டுக் கடாக்களையும் ஆயத்தம்பண்ணும் என்றான்.

பிலேயாம் சொன்னபடி பாலாக் செய்து, ஒவ்வொரு பீடத்தில் ஒவ்வொரு காளையையும் ஒவ்வொரு ஆட்டுக்கடாவையும் பலியிட்டான்.

மேற்க்கூறிய வசனங்களை நாம் தியானிக்கும் போது பாலாக், இஸ்ரவேலரை சபிக்கும்படியாக, இரண்டாவது முறையாக பிஸ்காவின் கொடுமுடியில் அழைத்துக்கொண்டு போனான்.  ஆனால் கர்த்தர் இஸ்ரவேலை அதிகமாக ஆசீர்வதித்ததை கண்டு பாலாக் அவனை நோக்கி நீர் பார்க்கத்தக்க வேறொரு இடத்திற்கு என்னோடே கூட வரவேண்டும்; நீர் அங்கேயிருந்தாவது  எனக்காக அவர்களை சபிக்கிறது தேவனுக்கு பிரியமாயிருக்கும் என்று சொல்லி அவனை எஷிமோனுக்கு எதிரேயிருக்கிற  பேயோரின் கொடுமுடிக்கு அழைத்துக்கொண்டு போனான்.  அங்கே பிலேயாம், பாலாக்கிடம் ஏழு பலபீடங்களைக் கட்டி, இங்கே எனக்கு ஏழு காளைகளையும், ஏழு ஆட்டுகடாக்களையும், ஆயத்தம் பண்ணும் என்றான்.  பிலேயாம் சொன்னது போல் பாலாக் செய்து, ஒவ்வொரு பீடத்தில் ஒவ்வொரு காளையும். ஒவ்வொரு ஆட்டுகடாவையும் பலியிட்டான்.  

என்னவென்றால்  ஏழு பலிபீடங்கள் கட்டும்படி சொல்கிறார், காரணம் நம்முடைய வாழ்க்கையில் கிறிஸ்துவின் பலிபீடம் ஏழுவித செயல்களும், ஒரே பலிபீடமாகிய கிறிஸ்துவின் உபதேசத்தில் அடங்கியிருக்கிறது.  இந்த ஏழு காரியமும், நிறைவேறும்போது அது பூரண கிருபைக்கு காரணமாகயிருக்கிறது. அதென்னவெனில் மனந்திரும்புதல்,பாவ மன்னிப்பு, ஞானஸ்நானம், பரிசுத்த ஆவியின் அபிஷேகம், அந்தியோந்நியம், அப்பம் பிட்குதல், ஜெபம் பண்ணுதல், இந்த ஏழும் ஒரே பலிபீடத்தின் செயலாக நம் முழு ஆத்துமாவையும் ஒப்புக்கொடுக்க தேவன் திருஷ்டாந்தப்படுத்துகிறார். 

இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்கு பிரியம் என்று பிலேயாம் கண்டபோது, மூன்றாம் முறை, அவன் முந்தி செய்து வந்தது போல் நிமித்தம் பார்க்க போகாமல், வனாந்தரத்துக்கு நேராக தன் முகத்தை திருப்பி, தன் கண்களை ஏறெடுத்து இஸ்ரவேல் தன் கோத்திரங்களின் படி பாளயமிறங்கியிருக்கிறதை பார்த்தான்; அப்போதே தேவ ஆவி அவன் மேல் இறங்கியது.  அப்பொழுது பிலேயாம் சொல்கிறான் கண் திறக்கப்ட்டவன், என்று தன்னை எடுத்துரைக்கிறான்.  காரணம் அவனுடைய கண்கள் முதலில் அடைக்கப்பட்டிருந்தது.  ஆனால் பின்பு கர்த்தரை காணும்படியாக அவன் கண்கள் திறக்கப்பட்டது. கண் திறக்கப்பட்ட பின்பு தேவ ஆவி அவன் மேல் இறங்குகிறார்.   அப்போது அவன் இஸ்ரவேலின் பாளயத்தை பார்க்கிறான். 

அப்போது அவன் விளம்புவது 

எண்ணாகமம் 24:5-7  

யாக்கோபே, உன் கூடாரங்களும், இஸ்ரவேலே, உன் வாசஸ்தலங்களும் எவ்வளவு அழகானவைகள்!

அவைகள் பரவிப்போகிற ஆறுகளைப்போலவும், நதியோரத்திலுள்ள தோட்டங்களைப்போலவும், கர்த்தர் நாட்டின சந்தனமரங்களைப்போலவும், தண்ணீர் அருகே உள்ள கேதுரு விருட்சங்களைப்போலவும் இருக்கிறது.

அவர்களுடைய நீர்ச்சால்களிலிருந்து தண்ணீர் பாயும்; அவர்கள் வித்து திரளான தண்ணீர்களில் பரவும்; அவர்களுடைய ராஜா ஆகாகைப் பார்க்கிலும் உயருவான்; அவர்கள் ராஜ்யம் மேன்மையடையும்.

மேற்கூறப்பட்ட வசனங்களை நாம் தியானிக்கும் போது, யாக்கோபே உன் கூடாரங்களும், இஸ்ரவேலே உன் வாசஸ்தலங்களும் எவ்வளவு அழகானவைகள்.  இவ்விதமாக கர்த்தராகிய இயேசுவை குறித்து தேவ ஆவியில் நிறைந்து பேசுகிறதை வாசிக்கப்படுகிறது.  அவர் ராஜ்யம் எவ்விதம் மேன்மை அடையும் நம்முடைய உள்ளத்தில் என்பதனை கர்த்தர் திருஷ்டாந்தப்படுத்துகிறார்.  அது மட்டுமல்லாமல் மூன்று நாள் ஆசீர்வாதத்திலும், மூன்றாம் நாள் கர்த்தர் கொடுத்த ஆசீர்வாதம் கிறிஸ்துவின் உயிர்தெழுதலும், நம்மிடத்தில் அவர் வாசம் பண்ணுகிறதையும், நம்மை அவருடைய வாசஸ்தலமாக கர்த்தர் மாற்றுகிறதையும், பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம் நம்மை மணவாட்டி சபையாக எழுப்புகிறதையும், அவ்விதம் நம்முடைய வாழக்கை காணப்படுமெங்கில் வாழ்வு, கிறிஸ்துவினால் இன்பமாகயிருக்கும்.  

அவ்விதம் உண்டாயிருந்தால் சங்கீதம் 84:1-7 

சேனைகளின் கர்த்தாவே, உமது வாசஸ்தலங்கள் எவ்வளவு இன்பமானவைகள்!

என் ஆத்துமா கர்த்தருடைய ஆலயப்பிராகாரங்களின்மேல் வாஞ்சையும் தவனமுமாயிருக்கிறது; என் இருதயமும் என் மாம்சமும் ஜீவனுள்ள தேவனை நோக்கிக் கெம்பீர சத்தமிடுகிறது.

என் ராஜாவும் என் தேவனுமாகிய சேனைகளின் கர்த்தாவே, உம்முடைய பீடங்களண்டையில் அடைக்கலான் குருவிக்கு வீடும், தகைவிலான் குருவிக்குத் தன் குஞ்சுகளை வைக்கும் கூடும் கிடைத்ததே.

உம்முடைய வீட்டில் வாசமாயிருக்கிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் எப்பொழுதும் உம்மைத் துதித்துக்கொண்டிருப்பார்கள். (சேலா.)

உம்மிலே பெலன்கொள்ளுகிற மனுஷனும், தங்கள் இருதயங்களில் செவ்வையான வழிகளைக் கொண்டிருக்கிறவர்களும் பாக்கியவான்கள்.

அழுகையின் பள்ளத்தாக்கை உருவ நடந்து அதை நீரூற்றாக்கிக்கொள்ளுகிறார்கள்; மழையும் குளங்களை நிரப்பும்.

அவர்கள் பலத்தின்மேல் பலம் அடைந்து, சீயோனிலே தேவசந்நிதியில் வந்து காணப்படுவார்கள்.

மேற்க்கூறப்பட்ட வசனங்களால் கர்த்தர் எல்லாவற்றை காட்டிலும் நம்மில் மேன்மையுள்ளவராக விளங்குவார்.  இவ்விதம் நம்மை ஆசீர்வதிக்கும் படி ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.