தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 21: 6

அவரை நித்திய ஆசீர்வாதங்களுள்ளவராக்குகிறீர்; அவரை உம்முடைய சமுகத்தின் மகிழ்ச்சியினால் பூரிப்பாக்குகிறீர்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் தேவ ஆசீர்வாதம்ப் பெற்றுக்கொள்ள பரிசுத்தத்தில் வளர வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தர் வாயில் அருளிய வார்த்தைகளை மட்டும் பேசுகிறவர்களாக இருக்க வேண்டும் என்றும், அல்லாமல் நம்முடைய சொந்த விருப்பம் செய்தால் கர்த்தருடைய கோபம் நம்மேல் வருவதையும், பின்பு அதனை அறிந்து கர்த்தரிடம் ஒப்புரவாக வேண்டும் என்பதனையும், அவ்விதம் ஒப்புரவாகுமோனால், நம்மேல் மனதிரங்கி நமக்கு ஆலோசனை தருகிறார் என்பதனை குறித்து தியானித்தோம்.   அது மட்டுமல்ல கர்த்தர் வாயில் அருளிய வார்த்தைகளை மட்டும் பேச வேண்டும் என்று பிலேயாமிடம் எச்சரித்ததால், இஸ்ரவேலரை சபிக்கும்படியாக பாலாக் அழைத்தான்.  ஆனால் கர்த்தர் பிலேயாமை வைத்து ஆசீர்வதிக்கிறார்.   கர்த்தர்  உத்தம இருதயமாய்  தேவனை சேவிக்கிறவர்களை கர்த்தர் ஆசீர்வதிப்பார்.  

அடுத்ததாய் நாம் தியானிக்கிற கருத்து என்னவெனில் 

எண்ணாகமம் 23:13-26

பின்பு பாலாக் அவனை நோக்கி: நீர் அவர்களைப் பார்க்கத்தக்க வேறொரு இடத்திற்கு என்னோடேகூட வாரும்; அங்கே அவர்கள் எல்லாரையும் பாராமல், அவர்களுடைய கடைசிப் பாளயத்தைமாத்திரம் பார்ப்பீர்; அங்கேயிருந்து எனக்காக அவர்களைச் சபிக்கவேண்டும் என்று சொல்லி,

அவனைப் பிஸ்காவின் கொடுமுடியில் இருக்கிற சோப்பீமின் வெளியிலே அழைத்துக்கொண்டுபோய், ஏழு பலி பீடங்களைக் கட்டி, ஒவ்வொரு பீடத்தில் ஒவ்வொரு காளையையும் ஒவ்வொரு ஆட்டுக்கடாவையும் பலியிட்டான்.

அப்பொழுது பிலேயாம் பாலாகை நோக்கி: இங்கே உம்முடைய சர்வாங்க தகனபலியண்டையில் நில்லும்; நான் அங்கே போய்க் கர்த்தரைச் சந்தித்துவருகிறேன் என்றான்.

கர்த்தர் பிலேயாமைச் சந்தித்து, அவன் வாயிலே வசனத்தை அருளி: நீ பாலாகினிடத்திற்குத் திரும்பிபோய், இவ்விதமாய்ச் சொல்லக்கடவாய் என்றார்.

அவனிடத்திற்கு அவன் வருகிறபோது, அவன் மோவாபின் பிரபுக்களோடுங்கூடத் தன்னுடைய சர்வாங்கதகனபலியண்டையிலே நின்றுகொண்டிருந்தான்; பாலாக் அவனை நோக்கி: கர்த்தர் என்ன சொன்னார் என்று கேட்டான்.

அப்பொழுது அவன் தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: பாலாகே, எழுந்திருந்து கேளும்; சிப்போரின் குமாரனே, எனக்குச் செவிகொடும்.

பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல; மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல; அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரா? அவர் வசனித்தும் நிறைவேற்றாதிருப்பாரா?

இதோ, ஆசீர்வதிக்கக் கட்டளைபெற்றேன்; அவர் ஆசீர்வதிக்கிறார், அதை நான் திருப்பக்கூடாது.

அவர் யாக்கோபிலே அக்கிரமத்தைக் காண்கிறதும் இல்லை, இஸ்ரவேலிலே குற்றம் பார்க்கிறதும் இல்லை; அவர்களுடைய தேவனாகிய கர்த்தர் அவர்களோடே இருக்கிறார்; ராஜாவின் ஜயகெம்பீரம் அவர்களுக்குள்ளே இருக்கிறது.

தேவன் அவர்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்; காண்டாமிருகத்துக்கொத்த பெலன் அவர்களுக்கு உண்டு.

யாக்கோபுக்கு விரோதமான மந்திரவாதம் இல்லை, இஸ்ரவேலுக்கு விரோதமான குறிசொல்லுதலும் இல்லை; தேவன் என்னென்ன செய்தார் என்று கொஞ்சக்காலத்திலே யாக்கோபையும் இஸ்ரவேலையும் குறித்துச் சொல்லப்படும்.

அந்த ஜனம் துஷ்ட சிங்கம்போல எழும்பும், பால சிங்கம்போல நிமிர்ந்து நிற்கும்; அது தான் பிடித்த இரையைப் பட்சித்து, வெட்டுண்டவர்களின் இரத்தத்தைக் குடிக்குமட்டும் படுத்துக்கொள்வதில்லை என்றான்.

அப்பொழுது பாலாக் பிலேயாமை நோக்கி: நீர் அவர்களைச் சபிக்கவும் வேண்டாம், அவர்களை ஆசீர்வதிக்கவும் வேண்டாம் என்றான்.

அதற்குப் பிலேயாம் பாலாகைப் பார்த்து: கர்த்தர் சொல்லுகிறபடியெல்லாம் செய்வேன் என்று உம்மோடே நான் சொல்லவில்லையா என்றான்.

மேற்க்கூறிய வசனங்களை நாம் பார்க்கும் போது கர்த்தர் இஸ்ரவேலை ஆசிர்வாதத்தின் காரணமாக பாலாக், பிலேயாமை நோக்கி, அவர்களை பார்க்கத்தக்க  வேறொரு இடத்திற்கு அழைத்துக்கொண்டு போகும்படியாக பிலேயாமிடம் பேசி; அவர்கள் எல்லாரையும் பாராமல் அவர்களுடைய  கடைசி பாளயத்தை மாத்திரம் பார்ப்பீர்; அங்கு வந்து சபிக்கவேண்டும் என்று கூறி அவனை பிஸ்காவின் கொடுமுடியில் இருக்கிற சோப்பீமின் வெளியிலே அழைத்துக்கொண்டு போய்,  ஏழு பலிபீடங்களை கட்டி, ஒவ்வொரு பீடத்தின் ஒவ்வொரு காளையும் ஒவ்வொரு ஆட்டுக்கடாவையும் பலியிட்டான்.  

அவ்விதம் பலியிட்டபிறகு அவன் கர்த்தர் அவனை சந்திக்கும் இடத்திற்கு போனான்.  அப்போது கரத்தர் அவனை சந்தித்து அவன் வாயிலே வசனங்களை அருளி, இதனை பாலாகிடத்தில்  திரும்பி போய் இவ்விதம் சொல் என்றார். அப்போது அவன் பாலாகிடத்தில் போகும் போது அவன் மோவாபின் பிரபுக்களோடுங்கூட, தன்னுடைய சர்வாங்க தகனபலிகளோடே கூட பிலேயாமுக்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போது பிலேயாம் அவனை நோக்கி 

எண்ணாகமம் 23:19-24  

பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல; மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல; அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரா? அவர் வசனித்தும் நிறைவேற்றாதிருப்பாரா?

இதோ, ஆசீர்வதிக்கக் கட்டளைபெற்றேன்; அவர் ஆசீர்வதிக்கிறார், அதை நான் திருப்பக்கூடாது.

அவர் யாக்கோபிலே அக்கிரமத்தைக் காண்கிறதும் இல்லை, இஸ்ரவேலிலே குற்றம் பார்க்கிறதும் இல்லை; அவர்களுடைய தேவனாகிய கர்த்தர் அவர்களோடே இருக்கிறார்; ராஜாவின் ஜயகெம்பீரம் அவர்களுக்குள்ளே இருக்கிறது.

தேவன் அவர்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்; காண்டாமிருகத்துக்கொத்த பெலன் அவர்களுக்கு உண்டு.

யாக்கோபுக்கு விரோதமான மந்திரவாதம் இல்லை, இஸ்ரவேலுக்கு விரோதமான குறிசொல்லுதலும் இல்லை; தேவன் என்னென்ன செய்தார் என்று கொஞ்சக்காலத்திலே யாக்கோபையும் இஸ்ரவேலையும் குறித்துச் சொல்லப்படும்.

அந்த ஜனம் துஷ்ட சிங்கம்போல எழும்பும், பால சிங்கம்போல நிமிர்ந்து நிற்கும்; அது தான் பிடித்த இரையைப் பட்சித்து, வெட்டுண்டவர்களின் இரத்தத்தைக் குடிக்குமட்டும் படுத்துக்கொள்வதில்லை என்றான்.

மேற்க்கூறிய வசனங்களை நாம் தியானிக்கும் போது கர்த்தர் தம்முடைய ஜனங்களாகிய இஸ்ரவேலை ஆசீர்வதிக்கிறதைப் பார்க்கமுடிகிறது.   யாக்கோபிலே அக்கிரமம் காண்கிறதும் இல்லை என்பதும், இஸ்ரவேலிலே  குற்றம் பார்க்கிறதும் இல்லை என்றும், அவர்கள் அக்கிரமம் பாவம் இவற்றையெல்லாம் கர்த்தருக்கு முன்பாக அறிக்கையிட்டு விடுதலை பெற்றுக்கொண்டவர்களும், இஸ்ரவேலரோடு கர்த்தர் இருக்கிறார் என்பதும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஜெயகெம்பீரம் அவர்களுக்குள்ளே இருக்கிறது. மந்திரவாதமும், குறிச்சொல்லுதலும் , அவர்களிடத்தில்  இல்லை என்பதும், எந்த மந்திரவாதமும், குறிசொல்லுதலும் அவர்களை தொடாது என்பதும், யாரும் இஸ்ரவேலரோடு யாரும் எதிர்த்து யுத்தம் செய்து வெற்றிப்பெறமுடியாது என்பதும், எதிர்த்து வருகிறவர்களை பட்சிக்கும்மட்டும் படுத்துக்கொள்வதில்லை என்றும் இஸ்ரவேலரை கர்த்தர் ஆசீர்வதித்ததை வாசிக்கும் போது பார்க்கமுடிகிறது.  

மேலும் நாம் கவனமாக இருப்பது என்னவென்றால் மோவாப் இஸ்ரவேலரை சபிக்கும்படியாக கொடுமுடியில் போய் பலிசெலுத்துகிறான்.  பிரியமானவர்களே நாம் ஒவ்வொருவரும் பரிசுத்தத்தில் வளர்ந்தால் மாத்திரமே பாகாலுடைய மந்திராலோசனையிடத்திலிருந்து நாம் வெற்றிப்பெறுவோம்.  மேலும் கர்த்தர் இஸ்ரவேலரை இரண்டாவதும் ஆசீர்வதித்ததை கண்ட பாலாக், பிலேயாமை நோக்கி, நீர் அவர்களை ஆசீர்வதிக்கவும் வேண்டாம், சபிக்கவும் வேண்டாம் என்றான்.  அப்போது பிலேயாம் கர்த்தர் சொல்லுகிறபடி செய்வேன் என்று நான் உம்மிடம் சொல்லியிருந்தேன் என்று சொல்லுகிறான்.  

பிரியமானவர்களே இரண்டாந்தரம் அவர்களை முதல்முறையை காட்டிலும் அதிகமாக ஆசீர்வதித்தார்.  என்னவெனில் ஒவ்வொரு சோதனையிலும் நாம் ஜெபத்திலும் பரிசுத்ததிலும் வளரும் போது, தேவனுடைய ஆசீர்வாதம் நமக்குள்ளில் பெருகிக்கொண்டிருக்கும்.  இவ்விதம் அனுதினம் நம்மில் தேவாசீர்வாதம் பெருகும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.