கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, 

முந்தின பகுதியில் இரண்டு நாளாக கர்த்தருக்கு நம்மை முழுவதும் ஒப்புக்கொடுக்கும் விதம்,  மேலும் கர்த்தருக்கு காணிக்கை செலுத்தும் விதம்,  காணிக்கை கொடுத்தல்,  காணிக்கை எவ்விதம் கொடுக்க வேண்டும் என்று தியானித்துக் கொண்டிருக்கிறோம்.  மேலும் அப்போஸ்தல ஊழியத்தை தேவன் தெரிந்தெடுத்து,  நம்முடைய தேவன் கிறிஸ்து மூலமாய் அப்போஸ்தல ஊழியம் செய்யும்போது,  விசுவாசிகள் யாவரும் தங்களுக்கு உள்ள யாவையும் அப்போஸ்தலர் பாதத்தில் வைக்கிறதையும்,  எல்லாருக்கும் ஒன்றும் குறைவு படாமல் கொடுத்ததையும் நாம் தியானித்தோம்.

ஆனால் தேவன் விரும்புகிற இந்த ஊழியம் எந்த தேசத்திலும் காணப்படுவது மிக அரிதாயிருக்கிறது. எல்லா ஜனங்களும் பொரு ளாசையை சார்ந்து இருக்கிறதினால்  தேவன் விரும்புகிற இவ் விதமான ஊழியம் நடைபெறவில்லை என நம்புகிறோம்.

ஏசாயா 57:17

நான் அவர்கள் பொருளாசையென்னும் அக்கிரமத்தினிமித்தம் கடுங்கோபமாகி, அவர்களை அடித்தேன், நான் மறைந்து, கடுங்கோபமாயிருந்தேன், தங்கள் மனம்போனபோக்கிலே மாறுபாடாய் நடந்தார்களே.

ஏசாயா 57:18      

அவர்கள் வழிகளை நான் பார்த்து, அவர்களைக் குணமாக்குவேன், அவர்களை நடத்தி, திரும்பவும் அவர்களுக்கும் அவர்களிலே துக்கப்படுகி றவர்களுக்கும் ஆறுதல் அளிப்பேன்.

கொலோசெயர் 1:16-18

ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது. பரலோகத்திலு ள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படு கிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், அதிகாரங்க ளானாலும், சகலமும் அவரைக்கொண்டும், அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது.

 

அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள் நிலை நிற்கிறது.

அவரே சபையாகிய சரீரத்திற்குத் தலையானவர். எல்லாவற்றிலும் முதல்வராயிருக்கும்படி, அவரே ஆதியும் மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறுமானவர்.

இதிலிருந்து நமக்கு தெரியவருகிறது என்னவென்றால் உலக ஐசுவரியம்,  பொருட்கள்,  சம்பத்து சேர்த்து குவித்து வைப்பது தேவனுக்கு பிரியமில்லாத காரியம் என்பதை நாம் நன்கு உணர்ந்துக்  கொள்ள வேண்டும். எல்லாமே தேவனுக்குரியது, நாம் தேவனுக்குரிய வேலைகளை செய்வதற்காக தேவன் எல்லாவற்றையும் இவ்வுலகத்தில் நமக்கு தந்து நம்மை சோதித்து பார்க்கிறார் நாமோ அவருடைய சித்தம் செய்யாமல் சுகபோகமாக வாழ்கிறோம்.

அதைத்தான் ஆகாய் 1:3, 4- ஆனாலும் ஆகாய் என்னும் தீர்க்கதிசியின் மூலமாய்க் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அவர் சொல்லுகிறார்:

இந்த வீடு பாழாய்க் கிடக்கும்போது, நீங்கள் மச்சுப்பாவப்பட்ட உங்கள் வீடுகளில் குடியிருக்கும்படியான காலம் இதுவோ?

உங்கள் வழிகளை சிந்தித்து பாருங்கள் என்று கர்த்தர் சொல்லுவது ஆகாய் 1:6

நீங்கள் திரளாய் விதைத்தும் கொஞ்சமாய் அறுத்துக் கொண்டுவருகிறீர்கள். நீங்கள் புசித்தும் திருப்தியாகவில்லை. குடித்தும் பரிபூரணமடையவில்லை. நீங்கள் வஸ்திரம் உடுத்தியும் ஒருவனுக்கும் குளிர்விடவில்லை. கூலியைச் சம்பாதிக்கிறவன் பொத்தலான பையில் போடுகிறவனாய் அதைச் சம்பாதிக்கிறான்.

ஆகாய் 1:9-11

அதிகமாய் வருமென்று நீங்கள் எதிர்பார்த்திருந்தும், இதோ, கொஞ்சம் கிடைத்தது. நீங்கள் அறுத்து வீட்டுக்குக் கொண்டுவந்தும், நான் அதை ஊதிப்போடுகிறேன். எதினிமித்தமென்றால், என் வீடு பாழாய்க்கிடக்கும்போது, நீங்கள் எல்லாரும் அவனவன் தன்தன் வீட்டிற்கு ஓடிப்போகிறீர்களே, இதினிமித்தமே என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

 

ஆதலால் உங்கள்மேல் இருக்கிற வானம் பனியைப் பெய்யாமலும், பூமி பலனைக் கொடாமலும் போயிற்று.

நான் நிலத்தின்மேலும், மலைகளின்மேலும், தானியத்தின்மேலும், புது திராட்சரசத்தின்மேலும், எண்ணெயின்மேலும், பூமியில்விளைகின்ற எல்லாவற்றின்மேலும், மனுஷரின்மேலும்;, மிருகங்களின்மேலும், கைப்பாடு அனைத்தின்மேலும் வறட்சியை வருவித்தேன் என்றார்.

பிரியமானவர்களே! நமக்கு தெரியவருவது என்னவென்றால் தேவனுக்குரியவைகள் தேவனுக்கு கொடுக்காத காரணத்தாலும், தேவனுக்குரிய சகலத்தையும்  நாம் சேகரித்து சுகபோகமாக வாழவேண்டுமென்றிருப்பதாலும்,  மேலும் தலைமுறை தலைமுறைக்காக சேகரித்து வைத்திருப்பதாலும்,  சபைகளில் தேவன் விருப்பப்படாத காரியங்களை தேவ ஊழியர்கள்,  தேவ  விசுவாசிகள் செய்கிறதினாலும்,  மேலும் தேவனுடைய வேலையை தனக்கு தான் ஆதாயத் தொழில் என்று எண்ணுகிறதினாலும்,   தேவன் இலவசமாக தந்த கிருபையை விலைக்கு  அநேக ஊழியர் விற்கிறதினாலும், மக்களை ஏமாற்றி வஞ்சிக்கிறதினாலும்,  தேவனுடைய  சத்தியத்தை கொடுக்காதப்படி ஜனங்களை பாதாளத்திற்கு நேராக வழிநடத்துகிறதினாலும்  மேலும் தங்களை தாங்களே மேய்த்துக் கொள்கிறதினாலும் தேவன் கோபம் உடையவராக சபைகளிலும்,  நம் வீடுகளிலும் வறட்சியை அனுப்புகிறார்.

மேலும் அனனியா என்ற ஒரு மனுஷனை குறித்து வேதத்தில் எழுதப்பட்டிருக்கிறது. அனனியா தன்  மனைவி அறிய காணியாட்சி நிலத்தை விற்று அதில் ஒரு பங்கை வஞ்சித்து வைத்து,  ஒரு பங்கை  அப்போஸ்தலருடைய பாதத்தில் வைத்தாள்.

அப்போஸ்தலர் 5:3

பேதுரு அவனை நோக்கி; அனனியாவே, நிலத்தின் கிரயத்தில் ஒரு பங்கை வஞ்சித்துவைத்து, பரிசுத்தஆவியினிடத்தில் பொய்சொல்லும் படி, சாத்தான் உன் இருதயத்தை நிரப்பினதென்ன?

பேதுரு அனனியாவிடத்தில் நீ மனுஷனிடத்தில் அல்ல தேவனிடத்தில் பொய் சொன்னாய்.

 

அப்போஸ்தலர் 5:5

அனனியா இந்த வார்த்தைகளைக்கேட்கவே, விழுந்து ஜீவனை விட்டான். இவைகளைக் கேள்விப்பட்ட யாவருக்கும் மிகுந்த பயமுண்டாயிற்று.

அவனை சேலையில் சுற்றி வெளியே கொண்டு போனார்கள். ஏறக்குறைய 3 மணி நேரத்திற்கு பின் அவன் மனைவி நடந்ததை அறியாமல் உள்ளே வந்தாள்.

அவளிடத்திலும்   பேதுரு நிலத்தை இவ்வளவுக்குதானா விற்றீர்கள் எனக்கு சொல் என்று சொன்னப் போது,  அவளும் ஆம்,  இவ்வளவுக்கு தான்  என்றாள்.

அப்போஸ்தலர் 5:9

பேதுரு அவளை நோக்கி; கர்த்தருடைய ஆவியைச் சோதிக்கிறதற்கு நீங்கள் ஒருமனப்பட்டதென்ன? இதோ, உன் புருஷனை அடக்கம்பண்ணி னவர்களுடைய கால்களும் வாசற்படியிலே வந்திருக்கிறது, உன்னையும் வெளியே கொண்டு போவார்கள் என்றான்.

அப்போஸ்தலர் 5:11

சபையாரெல்லாருக்கும், இவைகளைக் கேள்விப்பட்ட மற்ற யாவருக்கும் மிகுந்த பயமுண்டாயிற்று.

அப்போஸ்தலர் 5:14

திரளான புருஷர்களும் ஸ்திரிகளும் விசுவாசமுள்ளவர்களாகிக் கர்த்தரிடமாக அதிகமதிகமாய்ச் சேர்க்கப்பட்டார்கள்.

இவ்விதமாய் அந்நாட்களில் விசுவாசிகள் தங்களை முழுமையாக எல்லாவற்றையும் தேவனுக்காக ஒப்புக் கொடுத்தார்கள். இவ்விதமாக ஜனங்களில் திரளான கூட்டத்தார் இயேசுவை ஏற்றுக்கொண்டு  தேவனை மகிமைப்படுத்தினார்கள். இவ்விதமாக நாமும் நம்மையே ஒன்று சோதித்தறிந்து யாவரும் தேவனுக்கு கீழ்ப்படிவோமானால், தேவன் தேசங்களை தேவ கோபத்தில் இருந்து விடுவித்து சமாதானத்தையும்,  சந்தோஷத்தையும்,கட்டாயமாக நமக்கு தந்தருளுவார்.  எல்லோரும் நம்முடைய குறைகளை ஒன்று அலசி ஆராய்வோம்.  நாம் எப்படி இருக்கிறோம் என்பதை சிந்திப்போம், ஜெபிப்போம்,  கீழ்ப்படிவோம்,  நன்மையை சுதந்தரிப்போம்.

கர்த்தர் யாவரையும் ஆசீர்வதிப்பாராக.                 -தொடர்ச்சி நாளை