கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,
யாத்திராகமம் 35:10
உங்களில் ஞான இருதயமுள்ள அனைவரும் வந்து, கர்த்தர் கட்டளையிட்ட
வைகளையெல்லாம் செய்வார்களாக.
யாத்திராகமம் 35:21-29
பின்பு எவர்களை அவர்கள் இருதயம் எழுப்பி, எவர்களை அவர்கள்
ஆவி உற்சாகப்படுத்தினதோ, அவர்கள் எல்லாரும் ஆசரிப்புக் கூடாரத்தின் வேலைக்கும், அதின்
சகல ஊழியத்துக்கும், பரிசுத்த வஸ்திரங்களுக்கும் ஏற்றவைகளைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக்
கொண்டுவந்தார்கள்.
மனப்பூர்வமுள்ள ஸ்திரீ புருஷர் யாவரும், அஸ்தகடங்கள், காதணிகள்,
மோதிரங்கள், ஆரங்கள் முதலான சகல வித பொன்னாபரணங்களையும் கொண்டுவந்தார்கள். கர்த்தருக்குக்
காணிக்கை செலுத்தின ஒவ்வொரு வனும் பொன்னைக் காணிக்கையாகச் செலுத்தினான்.
இளநீலநூலையும் இரத்தாம்பரநூலையும் சிவப்புநூலையும் மெல்லிய
பஞ்சுநூலையும் வெள்ளாட்டு மயிரையும் சிவப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத் தோலையும் தகசுத்தோலையும்
தங்களிடத்தில் வைத்திருந்த யாவரும் அவைகளைக் கொண்டுவந்தார்கள்.
வெள்ளியையும் வெண்கலத்தையும் கொடுக்கத்தக்க யாவரும் அவை களைக்
கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தார்கள். பற்பல வேலைகளுக்கு உதவும் சீத்திம்
மரத்தைத் தங்களிடத்தில் வைத்திருந்த யாவரும் அவைகளைக் கொண்டுவந்தார்கள்.
ஞான இருதயமுள்ள ஸ்திரீகள் எல்லாரும் தங்கள் கைகளினால் நூற்று,
தாங்கள் நூற்ற இளநீலநூலையும் இரத்தாம்பரநூலையும் சிவப்பு நூலையும் மெல்லிய பஞ்சுநூலையும்
கொண்டுவந்தார்கள்.
எந்த ஸ்திரீகளுடைய இருதயம் ஞான எழுப்புதல் அடைந்ததோ, அவர்கள்
எல்லாரும் வெள்ளாட்டு மயிரைத் திரித்தார்கள்.
பிரபுக்கள் ஏபோத்திலும் மார்ப்பதக்கத்திலும் பதிக்கும் கோமேதகம்
முதலிய இரத்தினங்களையும்,
பரிமளவர்க்கங்களையும்,விளக்கெண்ணையையும்,அபிஷேகதைலத்துக்கும்
சுகந்தவர்க்க தூபத்துக்கும் வேண்டியவைகளையும் கொண்டு வந்தார்கள்.
செய்யப்படும்படி கர்த்தர் மோசேயைக்கொண்டு கற்பித்த வேலைக்
குரிய யாவையும் கொண்டுவர, இஸ்ரவேல் புத்திரருக்குள் தங்கள் இருதயத்தில் உற்சாகமடைந்த
ஸ்திரீ புருஷர் யாவரும் கர்த்தருக்குக் காணிக்கையை மனப்பூர்வமாய்க் கொண்டுவந்தார்கள்.
பிரியமானவர்களே, கர்த்தருக்கு காணிக்கைக் கொடுத்தால், அது கட்டாயத்தின்
பேரில்; மற்றவர்களுடைய வற்புறுத்துதலில் அல்ல மனப்பூர்வமாய் கொடுக்க வேண்டும்.
II கொரிந்தியர் 9:7
அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்த
படியே கொடுக்கக்கடவன். உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்.
மேலும் நாம் அறியவேண்டியது என்னவெனில்,
நீதிமொழிகள் 11:24, 25
வாரியிறைத்தும் விருத்தியடைவாரும்
உண்டு, அதிகமாய் பிசினித்தனம் பண்ணியும் வறுமையடைவாரும் உண்டு.
உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்: எவன் தண்ணீர் பாய்ச்சு
கிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும்.
கர்த்தருக்கு காணிக்கை கொடுக்கும்
முன்பாக நான் நம்மை முழுவதும் (இருதயத்தை) தேவனுக்கு ஒப்புக்கொடுத்து பரிசுத்தப்பட வேண்டும்.
அதைத்தான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து,
மத்தேயு 23:19
மதிகேடரே, குருடரே! எது முக்கியம்? காணிக்கையோ, காணிக்கையைப்
பரிசுத்தமாக்குகிற பலிபீடமோ?
நம்முடைய கர்த்தராகிய இயேசு
கிறிஸ்து இவ்விதமாக சொல்வதற்கு காரணம் என்னவென்றால் காணிக்கையில் ஒழுங்காக இருப்பார்கள்,
கர்த்தருடைய நீதி, நியாயங்களை ஏற்றுக்கொள்ள
மாட்டார்கள். அதினால் இயேசுகிறிஸ்து இவ்விதம்
சொல்கிறதை பார்க்கிறோம்.
மத்தேயு 23:23
மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, நீங்கள்
ஒற்தலாமிலும் வெந்தையத்திலும் சீரகத்திலும் தசமபாகம் செலுத்தி, நியாயப்பிரமாணத்தில்
கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள்,
இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாதிருக்க வேண்டுமே.
மத்தேயு 23:24-26
குருடரான வழிகாட்டிகளே, கொசுயில்லாதபடி வடிகட்டி, ஒட்டகத்தை
விழுங்குகிறவர்களாயிருக்கிறீர்கள்.
மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, போஜனபானபாத்திரங்களின்
வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள், உட்புறத்திலோ அவைகள் கொள்ளையினாலும் அநீதத்தினாலும்
நிறைந்திருக்கிறது.
குருடனான பரிசேயனே! போஜனபானபாத்திரங்களின் வெளிப்புறம் சுத்தமாகும்படி
அவைகளின் உட்புறத்தை முதலாவது சுத்தமாக்கு.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,
நாம் தேவனுக்கு கொடுக்கிற காணிக்கை தேவன் பரிசுத்தப்படுத்தி
அங்கீகரிக்க வேண்டுமானால் நம் உள்ளம் தேவன் விரும்புகிற பிரகாரம் சுத்தப்படுத்தி பரிசுத்தப்படுத்தினால்
மட்டுமே தேவன் நாம் கொடுக்கிற காணிக்கைக்கு
ஏற்ற பிரதிபலனை நமக்கு தருவார் என்பதை நாம் யாவரும் அறியவேண்டும்.
மேலும் நாம் அறிந்து கொள்ளவேண்டிய
காரியம் என்னவெனில்
அப்போஸ்தலர் 4:32-37
விசுவாசிகளாகிய திரளான
கூட்டத்தார் ஒரே இருதயமும் ஒரே மனமுமுள்ளவர்களாயிருந்தார்கள். ஒருவனாகிலும் தனக்குள்ளவைகளில்
ஒன்றையும் தன்னுடையதென்று சொல்லவில்லை, சகலமும் அவர்களுக்குப் பொதுவாயிருந்தது.
கர்த்தராகிய இயேசுவின் உயிர்த்தெழுதலைக்குறித்து அப்போஸ்தலர்கள்
மிகுந்த பலமாய்ச் சாட்சிகொடுத்தார்கள், அவர்களெல்லார்மேலும் பூரண கிருபை உண்டாயிருந்தது.
நிலங்களையும் வீடுகளையும் உடையவர்கள் அவைகளை விற்று, விற்கப்பட்டவைகளின்
கிரயத்தைக் கொண்டுவந்து,
அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தார்கள். அவனவனுக்குத் தேவையானதற்குத்தக்கதாய்ப்
பகிர்ந்துகொடுக்கப்பட்டது. அவர்களில் ஒருவனுக்கும் ஒன்றும் குறைவாயிருந்ததில்லை.
சீப்புருதீவானும் லேவியனும் அப்போஸ்தலராலே ஆறுதலின் மகன்
என்று அர்த்தங்கொள்ளும் பர்னபா என்னும் மறுபேர்பெற்றவனுமாகிய யோசே என்பவன்,
தனக்கு உண்டாயிருந்த நிலத்தைவிற்று, அதின் கிரயத்தைக் கொண்டு
வந்து, அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தான். ஜெபிப்போம்.
கர்த்தர் இவ்விதமாய் ஆசீர்வதிப்பாராக
-தொடர்ச்சி
நாளை