தேவனுக்கே மகிமையுண்டாவதாக

ரோமர் 7: 21, 22

ஆனபடியால் நன்மைசெய்ய விரும்புகிற என்னிடத்தில் தீமையுண்டென்கிற ஒரு பிரமாணத்தைக் காண்கிறேன்.

உள்ளான மனுஷனுக்கேற்றபடி தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்மேல் பிரியமாயிருக்கிறேன்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் இஸ்ரவேல் சபையில் அறுப்புண்டு போகாமல், நம்மை சுத்திகரித்துக் கொள்ள வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்மிடத்தில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஆசாரியத்துவ பணி செய்யவேண்டுமானால் நாம் உலக ஆஸ்திகளில் ஆசைக்கொள்ளாமல், கர்த்தரே பங்கு, கர்த்தரே என் சு்தந்தரம் என்று இருந்தால் மட்டும் கர்த்தர் ஆசாரியராகவும், பிரதான ஆசாரியராகவும், நித்திய ஆசாரியராக நம் உள்ளத்தில் மகிமைப்படுவார் என்று நாம் தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிக்கப்போகிற கருத்துக்கள் என்னவென்றால் 

எண்ணாகமம் 19:1-22   

கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:

கர்த்தர் கற்பித்த நியமப்பிரமாணமாவது: பழுதற்றதும் ஊனமில்லாததும் நுகத்தடிக்கு உட்படாததுமாகிய சிவப்பான ஒரு கிடாரியை உன்னிடத்தில் கொண்டுவரும்படி இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லுங்கள்.

அதை எலெயாசார் என்னும் ஆசாரியனிடத்தில் ஒப்புக்கொடுங்கள்; அவன் அதைப் பாளயத்துக்கு வெளியே கொண்டுபோகக்கடவன்; அங்கே அது அவனுக்கு முன்பாகக் கொல்லப்படக்கடவது.


அப்பொழுது ஆசாரியனாகிய எலெயாசார் தன் விரலினால் அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ஆசரிப்புக் கூடாரத்துக்கு எதிராக ஏழுதரம் தெளிக்கக்கடவன்.

பின்பு கிடாரியை அவன் கண்களுக்கு முன்பாக ஒருவன் சுட்டெரிக்கவேண்டும்; அதின் தோலும் அதின் மாம்சமும் அதின் இரத்தமும் அதின் சாணியும் சுட்டெரிக்கப்படவேண்டும்.

அப்பொழுது ஆசாரியன் கேதுருக்கட்டையையும் ஈசோப்பையும் சிவப்புநூலையும் எடுத்து, கிடாரி எரிக்கப்படுகிற நெருப்பின் நடுவிலே போடக்கடவன்.

பின்பு ஆசாரியன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, ஜலத்திலே ஸ்நானம்பண்ணி, அதின்பின்பு பாளயத்தில் பிரவேசிக்கக்கடவன்; ஆசாரியன் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.

அதைச் சுட்டெரித்தவனும் தன் வஸ்திரங்களை ஜலத்தில் தோய்த்து, ஜலத்திலே ஸ்நானம்பண்ணி, சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.

சுத்தமாயிருக்கிற ஒருவன் அந்தக் கிடாரியின் சாம்பலை வாரிக்கொண்டு பாளயத்திற்குப் புறம்பே சுத்தமான ஒரு இடத்திலே கொட்டிவைக்கக்கடவன்; அது இஸ்ரவேல் புத்திரரின் சபைக்காகத் தீட்டுக்கழிக்கும் ஜலத்துக்கென்று காத்துவைக்கப்படவேண்டும்; அது பாவத்தைப் பரிகரிக்கும்.

கிடாரியின் சாம்பலை வாரினவன் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன்; அவன் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்; இது இஸ்ரவேல் புத்திரருக்கும் அவர்கள் நடுவிலே தங்குகிற அந்நியனுக்கும் நித்திய கட்டளையாயிருப்பதாக.

செத்துப்போனவனுடைய பிரேதத்தைத் தொட்டவன் ஏழுநாள் தீட்டுப்பட்டிருப்பான்.

அவன் மூன்றாம் நாளிலும் ஏழாம் நாளிலும் தீட்டுக்கழிக்கும் ஜலத்தினால் தன்னைச் சுத்திகரிக்கக்கடவன்; அப்பொழுது சுத்தமாவான்; மூன்றாம் நாளிலும் ஏழாம் நாளிலும் தன்னைச் சுத்திகரிக்காமலிருப்பானாகில் சுத்தமாகான்.

செத்தவனுடைய பிரேதத்தைத் தொட்டும், தன்னைச் சுத்திகரித்துக்கொள்ளாதவன் கர்த்தரின் வாசஸ்தலத்தைத் தீட்டுப்படுத்துகிறான்; அந்த ஆத்துமா இஸ்ரவேலில் இராமல் அறுப்புண்டுபோவான்; தீட்டுக்கழிக்கும் ஜலம் அவன்மேல் தெளிக்கப்படாததினால், அவன் தீட்டுப்பட்டிருப்பான்; அவன் தீட்டு இன்னும் அவன்மேல் இருக்கும்.

கூடாரத்தில் ஒரு மனிதன் செத்தால், அதற்கடுத்த நியமமாவது: அந்தக் கூடாரத்தில் பிரவேசிக்கிற யாவரும் கூடாரத்தில் இருக்கிற யாவரும் ஏழுநாள் தீட்டுப்பட்டிருப்பார்கள்.

மூடிக் கட்டப்படாமல் திறந்திருக்கும் பாத்திரங்கள் எல்லாம் தீட்டுப்பட்டிருக்கும்.

வெளியிலே பட்டயத்தால் வெட்டுண்டவனையாவது, செத்தவனையாவது, மனித எலும்பையாவது, பிரேதக்குழியையாவது, தொட்டவன் எவனும் ஏழுநாள் தீட்டுப்பட்டிருப்பான்.

ஆகையால் தீட்டுப்பட்டவனுக்காக, பாவத்தைப் பரிகரிக்கும் கிடாரியின் சாம்பலிலே கொஞ்சம் எடுத்து, ஒரு பாத்திரத்தில் போட்டு, அதின்மேல் ஊற்று ஜலம் வார்க்கவேண்டும்.

சுத்தமான ஒருவன் ஈசோப்பை எடுத்து, அந்த ஜலத்திலே தோய்த்து, கூடாரத்தின்மேலும் அதிலுள்ள சகல பணிமுட்டுகளின்மேலும் அங்கேயிருக்கிற ஜனங்களின்மேலும் தெளிக்கிறதுமல்லாமல், எலும்பையாகிலும் வெட்டுண்டவனையாகிலும் செத்தவனையாகிலும் பிரேதக்குழியையாகிலும் தொட்டவன்மேலும் தெளிக்கக்கடவன்.

சுத்தமாயிருக்கிறவன் தீட்டுப்பட்டவன்மேல் மூன்றாம் நாளிலும் ஏழாம் நாளிலும் தெளிக்கவேண்டும்; ஏழாம் நாளில் இவன் தன்னைச் சுத்திகரித்து, தன் வஸ்திரங்களைத் தோய்த்து, ஜலத்தில் ஸ்நானம்பண்ணி, சாயங்காலத்திலே சுத்தமாயிருப்பான்.

தீட்டுப்பட்டிருக்கிறவன் தன்னைச் சுத்திகரித்துக்கொள்ளாதிருந்தால், அவன் சபையில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான்; அவன் கர்த்தரின் பரிசுத்த ஸ்தலத்தைத் தீட்டுப்படுத்தினான்; தீட்டுக்கழிக்கும் ஜலம் அவன்மேல் தெளிக்கப்படாததினால் அவன் தீட்டுப்பட்டிருக்கிறான்.

தீட்டுக்கழிக்கும் ஜலத்தைத் தெளிக்கிறவனும் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன்; தீட்டுக்கழிக்கும் ஜலத்தைத் தொட்டவனும் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.

தீட்டுப்பட்டிருக்கிறவன் தொடுகிறவைகளெல்லாம் தீட்டுப்படும், அவைகளைத் தொடுகிறவனும் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்; இது உங்களுக்கு நித்திய கட்டளையாயிருக்கும் என்றார்.

மேற்கூறிய வசனங்களில் கர்த்தர் மோசேயையும், ஆரோனையும நோக்கி கற்பித்த நியாயப்பிரமாணமாவது பழுதற்றதும், ஊனமில்லாததும், சிவப்பான ஒரு கிடாரியை  கொண்டுவரும்படி இஸ்ரவேல் புத்திரருக்கு சொல்லி, அதை ஆசாரியனாகிய எலெயாசாரிடத்தில் ஒப்புக்கொடுங்கள் என்றும், அவன் அதனை பாளயத்துக்கு வெளியேக் கொண்டு போகக்கடவன்  என்றும், அங்கே அதனைக் கொல்லவேண்டும் என்றும், பின்பு அதன் இரத்தத்தில் கொஞ்சம் தன் விரலினால் எடுத்து ஏழுதரம் ஆசரிப்புக்கூடரத்துக்கு எதிராக தெளிக்கவேண்டும்.  

அதன் பின்பு அந்த கிடாரியை சுட்டெரிக்க வேண்டும்.  என்னவென்றால் அதன் தோலும், மாம்சமும், அதன் இரத்தமும்,  அதன் சாணியும் சுட்டெரிக்கப்படவேண்டும்.  அப்பொழுது ஆசாரியன் கேதுரு கட்டையையும், ஈசோப்பையும், சிவப்பு நூலையும், கிடாரி எரிக்கப்படுகிற நெருப்பின் நடுவிலே போடக்கடவன்.  பின்பு ஆசாரியன் தன் வஸ்திரங்களை தோய்த்து, ஜலத்திலே ஸ்நானம் பண்ணி,  சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.   மேலும் சுத்தமாயிருக்கிற ஒருவன் அந்த சாம்பலை வாரி பாளயத்துக்கு புறம்பே சுத்தமான ஒரு இடத்த்தில் கொட்டிவைக்கக்கடவன்.    அது இஸ்ரவேல் புத்திரரின் சபைக்காக தீட்டு கழிக்கும் ஜலத்துக்கென்று காத்து வைக்கப்பட வேண்டும்; அது பாவத்தை பரிகரிக்கும்.  

பிரயமானவர்களே முந்தின காரியங்களை குறித்து நாம் சிந்திக்கும் போது, நம்மை கர்த்தருக்கென்று எல்லா சுகபோக இன்பம், ஆஸ்தி யாவற்றையும் விட்டு விட்டு கர்த்தரே தஞ்சம் என்றும், அவரே நம்முடைய பங்கும், சுதந்தரம் என்று நாம் அவரிடத்தில் பாவியாக வருகிறபோது, நமக்கு பாவ பரிகாரத்திற்காக அந்த சிவப்பு கடாரியை கர்த்தர் திருஷ்டாந்தப்படுத்துகிறார்.  அது பழுதற்றதும், ஊனமில்லாததும், நுகத்தடிக்குட்படாததுமாயிருக்க வேண்டும்.அது கர்த்தாகிய இயேசுகிறிஸ்துவுக்கு திருஷ்டாந்தம்.  அவர் நமக்காக நம்முடைய பாவங்களுக்காக பாளயத்துக்கு புறம்பே நகர வாசலுக்கு புறம்பே பாடுபட்டார்.  

அதனைக்குறித்து எபிரெயர் 13:11-13 

ஏனென்றால், எந்த மிருகங்களுடைய இரத்தம் பாவங்களினிமித்தமாகப் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரதான ஆசாரியனாலே கொண்டுவரப்படுகிறதோ, அந்த மிருகங்களின் உடல்கள் பாளயத்துக்குப் புறம்பே சுட்டெரிக்கப்படும்.

அந்தப்படியே, இயேசுவும் தம்முடைய சொந்த இரத்தத்தினாலே ஜனத்தைப் பரிசுத்தஞ்செய்யும்படியாக நகர வாசலுக்குப் புறம்பே பாடுபட்டார்.

ஆகையால், நாம் அவருடைய நிந்தையைச் சுமந்து, பாளயத்துக்குப் புறம்பே அவரிடத்திற்குப் புறப்பட்டுப் போகக்கடவோம்.

இவ்விதமாக நம்முடைய கிறிஸ்து நமக்காக பாவபரிகாரம் செய்து, நாம் ஜலத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளும் போது அவர் நம்முடைய பாவத்தை பரிகரித்து, நமக்கு இரட்சிப்பின் வஸ்திரத்தை உடுத்துவிக்கிறார். மேலும் யாரானாலும், நம்மிடத்தில் தங்கும் அந்நியனுக்கும் இவை நித்திய கட்டளையாக இருக்கும் என்று கூறுகிறார்.  இவ்விதமாக பாவபரிகாரம் செய்து சுத்தமாக்கப்பட்டவன், தன் வஸ்திரங்களை ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தில் தோய்த்து வெளுக்கிறான்.  அவ்விதம் நம்முனடய கிறிஸ்து நம்மை சுத்தப்படுத்தி விட்டால், நமக்கு எந்த சூழ்நிலமைகள் வந்தாலும் நாம் தீட்டுப்படாதபடி நம்மை காத்துக்கொள்ளவேண்டும்.  

அடுத்தப்படியாக செத்துப்போன ஒருவனுடய பிரேதத்தைத் தொட்டவன் ஏழு நாள் மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.  ஆனால் மூன்றாம் நாளிலும்,  ஏழாம் நாளிலும் அவன் தீட்டுகழிக்கும் ஜலத்தினால் தன்னை சுத்திக்கரிக்க வேண்டும்.  அப்படி சுத்திகரிக்காவிட்டால்  அவர்கள் சுத்தமாக முடியாது.  அவ்விதம் சுத்திகரித்துக் கொள்ளாதவன் கர்த்தரின் வாசஸ்தலத்தை தீட்டுப்படுத்துகிறான்.  அவன் இஸ்ரவேலில் இல்லாமல் அறுப்புண்டு போவான்.  எப்படியெனில் அவன் இஸ்ரவேல் சபையில் அவனுக்கு பங்கில்லை என்று தான் அர்த்தம். ஏனென்றால் தீட்டுகழிக்கும் ஜலத்தால் சுத்தப்படாமல் இருப்பதினால் அவன் தீட்டாயிருப்பான். 

மேலும் கூடாரத்தில் ஒருவன் செத்தால், அந்த கூடாரத்திற்குள் இருப்பவர்கள் எல்லாரும், மற்றும் அதில் பிரவேசிப்பவர்கள் யாவரும் தீட்டுப்பட்டிருப்பார்கள்.   அல்லாமலும் வெளியில் பட்டயத்தால் வெட்டுண்டவனையாவது, செத்தவனையாவது, மனித எலும்பையாவது, பிரேத குழியையாவது தொட்டவன் எவனும் ஏழு நாள் தீட்டுப்பட்டிருப்பான்.  அப்படிப்பட்டவர்களுக்காக பாவத்தை பரிகரிக்கும் கிடாரியின் சாம்பலில் கொஞ்சம் எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு  அதின் மேல் ஊற்று ஜலம் வார்க்க வேண்டும். 

இவை எப்படியெனில் கிறிஸ்துவின் வசனத்தால் நாம் சுத்திகரிக்கபடவேண்டும்.  மேலும் கர்த்தருடைய வார்த்தை சொல்கிறது, சுத்தமான ஒருவன் ஈசோப்பை எடுத்து, அந்த ஜலத்தை தோய்த்து, கூடாரத்தின் மேலும், அதிலுள்ள பணிமுட்டுகள் மேலும், அங்கே இருக்கிற எல்லா ஜனங்களின் மேலும் தெளிக்கக்கடவன்.  அவன் மூன்றாம் நாளிலும், ஏழாம் நாளிலும் தெளிக்கக்கடவன். தெளித்தவனும் தன்னை சுத்திகரித்து, தன் வஸ்திரங்களை தோய்த்து, ஜலத்தில் ஸ்நானம் பண்ணி சாயங்காலத்தில் சுத்தமாயிருக்க வேண்டும். 

தீட்டுபட்டிருக்கிறவன் தன்னை சுத்திகரித்துக்கொள்ளாவிட்டால் சபையில் இராமல் அறுப்புண்டு போவான்.  தீட்டுகழிக்கும்  ஐலத்தை தெளிக்கிறவனும், தீட்டுகழிக்கும் ஜலத்தை தொட்டவனும் சாயங்காலமட்டும் தீட்டுபட்டிருப்பான்.  அவன் தன் வஸ்திரங்களை தோய்க்க கடவன். தீட்டுப்பட்டிருக்கிறவன் தொடுகிறவைகளெல்லாம்  தீட்டுபடும்.அவைகளை தொடுகிறவனும் தீட்டுபடுவான்.  இது நமக்கு நித்திய கட்டளை என்று கூறுகிறார்.  

பிரியமானவர்களை இவையெல்லாம் நமக்கு கர்த்தர் நித்திய கட்டளையாக கொடுத்திருக்கிறதினால், நாம் ஒவ்வொருவரும் இவைகளை கருத்தில் கொண்டு நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும், கர்த்ததருடைய வசனத்தினாலும், ஆவியினாலும், கழுவி சுத்திகரித்துக்கொண்டு கர்த்ததருடைய வாசஸ்தலம் பரிசுத்தமாக பாதுகாத்துக்கொள்வோமானால் கர்த்தர் இஸ்ரவேலில் ஆசீர்வாதமாக்கி நிறுத்துவார். அவ்விதம் நாம் யாவரும் ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.