கர்த்தருக்கு காணிக்கை கொடுக்கும் விதம்

சகோதரி. பி.கிறிஸ்டோபர் வாசினி
May 09, 2020


கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கர்த்தருக்கு காணிக்கை செலுத்துகிற நாம் முதலில் நம்மை தேவனுக்கு முழுமனதோடு ஒப்புக் கொடுக்கவேண்டும்.

எபேசியர் 5:1, 2

ஆதலால், நீங்கள் பிரியமான பிள்ளைகளைப்போல தேவனைப் பின்பற்றுகிறவர்களாகி,

கிறிஸ்து நமக்காகத் தம்மைத் தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்பு கூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள்.

மத்தேயு 5:23, 24

ஆகையால், நீ பலிபீடத்தினிடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன்பேரில் உன் சகோதரனுக்குக் குறைஉண்டென்று அங்கே நினைவுகூருவாயாகில்,

அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப் போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து.

மேலும் யாத்திராகமம் 23:19, 20 - உன் நிலத்தின் முதல் விளைச்சல்களில் முதற் கனியை உன் தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்துக்குக் கொண்டு வருவாயாக. வெள்ளாட்டுக்குட்டியை அதின் தாயின் பாலிலே சமைக்கவேண்டாம்.

வழியில் உன்னைக் காக்கிறதற்கும், நான் ஆயத்தம்பண்ணின ஸ்தானத்துக்கு உன்னைக் கொண்டுபோய்ச் சேர்க்கிறதற்கும், இதோ, நான் ஒரு தூதனை உனக்கு முன்னே அனுப்புகிறேன். (தூதன் : இயேசு கிறிஸ்து )

மேலும் யாத்திராகமம் 34:20- கழுதையின் தலையீற்றை ஒரு ஆட்டுக்குட்டியால் மீட்டுக்கொள்வாயாக. அதை மீட்டுக்கொள்ளா திருந்தால் அதின் கழுத்தை முறித்துப்போடு. உன் பிள்ளைகளில் முதற்பேறானவைகளையெல்லாம் மீட்டுக்கொள்ள வேண்டும். வெறுங் கையோடே என் சந்நிதியில் ஒருவனும் வரக்கூடாது..

கர்த்தராகிய தேவன் நமக்கு தருகிற எல்லா பலன்களிலும்  முதற்பலன் தேவனுக்குறியது மேலும் நாம் கொடுக்க வேண்டிய தசமபாகம் மற்றும் காணிக்கை எல்லாவற்றிலும்,  நாம் மிகவும் எச்சரிப்பாக  இருக்கவேண்டும்.  ஏனென்றால் நம் உள்ளம் முழு இருதயத்தையும், முழு மனதும், முழு பலன், முழு ஆத்துமா,  இவையனைத்தையும் நாம் தேவனுக்கு ஒப்புக் கொடுக்கிறோம் என்றால்,  நமக்குள் உள்ள சகலத்தையும் தேவனுக்கு கொடுப்போம் என்பது நிச்சயமாக விளங்குகிறது.

மாற்கு 12:29, 30

இயேசு அவனுக்கு பிரதியுத்தரமாக: கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்றால்: இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.

உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக என்பதே பிரதான கற்பனை.

இவ்விதமாக தேவனுக்கு நம்மை ஒப்புக்கொடாவிட்டால்,     மல்கியா 3:1-3 இதோ, நான் என் தூதனை அனுப்புகிறேன். அவன் எனக்கு முன்பாகப் போய், வழியை ஆயத்தம்பண்ணுவான். அப்பொழுது நீங்கள் தேடுகிற ஆண்டவரும் நீங்கள் விரும்புகிற உடன்படிக்கையின் தூதனுமானவர் தம்முடைய ஆலயத்துக்குத் தீவிரமாய் வருவார். இதோ, வருகிறார் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

ஆனாலும் அவர் வரும் நாளைச் சகிப்பவன் யார்? அவர் வெளிப்படு கையில் நிலைநிற்பவன் யார்? அவர் புடமிடுகிறவனுடைய அக்கினியைப் போலவும், வண்ணாருடைய சவுக்காரத்தைப் போலவும் இருப்பார்.

அவர் உட்கார்ந்து வெள்ளியைப் புடமிட்டுச் சுத்திகரித்துக் கொண்டிருப்பார். அவர் லேவியின் புத்திரரைச் சுத்திகரித்து, அவர்கள் கர்த்தருடையவர்களாயிருக்கும்படிக்கும், நீதியாய் காணிக்கையைச் செலுத்தும்படிக்கும், அவர் பொன்னைப் போலவும் வெள்ளியைப் போலவும் புடமிடுவார்.

பிரியமானவர்களே! நாம் நீதியாய் காணிக்கை செலுத்தும் வரையிலும் அவர் நம்மை, வெள்ளியை போலவும்,  பொன்னை  போலவும் புடமிடுகிறவராயிருக்கிறார்.

அதைத்தான் தேவன் நமக்கு கிறிஸ்து மூலம் தெளிவுபடுத்துகிறது என்னவென்றால்,

லூக்கா 21:1-4

அவர் கண்ணேறிட்டுப் பார்த்தபோது, ஐசுவரியவான்கள் காணிக்கைப் பெட்டியிலே தங்கள் காணிக்கைகளைப் போடுகிறதைக் கண்டார்.

ஒரு ஏழை விதவை அதிலே இரண்டு காசைப் போடுகிறதையும் கண்டு:

இந்த ஏழை விதவை மற்றெல்லாரைப்பார்க்கிலும் அதிகமாகப் போட்டாள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

அவர்களெல்லாரும் தங்கள் பரிபூரணத்திலிருந்தெடுத்துத் தேவனுக் கென்று காணிக்கை போட்டார்கள், இவளோ தன் வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டுவிட்டாள் என்றார்.

இவ்விதமாக தேவன் நம்மை மிகவும் சோதித்தறிகிறவர்.

சங்கீதம் 12:6

கர்த்தருடைய சொற்கள் மண் குகையில் ஏழுதரம் உருக்கி, புடமிடப்பட்ட வெள்ளிக்கொப்பான சுத்த சொற்களாயிருக்கிறது.

இவ்விதமாக தேவன் நம்மை சுத்திகரித்து ஆசீர்வதிக்கிறார். நாம் ஜெபிப்போம்.

 

- தொடர்ச்சி நாளை