தேவனுக்கே மகிமையுண்டாவதாக

யாக்கோபு 1:17, 18

நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை.

அவர் சித்தங்கொண்டு தம்முடைய சிருஷ்டிகளில் நாம் முதற்பலன்களாவதற்கு நம்மைச் சத்திய வசனத்தினாலே ஜெநிப்பித்தார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் கிறிஸ்துவின் ராஜ்யத்தில் சுதந்தரமடைய வேண்டுமானால் கர்த்தருக்கு உகந்த காணிக்கையாக நாம் நம்மை ஒப்புக்கொடுக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் கிறிஸ்துவினால் அபிஷேகம் பெற்று கர்த்தரின் வேலையை செய்கிறவர்களாக இருக்க வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.  

அல்லாமலும் நாம் அடுத்ததாக தியானிப்பது என்னவென்றால் 

எண்ணாகமம் 18: 9-12  

மகா பரிசுத்தமானவைகளிலே, அக்கினிக்கு உட்படுத்தப்படாமல் உன்னுடையதாயிருப்பது எவையெனில், அவர்கள் எனக்குப் படைக்கும் எல்லாப் படைப்பும், எல்லாப் போஜனபலியும், எல்லாப் பாவநிவாரணபலியும், எல்லாக் குற்றநிவாரணபலியும், உனக்கும் உன் குமாரருக்கும் பரிசுத்தமாயிருக்கும்.

பரிசுத்த ஸ்தலத்திலே அவைகளைப் புசிக்கவேண்டும்; ஆண்மக்கள் யாவரும் அவைகளைப் புசிக்கலாம்; அவைகள் உனக்குப் பரிசுத்தமாயிருப்பதாக.

இஸ்ரவேல் புத்திரர் ஏறெடுத்துப்படைக்கிறதும் அசைவாட்டுகிறதுமான அவர்களுடைய எல்லாக் காணிக்கைகளின் படைப்பும் உன்னுடையவைகளாயிருக்கும். அவைகளை உனக்கும் உன் குமாரருக்கும் உன் குமாரத்திகளுக்கும் நித்திய நியமமாகக் கொடுத்தேன்; உன் வீட்டிலே சுத்தமானவர்கள் எல்லாரும் அவைகளைப் புசிக்கலாம்.

அவர்கள் கர்த்தருக்குக் கொடுக்கும் அவர்களுடைய முதற்பலன்களாகிய உச்சிதமான எண்ணெயையும், உச்சிதமான திராட்சரசத்தையும், தானியத்தையும் உனக்கு உரியதாகக் கொடுத்தேன்.

மேற்க்கூறிய வசனங்களை நாம் தியானிக்கும் போது  பலபல கோத்திரத்தில் இருந்த நம்மை அவருடைய அபிஷேத்தினால் ஒரே கோத்திரமாக்கி, தெரிந்தெடுக்கிறார்.   ஆனால் கர்த்தர் ஆரோனோடு சொல்கிறார் மகா பரிசுத்தமானவைகளிலே அக்கினிக்கு உட்படுத்தபடாமல் உன்னுடையதாயிருப்பது என்னவென்றால் எனக்கு  படைக்கும் படைப்பும், எல்லா போஜன பலியும், எல்லா பாவ நிவாரண பலியும், எல்லா குற்ற நிவாரண பலியும், உனக்கும்  உன் குமாரருக்கும் பரிசுத்தமாயிருக்கும் என்று கர்த்தருக்கு செலுத்தபடும் பலிகளை குறித்து சொல்லப்படுகிறது. 

அவர்கள் அதனை பரிசுத்த ஸ்தலத்தில்  புசிக்கவேண்டும்.  கர்த்தருக்குப் படைக்கும் படைப்பை ஆசாரியன் புசிக்க வேண்டும் என்று எழுதப்பட்டிருப்பது என்னவென்றால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மளில் என்றன்றைக்கும் ஆசாரியராகவும், பிரதான ஆசாரியராகவும் இருந்து நாம் அவருக்கு செலுத்துகிற பலிகள் மூலமாக நம்மை அவரண்டை ஏற்றுக்கொள்வதன் திருஷ்டாந்தம்.  மேலும் ஆண் மக்கள் யாவரும் அவைகளை புசிக்கலாம் என்பதன் விளக்கம், நாம் தேவனைப்பற்றி பூரண அறிவடைந்தால் முதற்பேறான குமாரனுடைய சாயலாக நம்மை திருஷ்டாந்தப்படுத்துகிறார்.  அப்படிபட்டவர்கள் கர்த்தருக்கு பரிசுத்தமானவர்கள் என்பதனை கர்த்தர் காட்டுகிறார்.  

அல்லாமலும் கர்த்தருக்கு இஸ்ரவேல் புத்திரர் அசைவாட்டும் காணிக்கைகளை படைக்கவேண்டும் என்பது, ஜீவனுள்ள காணிக்கையாக நம்மை ஒப்புக்கொடுக்கவேண்டும், என்பதன் கருத்து என்னவென்றால், நம்முடைய ஆத்துமா ஜீவன்ப் பெற்றிருக்கவேண்டும். ஏனென்றால் ஜீவனுள்ள காணிக்கையை கர்த்தர் ஏற்றுக்கொள்வார்.  அதனை சுத்தமானவர்கள் புசிக்கலாம் என்று எழுதப்பட்டிருப்பது, அவ்விதம் புசிப்பதற்கு தகுதியானவர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து.  அவ்விதமாக கர்த்தருக்கு காணிக்கை கொடுக்கிறவர்கள், அவர்களுடைய முதற்பலனாகிய உச்சிதமான எண்ணெயும், உச்சிதமான திராட்ச ரசத்தையும், தானியத்தையும் ஆரோனாகிய ஆசாரியனுக்குரிதாக கூறுகிறார். 

மேற்க்கூறியவைகளெல்லாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு திருஷ்டாந்தப்படுத்துகிறார்.  இதனைக்குறித்து கர்த்தர்  கூறிய காரியங்கள் என்னவென்றால் 

எரேமியா 31: 4-14 

இஸ்ரவேல் என்னும் கன்னிகையே, மறுபடியும் உன்னைக் கட்டுவிப்பேன், நீ கட்டப்படுவாய்; மறுபடியும் நீ மேளவாத்தியத்தோடும் ஆடல்பாடல் செய்கிறவர்களின் களிப்புள்ள கூட்டத்தோடும் புறப்படுவாய்.

மறுபடியும் சமாரியாவின் மலைகளிலே திராட்சத்தோட்டங்களை நாட்டுவாய்; நாட்டுகிறவர்கள் அவைகளை நாட்டி, அதின் பலனை அனுபவிப்பார்கள்.

எழுந்திருங்கள், சீயோனில் நம்முடைய தேவனாகிய கர்த்தரிடத்திற்குப் போவோம் வாருங்கள் என்று எப்பிராயீமின் மலைகளிலுள்ள ஜாமக்காரர் கூறுங்காலம் வரும்.

கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: யாக்கோபினிமித்தம் மகிழ்ச்சியாய் கெம்பீரித்து, ஜாதிகளுடைய தலைவரினிமித்தம் ஆர்ப்பரியுங்கள்; சத்தத்தைக் கேட்கப்பண்ணி, துதித்து: கர்த்தாவே, இஸ்ரவேலில் மீதியான உமது ஜனத்தை இரட்சியும் என்று சொல்லுங்கள்.

இதோ, நான் அவர்களை வடதேசத்திலிருந்து வரப்பண்ணி, அவர்களைப் பூமியின் எல்லைகளிலிருந்து கூட்டிவருவேன்; குருடரும், சப்பாணிகளும், கர்ப்பவதிகளும், பிள்ளைத் தாய்ச்சிகளுங்கூட அவர்களில் இருப்பார்கள்; மகா கூட்டமாய் இவ்விடத்திற்குத் திரும்புவார்கள்.

அழுகையோடும் விண்ணப்பங்களோடும் வருவார்கள்; அவர்களை வழிநடத்துவேன்; அவர்களைத் தண்ணீருள்ள நதிகளண்டைக்கு இடறாத செம்மையான வழியிலே நடக்கப்பண்ணுவேன்; இஸ்ரவேலுக்கு நான் பிதாவாயிருக்கிறேன், எப்பிராயீம் என் சேஷ்டபுத்திரனாயிருக்கிறான்.

ஜாதிகளே, நீங்கள் கர்த்தருடைய வார்த்தையைக்கேட்டு, தூரத்திலுள்ள தீவுகளில் அறிவித்து, இஸ்ரவேலைச் சிதறடித்தவர் அதைச் சேர்த்துக்கொண்டு, ஒரு மேய்ப்பன் தன் மந்தையைக் காக்கும்வண்ணமாக அதைக் காப்பார் என்று சொல்லுங்கள்.

கர்த்தர் யாக்கோபை மீட்டு, அவனிலும் பலத்தவனுடைய கைக்கு அவனை நீங்கலாக்கி விடுவிக்கிறார்.

அவர்கள் வந்து, சீயோனின் உச்சியிலே கெம்பீரித்து, கர்த்தர் அருளும் கோதுமை, திராட்சரசம், எண்ணெய், ஆட்டுக்குட்டிகள், கன்றுக்குட்டிகள் என்பவைகளாகிய இந்த நன்மைகளுக்காக ஓடிவருவார்கள்; அவர்களுடைய ஆத்துமா நீர்ப்பாய்ச்சலான தோட்டம்போலிருக்கும்; அவர்கள் இனித் தொய்ந்துபோவதில்லை.

அப்பொழுது கன்னிகைகளும், வாலிபரும், முதியோருங்கூட ஆனந்தக்களிப்பாய் மகிழுவார்கள்; நான் அவர்கள் துக்கத்தைச் சந்தோஷமாக மாற்றி, அவர்களைத் தேற்றி, அவர்கள் சஞ்சலம் நீங்க அவர்களைச் சந்தோஷப்படுத்துவேன்.

ஆசாரியர்களின் ஆத்துமாவைக் கொழுமையானவைகளினால் பூரிப்பாக்குவேன்; என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

மேற்க்கூறிய வார்த்தைகளை நாம் தியானிக்கும் போது நாம் எவ்விதம் தேவனை பின்பற்ற வேண்டும் என்றும், அவ்விதம் பின்பற்றினால் நம்முடைய ஆத்துமாவை கர்த்தர் சிறையிருப்பிலிருந்து மீட்டு ஆசீர்வதிக்கிறதைக் கூறுகிறார்.  இவ்விதமாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையினால் கர்ததர் நம்மை ஆசீர்வதிக்கிறார். அதென்னவென்றால் கர்த்தர் அருளும் கோதுமை, திராட்சரசம், எண்ணெய், ஆட்டுக்குட்டிகள்,  கன்றுக்குட்டிகள் என்பவைகளாகிய நன்மையினால் கர்த்தர் நம்மை ஆசீர்வதிக்கிறார்.  

அதற்கு தான் எண்ணாகமம் 18:13 

தங்கள் தேசத்தில் முதற்பழுத்த பலனில் அவர்கள் கர்த்தருக்குக் கொண்டு வருவதெல்லாம் உனக்கு உரியதாகும்; உன் வீட்டிலே சுத்தமாயிருப்பவர்கள் யாவரும் அவைகளைப் புசிக்கலாம். இந்த வசனங்கள் பரிசுத்த ஆவியானவராகிய மணவாட்டியை எடுத்துக்கூறுகிறார்.  அவ்விதம் நாம் பரிசுத்தாவியின் அபிஷேகம் பெற்றுக்கொள்ளுகிறவர்களை கிறிஸ்து தம்மண்டையில் சேர்த்துக்கொள்கிறார்.  

பிரியமானவர்களே இந்த கர்த்தரின் வார்த்தைகளை நாம் தியானிக்கும் போது நாம் எப்படிப்பட்ட காணிக்கைகளை கர்த்தருக்கு செலுத்தவேண்டும் என்று நினைத்து நம்மை தேவனுக்கேற்றப்பிரகாரம் மாற்றிககொண்டு அவருக்கு உகந்த காணிக்கையாக நம்மை ஒப்புக்கொடுப்போம்.  அதனால் கர்த்தருடைய வார்த்தை சொல்கிறது 

எபேசியர் 5:1-2 

ஆதலால், நீங்கள் பிரியமான பிள்ளைகளைப்போல தேவனைப் பின்பற்றுகிறவர்களாகி,

கிறிஸ்து நமக்காகத் தம்மை தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள்.

மேற்க்கூறப்பட்ட வார்த்தைகளால் நம்மை திடப்படுத்தினால் தேவனுடைய ராஜ்யமாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்தில் சுதந்தரமடைய முடியும்.  இவ்விதமாக  நாம் யாவரும் கர்த்தருக்கு பிரியமான காணிக்கையாக ஒப்புக்கொடுப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.