தேவனுக்கே மகிமையுண்டாவதாக

யோவேல் 3:17 

என் பரிசுத்த பர்வதமாகிய சீயோனிலே வாசமாயிருக்கிற நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று அப்பொழுது அறிந்துகொள்வீர்கள்; அப்பொழுது எருசலேம் பரிசுத்தமாயிருக்கும்; அந்நியர் இனி அதைக் கடந்துபோவதில்லை.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் கிறிஸ்துவின் அபிஷேகம் பெற்று கர்த்தரை சேவிக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமாவை, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சாகாதபடி பாதுகாக்கிறார் என்பதனை குறித்து தியானித்தோம்.  

ஆனால் இந்த நாளில் தியானிக்கிற வேதப்பகுதி என்னவென்றால் 

எண்ணாகமம் 18:1-8 

பின்பு கர்த்தர் ஆரோனை நோக்கி: நீயும் உன்னோடேகூட உன் குமாரரும் உன் தகப்பன் வம்சத்தாரும் பரிசுத்த ஸ்தலத்தைப்பற்றிய அக்கிரமத்தைச் சுமக்கவேண்டும்; நீயும் உன்னோடேகூட உன் குமாரரும் உங்கள் ஆசாரிய ஊழியத்தைப்பற்றிய அக்கிரமத்தைச் சுமக்கவேண்டும்.

உன் தகப்பனாகிய லேவியின் கோத்திரத்தாரான உன் சகோதரரையும் உன்னோடே கூடியிருக்கவும் உன்னிடத்திலே சேவிக்கவும் அவர்களைச் சேர்த்துக்கொள்; நீயும் உன் குமாரருமோ சாட்சியின் கூடாரத்துக்குமுன் ஊழியம் செய்யக்கடவீர்கள்.

அவர்கள் உன் காவலையும் கூடாரம் அனைத்தின் காவலையும் காக்கக்கடவர்கள்; ஆகிலும் அவர்களும் நீங்களும் சாகாதபடிக்கு, அவர்கள் பரிசுத்த ஸ்தலத்தின் பணிமுட்டுகளண்டையிலும் பலிபீடத்தண்டையிலும் சேராமல்,

உன்னோடே கூடிக்கொண்டு, கூடாரத்துக்கடுத்த எல்லாப் பணிவிடையையும் செய்ய, ஆசரிப்புக் கூடாரத்தின் காவலைக்காக்கக்கடவர்கள்; அந்நியன் ஒருவனும் உங்களிடத்தில் சேரக்கூடாது.

இஸ்ரவேல் புத்திரர்மேல் இனிக் கடுங்கோபம் வராதபடிக்கு, நீங்கள் பரிசுத்த ஸ்தலத்தின் காவலையும் பலிபீடத்தின் காவலையும் காக்கக்கடவீர்கள்.

ஆசரிப்புக் கூடாரத்தின் பணிவிடையைச் செய்ய, கர்த்தருக்குக் கொடுக்கப்பட்ட உங்கள் சகோதரராகிய லேவியரை நான் இஸ்ரவேல் புத்திரரிலிருந்து பிரித்து, உங்களுக்கு தத்தமாகக் கொடுத்தேன்.

ஆகையால் நீயும் உன்னோடேகூட உன் குமாரரும் பலிபீடத்துக்கும் திரைக்கு உட்புறத்துக்கும் அடுத்த எல்லாவற்றையும் செய்யும்பொருட்டு, உங்கள் ஆசாரிய ஊழியத்தைக் காத்துச் சேவிக்கக்கடவீர்கள்; உங்கள் ஆசாரிய ஊழியத்தை உங்களுக்கு தத்தமாக அருளினேன்; அதைச் செய்யும்படி சேருகிற அந்நியன் கொலைசெய்யப்படக்கடவன் என்றார்.

பின்னும் கர்த்தர் ஆரோனை நோக்கி: இஸ்ரவேல் புத்திரர் பரிசுத்தப்படுத்துகிறவைகளிலெல்லாம் எனக்கு ஏறெடுத்துப்படைக்கப்படும் படைப்புகளைக் காத்துக்கொண்டிருக்கிறீர்களே, அவைகளை உனக்குக் கொடுத்தேன்; அபிஷேகத்தினிமித்தம் அவைகளை உனக்கும் உன் குமாரருக்கும் நித்திய கட்டளையாகக் கொடுத்தேன்.

கர்த்தர் ஆரோனிடம் நீயும், உன்னோடு உன் குமாரரும், உன் தகப்பன் வம்சத்தாரும் பரிசுத்த ஸ்தலத்தைப் பற்றிய அக்கிரமத்தை சுமக்க வேண்டும்.  நீயும் உன்னோடே கூட உன் குமாரரும் உங்கள் ஊழியத்தைப்பற்றிய அக்கிரமத்தை சுமக்க வேண்டும்.  மேலும் கர்த்தர் ஆரோனிடம், உன் தகப்பனாகிய லேவியின் கோத்திரத்தாரான  உன் சகோதரரையும் உன்னிடத்தில் சேவிக்கவும் கூட்டி சேர்த்துக்கொள் என்றும்,  நீயும், உன் குமாரரும் சாட்சி  கூடாரத்திற்கு முன் ஊழியம் செய்ய வேண்டும் என்கிறார்.  ஆனால் அவர்கள் உன் காவலையும், கூடாரம் அனைத்தின் காவலையும் காக்கக்கடவர்கள்;  ஆனால் நீங்களும் சாகாதபடிக்குப் பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசியாமலும், பலிபீடத்தண்டையில் சேராமலும் உன்னோடே கூட்டிக்கொண்டு கூடாரத்துக்கடுத்த எல்லா பணிவிடைகளையும் செய்ய; ஆசரிப்புக்கூடாரத்தின் காவலை காக்க கடவர்கள். ஆசரிப்புக்கூடார பணியில் அந்நியன் ஒருவனும் சேரக்கூடாது.   பரிசுத்த ஸ்தலத்தின் காவலையும், பலிபீடத்தின் காவலையும் சரியாக காக்காமல் இருந்தால் இஸ்ரவேல் புத்திரர் மேல் கர்த்தருக்கு கடும் கோபம் வரும். 

பிரியமானவர்களே ஆசரிப்புக்கூடாரம் என்பது ஆராதனை ஸ்தலமாகிய நம்முடைய உள்ளான சரீரம் என்பதற்கு கர்த்தர் திருஷ்டாந்தப்படுத்துகிறார்.   அதிலுள்ள ஒவ்வொரு அவயவமும், மற்றும் ஆசரிப்புக்கூடாரத்திலுள்ள ஒவ்வொரு ஆராதனைக்குரிய ஒவ்வொரு வஸ்துகள் இவைகளெல்லாம் சரியான முறையில் காத்து பரிசுத்தமாக வைக்கவேண்டும் என்பதனை குறித்து சில நாட்களுக்கு முன் தியானித்தோம்.   அதனால் இதற்கு தகுதி பெற்றிருந்த  லேவியரை இஸ்ரவேல் புத்திரரிலிருந்து பிரித்தெடுத்து தத்தமாக தந்தார் என்பதனை நம்மிடம் கூறுகிறார்.  

அல்லாமலும் கர்த்தர் ஆரோனிடம், நீயும், உன் குமாரரும் பலிபீடத்துக்கும் திரைக்கு உபுறத்துக்கும் அடுத்த எல்லாவற்றையும் செய்ய, ஆசாரிய ஊழியத்தை காத்து சேவிக்க கடவீர்கள். ஆனால் அந்நியர்கள் யாரும் அதனை செய்யக்கூடாது என்றும்,   அப்படி செய்யும்படி சேருகிற அந்நியன் கொலைசெய்யப்பட கடவன் என்றார்.  அந்நியன் என்று சொல்லும்போது கர்த்தரை முழு மனதோடு ஏற்றுக்கொள்ளாதவன்.  

அதனை குறித்து உபாகமம் 20:16-18 

உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கிற ஏத்தியர், எமோரியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் என்னும் ஜனங்களின் பட்டணங்களிலேமாத்திரம் சுவாசமுள்ளதொன்றையும் உயிரோடே வைக்காமல்,

அவர்களை உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டபடியே சங்காரம்பண்ணக்கடவாய்.

அவர்கள் தங்கள் தேவர்களுக்குச் செய்கிற தங்களுடைய சகல அருவருப்புகளின்படியே நீங்களும் செய்ய உங்களுக்குக் கற்றுக்கொடாமலும், நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாமலும் இருக்கும்படி இப்படிச் செய்யவேண்டும்.

மேற்கூறிய வசனங்கள் பிரகாரம்  நாம் பாதுகாத்து நம்முடைய ஆத்துமா வஞ்சிக்கப்படாதபடி காத்துக்கொள்ள வேண்டும். மற்றும் 

உபாகமம் 32: 9 -12

கர்த்தருடைய ஜனமே அவருடைய பங்கு; யாக்கோபு அவருடைய சுதந்தரவீதம்.

பாழான நிலத்திலும் ஊளையிடுதலுள்ள வெறுமையான அவாந்தர வெளியிலும் அவர் அவனைக் கண்டுபிடித்தார், அவனை நடத்தினார், அவனை உணர்த்தினார், அவனைத் தமது கண்மணியைப்போலக் காத்தருளினார்.

கழுகு தன் கூட்டைக் கலைத்து, தன் குஞ்சுகளின்மேல் அசைவாடி, தன் செட்டைகளை விரித்து, அவைகளை எடுத்து, அவைகளைத் தன் செட்டைகளின்மேல் சுமந்துகொண்டுபோகிறதுபோல,

கர்த்தர் ஒருவரே அவனை வழிநடத்தினார்; அந்நிய தேவன் அவரோடே இருந்ததில்லை.

பிரியமானவர்களே நம்முடைய உள்ளம் ஒரே ஒரு தேவனை மகிமைப்படுத்தவேண்டும்.  அவரோடே கூட அந்நிய தேவன் இருந்ததில்லை.  ஆதலால் பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிக்கும் போது அந்நியன் வரக்கூடாது என்று சொல்கிறார்.        அல்லாமலும் கர்த்தர் ஆரோனை நோக்கி சொல்வது என்னவென்றால்  இஸ்ரவேல் புத்திரர் ஏறெடுத்து படைக்கும் படைப்புகளெல்லாம் காத்துக்கொண்டிருக்கிறதினால் அவைகளை உனக்கு கொடுத்தேன் என்கிறார்.  அபிஷேகத்தினிமித்தம் அவைகளை உனக்கும் உன் குமாரருக்கும் நித்திய கட்டளையாக கொடுத்தேன் என்கிறார்.  

பிரியமானவர்களை கர்த்தர் அவருடைய ஆசாரியத்துவ ஊழியம் செய்யும் படி கிறிஸ்துவினால்  அபிஷேகிக்கப்பட்டவர்களை அழைக்கிறார்.  நாமும் கர்த்தருடைய  சத்தம் கேட்டு ஒப்புக்கொடுப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.