கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,
மேலும் தேவன் விசுவாசத்தினாலே புறஜாதிகள் நீதிமான்களா
க்குகிறாறென்று வேதம் முன்னாக கண்டு: உனக்குள் சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்று
ஆபிரகாமுக்கு சுவிசேஷமாய் முன்ன றிவித்தது.
அந்தப்படி விசுவாசமார்க்கத்தார்
விசுவாசமுள்ள ஆபிரகாமுடனே ஆசீர்வதிக்கபடுகிறார்கள்
லோத் ஆபிராமை விட்டு பிரிந்து
சோதோமில் குடியிருந்தான். அதனால்
லோத்தையும், எல்லாப் பொருட்களையும் சோதோமின் எதிராளிகள் எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள்
அந்த காரியம் ஆபிராமுக்கு அறிவிக்க ப்பட்டபோது ஆபிராம்,
ஆதியாகமம்14:14
தன் சகோதரன் சிறையாகக்கொண்டுபோகப்பட்டதை ஆபிராம் கேள்விப்பட்ட
போது, அவன் தன் வீட்டிலே பிறந்த கைபடிந்தவர்களாகிய முந்நூற்றுப் பதினெட்டு ஆட்களுக்கும்
ஆயுதம் தரிப்பித்து, தாண் என்னும் ஊர்மட்டும் அவர்களைத் தொடர்ந்து,
ஆபிராம் தன் சகோதரன் லோத்து,
எல்லா ஜனங்களையும், பொருட்களையும், ஸ்திரீகளையும்
திருப்பிக் கொண்டு வந்தான்.
அப்பொழுது சோதோமின் ராஜா சாவே
பள்ளத்தாக்கு மட்டும் எதிர்கொண்டு போனான்.
இவ்விதமாக, அவன் ஆயுதம் தரித்த
சத்துரு சிறைப்பிடித்த அனைத்தையும் பெற்றுக் கொண்டதின் நிமித்தமாக தேவன் இன்னும் அதிகமாக அவனை ஆசீர்வதித்தார்
ஆதியாகமம் 14:18-20
அன்றியும், உன்னதமான
தேவனுடைய ஆசாரியனாயிருந்த சாலேமின் ராஜாவாகிய மெல்கிசேதேக்கு அப்பமும் திராட்சரசமும்
கொண்டுவந்து,
அவனை ஆசீர்வதித்து: வானத்தையும் பூமியையும் உடையவராகிய உன்னதமான
தேவனுடைய ஆசீர்வாதம் ஆபிரகாமுக்கு உண்டாவதாக.
உன் சத்துருக்களை உன் கையில் ஒப்புக்கொடுத்த உன்னதமான தேவனுக்கு ஸ்தோத்திரம் என்று சொன்னான்.
இவனுக்கு ஆபிராம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான்.
இவற்றிலிருந்த நமக்கு தெரியவருகிறது
என்னவென்றால், மெல்கிசேதேக்கின் முறைமையின்படி நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து
நமக்குள் என்றென்றைக்கும் ஆசாரியராகவும் பிரதான ஆசாரியராகவும் காணப்படுகிறார். நம்மை அனுதினம் சத்துருக்களின் கையிலிருந்து விடுவித்து
இரட்சித்துக் கொண்டிருப்பது நம்முடைய கிறிஸ்து மூலம் நம்முடைய உன்னதமான தேவன் என்பதை
அறிந்து நம்முடைய எல்லா ஆசீர்வாதங்களும் நம்மில் தேவன் ஆசீர்வதிக்க வேண்டுமானால் உன்னதமான
தேவனி டத்திலிருந்து அப்பமும், திராட்சை ரசமும்,
தேவனால் முத்திரிக்கப்பட்டதாகவும்,
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு விளம்பி தருவதாகவும், நாம் அதை வாங்கி புசிக்கும்படி நம்முடைய உள்ளம்
பரிசுத்தமாகிய ஆயுதம் தரித்தவர்களாகவும் இருக்க
வேண்டும். பின்பு நாம் அவருடைய தசமபாகத்தை
நமக்கு தேவன் தந்திருக்கிற எல்லா ஆசீர்வாதத்திலும் கொடுக்க வேண்டிய வைகளுமாகும்.
அதைத்தான் இயேசு கிறிஸ்து, யோவான் 6:27- “அழிந்துபோகிற போஜன த்திற்காக அல்ல, நித்தியஜீவன்வரைக்கும்
நிலைநிற்கிற போஜனத்திற்காகவே கிரியை நடப்பியுங்கள்: அதை மனுஷகுமாரன் உங்களுக்குக்
கொடுப்பார்: அவரைப் பிதாவாகிய தேவன் முத்திரித்திருக்கிறார்” என்றார்.
மேலும், மல்கியா 3:8-10
மனுஷன் தேவனை வஞ்சிக்கலாமா? நீங்களோ என்னை வஞ்சிக்கிறீர்கள்.
எதிலே உம்மை வஞ்சித்தோம் என்கிறீர்கள்? தசமபாகத்திலும் காணிக்கையிலுந்தானே.
நீங்கள் சபிக்கப்பட்டவர்கள். ஜனத்தாராகிய நீங்கள் எல்லாரும்
என்னை வஞ்சித்தீர்கள்.
என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படித் தசமபாகங்களை யெல்லாம்
பண்டசாலையிலே கொண்டு வாருங்கள். அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்
போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப்
பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
இதிலிருந்து பிரியமானவர்களே! நமக்கு தெரியவருகிறது என்ன வென்றால் தசமபாகம் கர்த்தருக்குரிய
காணிக்கையை நாம் கர்த்தருக்கு செலுத்துவோமானால்
தேவன் சபைகளை சத்தியத்தால் நிரப்பி ஆசீர்வதிப்பார். சபையாகிய கிறிஸ்து மூலம் நம் ஆவிக்குரிய வாழ்க்கையை
தேவன் ஆசீர்வதிப்பார். மேலும் இப்பூமிக்குரிய ஆசீர்வாதங்களாலும் தேவன் நம்மை ஆசீர்வதிப்பார்.
மல்கியா 3:11,12
பூமியின் கனியைப் பட்சித்துப்போடுகிறவைகளை உங்கள் நிமித்தம்
கண்டிப்பேன். அவைகள் உங்கள் நிலத்தின் பலனை அழிப்பதில்லை. வெளியிலுள்ள திராட்சக்கொடி
பழமில்லாமற்போவதுமில்லை என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
அப்பொழுது எல்லா ஜாதிகளும் உங்களைப் பாக்கியவான்கள் என்பார்கள்.
தேசம் விரும்பப்படத்தக்கதாயிருக்கும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
இவ்விதமாக, தேவனுக்குக் கீழ்ப்படிந்தால் தேவன் ஆசீர்வதிக்க வல்லவரா யிருக்கிறார். ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் ஆசீர்வதிப்பாராக.
-தொடர்ச்சி
நாளை