தேவனுக்கே மகிமையுண்டாவதாக

ஏசாயா 58: 8

அப்பொழுது விடியற்கால வெளுப்பைப்போல உன் வெளிச்சம் எழும்பி, உன் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்த்து, உன் நீதி உனக்கு முன்னாலே செல்லும்; கர்த்தருடைய மகிமை உன்னைப் பின்னாலே காக்கும்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமாவை, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சாகவிடாமல் பாதுகாக்கிறார்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் நம்முடைய உள்ளமாகிய தூபகலசம் பரிசுத்தமாக எந்த துர்கிரியைகள் காணப்படாதபடி ஜாக்கிரதையாக காத்துக்கொள்ளவேண்டும் என்றும், அப்படி இல்லாவிட்டால், கர்த்தருடைய கடும் கோபத்தினால் கர்த்தர் நம்மிடத்தில் வாதையை அனுப்புகிறார் என்பதையும், ஆனால் கிறிஸ்துவின் இரத்தத்தால் நாம் பாவநிவிர்த்தி செய்யப்படும் போது, கர்த்தர் நம்முடைய பாவத்தை மன்னித்து நம்மிடத்தில் அனுப்பப்பட்ட வாதை நிறுத்துகிறார் என்பதனையும் தியானித்தோம்.  

அடுத்தப்படியாக நாம் தியானிக்கிற கருத்து என்னவென்றால்  

எண்ணாகமம் 17:1-13

பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி:

நீ இஸ்ரவேல் புத்திரரோடே பேசி, அவர்கள் பிதாக்களின் வம்சங்களாகிய ஒவ்வொரு வம்சத்தினுடைய பிரபுவினிடத்தில், ஒவ்வொரு கோலாகப் பன்னிரண்டு கோலை வாங்கி, அவனவன் கோலில் அவனவன் பேரை எழுதுவாயாக.

லேவியினுடைய கோலின்மேல் ஆரோனின் பேரை எழுதக்கடவாய்; அவர்களுடைய பிதாக்களின் ஒவ்வொரு வம்சத்தலைவனுக்காகவும் ஒவ்வொரு கோல் இருக்கவேண்டும்.

அவைகளை ஆசரிப்புக் கூடாரத்திலே நான் உங்களைச் சந்திக்கும் ஸ்தானமாகிய சாட்சிப்பெட்டிக்கு முன்னே வைக்கக்கடவாய்.

அப்பொழுது நான் தெரிந்துகொள்ளுகிறவனுடைய கோல் துளிர்க்கும்; இப்படி இஸ்ரவேல் புத்திரர் உங்களுக்கு விரோதமாய் முறுமுறுக்கிற அவர்கள் முறுமுறுப்பை என்னைவிட்டு ஒழியப்பண்ணுவேன் என்றார்.

இதை மோசே இஸ்ரவேல் புத்திரரோடே சொன்னான்; அப்பொழுது அவர்களுடைய பிரபுக்கள் எல்லாரும் தங்கள் பிதாக்களுடைய வம்சத்தின்படி ஒவ்வொரு பிரபுவுக்கு ஒவ்வொரு கோலாகப் பன்னிரண்டு கோல்களை அவனிடத்தில் கொடுத்தார்கள்; ஆரோனின் கோலும் அவர்களுடைய கோல்களுடனே இருந்தது.

அந்தக் கோல்களை மோசே சாட்சியின் கூடாரத்திலே கர்த்தருடைய சமுகத்தில் வைத்தான்.

மறுநாள் மோசே சாட்சியின் கூடாரத்துக்குள் பிரவேசித்தபோது, இதோ, லேவியின் குடும்பத்தாருக்கு இருந்த ஆரோனின் கோல் துளிர்த்திருந்தது; அது துளிர்விட்டு, பூப்பூத்து, வாதுமைப்பழங்களைக் கொடுத்தது.

அப்பொழுது மோசே கர்த்தருடைய சமுகத்திலிருந்த அந்தக் கோல்களையெல்லாம் எடுத்து, இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் காண வெளியே கொண்டுவந்தான்; அவர்கள் கண்டு, அவரவர் தங்கள் தங்கள் கோல்களை வாங்கிக்கொண்டார்கள்.

அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: ஆரோனின் கோல் அந்தக் கலகக்காரருக்கு விரோதமான அடையாளமாகும்பொருட்டு, அதைத் திரும்பவும் சாட்சிப்பெட்டிக்கு முன்னே கொண்டுபோய் வை; இப்படி அவர்கள் எனக்கு விரோதமாய் முறுமுறுப்பதை ஒழியப்பண்ணுவாய், அப்பொழுது அவர்கள் சாகமாட்டார்கள் என்றார்.

கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே மோசே செய்தான்.

அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் மோசேயை நோக்கி: இதோ, செத்து அழிந்துபோகிறோம்; நாங்கள் எல்லாரும் அழிந்துபோகிறோம்.

கர்த்தரின் வாசஸ்தலத்தின் கிட்டேவருகிற எவனும் சாகிறான்; நாங்கள் எல்லாரும் செத்துத்தான் தீருமோ என்றார்கள்.

மேற்க்கூறிய வசனங்களை நாம் தியானிக்கும் போது கர்த்தர் மோசேயிடம், இஸ்ரவேல் புத்திரரிடம் சொல்ல சொல்வது என்னவென்றால் பிதாக்களின் வம்சங்களாகிய ஒவ்வொரு வம்சத்தினுடைய  பிரபுவினிடத்தில், ஒவ்வொரு கோலாகப் பன்னிரண்டு கோலை வாங்கி, அவனவன் கோலில் அவனவன் பேரை எழுதவேண்டும் என்றும், லேவியின் கோலின் மேல் ஆரோனின் பேர் எழுதும்படியாக சொல்கிறார்.  மேலும் அவர்களில் ஒவ்வொரு பிதாக்களின் , ஒவ்வொரு வம்ச தலைவனுக்காக  ஒவ்வொரு கோல் இருக்க வேண்டும்.  அந்த கோலை இஸ்ரவேல் சபையை, கர்த்தர் சந்திக்கும்  ஸ்தானமாகிய சாட்சிப்பெட்டிக்கு முன்னே வைக்கும்படி சொல்கிறார்.  

அல்லாமலும் கர்த்தர் தெரிந்துக்கொள்ளும் கோல் துளிர்க்கும்.  இப்படியாக இஸ்ரவேல் புத்திரரிடத்தில்  இருக்கிற முறுமறுப்பை உன்னை விட்டு ஒழியப்பண்ணுவேன் என்றார்.   இதனை மோசே இஸ்ரவேல் புத்திரரிடம் சொல்லும் போது, அவர்கள் பிரபுக்கள் எல்லாரும் ஒவ்வொரு கோலாக பன்னிரண்டு  கோல்களை அவனிடத்தில் கொடுத்தார்கள். அதனை மோசே சாட்சிக்கூடாரத்தில் கரத்தரின் சந்நிதியில் வைத்தான்.  மறுநாள் சாட்சியின் கூடாரத்துக்குள் பிரவேசித்தபோது, லேவி குடும்பத்தாருக்கு உள்ள ஆரோனின் கோல் துளிர்த்திருந்தது; அது துளிர் விட்டு, பூப்பூத்து, வாதுமை பழங்களைக் கொடுத்தது.  

அல்லாமலும் கர்த்தர் தெரிந்துக் கொள்ளும் கோல் துளிர்க்கும் என்று சொன்னது, கர்த்தர் ஆரோனுடைய கோல் துளிர்த்தது.  அது துளிர் விட்டு வாதுமை பழம் தந்தது என்று எழுதப்பட்டிருப்பது, 

எரேமியா 1:11,12

பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: எரேமியாவே, நீ என்னத்தைக் காண்கிறாய் என்று கேட்டார், வாதுமைமரத்தின் கிளையைக் காண்கிறேன் என்றேன்.

அப்பொழுது கர்த்தர்: நீ கண்டது சரியே; என் வார்த்தையைத் தீவிரமாய் நிறைவேற்றுவேன் என்றார்.

மேற்க்கூறிய வார்த்தைகள் பிரகாரம் வாதுமைமரம் கிளைகள் காணப்பட்டது என்பது வார்த்தையை தீவிரமாய் நிறைவேற்றுவேன் என்கிறார்.  அதென்னவென்றால் அதிலிருந்து பழங்கள் தோன்றுகிறது என்னவென்றால் லேவி குடும்பத்தாரில் கிறிஸ்து வெளிப்படுகிறார் என்பதனை எடுத்துக்காட்டுகிறார்.  என்னவென்றால் கிறிஸ்து மூலம் இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு விரோதமாக இருந்த முறுமுறுப்பை ஒழிய்பண்ணுவார் என்பதனை காட்டுகிறது. 

அப்படியே துளிர்த்த கோலை எண்ணாகமம் 17: 9,10  

அப்பொழுது மோசே கர்த்தருடைய சமுகத்திலிருந்த அந்தக் கோல்களையெல்லாம் எடுத்து, இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் காண வெளியே கொண்டுவந்தான்; அவர்கள் கண்டு, அவரவர் தங்கள் தங்கள் கோல்களை வாங்கிக்கொண்டார்கள்.

அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: ஆரோனின் கோல் அந்தக் கலகக்காரருக்கு விரோதமான அடையாளமாகும்பொருட்டு, அதைத் திரும்பவும் சாட்சிப்பெட்டிக்கு முன்னே கொண்டுபோய் வை; இப்படி அவர்கள் எனக்கு விரோதமாய் முறுமுறுப்பதை ஒழியப்பண்ணுவாய், அப்பொழுது அவர்கள் சாகமாட்டார்கள் என்றார்.

மேற்கூறிய வசனங்கள் இஸ்ரவேல் புத்திரர் கிறிஸ்துவினால் சாகாதபடி காக்கப்படுவார்கள் என்பதனை கர்த்தர் திருஷ்டாந்தப்படுதுகிறார். பிரியமானவர்களே நம்முடைய ஆத்துமா செத்து அழிந்து போகாதபடி, நம்முடைய தேவனாகிய கர்த்தர் தன்னுடைய வார்த்தையை நம் உள்ளத்தில் அனுப்பி நம்மை உயிரடைய செய்து,  நாம் என்றன்றைக்கும் பிழைத்திருக்கும்படி செய்கிறார்.  இப்படியாக நாம் பிழைக்கும்படி ஒப்புக்கொடுப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.