தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சகரியா 2: 7, 8

பாபிலோன் குமாரத்தியினிடத்தில் குடியிருக்கிற சீயோனே, உன்னை விடுவித்துக்கொள்.

பிற்பாடு மகிமையுண்டாகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; உங்களைக் கொள்ளையிட்ட ஜாதிகளிடத்துக்கு என்னை அனுப்பினார்; உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் பாபிலோனாகிய உலக சபையை விட்டு விலகுவோமானால் வாதையை தேவன் நிறுத்துவார்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் நம்முடைய உள்ளமாகிய தூப கலசத்தை கர்த்தர் அவருடைய அக்கினியால் சுத்திகரித்து பரிசுத்தப்படுத்தி, துர்கிரியைகளின் கூட்டத்தை அழிக்கிறதையும் தியானித்தோம்.  

ஆனால் இந்த நாளில் நாம் தியானிப்பது என்னவென்றால்  

எண்ணாகமம் 16: 39 – 50

அப்படியே ஆசாரியனாகிய எலெயாசார் சுட்டெரிக்கப்பட்டவர்கள் கொண்டுவந்திருந்த வெண்கலத் தூபகலசங்களை எடுத்து,

ஆரோனின் புத்திரராய் இராத அந்நியன் ஒருவனும் கர்த்தருடைய சந்நிதியில் தூபங்காட்ட வராதபடிக்கும், கோராகைப்போலும் அவன் கூட்டத்தாரைப்போலும் இராதபடிக்கும், இஸ்ரவேல் புத்திரருக்கு ஞாபகக்குறியாயிருக்கும்பொருட்டு, கர்த்தர் மோசேயைக்கொண்டு தனக்குச் சொன்னபடியே அவைகளைப் பலிபீடத்தை மூடும் தகடுகளாக அடிப்பித்தான்.

மறுநாளில் இஸ்ரவேல் புத்திரரின் சபையார் எல்லாரும் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்து: நீங்கள் கர்த்தரின் ஜனங்களைக் கொன்றுபோட்டீர்கள் என்றார்கள்.

சபையார் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாகக் கூடி ஆசரிப்புக் கூடாரத்துக்கு நேரே பார்க்கிறபோது, மேகம் அதை மூடினது, கர்த்தரின் மகிமை காணப்பட்டது.

மோசேயும் ஆரோனும் ஆசரிப்புக் கூடாரத்துக்கு முன்பாக வந்தார்கள்.

அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி:

இந்தச் சபையாரை விட்டு விலகிப்போங்கள்; ஒரு நிமிஷத்தில் அவர்களை அதமாக்குவேன் என்றார்; அவர்கள் முகங்குப்புற விழுந்தார்கள்.

மோசே ஆரோனை நோக்கி: நீ தூபகலசத்தை எடுத்து, பலிபீடத்திலிருக்கிற அக்கினியை அதில் போட்டு, அதின்மேல் தூபவர்க்கம் இட்டு, சீக்கிரமாய்ச் சபையினிடத்தில் போய், அவர்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்; கர்த்தருடைய சந்நிதியிலிருந்து கடுங்கோபம் புறப்பட்டது, வாதை தொடங்கிற்று என்றான்.

மோசே சொன்னபடி ஆரோன் அதை எடுத்துக்கொண்டு சபையின் நடுவில் ஓடினான்; ஜனங்களுக்குள்ளே வாதை தொடங்கியிருந்தது; அவன் தூபவர்க்கம் போட்டு, ஜனங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்து,

செத்தவர்களுக்கும் உயிரோடிருக்கிறவர்களுக்கும் நடுவே நின்றான்; அப்பொழுது வாதை நிறுத்தப்பட்டது.

கோராகின் காரியத்தினிமித்தம் செத்தவர்கள் தவிர, அந்த வாதையினால் செத்துப்போனவர்கள் பதினாலாயிரத்து எழுநூறுபேர்.

வாதை நிறுத்தப்பட்டது; அப்பொழுது ஆரோன் ஆசரிப்புக் கூடாரவாசலுக்கு மோசேயினிடத்தில் திரும்பிவந்தான்.

ஆசாரியனாகிய எலெயாசார் சுட்டெரிக்கபட்டவர்கள் கொண்டு வந்திருந்த தூபகலசங்களை எடுத்து பலிபீடத்ததை மூடும்  தகடுகளால் அடிப்பித்தான்.  அதன் காரணம் என்னவென்றால் ஆரோனுடைய புத்திரராய் இல்லாத அந்நியன் யாரும் தூபங்காட்ட வராதபடிக்கும், கோராகை போலும்,  அவன் கூட்டத்தாரை போலும் இராதபடிக்கும், இஸ்ரவேல் புத்திரருக்கு அடையாளமாகும் படிக்கு மேற்க்கூறியபடி செய்தான். 

மறுநாளில் இஸ்ரவேல் புத்திரர் மோசே, ஆரோன் என்பவர்களுக்கு விரோதமாக முறுமுறுத்து நீங்கள் கர்த்தருடைய ஜனங்களை கொன்று போட்டீர்கள் என்று சொல்லிக்கொண்டு ஆசரிப்பு கூடாரத்தில் நின்று பார்க்கும் போது மேகம் அதனை மூடிப்போட்டது.  கர்த்தரின் மகிமை காணப்பட்டது. இதனைக் குறித்து கர்த்தர் பத்மூ தீவில் வெளிப்படுத்தினது 

வெளி 8:1-13

அவர் ஏழாம் முத்திரையை உடைத்தபோது, பரலோகத்தில் ஏறக்குறைய அரைமணிநேரமளவும் அமைதல் உண்டாயிற்று.

பின்பு, தேவனுக்குமுன்பாக நிற்கிற ஏழு தூதர்களையுங் கண்டேன், அவர்களுக்கு ஏழு எக்காளங்கள் கொடுக்கப்பட்டது.

வேறொரு தூதனும் வந்து, தூபங்காட்டும் பொற்கலசத்தைப் பிடித்துப் பலிபீடத்தின் படியிலே நின்றான்; சிங்காசனத்திற்குமுன்பாக இருந்த பொற்பீடத்தின்மேல் சகல பரிசுத்தவான்களுடைய ஜெபங்களோடும் செலுத்தும்படி மிகுந்த தூபவர்க்கம் அவனுக்குக் கொடுக்கப்பட்டது.

அப்படியே பரிசுத்தவான்களுடைய ஜெபங்களோடும் செலுத்தப்பட்ட தூபவர்க்கத்தின் புகையானது தூதனுடைய கையிலிருந்து தேவனுக்குமுன்பாக எழும்பிற்று.

பின்பு, அந்தத் தூதன் தூபகலசத்தை எடுத்து, அதைப் பலிபீடத்து நெருப்பினால் நிரப்பி, பூமியிலே கொட்டினான்; உடனே சத்தங்களும், இடிமுழக்கங்களும், மின்னல்களும், பூமியதிர்ச்சியும் உண்டாயின.

அப்பொழுது, ஏழு எக்காளங்களையுடைய ஏழு தூதர்கள் எக்காளம் ஊதுகிறதற்குத் தங்களை ஆயத்தப்படுத்தினார்கள்.

முதலாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது இரத்தங்கலந்த கல்மழையும் அக்கினியும் உண்டாகி, பூமியிலே கொட்டப்பட்டது; அதினால் மரங்களில் மூன்றிலொருபங்கு வெந்துபோயிற்று, பசும்புல்லெல்லாம் எரிந்துபோயிற்று.

இரண்டாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது அக்கினியால் எரிகிற பெரிய மலைபோன்றதொன்று சமுத்திரத்திலே போடப்பட்டது. அதினால் சமுத்திரத்தில் மூன்றிலொருபங்கு இரத்தமாயிற்று.

சமுத்திரத்திலிருந்த ஜீவனுள்ள சிருஷ்டிகளில் மூன்றிலொருபங்கு செத்துப்போயிற்று; கப்பல்களில் மூன்றிலொருபங்கு சேதமாயிற்று.

மூன்றாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது ஒரு பெரிய நட்சத்திரம் தீவட்டியைப்போல எரிந்து, வானத்திலிருந்து விழுந்தது; அது ஆறுகளில் மூன்றிலொருபங்கின்மேலும், நீரூற்றுகளின்மேலும் விழுந்தது.

அந்த நட்சத்திரத்திற்கு எட்டியென்று பெயர்; அதினால் தண்ணீரில் மூன்றிலொருபங்கு எட்டியைப்போலக் கசப்பாயிற்று; இப்படிக் கசப்பான தண்ணீரினால் மனுஷரில் அநேகர் செத்தார்கள்.

நான்காம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது சூரியனில் மூன்றிலொரு பங்கும், சந்திரனில் மூன்றிலொருபங்கும், நட்சத்திரங்களில் மூன்றிலொருபங்கும் சேதப்பட்டது, அவற்றவற்றில் மூன்றிலொருபங்கு இருளடைந்தது; பகலிலும் மூன்றிலொருபங்கு பிரகாசமில்லாமற்போயிற்று, இரவிலும் அப்படியேயாயிற்று.

பின்பு, ஒரு தூதன் வானத்தின் மத்தியிலே பறந்துவரக்கண்டேன்; அவன் மகா சத்தமிட்டு: இனி எக்காளம் ஊதப்போகிற மற்ற மூன்று தூதருடைய எக்காள சத்தங்களினால் பூமியில் குடியிருக்கிறவர்களுக்கு ஐயோ, ஐயோ, ஐயோ (ஆபத்துவரும்) என்று சொல்லக்கேட்டேன்.

இதன் கருத்துக்களை தியானிக்கும் போது கர்த்தர் நம்மை பரிசுத்தப்படுத்துகிறார் என்பது புரிய வருகிறது.  இவ்விதமாக பிரியமானவர்களே கர்த்தர் நம்மை பரிசுத்தப்படுத்தும்படியாக ஒப்புக்கொடுக்க வேண்டும். நம்மளில் உள்ள எல்லா பொல்லாத சுபாவத்தை  தேவன் நம்மிடத்திலிருந்து மாற்ற வேண்டும்.  இதற்கு அடையாளமாக கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை நமக்கு அடையாளமாக்குகிறார்.  

அப்போது ஜனங்கள் முறுமுறுத்தபோது மோசேயும் ஆரோனும் ஆசரிப்பு   கூடாரத்துக்கு முன்பாக வந்தார்கள்.  கர்த்தர் மோசேயிடம்  இந்த சபையாரை விட்டு விலகி போங்கள்.    ஒரு நிமிஷத்தில் அவர்களை அதமாக்குவேன் என்ற போது அவர்கள் இஸ்ரவேல் புத்திரருக்காக முகங்குப்புற  விழுந்து, மோசே ஆரோனிடம்   நீ தூபகலசத்தை எடுத்து , பலிபீடத்திலிருக்கிற அக்கினியை அதன் மேல் போட்டு  அதன் மேல் தூப வர்க்கம் போட்டு, சீக்கிரமாய் சபையாரிடத்தில் போய் அவர்களுக்காக பாவ நிவிர்த்தி   செய்யும்படியாக சொல்கிறார்.   கர்த்தரின்  சந்நிதியிலிருந்து கடும் கோபம் புறப்பட்டது, வாதை தொடங்கிற்று  என்றார்.  

இவை என்னவென்றால் ஆசாரியன் ஜனங்களின் பாவங்களுக்காக பாவ நிவிர்த்தி செய்ய வேண்டும் என்பது கர்த்தரின் நியமம்.  அதனால்  கர்த்தர் ஆரோனனிடம் பாவ நிவாரண பலிக்காக பழுதற்ற காளையையும்  கன்று குட்டிகளையும், ஆட்டுகடாவையும் கர்த்தரின் சந்நிதியில் கொண்டு வரும்படி சொல்கிறார்.  அந்த பலிக்காக தான் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பழுதற்ற பலியாக என்றென்றைக்கும் ஆசாரியராகுகிறார்.  

மோசே சொன்னபடி ஆரோன் அதனை எடுத்து சபையின் நடுவில் ஓடினான்.  அவன் அங்கு போகும் போது வாதை தொடங்கியிருந்தது.  அப்போது அவன் தூபவர்க்கம் போட்டு ஜனங்களுக்காக பாவ நிவிர்த்தி செய்து செத்தவர்களுக்கும், உயிரோடிருக்கிறவர்களுக்கும் நடுவே நின்றான்.  அப்போது வாதை நிறுத்தப்பட்டது.  கோராகின் காரியத்தினிமித்தம் செத்தவர்கள் தவிர வாதையினால் செத்துபோனவர்கள் பதினாலாயிரத்து எழுநூறு பேர். வாதை நிறுத்தப்பட்டது.    அப்போது ஆசாரியன்  ஆசரிப்புக்கூடார வாசலுக்கு மோசேயினிடத்தில் திரும்பினான்.  

மேற்க்கூறிய வசனங்களை நாம் தியானிக்கும் போது நம்முடைய உள்ளத்தில் எழும்புகிற சபையைக்குறித்து கூறுகிறார்.  என்னவெனில் கிறிஸ்துவின் சரீரமாகிய சபையும், பாபிலோனிய சபையும் எழும்புகிறதை தேவன் திருஷ்டாந்தப்படுத்துகிறார்.  கர்த்தர் நம்மிடம் பாபிலோனை விட்டு வெளியே வாருங்கள் என்று கூறுகிறார்.  அதனைக்குறித்து 

வெளி 18: 4

பின்பு, வேறொரு சத்தம் வானத்திலிருந்து உண்டாகக் கேட்டேன். அது: என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வாருங்கள்.

இதனை நாம் தியானித்து அவளுக்கு நேரிடும் வாதைகளில் நாம் அகப்படாமல் அவளை விட்டு வெளியே வாருங்கள் என்று சொல்கிறார்.  அதனை தான் இந்த சபையாரை விட்டு விலகி போங்கள், ஒரு நிமிஷத்திலே அதம் பண்ணுவேன் என்றார்.  மேலும் நம் உள்ளத்தில் எழும்புகிற பொல்லாத செயல்கள் நிமித்தம் ஆத்துமா சாகிறது.  அதனால் பாவ நிவிர்த்தி செய்யும்படியாக மோசே, ஆசாரியனாகிய ஆரோனை அனுப்புகிறதை பார்க்கிறோம். ஏனென்றால் அவர்கள் தாங்கள் செய்த அக்கிரமத்தினிமித்தம் வாதை அவர்களுக்குள் புகுந்தது.  அதனால் பலியினால் தான் பாவ நிவிர்த்தி செய்யும் போது பாவம் மன்னிக்கப்படும். 

அப்படியாக ஆரோன் தூப கலசத்தை எடுத்துக்கொண்டு, அக்கினியை அதன்மேல் போட்டு, தூப வர்க்கம் போட்டு சபைக்கு ஓடிப்போய் ஜனங்களுக்காக பாவ நிவிர்ததி செய்கிறான்.  அப்போது வாதை நிறுத்தப்பட்டது.  அங்கு போய் செத்தவர்களுக்கும், உயிரோடிருக்கிறவர்களுக்கும் நடுவே நின்றான்.  இவை எல்லாமே நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் இரத்தம் நம்மை பாவம் மரணம் என்பவற்றிலிருந்து விடுவித்து இரட்சிக்கிறது.  

இப்படியாக நாம் உள்ளத்தை தேவனுக்கு ஒப்புக்கொடுத்து பரிசுத்தத்தை பெற்றுக்கொள்வோம்.          

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.