தேவனுக்கே மகிமையுண்டாவதாக

ரோமர் 8:7

எப்படியென்றால், மாம்சசிந்தை தேவனுக்கு விரோதமான பகை; அது தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியக்கூடாமலும் இருக்கிறது.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் ஒருபோதும் மாம்ச சிந்தைக்கேற்ற பிரகாரம் சபைக்குள் பிரிவினைக்கு காரணமாக இருக்கக்கூடாது.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் ஒருபோதும் துணிகரமான பாவங்கள் செய்யக்கூடாது என்பதும், கர்த்தருடைய கட்டளைகள் அறிந்தும் மனபூர்வமாக அதற்கு கீழ்படியாமல் இருந்தால், அது அக்கிரமம் என்பதும், அந்த அக்கிரமம் அவரவர் மேல் தான் கர்த்தர் வைக்கிறார் என்பதும், அது மன்னிக்கப்படுவதில்லை என்றும் தியானித்தோம்.  

மேலும் நாம் அடுத்ததாக தியானிக்கிற கருத்துக்கள் என்னவெனில் 

எண்ணாகமம் 16:1-10

லேவிக்குப் பிறந்த கோகாத்தின் குமாரனாகிய இத்சேயாரின் மகன் கோராகு என்பவன் ரூபன் வம்சத்திலுள்ள எலியாபின் குமாரராகிய தாத்தானையும் அபிராமையும் பேலேத்தின் குமாரனாகிய ஓனையும் கூட்டிக்கொண்டு,

இஸ்ரவேல் புத்திரரில் சபைக்குத் தலைவர்களும் சங்கத்துக்கு அழைக்கப்பட்டவர்களும் பிரபலமானவர்களுமாகிய இருநூற்று ஐம்பது பேர்களோடும்கூட மோசேக்குமுன்பாக எழும்பி,

மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாகக் கூட்டங்கூடி, அவர்களை நோக்கி: நீங்கள் மிஞ்சிப்போகிறீர்கள்; சபையார் எல்லாரும் பரிசுத்தமானவர்கள்; கர்த்தர் அவர்கள் நடுவில் இருக்கிறாரே; இப்படியிருக்க, கர்த்தருடைய சபைக்கு மேலாக உங்களை ஏன் உயர்த்துகிறீர்கள் என்றார்கள்.

மோசே அதைக் கேட்டபோது, முகங்குப்புற விழுந்தான்.

பின்பு அவன் கோராகையும் அவனுடைய எல்லாக் கூட்டத்தையும் நோக்கி: நாளைக்குக் கர்த்தர் தம்முடையவன் இன்னான் என்றும், தம்மண்டையிலே சேரத் தாம் கட்டளையிட்ட பரிசுத்தவான் இன்னான் என்றும் காண்பிப்பார்; அப்பொழுது எவனைத் தெரிந்துகொள்வாரோ, அவனைத் தம்மிடத்தில் சேரக் கட்டளையிடுவார்.

ஒன்று செய்யுங்கள்; கோராகே, கோராகின் கூட்டத்தார்களே, நீங்கள் எல்லாரும் தூபகலசங்களை எடுத்துக்கொண்டு,

நாளைக்கு அவைகளில் அக்கினிபோட்டு, கர்த்தருடைய சந்நிதியில் தூபவர்க்கம் இடுங்கள்; அப்பொழுது கர்த்தர் எவனைத் தெரிந்துகொள்வாரோ, அவன் பரிசுத்தவானாயிருப்பான்; லேவியின் புத்திரராகிய நீங்களே மிஞ்சிப்போகிறீர்கள் என்றான்.

பின்னும் மோசே கோராகை நோக்கி: லேவியின் புத்திரரே, கேளுங்கள்;

கர்த்தருடைய வாசஸ்தலத்தின் பணிவிடைகளைச் செய்யவும், சபையாரின் முன்நின்று அவர்கள் செய்யவேண்டிய வேலைகளைச் செய்யவும், உங்களைத் தம்மண்டையிலே சேரப்பண்ணும்படி இஸ்ரவேலின் தேவன் இஸ்ரவேல் சபையாரிலிருந்து உங்களைப் பிரித்தெடுத்ததும்,

அவர் உன்னையும் உன்னோடேகூட லேவியின் புத்திரராகிய உன்னுடைய எல்லாச் சகோதரரையும் சேரப்பண்ணினதும், உங்களுக்கு அற்பகாரியமோ? இப்பொழுது ஆசாரியப்பட்டத்தையும் தேடுகிறீர்களோ?

மேற்கூறிய வசனங்களை நாம் தியானிக்கும் போது லேவிக்கு பிறந்த கோகாத்தின் குமாரனாகிய இத்சேயார் என்பவனின் மகன் கோராகு என்பவன் ரூபன் வம்சத்திலுள்ள எலியாபின் குமாரராகிய  தாத்தானையும், அபிராமையும் பேலேத்தின் குமாரனாகிய ஓனையும் கூட்டிக்கொண்டு,  இஸ்ரவேல் புத்திரரில் சபைக்குத் தலைவர்களும் சங்கத்துக்கு அழைக்கப்பட்டவர்களும் பிரபலமானவர்களுமாகிய இருநூற்று ஐம்பது பேர்களோடுக்கூட மோசேக்கு முன்பாக எழும்பி, கூட்டங்கூடி அவர்களை நோக்கி நீங்கள் மிஞ்சி போகிறீர்கள்; சபையார் எல்லாரும் பரிசுத்தமானவர்கள்.  கர்த்தர் அவர்கள் நடுவில் இருக்கிறாரே; பின்னே கர்த்தருடைய சபைக்கு மேலாக ஏன் உங்களை உயர்த்துகிறீர்கள் என்று கேட்டார்கள்.  

இவ்விதமாக கோராகின் கூட்டத்தார் கேட்க மோசே கர்த்தரின் சந்நிதியில் முகங்குப்புற விழுந்தான்.  அவர்கள் அவ்விதம் கேட்க காரியம் என்னவென்றால் மோசே,  ஆரோன் என்பவர்களை வைத்து தேவன் அநேக காரியங்களை செய்துக்கொண்டிருந்ததால் அவர்கள் மேல் பொறாமைக்கொண்டு இவ்விதம் கேட்டார்கள்.  ஆனால் மோசே அவர்களிடம் நாளைக்கு கர்த்தர் தம்முடையவன் இன்னாரென்றும், தம்மண்டையிலே சேர தகும் பரிசுத்தவான் இன்னார் என்றும் காண்பிப்பார்; அப்பொழுது எவனை தெரிந்துக்கொள்வாரோ, அவனை தம்மிடத்தில் சேர கட்டளையிடுவார் என்றான்.  என்னவென்றால் கர்த்தர் உண்மையுள்ளவர்களிடம் தான் உண்மையான காரியங்களை ஒப்புக்கொடுப்பார் என்பதனை நாம் ஒவ்வொருவரும் தெரிந்துக்கொள்ளவேண்டும்.  

அதனைக் குறித்ததான வசனம் என்னவென்றால் 

லூக்கா 16:10-15 

கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான், கொஞ்சத்திலே அநீதியுள்ளவன் அநேகத்திலும் அநீதியுள்ளவனாயிருக்கிறான்.

அநீதியான உலகப்பொருளைப்பற்றி நீங்கள் உண்மையாயிராவிட்டால், யார் உங்களை நம்பி உங்களிடத்தில் மெய்யான பொருளை ஒப்புவிப்பார்கள்?

வேறொருவனுடைய காரியத்தில் நீங்கள் உண்மையுள்ளவர்களாயிராவிட்டால், உங்களுக்கு யாதொன்றைச் சொந்தமாகக் கொடுப்பவர் யார்?

எந்த ஊழியக்காரனும் இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்யக்கூடாது; ஒருவனைப் பகைத்து மற்றவனைச் சிநேகிப்பான், அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு மற்றவனை, அசட்டைபண்ணுவான். தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களாலே கூடாது என்றார்.

இவைகளையெல்லாம் பொருளாசைக்காரராகிய பரிசேயரும் கேட்டு, அவரைப் பரியாசம்பண்ணினார்கள்.

அவர் அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷர்முன்பாக உங்களை நீதிமான்களாகக் காட்டுகிறீர்கள், தேவனோ உங்கள் இருதயங்களை அறிந்திருக்கிறார்; மனுஷருக்குள்ளே மேன்மையாக எண்ணப்படுகிறது தேவனுக்கு முன்பாக அருவருப்பாயிருக்கிறது.

மேற்க்கூறிய வசனங்களை நாம் தியானித்தால் மனுஷருக்கு முன்பாக மேன்மையாக எண்ணப்படுவது தேவனுக்கு முன்பாக அருவருப்பாகயிருக்கிறது.  இவ்விதம் கோராகின் கூட்டத்தார் தங்களை மெச்சிக்கொண்டார்கள்.  அதனால் அவர்களிடம் பெருமை, பொறாமை, கோபம், வைராக்கியம், தற்பொழிவு இருக்கிறதை தெரிந்துக்கொள்ள முடிகிறது.  அதனைப்பற்றி தேவ வசனம் 

1கொரிந்தியர் 3:3 

பொறாமையும் வாக்குவாதமும் பேதகங்களும் உங்களுக்குள் இருக்கிறபடியால், நீங்கள் மாம்சத்திற்குரியவர்களாயிருந்து மனுஷமார்க்கமாய் நடக்கிறீர்களல்லவா?

மேற்க்கூறிய வசனங்களை தியானிக்கும் போது மாம்சத்திற்குரியவர்களிடம் தான் பொறாமை, பெருமை, துர் சிந்தை, இப்படிபட்ட பொல்லாத செயல்பாடுகள் உண்டாயிருக்கும். இப்படியாக இந்த செயல்கள் கோராகின் கூட்டத்தாரிடம் காணப்பட்டது.  அதனால் கர்த்தருக்கு அவர்கள் அருவருப்பாக இருந்தார்கள்.  இப்படிதான் நம்மில் அநேகம் பேர் இருப்பதால், கர்த்தரின் முன்பில் நாம் அருவருப்பாயிருக்கிறோம். 

மேலும் மோசே சொல்வது கோராகே, கோராகின் கூட்டத்தார்களே, எல்லாரும் தூபகலசங்களை எடுத்து அதில் அக்கினி போட்டு கர்த்தரின் சந்நிதியில் தூப வர்க்கம் இடுங்கள்.  அப்பொழுது கர்த்தர் யாரை தெரிந்துக் கொள்வாரோ, அவன் பரிசுத்தவானாயிருப்பான்.  லேவியின் புத்திரராகிய நீங்கள் மிஞ்சி போகிறீர்கள் என்றான். பின்னும் மோசே கோராகை நோக்கி,  கர்த்தருடைய வாசஸ்தலத்தின் பணிவிடைகளை செய்யவும்,சபையாரின் முன்நின்று அவர்கள் செய்ய வேண்டிய வேலைகளை செய்யவும், உங்களை தம்மண்டையிலே சேரபண்ணும்படி இஸ்ரவேலின் தேவன் இஸ்ரவேல் சபையாரிடத்திலிருந்து உங்களை பிரித்தெடுத்ததும், அவர் உன்னையும், உன்னோடுக்கூட லேவியின் புத்திரராகிய எல்லா சகோதரரையும் சேரபண்ணினது அற்ப காரியமோ? இப்போழுது ஆசாரிய பட்டத்தையும் தேடுகிறீர்களோ என்றான். 

பிரியமானவர்களே, மேற்கூறிய பகுதிகளை நாம் சிந்தனைக்கு கொண்டு வரும் போது சபையில் பிரிவினை வருகிறதை பார்க்கிறோம்.  இந்த பிரிவினை கொண்டு வருவது யார் என்று சொன்னால் கோராகு.  இந்த கோராகு, லேவி கோத்திரத்தை சார்ந்தவன்.  இவன் இஸ்ரவேல் புத்திரரில்  இருநூற்றைம்பது பேரை கூட்டங்கூட்டுகிறான்.  இவற்றிற்கு காரணம் இவர்களில் இருந்த மாம்ச சிந்தை.  அதனால் தான் மாம்சமும், ஆவியும் ஒன்றுக்கொன்று போராடும் என்று எழுதப்பட்டிருக்கிறது. அதனைக் குறித்து 

கலாத்தியர் 5:17  

மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் இச்சிக்கிறது; நீங்கள் செய்யவேண்டுமென்றிருக்கிறவைகளைச் செய்யாதபடிக்கு, இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறது.

இதனை நாம் வாசிக்கும் போது மாம்சத்துக்குட்பட்டவர்கள் தேவனுக்கு பிரியமாயிருக்க முடியாது.  அவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க முடியாது. இதனை குறித்து கர்த்தருக்கு சித்தமானால் அடுத்த நாளில் தியானிப்போம்.  

ஆதலால் பிரியமானவர்களே நம்மில் யாரும் மாம்ச கிரியைகளுகுட்படாதபடி, சபையில் பிரிவினை உண்டாகாதபடி நம்மை பாதுகாத்துக்கொள்ளும்படியாக ஒப்புக்கொடுப்போம்.    

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.