தேவனுடைய வாசஸ்தலமாகுதல்

சகோதரி. பி.கிறிஸ்டோபர் வாசினி
May 06, 2020


கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,  

இதோ கிளை  என்ன பட்டவராகிய என் தாசனை வர பண்ணுவேன்.அந்தக் கிளை தான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. அவர் நம் உள்ளத்தில்   உலாவுகிறவராக  இருக்கிறார். 

எல்லா தேசத்திலும் சிதறபட்டவர்களை ஒன்று சேர்த்து ஒரே ஜாதியும்,  ஒரே மேய்ப்பனும்,  ஒரே மந்தையும் ஆக மாற்றும் படியாக பிதாவாகிய தேவன் தம்முடைய ஒரேபேறானவரை ஒப்புக் கொடுத்து நம்முடைய எல்லா வித  அழுக்குகளையும் ஒரே இரத்தத்தால் சுத்திகரித்து,  பின் பாவமன்னிப்பாகிய மீட்பை நமக்கு தந்து கிறிஸ்துவை தம்முடைய ஆவியினால் எழுப்பினவர் எபேசியர் 2:7, 8 - கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் செய்தார்.

கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள். இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு.

எபேசியர் 2:19-22                    

ஆகையால், நீங்கள் இனி அந்நியரும் பரதேசிகளுமாயிராமல், பரிசுத்தவான் களோடே ஒரே நகரத்தாரும் தேவனுடைய வீட்டாருமாயிருந்து,

அப்போஸ்தலர் தீர்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள். அதற்கு இயேசுகிறிஸ்து தாமே மூலைக் கல்லாயிருக்கிறார்.

அவர்மேல் மாளிகை முழுவதும் இசைவாய் இணைக்கப்பட்டு, கர்த்தருக்குள் பரிசுத்த ஆலயமாக எழும்புகிறது.

அவர்மேல் நீங்களும் ஆவியினாலே தேவனுடைய வாசஸ்தலமாகக் கூட்டிக் கட்டப்பட்டுவருகிறீர்கள்.

இவ்விதமாக சீயோனின் கல்லாகிய கிறிஸ்துவோடு கூட நாமும் இணைக்கப்பட்டு,  பரிசுத்த ஆலயமாக அவருடைய ஆவியினாலே தேவன் தங்குகிற வாசஸ்தலமாக தேவன் நம்மையும் கட்டுகிறார்.

இவ்விதமாக நாமெல்லோரும் கிறிஸ்துவின் சரீரத்தின் அவயமாக யிருகிறோம். அதை தான்,   I கொரிந்தியர் 3:16, 17

நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?

ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால், அவனைத் தேவன் கெடுப்பார். தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது. நீங்களே அந்த ஆலயம்.

 

நாம் எப்போதும் பரிசுத்தமாக இருக்கவேண்டும். தேவனுக்கேற்ற வைகளை மட்டுமே எப்போதும் சிந்திக்க வேண்டும்.

பிலிப்பியர் 3:18-21

ஏனெனில், அநேகர் வேறுவிதமாய் நடக்கிறார்கள். அவர்கள் கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைஞரென்று உங்களுக்கு அநேகந்தரம் சொன்னேன், இப்பொழுதும் கண்ணீரோடும் சொல்லுகிறேன்.

அவர்கள் முடிவு அழிவு, அவர்களுடைய தேவன் வயிறு, அவர்களுடைய மகிமை அவர்களுடைய இலச்சையே, அவர்கள் பூமிக்கடுத்தவைகளைச் சிந்திக் கிறார்கள்.

நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தரா யிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

அவர் எல்லாவற்றையும் தமக்குக் கீழ்ப்படுத்திக்கொள்ளத்தக்க தம்முடைய வல்லமையான செயலின்படியே, நம்முடைய அற்பமான சரீரத்தைத் தம்முடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார்.

பிலிப்பியர் 4:8

கடைசியாக, சகோதரரே, உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக் கொண்டிருங்கள்.

            பிரியமானவர்களே, கிறிஸ்துவை தரித்தவர்கள்  எப்படி பரிசுத்த நடக்கை உள்ளவர்களாயிருக்க வேண்டும் என்று தியானித்துக் கொண்டிருக்கிறோம். நம்முடைய மனது ஒருபோதும் சிதறிக்கக்  கூடாதபடி தேவனுக்குரியவைகளை சிந்திக்க கடவோம்.

தேவன் சிதறடித்த ஜனங்களை ஒன்று சேர்க்கும் படியாக தான் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து,  மரித்து உயிர்த்தெழுந்த பிறகு தரிசனமாக வெளிப்பட்டு,  பின்பு பரலோகத்திற்க்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, அதன் பின்பு பெந்தேகோஸ்தே நாள் வந்தபோது மேல் வீட்டில் காத்திருந்த யாவர் மேலும் இறங்கினார்,   அவர்கள் இருந்த வீடு முழுதும் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டு ஒவ்வொருவரும்,  அவரவருக்கு தந்தருளின வரத்தின்படி வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினர். ஆனால் வெவ்வேறு தேசங்களிலிருந்து வந்தவர்கள் இதைக் கேட்ட பொழுது நம்மில் அவரவருடைய ஜென்ம பாஷைகளிலே இவர்கள் பேச கேட்கிறோமே,  இதெப்படி என்று தங்களுக்குள்ளே சொல்லி ஆச்சரியப்பட்டார்கள். ஆனால் பேசினவர்கள் எல்லோரும் கலிலேயராயிருந்தார்கள். இவற்றிலிருந்து தேவன் சிதறடித்த எல்லா கோத்திரத்தாரும்,  எல்லா பாஷைக்காரரும், எல்லா ஜாதியாரையும்,  தேவன்  ஒன்று சேர்த்து ஒரே கல்லாகிய சீயோனில் கூட சேர்த்து பணிந்து தேவனுடைய ஆலயமாக்குகிறார்.  நாம் தேவனுடைய ஆலயமாகும்போது தேவ ஆவியானவர் நம்மளில்  வாசம் பண்ணிக்  கொண்டிருப்பார்.  தேவ ஆவி வாசம் பண்ணுவதால் நாம் தேவனுக்குரியவைகளை சிந்திப்போம்.  அப்படியானால் நாம் பரிசுத்தம் பெற்றுக்  கொண்டிருப்போம். ஜெபிப்போம்.

 

-தொடர்ச்சி நாளை