தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 119:10

என் முழு இருதயத்தோடும் உம்மைத் தேடுகிறேன், என்னை உமது கற்பனைகளைவிட்டு வழிதப்பவிடாதேயும்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் ஒருபோதும் துணிகரமான பாவம் செய்யக்கூடாது.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமா, முதற்பலனாகிய கிறிஸ்துவோடுக்கூட, உயிர்தெழுதலினால் இணைக்கப்படவேண்டும் என்பதன் திருஷ்டாந்தத்தை விளக்கத்தோடு தியானித்தோம்.  

ஆனால் இந்த நாளில் நாம் தியானிப்பது என்னவென்றால் 

எண்ணாமம் 15: 22-41  

கர்த்தர் மோசேயினிடத்தில் சொன்ன இந்தக் கற்பனைகள் எல்லாவற்றின்படியும்,

கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளைகொடுத்த நாள்முதற்கொண்டு அவர் உங்களுக்கும் உங்கள் சந்ததிகளுக்கும் நியமித்த எல்லாவற்றின்படியேயும் நீங்கள் செய்யாமல்,

அறியாமல் தவறி நடந்தாலும், சபையாருக்குத் தெரியாமல் யாதொரு தப்பிதம் செய்தாலும், சபையார் எல்லாரும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியாக ஒரு காளையையும், முறைமைப்படி அதற்கேற்ற போஜனபலியையும், பானபலியையும், பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தவேண்டும்.

அதினால் ஆசாரியன் இஸ்ரவேல் புத்திரரின் சபையனைத்திற்காகவும் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அது அறியாமையினால் செய்யப்பட்டபடியாலும், அதினிமித்தம் அவர்கள் கர்த்தருக்குத் தகனபலியையும் பாவநிவாரணபலியையும் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்ததினாலும், அது அவர்களுக்கு மன்னிக்கப்படும்.

அது அறியாமையினாலே ஜனங்கள் யாவருக்கும் வந்தபடியால், அது இஸ்ரவேல் புத்திரரின் சபையனைத்திற்கும் அவர்களுக்குள்ளே தங்குகிற அந்நியனுக்கும் மன்னிக்கப்படும்.

ஒருவன் அறியாமையினால் பாவஞ்செய்தானாகில், ஒருவயதான வெள்ளாட்டைப் பாவநிவாரணபலியாகச் செலுத்தக்கடவன்.

அப்பொழுது அறியாமையினால் பாவஞ்செய்தவனுக்காக ஆசாரியன் பாவநிவிர்த்தி செய்யும்படி கர்த்தருடைய சந்நிதியில் பாவநிவிர்த்தி செய்யக்கடவன், அப்பொழுது அவனுக்கு மன்னிக்கப்படும்.

இஸ்ரவேல் புத்திரராகிய உங்களில் பிறந்தவனுக்கும் உங்களுக்குள்ளே தங்கும் அந்நியனுக்கும், அறியாமையினால் பாவஞ்செய்தவனிமித்தம், ஒரே பிரமாணம் இருக்கவேண்டும்.

அன்றியும் தேசத்திலே பிறந்தவர்களிலாகிலும் அந்நியர்களிலாகிலும், எவனாவது துணிகரமாய் யாதொன்றைச் செய்தால், அவன் கர்த்தரை நிந்திக்கிறான்; அந்த ஆத்துமா தன் ஜனத்தாரில் இராதபடிக்கு அறுப்புண்டுபோகவேண்டும்.

அவன் கர்த்தரின் வார்த்தையை அசட்டைபண்ணி, அவர் கற்பனையை மீறினபடியால், அந்த ஆத்துமா அறுப்புண்டுபோகவேண்டும்; அவன் அக்கிரமம் அவன்மேல் இருக்கும் என்று சொல் என்றார்.

இஸ்ரவேல் புத்திரர் வனாந்தரத்தில் இருக்கையில், ஓய்வுநாளில் விறகுகளைப் பொறுக்கிக்கொண்டிருந்த ஒரு மனிதனைக் கண்டுபிடித்தார்கள்.

விறகுகளைப் பொறுக்கின அந்த மனிதனைக் கண்டுபிடித்தவர்கள், அவனை மோசே ஆரோன் என்பவர்களிடத்துக்கும் சபையார் அனைவரிடத்துக்கும் கொண்டுவந்தார்கள்.

அவனுக்குச் செய்யவேண்டியது இன்னதென்று தீர்க்கமான உத்தரவு இல்லாதபடியினால், அவனைக் காவலில் வைத்தார்கள்.

கர்த்தர் மோசேயை நோக்கி: அந்த மனிதன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படவேண்டும்; சபையார் எல்லாரும் அவனைப் பாளயத்திற்குப் புறம்பே கல்லெறியக்கடவர்கள் என்றார்.

அப்பொழுது சபையார் எல்லாரும் கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே, அவனைப் பாளயத்திற்குப் புறம்பே கொண்டுபோய்க் கல்லெறிந்தார்கள்; அவன் செத்தான்.

பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:

நீ இஸ்ரவேல் புத்திரரிடத்தில் பேசி, அவர்கள் தங்கள் தலைமுறைதோறும் தங்கள் வஸ்திரங்களின் ஓரங்களிலே தொங்கல்களை உண்டாக்கி, ஓரத்தின் தொங்கலிலே இளநீல நாடாவைக் கட்டவேண்டுமென்று அவர்களுக்குச் சொல்.

நீங்கள் பின்பற்றிச் சோரம்போகிற உங்கள் இருதயத்துக்கும் உங்கள் கண்களுக்கும் ஏற்க நடவாமல், அதைப் பார்த்து, கர்த்தரின் கற்பனைகளையெல்லாம் நினைத்து அவைகளின்படியே செய்யும்படிக்கு, அது உங்களுக்குத் தொங்கலாய் இருக்கவேண்டும்.

நீங்கள் என் கற்பனைகளையெல்லாம் நினைத்து, அவைகளின்படியே செய்து, உங்கள் தேவனுக்குப் பரிசுத்தராயிருக்கும்படி அதைப் பார்ப்பீர்களாக.

நான் உங்களுக்குத் தேவனாயிருக்கும்படி, உங்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உங்கள் தேவனாகிய கர்த்தர்; நானே உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல் என்றார்.

மேற்க்கூறிய கருத்துக்கள் பிரகாரம் கர்த்தர் மோசேயைக்கொண்டு  கட்டளையிட்ட கற்பனைகள் பிரகாரம் நாம் நடக்காமலும், அறியாமல் தவறி நடந்தாலும், யாதொரு தப்பிதம் நாம் செய்தாலும் சபையார் எல்லாரும் கர்த்தருக்கு சுகந்த வாசனையான தகனபலியாக ஒரு காளையையும், முறைமையின்படி அதற்கேற்ற போஜனபலியையும், பாணபலியையும், பாவ நிவாரணபலியாக வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்த வேண்டும்.  ஆசாரியன் இஸ்ரவேல் புத்திரரின் சபையனைத்திற்காக பாவ நிவிர்த்திச் செய்யக்கடவன்.  

அன்றைக்கு படைக்கிற பலிகளைக் ஆசாரியன் பலிபீடத்தில் பாவ நிவிர்த்தி செய்வான்.  அவ்விதமாக செய்தபோது ஈனமான ஆசாரியர்கள் இருந்ததால், கர்த்தர் அதில் பிரியமாயிருக்கவில்லை.  ஆதலால் கர்த்தரே ஆசாரியராக வெளிப்படுகிறார்.   நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்றென்றைக்கும் ஆசாரியராக வெளிப்பட்டு, நமக்காக அவருடைய இரத்தமே பாவநிவிர்த்தி செய்கிறது.   

அவ்விதம் அவரவருடைய ஆத்துமாவின் வளர்ச்சிக்கேற்ற பிரகாரம் நம்மை நாம் செய்த தப்பிதங்களுக்காக ஒப்படைக்க வேண்டும்.   அவ்விதம் நாம் செய்யும் போது அது நமக்கு மன்னிக்கப்படுகிறது.   மேலும் இவ்விதம் செய்தால் அறியாமையினால் ஜனங்களுக்கு வந்தபடியாலும், இஸ்ரவேல் புத்திரருக்கும், அங்கு தங்குகிற அந்நியனுக்கும் மன்னிக்கப்படுகிறது. 

ஆனால் கர்த்தருடைய வார்த்தை சொல்கிறது என்னவென்றால் தேசத்திலே பிறந்தவர்களிலாகிலும்,  அந்நியர்களாகிலும் எவனாவது துணிகரமாய் யாதொன்றை செய்தால்  அவன் கர்த்தரை நிந்திக்கிறான்.  அவ்விதம் நிந்திக்கிறவனுடைய ஆத்துமா தன் ஜனத்தாரில் இல்லாதபடி அறுப்புண்டுப் போக வேண்டும் என்றும், அவன் கர்த்தரின் வார்த்தையை அசட்டைப்பண்ணி, அவர் கற்பனையை மீறினபடியால், அந்த ஆத்துமா அறுப்புண்டு போக வேண்டும் என்றும் அவன் அக்கிரமம் அவன் மேல் இருக்கும் என்று சொல் என்றார்.  

ஆனால் பிரியமானவர்களே நாம் துணிகரமாய் கர்த்தருக்கு விரோதமாக பாவஞ்செய்தாலோ அல்லது அவருடைய வார்த்தையை அசட்டைப்பண்ணி, கற்பனையை மீறுகிறவர்களின் அக்கிரமம் அவர்கள் மேல் தான் இருக்கும் என்று எழுதப்பட்டிருக்கிறது. அவற்றைக் குறித்து 

எபிரெயர் 10:24-31  

மேலும், அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து;

சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்; நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும்.

சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொருபலி இனியிராமல்,

நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும்.

மோசேயினுடைய பிரமாணத்தைத் தள்ளுகிறவன் இரக்கம்பெறாமல் இரண்டு மூன்று சாட்சிகளின் வாக்கினாலே சாகிறானே;

தேவனுடைய குமாரனைக் காலின்கீழ் மிதித்து, தன்னைப் பரிசுத்தஞ்செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் எவ்வளவு கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாயிருப்பானென்பதை யோசித்துப்பாருங்கள்.

பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றும், கர்த்தர் தம்முடைய ஜனங்களை நியாயந்தீர்ப்பார் என்றும் சொன்னவர் இன்னாரென்று அறிவோம்.

ஜீவனுள்ள தேவனுடைய கைகளில் விழுகிறது பயங்கரமாயிருக்குமே

மேற்க்கூறிய வசனங்கள் பிரகாரம் நம்மை நாமே நன்றாக சோதித்து அறிந்துக்கொண்டு, நம்மிடத்தில் இருக்கிற குற்றங்களுக்காக ஜீவனுள்ள தேவனுடைய கைகளில் விழுகிறது பயங்கரமாயிருக்குமே. அல்லாமலும் ஓய்வுநாளில் விறகுபொறுக்கின மனிதனை கண்டு பிடித்தவர்கள் அவனை, மோசே ஆரோன் சபையார் யாவரிடத்திற்கும் கொண்டு வந்தார்கள்.  ஆனால் அவனுக்கு தீர்க்கமான உத்தரவு இல்லாததால் காவலில் வைக்கப்பட்டதாகவும், மற்றும் கர்த்தர் மோசேயிடம் அந்த மனிதன் நிச்சயமாக கொலைசெய்யப்படவேண்டும் என்றும்; சபையார் யாவரும் அவனை பாளயத்திற்கு புறம்பே கல்லெறியகடவர்கள் என்றார்.  அப்படியே கர்த்தர் மோசேக்கு கட்டளையிட்டபடியே செய்தார்கள்.  அப்போது அவன் செத்தான். 

இவ்விதமாக நடந்ததினால் கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரிடத்தில் பேசி தங்கள் தலைமுறைதோறும் தங்கள் வஸ்திரங்களின் ஓரங்களிலே தொங்கல்களை உண்டாக்கி இளநீல நாடாவை கட்ட வேண்டும் என்று சொல்கிறார்.  இவை எதற்கென்றால் நம்முடைய இருதயத்திற்கும், நம்முடைய கண்களுக்கும் ஏற்றபிரகாரம் கர்த்தரை விட்டு சோரம் போய்  நடவாமல், கர்த்தரின் கற்பனைகளை விட்டு நீங்காமல் அதனை பார்த்து நினைத்து நடக்கும்படியாக அது உங்களுக்கு தொங்கலாய் இருக்க கடவது என்கிறார்.  

பிரியமானவர்களே கர்த்தருடைய கற்பனைகளில் பிரியமாய் இருந்து அதன் பிரகாரம் நடக்கிறவர்களாக இருக்க வேண்டும்.  இல்லாவிட்டால் நம்முடைய ஆத்துமா கொல்லப்படுகிறது. ஆதலால் கர்த்தர் சொல்லுகிறதாவது நீங்கள் என் கற்பனைகளையெல்லாம் நினைத்து அவைகளின் படியே செய்து உங்கள் தேவனுக்கு பரிசுத்தமாயிருக்கும்படி அதனை பார்ப்பீர்களாக. அவை என்னவென்றால் இளநீல நாடா.  அதனை கிறிஸ்துவுக்கு திருஷ்டாந்தப்படுத்துகிறார்.  அதனால் கிறிஸ்துவை இவ்வுலகத்திற்கு அனுப்பி நமக்கு அவருடைய அன்பை கல்வாரியில்  வெளிப்படுத்தி காட்டினார். 

பின்பு நம் எல்லாருடைய உள்ளத்திலும் உயிர்தெழுந்த கிறிஸ்துவை நம்முடைய ஆத்துமாவை உயிர்பிக்கும்படியாக அனுப்புகிறார்.  அப்படி உயிர்ப்பிக்கப்பட்ட ஆத்துமா கர்த்தருடைய கற்பனைகளில் பிரியமாயிருந்து அவ்விதம் நடக்க கற்றுக்கொள்ளும்.  அவ்விதம் நாம் நடக்கும் போது அவரே நம்முடைய தேவனாகிய கர்த்தர் என்றும், ஒருபோதும் நாம் அவரை விட்டு சோரம் போகாதபடி, அவரே நம்மை எகிப்தாகிய பாவத்திலிருந்து மீண்டு எடுத்தவர் என்று அவர் மேல் முழு நம்பிக்கையாயிருப்போம்.  

அவ்விதம் நாம் நடக்கும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.