தேவனுக்கே மகிமையுண்டாவதாக

ரோமர் 8: 23, 24

அதுவுமல்லாமல், ஆவியின் முதற்பலன்களைப் பெற்ற நாமுங்கூட நம்முடைய சரீர மீட்பாகிய புத்திரசுவிகாரம் வருகிறதற்குக் காத்திருந்து, நமக்குள்ளே தவிக்கிறோம்.

அந்த நம்பிக்கையினாலே நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். காணப்படுகிறதை நம்புகிறது நம்பிக்கையல்ல; ஒருவன் தான் காண்கிறதை நம்பவேண்டுவதென்ன?

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமா, முதற்பலனாகிய கிறிஸ்துவோடுக்கூட, உயிர்தெழுதலினால் இணைக்கப்படவேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் ஆத்துமா கிருபை பெற்று வளர்ச்சியடைந்துக்கொண்டிருக்க வேண்டும், என்றும், அப்படி வளர்ச்சியடைகிறவர்கள் கர்த்தருக்குரிய பலிகளை அந்தந்த நாளில் கர்த்தருக்கேற்ற பிரகாரம் பலி செலுத்துகிறவர்களாக இருக்க வேண்டும் என்று தியானித்தோம்.  

மேலும்  இந்த நாளில் நாம் தியானிக்க போகிற கருத்துகள் என்னவெனில் 

எண்ணாகமம் 15:13- 21

சுதேசத்தில் பிறந்தவர்கள் யாவரும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியைச் செலுத்தும்போது இவ்விதமாகவே செய்யவேண்டும்.

உங்களிடத்திலே தங்கியிருக்கிற அந்நியனாவது, உங்கள் நடுவிலே உங்கள் தலைமுறைதோறும் குடியிருக்கிறவனாவது, கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி செலுத்தவேண்டுமானால், நீங்கள் செய்கிறபடியே அவனும் செய்யவேண்டும்.

சபையாராகிய உங்களுக்கும் உங்களிடத்தில் தங்குகிற அந்நியனுக்கும் ஒரே பிரமாணம் இருக்கவேண்டும் என்பது உங்கள் தலைமுறைகளில் நித்திய கட்டளையாயிருக்கக்கடவது; கர்த்தருக்கு முன்பாக அந்நியனும் உங்களைப்போலவே இருக்கவேண்டும்.

உங்களுக்கும் உங்களிடத்தில் தங்குகிற அந்நியனுக்கும் ஒரே பிரமாணமும் ஒரே முறைமையும் இருக்கக்கடவது என்று சொல் என்றார்.

பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:

நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நான் உங்களை அழைத்துக்கொண்டுபோகிற தேசத்தில் நீங்கள் சேர்ந்து,

தேசத்தின் ஆகாரத்தைப் புசிக்கும்போது, கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் காணிக்கையைச் செலுத்தக்கடவீர்கள்.

உங்கள் பிசைந்த மாவினால் செய்த முதற்பலனாகிய அதிரசத்தை ஏறெடுத்துப் படைப்பீர்களாக; போரடிக்கிற களத்தின் படைப்பை ஏறெடுத்துப் படைக்கிறதுபோல அதையும் ஏறெடுத்துப் படைக்கவேண்டும்.

இப்படி உங்கள் தலைமுறைதோறும் உங்கள் பிசைந்த மாவின் முதற்பலனிலே கர்த்தருக்குப் படைப்பை ஏறெடுத்துப் படைக்கக்கடவீர்கள்.

இந்த வசனங்கள் சுதேசத்தில் பிறந்தவர்கள் யாவரும் நாம் தியானித்த முந்தின பகுதியை போலவே கர்த்தருக்கு சுகந்த வாசனையான காணிக்கையாக தங்களை ஒப்புக்கொடுக்க வேண்டும்.  என்னவென்றால் சுதேசத்தில் பிறந்தவர்கள் என்று சொல்லும் போது மீட்பை சுதந்தரித்த குடும்பத்தில் பிறந்தவர்கள் என்பது நமக்கு தெரிய வரவேண்டும்.  ஆனால் ஒரு அந்நியனாவது என்றால்,ஏதாவது ஒரு காரணத்தோடு நம்மிடத்தில் வந்து தங்கியிருப்பவர்கள், அப்படிபட்டவர்களும், தலை முறை தலைமுறை தோறும் குடியிருக்கிறவனும்,கர்த்தருக்குரிய சுகந்த வாசனையான தகனபலியை மேற்க்கூறிய பிரகாரமாகவே செலுத்துகிறவர்களாக இருக்கவேண்டும்.  

அல்லாமலும் அந்நியனுக்கும், சபையோடு சேர்ந்து  அனுபவம் உள்ளவர்களுக்கும் ஒரே பிரமாணம் இருக்க வேண்டும் என்பது தலைமுறைகளில் நித்திய கட்டளையாக இருக்க கடவது.  என்னவென்றால் அந்நினும் கர்த்தருக்கு முன்பாக நம்மைப் போலவே இருக்க வேண்டும் என்று சொல்கிறார்.  மேலும் பிரமாணமும், முறைமைகளும் எல்லாருக்கும் ஒன்று போல் இருக்க வேண்டும் என்று கர்த்தர் சொல்கிறார்.  

மேலும் கர்த்தர் மோசேயை நோக்கி சொல்வது என்னவென்றால் , இஸ்ரவேலெ புத்திரராகிய மீட்கப்பட்டவர்களிடம் சொல்ல வேண்டியது என்னவென்றால், நான் உங்களை அழைத்துக்கொண்டு போகிற தேசத்தில் நீங்கள் சேர்ந்து தேசத்தின் ஆகாரத்தை புசிக்கும் போது கர்த்தருக்கு ஏறெடுத்து படைக்கும் காணிக்கையை செலுத்த கடவர்கள்.  அது என்னவென்றால் மிசைந்த மாவினால் செய்த முதற்பலனாகிய அதிரசத்தை ஏறெடுத்து படைப்பீர்களாக.  போரடிக்கிற களத்தின் படைப்பை ஏறெடுத்துப் படைக்கிறது போல அதையும் ஏறெடுத்து படைக்க வேண்டும்.  

இவை என்னவென்றால் போய் சேருகிற தேசம் கானான் தேசம்.  இந்த தேசம் கர்த்தர் வாக்குதத்தம் பண்ணியிருந்த தேசம்.  இது கிறிஸ்துவின் சரீரமாகிய சபையை விளக்குகிறது.  ஏனென்றால் கர்த்தரை சபைகூடி ஆராதிக்கும்படியாக தான் கர்த்தர் எகிப்தின் அடிமையிலிருந்து மீட்டு கொண்டு வருகிறார்.  அதென்னவெனில் நம்மை பாவத்தின் அடிமையிலிருந்து கர்த்தர் மீட்டு, கர்த்தரை ஆவியோடும், உண்மையோடும் ஆராதிக்கும் படியாக கொண்டு வந்து சேர்க்கிற  இடம் தான் கானான்தேசம்.  அவைதான் கிறிஸ்துவின் சரீரமகிய சபை.  அங்கு தான் தேசத்தின் ஆகாரம் புசிக்கப்படுகிறது.  அந்த ஆகாரம் தான் பரலோக மன்னா.  இந்த மன்னாவை அரைத்து அப்பமாக சுட்டு அவர்கள் புசித்து கர்த்தருடைய சந்ததியில் படைப்பார்கள்.  

ஆனால் அதன் பின்னால் உள்ள வளர்ச்சி எதனை காட்டுகிறது என்றால் முதற்பலனாகிய அதிரசத்தை ஏறெடுத்து படைக்க சொல்கிறார்.  இந்த அதிரசம் என்பது கிறிஸ்து முதற்பலனாயிருக்கிறார் என்பதை திருஷ்டாந்தப்படுத்துகிறார். இவை என்னவென்றால் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து  மரித்தோரிலிருந்தெழுந்து, நித்திரையடைந்தவர்களில் முதற்பலனானார்,  இவை 

1கொரிந்தியர் 15:20-23  

கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்தெழுந்து, நித்திரையடைந்தவர்களில் முதற்பலனானார்.

மனுஷனால் மரணம் உண்டானபடியால், மனுஷனால் மரித்தோரின் உயிர்த்தெழுதலும் உண்டாயிற்று.

ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.

அவனவன் தன்தன் வரிசையிலே உயிர்ப்பிக்கப்படுவான், முதற்பலனானவர் கிறிஸ்து; பின்பு அவர் வருகையில் அவருடையவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.

இவை என்னவென்றால் அவனவன் தன்தன் வரிசையிலே உயிர்பிக்கபடுவான்.  முதற்பலனானவர் கிறிஸ்து; பின்பு அவர் வருகையில் அவருடையவர்கள் உயிர்பிக்கபடுவார்கள்.  இவை எவற்றை கூறுகிறது என்றால் கர்த்தரின் வருகையின் பிரசன்னம் நம்முடைய உள்ளம் தேவனுக்கு ஒப்புக்கொடுக்கும்போது அவர் நம்முடைய உள்ளத்தில் வருகிறார்.   ஆதலால் பிரியமானவர்களே கிறிஸ்து முதற்பலனாக உயிர்பிக்கப்பட்டது போல, நாமும் அவரோடு முதற்பலனாக உயிர்பிக்கபட்டு,  உயிர்பிக்கபட்ட ஆத்துமாவை கர்த்தருக்கென்று  படைக்க வேண்டும்.

அதோடு போரடித்த களத்தின் படைப்பை ஏறெடுத்து படைக்கிறது போல அதையும் படைக்க வேண்டும்.  இதிலிருந்து அதிரசம் முதற்பலனாகிய உயிர்தெழுந்த கிறிஸ்துக்கு திருஷ்டாந்தம்,  அது இனிமையானது.  இவ்விதம் நம்முடைய வாழ்க்கையை இனிமையான வாழ்க்கையாக, அவருடைய முதற்பலனாக நம்மை ஆசீர்வதிக்கிறார்.  

இப்படியாக அவருடைய உயிர்தொழுதலின் சாயலில் இணைக்கப்பட்டு வாழ்க்கையை இனிமையான வாழ்க்கையாக மாற்றிக்கொள்ளும் படி ஒப்புக்கொடுப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.