கிறிஸ்துவை பிரதான ஆசாரியராக ஏற்படுத்துதல்

சகோதரி. பி.கிறிஸ்டோபர் வாசினி
May 05, 2020


கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, 

யோசுவாவுக்கு முன் வைத்த கல்,  கர்த்தராகிய இயேசுகிறிஸ்து. இந்த கல்லின் மேல் ஏழு கண்களும் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த கல் தான் சீயோனில்  வைக்கப்பட்ட கல். இந்தக் கல்லை தான் தேவன் சித்திரங்தீர்க்கிறார் இதுதான் பரீட்சிக்கப்பட்டதும், விலையேற்றப்பட்டதும், திட அஸ்திபாரமுள்ள மூலைகல். இந்தக் கல்லில் உள்ள ஏழு கண்களும் பூமியெங்கும் அனுப்பப்படுகிற ஏழு ஆவிகளாகும். இந்த ஏழு  ஆவிகளும் அக்கினி தீபங்களாக சுத்திகரித்து நம்மை சோதிக்கிறது.

யோசுவாவுக்கு அடுத்ததாக நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஆசாரியராக, பிரதான ஆசாரியராக நம்முடைய தேவனால்  ஏற்படுத்தபடுகிறார் அவர் தான் நம்முடைய அக்கிரமத்தை ஒரே நாளில் நீக்கி போடுகிறார். அதனால்தான் தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரன் என்றும் பாராமல் அவரை நமக்காக சிலுவையில் ஒப்புக் கொடுத்து,  அவருடைய இரத்தம் சகல பாவங்களையும், அழுக்கை  நீக்கி சுத்திகரிப்பதற்கு வல்லமையுள்ளவராக காணப்படுகிறார்.

எபிரெயர் 4:14

வானங்களின் வழியாய்ப் பரலோகத்திற்குப்போன தேவகுமாரனாகிய இயேசு என்னும் மகா பிரதான ஆசாரியர் நமக்கு இருக்கிறபடியினால், நாம் பண்ணின அறிக்கையை உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருக்கக்கடவோம்.

எபிரெயர் 4:15

நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்.

எபிரெயர் 5:8-10

அவர் குமாரனாயிருந்தும் பட்டபாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக் கொண்டு,

தாம் பூரணரானபின்பு, தமக்குக் கீழ்ப்படிகிற யாவரும் நித்திய இரட்சிப்பை அடைவதற்குக் காரணராகி,

மெல்கிசேதேக்கின் முறைமையின்படியான பிரதானஆசாரியர் என்று தேவனாலே நாமம் தரிக்கப்பட்டார்.

எபிரெயர் 7:14-19

நம்முடைய கர்த்தர் யூதாகோத்திரத்தில் தோன்றினாரென்பது பிரசித்த மாயிருக்கிறது. அந்தக் கோத்திரத்தாரைக்குறித்து மோசே ஆசாரியத்து வத்தைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லையே.

 

அல்லாமலும், மெல்கிசேதேக்குக்கு ஒப்பாய் வேறொரு ஆசாரியர் எழும்புகிறார் என்று சொல்லியிருப்பதினால், மேற்சொல்லியது மிகவும் பிரசித்தமாய் விளங்குகிறது.

அவர் மாம்ச சம்பந்தமான கட்டளையாகிய நியாயப்பிரமாணத்தின்படி ஆசாரியராகாமல்,

நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியரா யிருக்கிறீர் என்று சொல்லிய சாட்சிக்குத்தக்கதாக அழியாத ஜீவனுக்குரிய வல்லமையின்படியே ஆசாரியரானார்.

முந்தின கட்டளை பெலவீனமுள்ளதும் பயனற்றதுமாயிருந்ததினிமித்தம் மாற்றப்பட்டது.

நியாயப்பிரமாணமானது ஒன்றையும் பூரணப்படுத்தவில்லை, அதிக நன்மையான நம்பிக்கையை வருவிப்பதோ பூரணப்படுத்துகிறது. அந்த நம்பிக்கையினாலே தேவனிடத்தில் சேருகிறோம்.

எபிரெயர் 7:20

அன்றியும், அவர்கள் ஆணையில்லாமல் ஆசாரியராக்கப்படுகிறார்கள். இவரோ: நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியரா யிருக்கிறீர் என்று கர்த்தர் ஆணையிட்டார், மனம்மாறாமலும் இருப்பார் என்று தம்முடனே சொன்னவராலே ஆணையோடே ஆசாரியரானார்.

எபிரெயர் 7:23,24

அன்றியும், அவர்கள் மரணத்தினிமித்தம் நிலைத்திருக்கக்கூடாதவர்களான படியால், ஆசாரியராக்கப்படுகிறவர்கள் அநேகராயிருக்கிறார்கள்.

இவரோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறபடியினாலே, மாறிப்போகாத ஆசாரியத்துவமுள்ளவராயிருக்கிறார்.

எபிரெயர் 7:25

மேலும், தமது மூலமாய்த் தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக வேண்டுதல் செய்யும்படிக்கு அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராகையால் அவர்களை முற்றுமுடிய இரட்சிக்க வல்லவராயுமிருக்கிறார்.

இதிலிருந்து நமக்கு தெரியவருகிறது எந்த பாவமில்லாத பிரதான ஆசாரியரே நமக்கு வேண்டியதாயிருக்கிறது. உன்னதத்திலிருந்து வந்தவர் எல்லாரிலும் மேலானவர், எல்லாரிலும் உயர்ந்தவர், எல்லாரையும் பெரியவராயிருக்கிறார்.

 

எபிரெயர் 7:26

பரிசுத்தரும், குற்றமற்றவரும், மாசில்லாதவரும், பாவிகளுக்கு விலகினவரும், வானங்களிலும் உயர்ந்தவருமாயிருக்கிற இவ்விதமான பிரதான ஆசாரியரே நமக்கு ஏற்றவராயிருக்கிறார்.

நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மட்டுமே,  நம்முடைய பாவங்களை மன்னிக்கவும்,  பரலோகத்தில் நம்மை சேர்க்கவும் அதிகாரம் உள்ளவரா யிருக்கிறார்.

சகரியா 13:1, 2

அந்நாளிலே பாவத்தையும் அழுக்கையும் நீக்க, தாவீதின் குடும்பத்தாருக்கும் எருசலேமின் குடிகளுக்கும் திறக்கப்பட்ட ஒரு ஊற்று உண்டாயிருக்கும்.

அந்நாளிலே நான் விக்கிரகங்களின்பேரும் தேசத்தில் இராதபடிக்கு அழிப்பேன். அவைகள் இனி நினைக்கப்படுவதில்லை. தரிசனம் சொல்லுகிறவர்களையும், அசுத்த ஆவியையும் தேசத்திலிருந்து போய்விடவும் பண்ணுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். ஜெபிப்போம்.

 

கர்த்தர் ஆசீர்வதிப்பார்

 

-தொடர்ச்சி நாளை