தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 66: 14, 15

என் இக்கட்டில் நான் என் உதடுகளைத் திறந்து, என் வாயினால் சொல்லிய என் பொருத்தனைகளை உமக்குச் செலுத்துவேன்.

ஆட்டுக்கடாக்களின் நிணப்புகையுடனே கொழுமையானவைகளை உமக்குத் தகனபலியாக இடுவேன்; காளைகளையும் செம்மறியாட்டுக் கடாக்களையும் உமக்குப் பலியிடுவேன். (சேலா.)

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் ஆத்துமா கிருபை பெற்று வளர்ச்சியடைந்துக்கொண்டிருக்க வேண்டும்

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம், பரிசுத்தமில்லாமல் தேவனை தரிசிக்க முடியாது.  என்னவெனில் அப்படி அசுத்த வாழ்க்கையோடு ஒருவன் தேவனை தரிசிக்க நினைத்தால் கர்த்தர் அவனை பின்னிட்டு விழும் படி சத்துருவின் கையில் ஒப்புக்கொடுத்து விடுகிறார் என்பதனை குறித்து தியானித்தோம்.  ஆனால் 

அடுத்தபடியாக இந்த நாளில் தியானிக்கப்போகிற காரியம் என்னவென்றால் 

எண்ணாகமம் 15:1-5 

கர்த்தர் மோசேயை நோக்கி:

நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நீங்கள் குடியிருக்கும்படி நான் உங்களுக்குக் கொடுக்கும் தேசத்தில் நீங்கள் போய்ச் சேர்ந்தபின்பு,

விசேஷித்த பொருத்தனையாயாவது, உற்சாக பலியாயாவது, உங்கள் பண்டிகைகளில் செலுத்தும் பலியாயாவது, கர்த்தருக்கு மாடுகளிலாகிலும் ஆடுகளிலாகிலும் சர்வாங்க தகனபலியையாவது மற்ற யாதொரு பலியையாவது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனமாகப் பலியிடும்போது,

தன் படைப்பைக் கர்த்தருக்குச் செலுத்துகிறவன் சர்வாங்க தகனபலிக்காகிலும் மற்றப் பலிக்காகிலும் ஒரு ஆட்டுக்குட்டியுடனே, ஒரு மரக்காலிலே பத்தில் ஒரு பங்கும் காற்படி எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவின் போஜனபலியைச் செலுத்தக்கடவன்.

பானபலியாக காற்படி திராட்சரசத்தையும் படைக்கவேண்டும்.

இந்த வசனங்களில் கர்த்தர் மோசேயை நோக்கி, இஸ்ரவேல் புத்திரரிடத்தில் சொல்ல வேண்டிய காரியம் என்னவென்றால் நீங்கள் குடியிருக்கும்படி நான் உங்களுக்குக் கொடுக்கும் தேசத்தில் நீங்கள் போய் சேர்ந்த பின்பு விசேஷித்த பொருத்தனையாவது,  உற்சாக பலியாவது, உங்கள் பண்டிகைகளில் செலுத்தும் பலியாவது, கர்த்தருக்கு மாடுகளிலாகிலும், ஆடுகளிலாகிலும், சர்வாங்க தகன பலியையாவது, மற்ற யாதொரு பலியையாவது கர்த்தருக்கு சுகந்த வாசனையான தகன பலி செலுத்த வேண்டுமானால், தன் படைப்பைக் கர்த்தருக்கு செலுத்துகிறவன்  சர்வாங்க தகனபலிக்காகிலும், மற்ற பலிக்காகிலும், ஒரு ஆட்டுக்குட்டியுடனே, ஒரு மரக்காலில் பத்தில் ஒரு பங்கானதும், காற்படி எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவின்போஜன பலியை செலுத்தக் கடவன்.  

இவை என்னவெனில்  நாம் கர்த்தராகிய  இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்ககராக தேவனுடைய வார்த்தைகள் மூலம் ஏற்றுக்கொண்டு, அவருடைய இரத்தத்தால் சுத்திகரிக்கும் பொருட்டாக நம்முடைய முழு இருதயத்தையும், முழு ஆத்துமாவையும், முழு மனதையும், அவருடைய வார்த்த்தையாகிய இயேசுவோடுக்கூட உள்ளம் முழுமையும் உடைத்து, நம் பாவம், அக்கிரமம், மீறுதல் யாவற்றையும் அறிக்கை செய்யும் போது, அவருடைய இரத்தமாகிய அவருடைய வசனம் நம்மை கழுவி சுத்திகரிக்கும் போது, நமக்குள் ஒரு புதிய சிருஷ்டியாக, நம்முடைய ஆத்துமா கிறிஸ்துவின் ஜீவனோடு எழும்புகிறது.  அப்போது கிறிஸ்துவின் சரீரமாகிய சபையோடு சேர்க்கப்பட்டு, கர்த்தருக்கு அன்றாட பலி செலுத்துகிறவர்களாக இருந்தால் அது விசேஷித்த பொருத்தனையாக நாம் அவருக்கு ஸ்தோத்திர பலி உற்சாகத்தோடும், மற்றும் நம்மை பரிசுத்தபடுத்தின நாளை அனுதினம் நம் உள்ளத்தில் வைத்துக்கொண்டு, நம்முடைய ஆத்துமாவிற்கு தேவன் தருகிற வசனமாகிய அவருடைய மன்னாவினால், அதனோடுகூட தருகிற எண்ணெயும் சேர்ந்து மாவாக பிசைந்து நம் ஆத்துமாவை போஜனபலியாக ஒப்புக்கொடுக்க வேண்டும். 

அடுத்ததாக பானபலியாக காற்படி திராட்ச ரசத்தையும் படைக்க வேண்டும்.  அதென்னவெனில் நமக்கு கர்த்தர் தருகிற வசனம் கிருபை நிறைந்ததாக காணப்படுவதால், நாம் அதனை உள்ளத்தில் ஏற்றுக்கொள்ளும் போது நம்முடைய ஆத்துமாவில் உண்டாகிற வளர்ச்சியோடு, அதிலிருந்து கிருபையானது பெருகிக்கொண்டிருக்கும்.  அந்த கிருபை நம் உள்ளத்தில் பெருகுவதால், நாம் கர்த்தரின் சந்நிதியில் வரும் போது, நம் ஆத்துமாவை அதோடுக்கூட கர்த்தருக்கு ஒப்படைக்கும் போது தான் கர்த்தர் அதனை அங்கீகரிக்கிறார்.  

அவ்விதம் கர்த்தர் நம் ஆத்துமாவை அங்கீகரித்தால் மீண்டும் நம்முடைய ஆத்துமா வளர்ச்சியடையும்.  அதனை ஆட்டுகடா என்று கர்த்தர் சொல்கிறார்.  அவர்களை குறித்து கர்த்தருடைய வார்த்தையானது 

எண்ணாகமம் 15: 6-11  

ஆட்டுக்கடாவாயிருந்ததேயாகில், பத்தில் இரண்டு பங்கானதும், ஒரு படியில் மூன்றில் ஒரு பங்காகிய எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவின் போஜனபலியையும்,

பானபலியாக ஒரு படியில் மூன்றில் ஒரு பங்கு திராட்சரசத்தையும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான படைப்பாகப் படைக்கவேண்டும்.

நீ சர்வாங்க தகனபலிக்காகிலும், விசேஷித்த பொருத்தனை பலிக்காகிலும், சமாதான பலிக்காகிலும், ஒரு காளையைக் கர்த்தருக்குச் செலுத்த ஆயத்தப்படுத்தும்போது,

அதனோடே பத்தில் மூன்று பங்கானதும், அரைப்படி எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவின் போஜனபலியையும்,

பானபலியாக அரைப்படி திராட்சரசத்தையும், கர்த்தருக்குச் சுகந்தவாசனையான தகனபலியாகப் படைக்கவேண்டும்.

இந்தப்பிரகாரமாகவே ஒவ்வொரு மாட்டுக்காகிலும், ஆட்டுக்கடாவுக்காகிலும், செம்மறியாட்டுக் குட்டிக்காகிலும், வெள்ளாட்டுக் குட்டிக்காகிலும் செய்து படைக்கவேண்டும்.

இந்த வசனங்களில் கர்த்தருக்கு நம்மை அனுதினம் ஒப்படைக்கும் போது நம்முடைய ஆத்துமாவின் வளர்ச்சிக்கேற்ற பிரகாரம் கர்த்தருக்கு செலுத்த வேண்டிய பலிகளில் குறையில்லாதபடி செலுத்த வேண்டும்.  எப்படியெனில் ஆட்டு குட்டியாக இருக்கும் போது பத்தில் ஒரு பங்கானது, அதன் வளர்ச்சி ஆட்டுகடாவாகும் போது பத்தில் இரண்டு பங்கானதும், மற்றும் காற்படி எண்ணெயிலே பிசைந்ததுமாகிய மெல்லிய மாவு என்பது, ஆட்டு கடா என்று நம் ஆத்துமா வரும் போது, மூன்றில் ஒரு பங்கு எண்ணெயிலே பிசைந்ததுமாகிய மெல்லிய மாவின் போஜனபலியும்,  பானபலியாக ஒரு படியில் மூன்றில் ஒரு பங்கு திராட்சரசத்தையும் கர்த்தருக்கென்று சுகந்த வாசனையான பலியாக படைக்க வேண்டும்.   

ஆனால் அடுத்ததாக நம்முடைய வாழ்க்கையின் ஆத்தும வளர்ச்சியில் நம்மை தேவனுக்கு ஒப்புக்கொடுக்கும் போது நீ சர்வாங்க தகனபலிக்காகிலும், விசேஷித்த பொருத்தனை பலிக்காகிலும், சமாதான பலிக்காகிலும் காளையை கர்த்தருக்கு செலுத்த ஆயத்தபடுத்தும் போது, அது காளயானதால் பத்தில் மூன்று பங்கும், அரைபடி எண்ணெயிலே பிசைந்ததுமாகிய மெல்லிய மாவின் போஜன பலியையும், அதனால் கர்த்தருக்கு பானபலியாக அரைபடி திராட்ச ரசத்தையும் கர்த்தருக்கு சுகந்த வாசனையான தகனபலியாக படைக்க வேண்டும்.  

இவற்றின் கருத்துக்கள் எல்லாம் அனுதினம் நாம் தேவனுடைய கிருபையில் வளருவதும், தேவனுக்கு முன்பாக நம்மை ஒப்புக்கொடுக்கும் போது அதற்கேற்ற கிருபையோடு கூட நம்மை சமர்ப்பிக்க வேண்டும். இவ்விதம் நம் ஆத்தும வளர்ச்சியை நாம் ஒவ்வொருவரும் ஆராய்ந்தறிந்து ஒப்புக்கொடுப்போம்.  

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.