தேவனுக்கே மகிமையுண்டாவதாக

எபிரெயர் 12: 14

யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள்; பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் பரிசுத்தமில்லாமல் தேவனை தரிசிக்க நினைத்தால்,  நாம் பின்னிட்டு விழும்படி  கர்த்தர் நம்மை சத்துருவின் கையில் ஒப்புக்கொடுப்பார்

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம், நம்முடைய விசுவாச யாத்திரையில், ஆத்துமா ஜாதிகளின் கிரியைகளினால் அழிந்து போகாதபடி காத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் கர்த்தரை விசுவாசிக்காத ஜனங்கள் மேல் தேவ கோபம் ஏற்பட்டது.  கர்த்தர் வாதையினால் அவர்களை  அழித்தார்.  ஆனால் தேசத்தை சுற்றிப் பார்த்தவர்களில்  கர்த்தரைப்பற்றி நற்செய்தி சொன்னவர்கள் மாத்திரம் உயிரோடிருந்தார்கள்.   இந்த செய்தியை மோசே இஸ்ரவேல் புத்திரரிடம் அறிவித்தவுடன் ஜனங்கள் துக்கித்துக் கொண்டிருந்தார்கள்.  அப்பொழுது அதிகாலமே எழுந்திருந்து : நாங்கள் பாவஞ்செய்தோம், கர்த்தர் வாக்குதத்தம் பண்ணின இடத்திற்கு போவோம் என்று சொல்லி மலையின் உச்சியில் ஏற துணிந்தார்கள்.  ஆனால் மோசே அவர்களை நோக்கி;  நீங்கள் இப்படி கர்த்தரின் கட்டளைகளை மீறுகிறதென்ன? அது உங்களுக்கு வாய்க்காது.   

இதனை நாம் தியானிக்கும் போது எல்லாரும் மலையின் உச்சியில் ஏறமுடியாது.  காரணம் மலையின் உச்சியில் என்று சொல்லும் போது, அது மகா பரிசுத்தத்தை காட்டுகிறது.  மகா பரிசுத்தர் என்பது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து.  ஆனால் கர்த்தர் அந்த இடத்தில் மோசேயை திருஷ்டாந்தப்படுத்தி, அவனை சீனாய் மலையின் உச்சியில் அழைத்து  நமக்கு கிறிஸ்துவை திருஷ்டாந்தப்படுத்துகிறார்.  

அல்லாமலும் மோசே இஸ்ரவேல் புத்திரரிடம் நீங்கள் உங்கள் சத்துருக்களுக்கு முன்பாக முறிய அடிக்கபடாதபடிக்கு ஏறிப்போகாதிருங்கள்; கர்த்தர் உங்கள் நடுவில் இரார் என்கிறான்.  ஏனென்றால் நாம் பரிசுத்தமாகாமல் தேவனை தரிசிக்க முடியாது என்பதனை திருஷ்டாந்தப்படுத்தி மோசே இவ்விதம் கூறுகிறான்.  காரணம் பரிசுத்தமில்லாமல் தேவனை தரிசிக்க நினைத்தால் சத்துருக்களுக்கு முன்பாக முறிய அடிக்கப்படுவோம்.  

எப்படியெனில் தங்கள் உள்ளம் முழுமையாக ஒப்புக்கொடுக்காமல், தங்கள் வாழ்க்கையில்  தேவனோடு வாழவேண்டும் என்று நினைப்பவர்கள் நடுவே தேவன் கோபத்தோடு வருவார்.  அதெப்படியெனில் 

ஏசாயா 28 : 8-22

போஜனபீடங்களெல்லாம் வாந்தியினாலும் அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கிறது; சுத்தமான இடமில்லை.

அவர் யாருக்கு அறிவைப் போதிப்பார்? யாருக்கு உபதேசத்தை உணர்த்துவார்? பால்மறந்தவர்களுக்கும், முலை மறக்கப்பண்ணப்பட்டவர்களுக்குமே.

கற்பனையின்மேல் கற்பனையும், கற்பனையின்மேல் கற்பனையும், பிரமாணத்தின்மேல் பிரமாணமும், பிரமாணத்தின்மேல் பிரமாணமும், இங்கே கொஞ்சமும் அங்கே கொஞ்சமுமாம் என்கிறார்கள்.

பரியாச உதடுகளினாலும் அந்நிய பாஷையினாலும் இந்த ஜனத்தோடே பேசுவார்.

இதுவே நீங்கள் இளைத்தவனை இளைப்பாறப்பண்ணத்தக்க இளைப்பாறுதல்; இதுவே ஆறுதல் என்று அவர்களோடே அவர் சொன்னாலும் கேட்கமாட்டோம் என்கிறார்கள்.

ஆதலால் அவர்கள் போய், பின்னிட்டு விழுந்து, நொறுங்கும்படிக்கும், சிக்குண்டு பிடிபடும்படிக்கும், கர்த்தருடைய வார்த்தை அவர்களுக்குக் கற்பனையின்மேல் கற்பனையும், கற்பனையின்மேல் கற்பனையும், பிரமாணத்தின்மேல் பிரமாணமும், பிரமாணத்தின்மேல் பிரமாணமும், இங்கே கொஞ்சமும் அங்கே கொஞ்சமுமாக இருக்கும்.

ஆகையால் எருசலேமிலுள்ள இந்த ஜனத்தை ஆளுகிற நிந்தனைக்காரரே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.

நீங்கள்: மரணத்தோடே உடன்படிக்கையும், பாதாளத்தோடே ஒப்பந்தமும் பண்ணினோம்; வாதை பெருவெள்ளமாய்ப் புரண்டுவந்தாலும் எங்களை அணுகாது; நாங்கள் பொய்யை எங்களுக்கு அடைக்கலமாக்கி, மாயையின் மறைவிலே வந்து அடைந்தோம் என்கிறீர்களே.

ஆதலால் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறதாவது: இதோ, அஸ்திபாரமாக ஒரு கல்லை நான் சீயோனிலே வைக்கிறேன்; அது பரீட்சிக்கப்பட்டதும், விலையேறப்பெற்றதும், திட அஸ்திபாரமுள்ளதுமான மூலைக்கல்லாயிருக்கும்; விசுவாசிக்கிறவன் பதறான்.

நான் நியாயத்தை நூலும், நீதியைத் தூக்குநூலுமாக வைப்பேன்; பொய் என்னும் அடைக்கலத்தைக் கல்மழை அழித்துவிடும்; மறைவிடத்தை ஜலப்பிரவாகம் அடித்துக்கொண்டுபோகும்.

நீங்கள் மரணத்தோடு செய்த உடன்படிக்கை விருதாவாகி, நீங்கள் பாதாளத்தோடு செய்த ஒப்பந்தம் நிற்காதேபோம்; வாதை புரண்டுவரும்போது அதின்கீழ் மிதிக்கப்படுவீர்கள்.

அது புரண்டுவந்தமாத்திரத்தில் உங்களை அடித்துக்கொண்டுபோம்; அது நாள்தோறும் இரவும்பகலும் புரண்டுவரும்; அதைப்பற்றிப் பிறக்குஞ்செய்தியைக் கேட்பதும் சஞ்சலத்தை உண்டாக்கும்.

கால் நீட்டப் படுக்கையின் நீளம் போதாது; மூடிக்கொள்ளப் போர்வையின் அகலமும் போதாது.

கர்த்தர் தமது கிரியையாகிய அபூர்வமான கிரியையைச் செய்யவும், தமது வேலையாகிய அபூர்வமான வேலையை நிறைவேற்றவும், அவர் பெராத்சீம் மலையிலே எழும்பினதுபோல எழும்பி, கிபியோனின் பள்ளத்தாக்கில் கோபங்கொண்டதுபோல கோபங்கொள்வார்.

இப்பொழுதும் உங்கள் கட்டுகள் பலத்துப்போகாதபடிக்குப் பரியாசம்பண்ணாதிருங்கள்; தேசம் அனைத்தின்மேலும் நிர்ணயிக்கப்பட்ட சங்காரத்தின் செய்தியைச் சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவராலே கேள்விப்பட்டிருக்கிறேன்.

அல்லாமலும் மோசே இஸ்ரவேல் புத்திரரிடம் நீங்கள் உங்கள் சத்துருக்களுக்கு முன்பாக முறிய அடிக்கபடாதபடிக்கு ஏறிப்போகாதிருங்கள்; கர்த்தர் உங்கள் நடுவில் இரார் மேற்க்கூறிய வசனங்களை நாம் தியானிக்கும் போது எடுத்து்காட்டாக அநேகம் பேர் இயேசு கிறிஸ்துவை கர்த்தரென்று விசுவாசிப்பார்கள்.  ஆனால்  அவர் கூறிய சத்திய வசனம் கைக்கொள்ளமாட்டார்கள், எப்படியெனில் பொய்யான  அல்லது மாயையானவைகளை மனதில் பற்றி கொண்டு கிறிஸ்துவோட உடன்படிக்கை  எடுத்து இனி எந்த போராட்டம் வந்தாலும் நம்மை ஒன்றும் சேதப்படுத்துவதில்லை என்று தங்களுக்குள் நினைத்துக்கொண்டு  கர்த்தரை சேவிப்பார்கள்.  ஆனால் அவர்கள் எடுத்த உடன்படிக்கை நிற்காதே போம்.  

ஆனால் கர்த்தரின் வார்த்தை சொல்கிறது. இப்பொழுதும் கட்டுகள் பலத்துபோகாதபடிக்குப் பரியாசம்பண்ணாதிருங்கள்; தேசம் அனைத்தின் மேலும் நிர்ணயிக்கப்பட்ட சங்காரத்தின் செய்தியை சேனிகளின் கர்த்தராலே கேள்விப்பட்டிருக்கிறேன்.  செவிக்கொடுத்து என் சத்தத்தை கேளுங்கள்; நான் சொல்வதை கவனித்து கேளுங்கள் என்று கர்த்தர் சொல்கிறார்.  

பிரியமானவர்களே நாம் கர்த்தர் சொல்வது போல் நடப்போமானால் கர்த்தர் நம்மை கைவிடமாட்டார், மட்டுமல்ல நாம் தேவனை தரிசிக்க முடியும்.  இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்க முடியும்.  இல்லையென்றால் இந்நாளில் அநேகர் தேவனோடு பேசுகிறோம் என்று நினைத்து ஏமாந்து விடுகிறார்கள்.  ஆனால் அவர்கள் பரிகாசத்தோடு தேவனிடத்தில் பேசுகிறார்கள் என்று தெரியாமலே தேவனை தரிசிக்கிறோம் என்று நினைக்கிறார்கள்.  

அவற்றை தான் எண்ணாகமம் 14: 42-45

நீங்கள் உங்கள் சத்துருக்களுக்கு முன்பாக முறிய அடிக்கப்படாதபடிக்கு ஏறிப்போகாதிருங்கள்; கர்த்தர் உங்கள் நடுவில் இரார்.

அமலேக்கியரும் கானானியரும் அங்கே உங்களுக்குமுன்னே இருக்கிறார்கள்; பட்டயத்தினால் விழுவீர்கள்; நீங்கள் கர்த்தரை விட்டுப் பின்வாங்கினபடியால், கர்த்தர் உங்களோடே இருக்கமாட்டார் என்றான்.

ஆனாலும் அவர்கள் மலையின் உச்சியில் ஏறத் துணிந்தார்கள்; கர்த்தருடைய உடன்படிக்கையின் பெட்டியும் மோசேயும் பாளயத்தை விட்டுப் போகவில்லை.

அப்பொழுது அமலேக்கியரும் கானானியரும் அந்த மலையிலே இருந்து இறங்கிவந்து, அவர்களை முறிய அடித்து, அவர்களை ஓர்மாமட்டும் துரத்தினார்கள்.

வசனங்கள் என்ன சொல்கிறதென்றால் பரிசுத்தமான வாழ்க்கை வாழ்ந்தால் மட்டுமே நாம் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற்று நம்முடைய விசுவாச வாழ்க்கை வெற்றியடையும். இல்லாவிட்டால் மேற்க்கூறிய வசனங்கள் பிரகாரம் கர்த்தர் நம்மோடு இருக்க மாட்டார்.  கர்த்தர் நம்மோடு இல்லாமல் இருக்கிறதினால், நாம் மலையின் உச்சியில் ஏற துணிந்தால்  (உன்னதம்) அமலேக்கியரும், கானானியரும் அந்த மலையிலிருந்து இறங்கி வந்து முறிய அடித்து விசுவாச வாழ்க்கையில் பின்னிட்டு விழ செய்வார்கள்.  

அவ்விதம் நாம் ஆகாமல் இருக்கும் படியாக கர்த்தருடைய வார்த்தைக்கு செவிகொடுத்து அதன் பிரகாரம் ஒப்புக்கொடுப்போம்.  

கர்த்தர் ஆசீர்வதிப்பார். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.