தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 106: 47

எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நாங்கள் உமது பரிசுத்த நாமத்தைப் போற்றி, உம்மைத் துதிக்கிறதில் மேன்மைபாராட்டும்படி எங்களை இரட்சித்து, எங்களை ஜாதிகளிலிருந்து சேர்த்தருளும்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் ஒருபோதும் நம் ஆத்துமா அழியாதபடி காக்க வேண்டும்

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் உத்தமமாய் கர்த்தரை பின் பற்றினால் மட்டுமே கர்த்தர் நம் முன்னோர்களால் நமக்கு தந்த வாக்குத்தத்தை சுதந்தரிக்க முடியும் என்பதனை நாம் தியானித்தோம். மேலும் காலேப் அவற்றை சுதந்தரித்த விதத்தையும் நாம் தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது 

எண்ணாகமம் 14:25-34

அமலேக்கியரும் கானானியரும் பள்ளத்தாக்கிலே குடியிருக்கிறபடியினால், நாளைக்கு நீங்கள் திரும்பி சிவந்த சமுத்திரத்துக்குப் போகிற வழியாய் வனாந்தரத்துக்குப் பிரயாணம்பண்ணுங்கள் என்றார்.

பின்னும் கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:

எனக்கு விரோதமாய் முறுமுறுக்கிற இந்தப் பொல்லாத சபையாரை எதுவரைக்கும் பொறுப்பேன்? இஸ்ரவேல் புத்திரர் எனக்கு விரோதமாய் முறுமுறுக்கிறதைக் கேட்டேன்.

நீ அவர்களோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நீங்கள் என் செவிகள் கேட்கச் சொன்னபிரகாரம் உங்களுக்குச் செய்வேன் என்பதை என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தர் உரைக்கிறார்.

இந்த வனாந்தரத்தில் உங்கள் பிரேதங்கள் விழும்; உங்களில் இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்டவர்களாக எண்ணப்பட்டு, உங்கள் தொகைக்கு உட்பட்டவர்களும் எனக்கு விரோதமாய் முறுமுறுத்திருக்கிறவர்களுமாகிய அனைவரின் பிரேதங்களும் விழும்.

எப்புன்னேயின் குமாரன் காலேபும், நூனின் குமாரன் யோசுவாவும் தவிர, மற்றவர்களாகிய நீங்கள் நான் உங்களைக் குடியேற்றுவேன் என்று ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தில் பிரவேசிப்பதில்லை.

கொள்ளையாவார்கள் என்று நீங்கள் சொன்ன உங்கள் குழந்தைகளையோ நான் அதில் பிரவேசிக்கச் செய்வேன்; நீங்கள் அசட்டைப்பண்ணின தேசத்தை அவர்கள் கண்டறிவார்கள்.

உங்கள் பிரேதங்களோ இந்த வனாந்தரத்திலே விழும்.

அவைகள் வனாந்தரத்திலே விழுந்து தீருமட்டும், உங்கள் பிள்ளைகள் நாற்பதுவருஷம் வனாந்தரத்திலே திரிந்து, நீங்கள் சோரம்போன பாதகத்தைச் சுமப்பார்கள்.

நீங்கள் தேசத்தைச் சுற்றிப்பார்த்த நாற்பதுநாள் இலக்கத்தின்படியே, ஒவ்வொரு நாள் ஒவ்வொரு வருஷமாக, நீங்கள் நாற்பது வருஷம் உங்கள் அக்கிரமங்களைச் சுமந்து, என் உடன்படிக்கைக்கு வந்த மாறுதலை உணருவீர்கள்.

இதனை தியானிக்கும் போது கானானில் அமலேக்கியரும், கானானியரும் பள்ளத்தாக்கில் குடியிருக்கிற படியால்  கர்த்தர் மோசேயிடம் நீங்கள் திரும்பி நாளைக்கு சிவந்த சமுத்திரத்திற்கு போகிற வழியாய் வனாந்தரத்துக்கு பிரயாணம் பண்ணுங்கள் என்று சொல்கிறார்.  ஏனென்றால் கரத்தர்  அவ்விதம் சொல்வது அவர்கள் இந்த வித ஜாதிகளை கண்டு பயந்து யாத்திரையில் சோர்ந்து போவார்கள் என்று நினைத்து  அவ்விதம் சொல்கிறதை பார்க்கிறோம். 

மேலும் கர்த்தர் மோசேயிடம், இஸ்ரவேலர் எனக்கு விரோதமாய் முறுமுறுக்கிறதை கேட்டேன். இந்த பொல்லாத சபையாரை எதுவரைக்கும் பொறுப்பேன். நாமும் கர்த்தருக்கு விரோதமாக முறுமுறுத்தால் அவர்களை போல நாமும் பொல்லாத சபையார் தான் என்று கர்த்தர் சொல்கிறார். மேலும் கர்த்தர் அவர்களை குறித்து சொல்வது அவர்கள் கர்த்தரை குறித்து சொன்னபிரகாரம் செய்வேன் என்றும் வழியில் அவர்கள் பிரேதங்கள் விழும் என்றும் இருபது வயதிற்கு மேற்பட்டவர்கள் எண்ணப்பட்டு தொகைக்குட்பட்டவர்களாக எண்ணப்பட்டவர்களுமாகிய, கர்த்தருக்கு விரோதமாக முறுமுறுக்கிறவர்களுமாகிய அனைவரின் சவங்களும் விழும் என்கிறார்.  

பிரியமானவர்களே கர்த்தருக்கு விரோதமாக முறுமுறுத்தால் யாரும் தப்பித்துக்கொள்ள முடியாது என்பதை திருஷ்டாந்தப்படுத்துகிறார்.  வேத வசனங்களை நாம் தியானிக்கும் போது தேசத்தைச் சுற்றிபார்க்க போனவர்களில் விசுவாசித்தவர்கள் மட்டும் அதில் பிரவேசிப்பார்கள் என்று கர்த்தர் சொல்கிறார்.   மேலும் இஸ்ரவேல் புத்திரர் முறுமுறுத்ததின் காரணமாக  அவர்கள் யாரும் அதில் பிரவேசிப்பதில்லை என்றும் மற்றும் கொள்ளையாவார்கள் என்று  சொன்ன உங்கள் குழந்தைகளையோ அதில் பிரவேசிக்க செய்வேன் என்றும், நீங்கள் அசட்டை பண்ணின தேசத்தை உங்கள் பிள்ளைகள் கண்டறிவார்கள் என்று கர்த்தர் நம்மைக்குறித்து கூறுகிறார். 

ஆனால் கர்த்தரை அசட்டை பண்ணினவர்களின் பிரேதங்கள் வனாந்தரத்தில் விழும் என்றும், அவைகள் வனாந்தரத்தில் விழுந்து தீருமட்டும், பிள்ளைகள் அலைந்து திரிந்து, நீங்கள் சோரம்போன உங்கள் பாதகத்தை சுமப்பார்கள்.  பிரியமானவர்களே இவற்றை குறித்து நாம் தியானிக்கும் போது நாம் பண்ணின அக்கிரமம் , கர்த்தருடைய வார்த்தை எங்கெல்லாம் அசட்டை பண்ணினோமோ,  அதற்காக நம்முடைய ஆத்துமா விசுவாச ஜீவிதத்தில் விழுந்து போகும்படியாக  நம் பிள்ளைகளை சமாதானம் அடையவிடாத படி அலைந்து திரிந்து நாம் செய்த அக்கிரமத்தை சுமப்பார்கள் என்று கர்த்தர் சொல்கிறார்.  

ஆனால் கிறிஸ்துவோடு உண்மையான உடன்படிக்கை எடுப்போமானால் நாற்பது வருஷத்திற்கு, ஒவ்வொரு வருஷத்திற்கு ஒவ்வொரு நாளாக கிறிஸ்துவின் இரத்தம் நம்மை பாவம், மரணம், அக்கிரமம் இவற்றிலிருந்நு மீட்டு எடுக்கிறது.  அவ்விதம் கிறிஸ்துவின் இரத்தத்தால் மீண்டெடுக்கப்பட்டால் நம்முடைய வாழ்க்கையில் கர்த்தருடைய உடன்படிக்கைக்கு வந்த மாறுதலை உணர முடியும்.  மற்றும் இஸ்ரவேல் புத்திரரின் அக்கிரமக்காரருக்கு வரும் இடறலை குறித்து தேவன் திருஷ்டாந்தப்படுத்தியது 

எசேக்கியல் 4:1-17 

மனுபுத்திரனே, நீ ஒரு செங்கலை எடுத்து, அதை உன்முன் வைத்து, அதின்மேல் எருசலேம் நகரத்தை வரைந்து,

அதற்கு விரோதமாக முற்றிக்கைபோட்டு, அதற்கு விரோதமாகக் கொத்தளங்களைக் கட்டி, அதற்கு விரோதமாக மண்மேடுபோட்டு, அதற்கு விரோதமாக இராணுவங்களை நிறுத்தி, சுற்றிலும் அதற்கு விரோதமாக மதிலிடிக்கும் யந்திரங்களை வை.

மேலும் நீ ஒரு இருப்புச்சட்டியை வாங்கி, அதை உனக்கும் நகரத்துக்கும் நடுவாக இருப்புச்சுவராக்கி, அது முற்றிக்கையாய்க் கிடக்கும்படிக்கு உன் முகத்தை அதற்கு நேராய்த் திருப்பி, அதை முற்றிக்கைபோட்டுக்கொண்டிரு; இது இஸ்ரவேல் வம்சத்துக்கு அடையாளம்.

நீ உன் இடதுபக்கமாய் ஒருக்களித்துப் படுத்து, அதின்மேல் இஸ்ரவேல் வம்சத்தாரின் அக்கிரமத்தைச் சுமத்திக்கொள்; நீ அந்தப்பக்கமாய் ஒருக்களித்திருக்கும் நாட்களின் இலக்கத்தின்படியே அவர்களுடைய அக்கிரமத்தைச் சுமப்பாய்.

அவர்களுடைய அக்கிரமத்தின் வருஷங்களை உனக்கு நாட்கணக்காய் எண்ணக் கட்டளையிட்டேன்; முந்நூற்றுத்தொண்ணூறு நாட்கள்வரைக்கும் நீ இஸ்ரவேல் வம்சத்தாரின் அக்கிரமத்தைச் சுமக்கவேண்டும்.

நீ இவைகளை நிறைவேற்றினபின்பு, மறுபடியும் உன் வலதுபக்கமாய் ஒருக்களித்து, யூதா வம்சத்தாரின் அக்கிரமத்தை நாற்பதுநாள் வரைக்கும் சுமக்கவேண்டும்; ஒவ்வொரு வருஷத்துக்குப்பதிலாக ஒவ்வொரு நாளை உனக்குக் கட்டளையிட்டேன்.

நீ எருசலேமின் முற்றிக்கைக்கு நேராகத் திருப்பிய முகமும், திறந்த புயமுமாக இருந்து, அதற்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொல்லு.

இதோ, ந அதை முற்றிக்கைப்போடும் நாட்களை நிறைவேற்றுமட்டும் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்தில் புரளக்கூடாதபடிக்கு உன்னைக் கயிறுகளால் கட்டுவேன்.

நீ கோதுமையையும் வாற்கோதுமையையும் பெரும்பயற்றையும் சிறுபயற்றையும் தினையையும் கம்பையும் வாங்கி, அவைகளை ஒரு பாத்திரத்திலே போட்டு, அவைகளால் உனக்கு அப்பஞ்சுடுவாய்; நீ ஒருக்களித்துப் படுக்கும் நாட்களுடைய இலக்கத்தின்படியே முந்நூற்றுத்தொண்ணூறுநாள் அதில் எடுத்து சாப்பிடுவாயாக.

நீ சாப்பிடும் போஜனம், நாள் ஒன்றுக்கு இருபது சேக்கல் நிறையாயிருக்கும்; அப்படி நாளுக்குநாள் சாப்பிடுவாயாக.

தண்ணீரையும் அளவாய் ஹின் என்னும் படியில் ஆறிலொரு பங்கைக் குடிப்பாய்; அப்படி நாளுக்குநாள் குடிப்பாயாக.

அதை வாற்கோதுமை அடையைப்போல் சாப்பிடுவாயாக; அது மனுஷனிலிருந்து கழிந்த கஷ்டத்தின் வறட்டிகளால் அவர்கள் கண்களுக்கு முன்பாகச் சுடப்படுவதாக.

அதற்கு ஒத்தபடியே இஸ்ரவேல் புத்திரர், நான் அவர்களைத் துரத்துகிற புறஜாதிகளுக்குள்ளே தங்கள் அப்பத்தைத் தீட்டுள்ளதாகச் சாப்பிடுவார்கள் என்று கர்த்தர் சொன்னார்.

அப்பொழுது நான்: ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, இதோ, என் ஆத்துமா தீட்டுப்படவில்லை; தானாய்ச் செத்ததையாவது, பீறுண்டதையாவது நான் என் சிறுவயதுமுதல் இதுவரைக்கும் சாப்பிட்டதில்லை; அருவருப்பான இறைச்சி என் வாய்க்குட்பட்டதுமில்லை என்றேன்.

அப்பொழுது அவர் என்னை நோக்கி: பார், மனுஷ கஷ்டத்தின் வறட்டிக்குப் பதிலாக உனக்கு மாட்டுச்சாணி வறட்டியைக் கட்டளையிடுகிறேன்; அதினால் உன் அப்பத்தை சுடுவாயாக என்றார்.

பின்னும் அவர்: மனுபுத்திரனே, இதோ, அப்பமும் தண்ணீரும் அவர்களுக்குக் குறையவும், அவனவன் திடுக்கிடவும், அவர்கள் தங்கள் அக்கிரமத்திலே வாடிப்போகவும்,

நான் எருசலேமிலே அப்பம் என்னும் ஆதரவுகோலை முறிக்கிறேன்; அவர்கள் அப்பத்தை நிறையின்படியே விசாரத்தோடே சாப்பிட்டு, தண்ணீரை அளவின்படியே திடுக்கிடுதலோடே குடிப்பார்கள்.

வசனங்களில் கர்த்தர் நம்முடைய அக்கிரமத்துக்கு வரும் தண்டனை குறித்து எசேக்கியலோடு தரிசனத்தில் திருஷ்டாந்தப்படுத்தி விளக்குகிறார். ஆதலால் இவற்றை வாசித்து தியானிக்கிற அன்பானவர்களே நம்மளில் யாரும் நிர்விசாரமாக தேவனுடைய பிள்ளைகளிடத்தில், தேவனுடைய வார்த்தைகளைக் குறித்து முறுமுறுக்கக்கூடாது.  அவ்விதம் நாம் முறுமுறுத்தால் அது தேவனை முறுமுறுக்கிறோம்.  அதனால் கர்த்தர் கோபத்தோடு நம்முடைய ஆத்துமாவை அழிய செய்வது மட்டுமல்லாமல் , நம்முடைய பிள்ளைகளை பிசாசானவனுக்கு ஒப்புக்கொடுக்கிறார்.  அதனை எளிதில் அவர் மறக்கிறவர் அல்ல. ஏனென்றால் நாம் அவருடைய அடையாளத்தையும், மகிமையும் கண்டதால்,  துணிகரத்தோடு செய்கிறோமென்று நம்மை வலுமையாக தண்டிக்கிறவர்.  

ஆனால் நம் உள்ளம் உடைய வேண்டிய பிரகாரம் உடைந்து, நொறுங்கி, மீண்டும் அந்த பொல்லாத எண்ணங்கள் நம் உள்ளத்தில் வராமல் இருக்கும் என்று கர்த்தர் நம்மை சோதித்து அறிந்து,  பின்பு நாம் அவரோடு எடுக்கிற உடன்படிக்கையின் மாறுதலை காணமுடியும்.  

இவ்விதம் நம்மில் யாராவது தண்டிக்கப்பட்டுக்கொண்டிருப்போமானால் மேற்கூறிய பிரகாரம் ஒப்புக்கொடுப்போம்.  

கர்த்தர் ஆசீர்வதிப்பார். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.