தேவன் உலாவுதல்

சகோதரி. பி.கிறிஸ்டோபர் வாசினி
May 04, 2020


கர்த்தருக்குள் பிரியமானவர்களே,

கர்த்தர் எல்லா ஜாதிகளையும் சிதற பண்ணின காரணம் என்னவென்றால் மீண்டும் ஜனங்களுடைய பாவம் பெருகிக் கொண்டே இருந்தது.

கர்த்தர் சகரியாவிடத்தில் பேசின வார்த்தை,

சகரியா 1:3, 4

ஆகையால் நீ அவர்களை நோக்கி: சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்: என்னிடத்தில் திரும்புங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; அப்பொழுது நான் உங்களிடத்துக்குத் திரும்புவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

உங்கள் பிதாக்களைப் போலிராதேயுங்கள்; முந்தின தீர்க்கதரிசிகள் அவர்களை நோக்கி: உங்கள் பொல்லாத வழிகளையும் உங்கள் பொல்லாத கிரியைகளையும் விட்டுத் திரும்புங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்று கூப்பிட்டார்கள்; ஆனாலும் எனக்குச் செவி கொடாமலும் என்னைக் கவனியாமலும் போனார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

இந்த வார்த்தை சகரியாவுக்கு தரியு  அரசாண்ட இரண்டாம் வருஷம் எட்டாம் மாதத்தில் கிடைத்தது.

 அதன் பின்பு பதினொராம் மாதத்தில் கர்த்தருடைய வார்த்தை தீர்க்கதரிசிக்கு உண்டாயிற்று.

அதே நாளில் சிவப்பு குதிரையின் மேல் ஏறியிருந்த புருஷனையும், அவர்  மிருதுச்  செடிகளுக்குள் நிற்பதாகவும் அவருக்கு பின்னாலே  சிவப்பும் மங்கின  நிறமும்வெண்மையுமான  குதிரைகள் இருந்தன.

மிருது  செடிகளுக்குள்ளே நின்ற  புருஷன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துஅவர் சொல்கிறார் அவருக்கு பின்னாக  நின்றவர்கள் பூமியெங்கும் சுற்றிப்  பார்க்க கர்த்தர்  அனுப்பினவர்கள்.

சகரியா 1:11

பின்பு அவர்கள் மிருதுச்செடிகளுக்குள்ளே நின்ற கர்த்தருடைய தூதனை நோக்கி: நாங்கள் பூமியெங்கும் சுற்றிப்பார்த்தோம்: இதோ, பூமி முழுவதும் அமைதலும் அமரிக்கையுமாய் இருக்கிறது என்றார்கள்.

 கர்த்தருடைய தூதன் சகரியாவை நோக்கி சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால் நான்  எருசலேமுக்காகவும் சீயோனுக்காகவும்  மகா வைராக்கியம் கொண்டிருக்கிறேன்.

 

சகரியா 1:15, 16

நான் கொஞ்சங் கோபங்கொண்டிருந்தபோது அவர்கள் தங்கள் கேட்டை அதிகரிக்கத் தேடினபடியினால், சுகமாய் வாழுகிற புறஜாதிகள்பேரில் நான் கடுங்கோபங்கொண்டேன்.

ஆகையால் மனஉருக்கத்தோடே எருசலேமினிடத்தில் திரும்பினேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; என் ஆலயம் அதிலே கட்டப்படும்; எருசலேமின்மேல் அளவுநூல் பிடிக்கப்படும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்று கூறு என்றார்.

 கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தான் எருசலேம் என்றும் அந்த எருசலேமின் ஆலயம் கட்டப்படும் என்பதற்காக நம்முடைய தேவனாகிய கர்த்தர் இவ்விதமாக கூறுகிறதைப் பார்க்கிறோம். அதைத்தான்,

சகரியா 3:1-5

அவர் பிரதான ஆசாரியனாகிய யோசுவாவை எனக்குக் காண்பித்தார்; அவன் கர்த்தருடைய தூதனுக்கு முன்பாக நின்றான்; சாத்தான் அவனுக்கு விரோதஞ் செய்ய அவன் வலது பக்கத்திலே நின்றான்.

அப்பொழுது கர்த்தர் சாத்தானை நோக்கி: கர்த்தர் உன்னைக் கடிந்து கொள்வாராக; சாத்தானே, எருசலேமைத் தெரிந்துகொண்ட கர்த்தர் உன்னைக் கடிந்து கொள்வாராக ; இவன் அக்கினியினின்று தப்புவிக்கப்பட்ட கொள்ளி அல்லவா என்றார்.

யோசுவாவோவெனில் அழுக்கு வஸ்திரம் தரித்தவனாய்த் தூதனுக்கு முன்பாக நின்றிருந்தான்.

அவர் தமக்கு முன்பாக நிற்கிறவர்களை நோக்கி: இவன்மேல் இருக்கிற அழுக்கு வஸ்திரங்களைக் களைந்துபோடுங்கள் என்றார்;பின்பு அவனை நோக்கி: பார், நான் உன் அக்கிரமத்தை உன்னிலிருந்து நீங்கச் செய்து, உனக்குச் சிறந்த வஸ்திரங்களைத் தரிப்பித்தேன் என்றார்.

அவன் சிரசின்மேல் சுத்தமான பாகையை வைப்பார்களாக என்றார்; அப்பொழுது சுத்தமான பாகையை அவன் சிரசின்மேல் வைத்து, அவனுக்கு வஸ்திரங்களைத் தரிப்பித்தார்கள்; கர்த்தருடைய தூதன் அங்கே நின்றார்.

நியாயப்பிரமாணமானது பலவீனமான மனுஷர்களை பிரதான ஆசாரியராக ஏற்படுத்துகிறது; நியாயப்பிரமாணத்திற்கு பின்பு உண்டான ஆணையோடே  விளங்கிய வசனமோ என்றென்றைக்கும் பூரணரான குமாரனை  ஏற்படுத்துகிறது.

 

பூரணரான குமாரன்  வெளிப்படுவதற்கு அடையாளமாக யோசுவாவுக்கு வஸ்திரங்களை தரிப்பிக்கும்போதுகர்த்தருடைய தூதன் அங்கே நிற்கிறார்.

சகரியா 3:6-9

கர்த்தருடைய தூதன் யோசுவாவுக்குச் சாட்சியாக:

சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்: நீ என் வழிகளில் நடந்து என் காவலைக் காத்தால், நீ என் ஆலயத்தில் நியாயம் விசாரிப்பாய்: என் பிரகாரங்களையும் காவல்காப்பாய்; இங்கே நிற்கிறவர்களுக்குள்ளே உலாவுகிறதற்கு இடம் நான் உனக்குக் கட்டளையிடுவேன்.

இப்போதும்பிரதான ஆசாரியனாகிய  யோசுவாவே, நீ கேள்; உனக்கு முன்பாக உட்கார்ந்திருக்கிற உன் தோழரும் கேட்கக்கடவர்கள்; இவர்கள் அடையாளமாயிருக்கிற புருஷர்; இதோ, கிளை என்னப்பட்டவராகிய என் தாசனை நான் வரப்பண்ணுவேன்.

இதோ, நான் யோசுவாசுக்கு முன்பாக வைத்த கல்; இந்த ஒரே கல்லின் மேல் ஏழு கண்களும் வைக்கப்பட்டிருக்கிறது; இதோ, நான் அதின் சித்திர வேலையை நிறைவேற்றி, இந்த தேசத்தில் அக்கிரமத்தை ஒரே நாளிலே நீக்கிப்போடுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

அதைத்தான் கிறிஸ்து திராட்சைச் செடி என்பதை விளக்குவதற்க்காக,

சகரியா 3:10                                                                                                                                                                              

அந்நாளிலே நீங்கள் ஒருவரையொருவர் திராட்சச்செடியின் கீழும் அத்தி மரத்தின்கீழும் வரவழைப்பீர்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் ஆசீர்வதிப்பாராக.

 

-தொடர்ச்சி நாளை.