தேவனுக்கே மகிமையுண்டாவதாக

நீதிமொழிகள் 20: 7

நீதிமான் தன் உத்தமத்திலே நடக்கிறான்; அவனுக்குப்பிறகு அவன் பிள்ளைகளும் பாக்கியவான்களாயிருப்பார்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் எவ்விதத்தில் நித்திய ஜீவன் பெற்றுக்கொள்ள முடியும் என்பதன் திருஷ்டாந்தம்

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம், நம்முடைய தேவனை முழுமனதோடு விசுவாசியாமல் இருந்தால் கொள்ளை நோயினால் வாதித்தார் என்று தியானித்தோம்.  ஆனால் இஸ்ரவேல் ஜனங்களுடைய அக்கிரமத்துக்காக மோசே கர்த்தரிடத்தில் மன்றாடின போது, கர்த்தர் ஜனங்களை மன்னித்து,  பூமியெல்லாம் கர்த்தருடைய மகிமையினால் நிறைந்திருக்கும் என்று சொல்கிறார்.  

அல்லாமலும் இந்த நாளில் தியானிப்பது 

எண்ணாகமம்  14: 22-24

என் மகிமையையும், நான் எகிப்திலும் வனாந்தரத்திலும் செய்த என் அடையாளங்களையும் கண்டிருந்தும், என் சத்தத்துக்குச் செவிகொடாமல், இதனோடே பத்துமுறை என்னைப் பரீட்சைபார்த்த மனிதரில் ஒருவரும்,

அவர்கள் பிதாக்களுக்கு நான் ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தைக் காணமாட்டார்கள்; எனக்குக் கோபம் உண்டாக்கினவர்களில் ஒருவரும் அதைக் காணமாட்டார்கள்.

என்னுடைய தாசனாகிய காலேப் வேறே ஆவியை உடையவனாயிருக்கிறபடியினாலும், உத்தமமாய் என்னைப் பின்பற்றிவந்தபடியினாலும், அவன் போய்வந்த தேசத்திலே அவனைச் சேரப்பண்ணுவேன்; அவன் சந்ததியார் அதைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்.

மேற்கூறிய கருத்துக்கள் என்னவெனில் எகிப்திலும் வனாந்தரத்திலும் கர்த்தருடைய மகிமையையும், அவர் செய்த அடையாளங்களையும் கண்டிருந்தும் அவருடைய சத்தத்துக்கு செவிக்கொடாமலும், அல்லாமலும் அவரை பத்துமுறை பரீட்சிப்பார்த்த மனிதரில் ஒருவரும், பிதாக்களுக்கு தருவேன் என்று ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தை காணமாட்டார்கள் என்றும் எனக்கு கோபம் உண்டாக்கினவர்களில் யாரும் அதனை காணமாட்டார்கள் என்றும் மேலும் என் தாசனாகிய  காலேப் வேறே ஆவியை உடையவனாயிருக்கிறப்படியால் , உத்தமமாய் என்னை பின்பற்றி வந்த படியினாலும், அவன் போய் வந்த தேசத்திலே அவனை சேரப்பண்ணுவேன், அவன் சந்ததியார் அதை சுதந்தரிப்பார்கள் என்றார். 

இவை பரலோக ராஜ்யத்தை சுதந்தரிப்பதை  குறித்து கர்த்தர் திருஷ்டாந்தபடுத்திருக்கிறார்.  அவ்விதம் சுதந்தரிக்க  வேண்டுவதற்காக கரத்தர்  நம்முடைய வாழ்க்கையில் அடையாளங்களையும், அவருடைய மகிமையையும் காண்பிக்கிறர்.  அவ்விதம் காண்பித்தாலும் அநேகர் அவரை விசுவாசிக்காமல், அவரை பரீட்சைப்பார்த்தார்கள்.  அதனால் கர்த்தர் கோபத்தோடு பத்துமுறை பரீட்சை பார்த்தவர்களில் யாரும் அந்த தேசத்தை காணமாட்டார்கள்.  அதனால் உண்மையும், நேர்மையுமாய் கர்த்தரை பின்பற்றுகிறவர்கள் தான் அதை சுதந்தரிக்க முடியும்.  

அதனைக்குறித்து சங்கீதம் 25: 20-22

என் ஆத்துமாவைக் காப்பாற்றி என்னை விடுவியும்; நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்; உம்மை நம்பியிருக்கிறேன்.

உத்தமமும் நேர்மையும் என்னைக் காக்கக்கடவது; நான் உமக்குக் காத்திருக்கிறேன்.

தேவனே, இஸ்ரவேலை அவனுடைய எல்லா இக்கட்டுகளுக்கும் நீங்கலாக்கி மீட்டுவிடும்.

வசனங்களில் நம்முடைய ஆத்துமாவை ஜீவனில் பிரவேசிக்கக்கூடாதபடி நமக்கு இருக்கிற இக்கட்டிலிருந்து நாம்  நீங்கலாகி மீட்கப்பட வேண்டுமானால் உத்தமமும் நேர்மையுமாய் நாம் கர்த்தரை பின்பற்ற வேண்டும்.  நம்முடைய உள்ளத்தில்  உண்மையும், நேர்மையும் தான் நம்மை அந்த தேசத்தில் சேர பண்ணும். ஆனால் கர்த்தர் காலேபை குறித்து சொல்கிறது என்னவென்றால் 

யோசுவா 14: 6-15

அப்பொழுது யூதாவின் புத்திரர் கில்காலிலே யோசுவாவினிடத்தில் வந்தார்கள்; கேனாசியனான எப்புன்னேயின் குமாரனாகிய காலேப் அவனை நோக்கி: காதேஸ்பர்னேயாவிலே கர்த்தர் என்னைக்குறித்தும் உம்மைக்குறித்தும் தேவனுடைய மனுஷனாகிய மோசேயோடே சொன்ன வார்த்தையை நீர் அறிவீர்.

தேசத்தை வேவுபார்க்கக் கர்த்தரின் தாசனாகிய மோசே என்னைக் காதேஸ்பர்னேயாவிலிருந்து அனுப்புகிறபோது, எனக்கு நாற்பது வயதாயிருந்தது; என் இருதயத்திலுள்ளபடியே அவருக்கு மறுசெய்தி கொண்டுவந்தேன்.

ஆனாலும் என்னோடேகூட வந்த என் சகோதரர் ஜனத்தின் இருதயத்தைக் கரையப்பண்ணினார்கள்; நானோ என் தேவனாகிய கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றினேன்.

அந்நாளிலே மோசே: நீ என் தேவனாகிய கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றினபடியினால், உன் கால் மிதித்த தேசம் உனக்கும் உன்பிள்ளைகளுக்கும் என்றைக்கும் சுதந்தரமாயிருக்கக்கடவது என்று சொல்லி ஆணையிட்டார்.

இப்போதும், இதோ, கர்த்தர் சொன்னபடியே என்னை உயிரோடே காத்தார்; இஸ்ரவேலர் வனாந்தரத்தில் சஞ்சரிக்கையில், கர்த்தர் அந்த வார்த்தையை மோசேயோடே சொல்லி இப்போது நாற்பத்தைந்து வருஷமாயிற்று; இதோ, இன்று நான் எண்பத்தைந்து வயதுள்ளவன்.

மோசே என்னை அனுப்புகிற நாளில், எனக்கு இருந்த அந்தப் பெலன் இந்நாள்வரைக்கும் எனக்கு இருக்கிறது; யுத்தத்துக்குப் போக்கும் வரத்துமாயிருக்கிறதற்கு அப்போது எனக்கு இருந்த பெலன் இப்போதும் எனக்கு இருக்கிறது.

ஆகையால் கர்த்தர் அந்நாளிலே சொன்ன இந்த மலைநாட்டை எனக்குத் தாரும்; அங்கே ஏனாக்கியரும், அரணிப்பான பெரிய பட்டணங்களும் உண்டென்று நீர் அந்நாளிலே கேள்விப்பட்டீரே; கர்த்தர் என்னோடிருப்பாரானால், கர்த்தர் சொன்னபடி, அவர்களைத் துரத்திவிடுவேன் என்றான்.

அப்பொழுது யோசுவா: எப்புன்னேயின் குமாரனாகிய காலேபை ஆசீர்வதித்து, எபிரோனை அவனுக்குச் சுதந்தரமாகக் கொடுத்தான்.

ஆதலால் கேனாசியனான எப்புன்னேயின் குமாரனாகிய காலேப் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றினபடியினால், இந்நாள்மட்டும் இருக்கிறபடி, எபிரோன் அவனுக்குச் சுதந்தரமாயிற்று.

முன்னே எபிரோனுக்குக் கீரியாத் அர்பா என்று பேரிருந்தது; அர்பா என்பவன் ஏனாக்கியருக்குள்ளே பெரிய மனுஷனாயிருந்தான்; யுத்தம் ஓய்ந்ததினால் தேசம் அமைதலாயிருந்தது.

மேற்கூறிய வார்த்தைகள் பிரகாரம் கரத்தர் காலேபை குறித்து வேறே ஆவியை உடையவன் என்று சொன்னது, காரணம் அவன் உத்தமமாய் கர்த்தரை பின்பற்றிவந்தபடியால், மோசே காலேபிடம் உன் கால் மிதித்த தேசம் உனக்கும், உனக்கு பின் வரும் உன் சந்ததிக்கும், என்றென்றைக்கும் சுதந்தரமாயிருக்கக்கடவது என்று சொல்லி ஆணையிட்டார். உத்தமமாய் நாம் கர்த்தரை பின்பற்றினால் நம்முடைய முதிர்வயதிலும் கர்த்தர் நம்மை கைவிடாதபடி அவர் தந்த வாக்கை நாம் சுதந்தரிக்க முடியும்.  

என்னவென்றால் காலேப் நாற்பது வயதாயிருக்கும் போது தேசத்தை வேவு பார்க்கும்படி மோசே அனுப்புகிறான்.  ஆனால் எண்பத்தைந்து வயதாகும் போது, யோசுவாவுடைய காலத்தில்  கர்த்தர் மோசே மூலம் சொன்ன அந்த நாட்டை சுதந்தரிக்கிறான். அந்த பட்டணத்தில் இருந்த ஏனாக்கியரை துரத்தி அதனை சுதந்தரிக்கிறான்.  ஆனால் நாற்பதாவது வயதில் இருந்த பெலன் அவனிடத்தில் குறைந்துபோக வில்லை.  காரணம் அவன் உத்தம இருதயத்தோடு கர்த்தரை விசுவாசித்து பின்பற்றினான்.  அதனால் அவனுக்குள் ஒரு விசேஷித்த ஆவியை குறித்து கர்த்தர் வேறே ஆவி என்று சொல்கிறார்.  

பிரியமானவர்களே நாமும் தேவ ஆவியின்  பெலன் தரித்துக்காணப்பட்டால் நம்மையும் கர்த்தர் முதிர் வயதிலும் கைவிடாதிருப்பார். அந்த பெலனை குறித்து 

சங்கீதம் 92:10-15 

என் கொம்பைக் காண்டாமிருகத்தின் கொம்பைப்போல உயர்த்துவீர்; புது எண்ணெயால் அபிஷேகம்பண்ணப்படுகிறேன்.

என் சத்துருக்களுக்கு நேரிடுவதை என் கண் காணும்; எனக்கு விரோதமாய் எழும்புகிற துன்மார்க்கருக்கு நேரிடுவதை என் காது கேட்கும்.

நீதிமான் பனையைப்போல் செழித்து, லீபனோனிலுள்ள கேதுருவைப்போல் வளருவான்.

கர்த்தருடைய ஆலயத்திலே நாட்டப்பட்டவர்கள் எங்கள் தேவனுடைய பிராகாரங்களில் செழித்திருப்பார்கள்.

கர்த்தர் உத்தமரென்றும், என் கன்மலையாகிய அவரிடத்தில் அநீதியில்லையென்றும், விளங்கப்பண்ணும்படி,

அவர்கள் முதிர்வயதிலும் கனி தந்து, புஷ்டியும் பசுமையுமாயிருப்பார்கள்.

இந்த வசனங்கள் நாம் கைக்கொண்டு  அவருடைய புது எண்ணெயால் அபிஷேகம் பண்ணபட்டு, தேவபெலன் தரித்து வாழும் படி ஒப்புக்கொடுப்போம்.

கர்த்தர் ஆசீர்வதிப்பார். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.