தேவனுக்கே மகிமையுண்டாவதாக

ஏசாயா 66: 18

நான் அவர்கள் கிரியைகளையும், அவர்கள் நினைவுகளையும் அறிந்திருக்கிறேன்; நான் சகல ஜாதியாரையும் பாஷைக்காரரையுங் கூட்டிச்சேர்க்குங்காலம் வரும்; அவர்கள் வந்து என் மகிமையைக் காண்பார்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம், தேவன்  பேரில் முழுமையான விசுவாசம் வைக்காமல் இருப்போமானால் கொள்ளை நோயினால் வாதிக்கிறார்

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் நம்முடைய விசுவாச யாத்திரையில் எதற்காகவும், பொல்லாதவர்களை பேரில் முழுமையான விசுவாசம் வைக்காமல் இருப்போமானால் கொள்ளை நோயினால் வாதிக்கிறார்  குறித்து  பயப்படாமல் இருந்தால் விசுவாசத்தோடு கானானாகிய பாலும் னும் ஓடுகிற  கிறிஸ்துவாகிய நித்திய ஜீவனை சுதந்தரிக்க முடியும்  என்பதனை குறித்து தியானித்தோம்.   

ஆனால் அடுத்ததாக நாம் தியானிக்கபோகிற காரியம் என்னவென்றால் 

எண்ணாகமம் 14: 12- 16

நான் அவர்களைக் கொள்ளைநோயினால் வாதித்து, சுதந்தரத்துக்குப் புறம்பாக்கிப்போட்டு, அவர்களைப்பார்க்கிலும் உன்னைப் பெரிதும் பலத்ததுமான ஜாதியாக்குவேன் என்றார்.

மோசே கர்த்தரை நோக்கி: எகிப்தியர் இதைக் கேட்பார்கள்; அவர்கள் நடுவிலிருந்து உம்முடைய வல்லமையினாலே இந்த ஜனங்களைக் கொண்டுவந்தீரே.

கர்த்தராகிய நீர் இந்த ஜனங்களின் நடுவே இருக்கிறதையும், கர்த்தராகிய நீர் முகமுகமாய்த் தரிசனமாகிறதையும், உம்முடைய மேகம் இவர்கள்மேல் நிற்கிறதையும், பகலில் மேகத்தூணிலும், இரவில் அக்கினித்தூணிலும், நீர் இவர்களுக்கு முன் செல்லுகிறதையும் கேட்டிருக்கிறார்கள்; இந்த தேசத்தின் குடிகளுக்கும் சொல்லுவார்கள்.

ஒரே மனிதனைக் கொல்லுகிறதுபோல இந்த ஜனங்களையெல்லாம் நீர் கொல்வீரானால், அப்பொழுது உம்முடைய கீர்த்தியைக் கேட்டிருக்கும் புறஜாதியார்:

கர்த்தர் அந்த ஜனங்களுக்குக் கொடுப்போம் என்று ஆணையிட்டிருந்த தேசத்திலே அவர்களைக் கொண்டுபோய் விடக் கூடாதேபோனபடியினால், அவர்களை வனாந்தரத்திலே கொன்றுபோட்டார் என்பார்களே.

மேற்க்கூறிய கருத்து என்னவெனில் கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக அடையாளங்களை காட்டியும், அவரை அவர்கள் விசுவாசியாமல் இருக்கிறவர்களை கர்த்தர் கொள்ளை நோயினால் வாதித்து, அவருடைய சுதந்தரத்துக்கு புறம்பாக்கி போடுகிறேன் என்று சொல்கிறார்.  இதிலிருந்து நாம் தெரிய வேண்டுவது என்னவென்றால் கொள்ளை நோய் நம்முடைய  தேசத்தில் வந்தாலும், நமக்கு வந்தாலும்  அது கர்த்தரை விசுவாசிக்க வேண்டிய விதத்தில் நாம் விசுவாசிக்காமல் இருக்கிறதினால்  நமக்கு அந்த நோயை நமக்குள் அனுப்புகிறார்.  

ஆனால் கர்த்தருடைய சித்தம் செய்து அவரை விசுவாசித்த மோசேயை நோக்கி கர்த்தர் சொல்வது என்னவென்றால்  விசுவாசியாதவர்களை கொள்ளை நோயினால் வாதித்து,அவர்களை பார்க்கிலும், உன்னை பலத்த ஜாதியாக்குவேன் என்றார்.  இதனை மோசே கேட்டவுடனே கர்த்தரிடம் இதனை எகிப்தியர்கள் கேட்பார்கள், அவர்கள் நடுவிலிருந்து இவர்களை உம்முடைய வல்லமையினாலே இந்த ஜனங்களை கொண்டு வந்தீரே, கர்த்தராகிய நீர் இந்த ஜனங்களின் நடுவே இருக்கிறதையும், நீர் முகமுகமாய் தரிசனமாகிறதையும், உம்முடைய  மேகம் இவர்கள் மேல் நிற்கிறதையும், பகலில் மேகத்தூணிலும், இரவில் அக்கினி தூணிலும், நீர் இவர்களுக்கு முன் செல்லுகிறதையும் கேட்டிருக்கிறார்கள்; இந்த தேசத்தின் குடிகளுக்கும் சொல்லுவார்கள். அல்லாமலும் ஒரே மனுஷனை கொல்லுகிறது போல இந்த ஜனங்களையெல்லாம் கொல்வீரானால் , உம்முடைய கீர்த்தியை கேட்டிருக்கும்  புறஜாதியார்  கர்த்தர் ஜனங்களுக்கு கொடுப்போம் என்று வாக்குக்கொடுத்த தேசத்துக்கு கொண்டுப்போய் சேர்க்க கூடாதே போனபடியால் அவர்களை வனாந்தரத்திலே கொன்று போட்டார் என்று சொல்வார்களே என்று சொல்லி 

எண்ணாகமம் 14:17-20 ல் கூறியப்பிரகாரம் மன்னிப்புக்கேட்டு விண்ணப்பம் பண்ணுகிறான்.  

ஆகையால் கர்த்தர் நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையுமுள்ளவர் என்றும், அக்கிரமத்தையும் மீறுதலையும் மன்னிக்கிறவர் என்றும், குற்றமுள்ளவர்களைக் குற்றமற்றவர்களாக விடாமல், பிதாக்கள் செய்த அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவர் என்றும், நீர் சொல்லியிருக்கிறபடியே,

என் ஆண்டவருடைய வல்லமை பெரிதாய் விளங்குவதாக.

உமது கிருபையினுடைய மகத்துவத்தின்படியேயும், எகிப்தை விட்டதுமுதல் இந்நாள்வரைக்கும் இந்த ஜனங்களுக்கு மன்னித்துவந்ததின்படியேயும், இந்த ஜனங்களின் அக்கிரமத்தை மன்னித்தருளும் என்றான்.

அப்பொழுது கர்த்தர்: உன் வார்த்தையின்படியே மன்னித்தேன்.

அப்போது கர்த்தர் மோசே தேவனுடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவனாயிருந்ததால், கர்த்தர் அவன் விண்ணப்பத்தை  கேட்டு , உன் வார்த்தையின் படியே மன்னித்தேன் என்கிறார்.  அவ்விதம் கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரின் அக்கிரமத்தை மன்னித்து பூமியெல்லாம் கர்த்தருடைய மகிமையினால் நிறைந்திருக்கும் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்கிறேன் என்கிறார்.  

பிரியமானவர்களே இந்த நாட்களில் நாம்  செய்கிற  அக்கிரமத்தை கர்த்தர் மன்னிக்கும்படியாக நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, நமக்காக பரிந்து பேசுகிறவராகவும், மற்றும் கர்த்தர் கிறிஸ்துவுக்குக் கொடுத்த மகிமையை நமக்கு தந்து அவரோடுக்கூட இருக்கவும் செய்கிறார்.  அவற்றைக்குறித்து பூமியெல்லாம் கர்த்தருடைய மகிமையால் நிறைந்திருக்கும் என்று சொல்கிறார். அவற்றைக்குறித்து சொல்கிறார் 

யோவான் 17: 22 – 24 

நாம் ஒன்றாயிருக்கிறதுபோல அவர்களும் ஒன்றாயிருக்கும்படி, நீர் எனக்குத்தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்.

ஒருமைப்பாட்டில் அவர்கள் தேறினவர்களாயிருக்கும்படிக்கும், என்னை நீர் அனுப்பினதையும், நீர் என்னில் அன்பாயிருக்கிறதுபோல அவர்களிலும் அன்பாயிருக்கிறதையும் உலகம் அறியும்படிக்கும், நான் அவர்களிலும் நீர் என்னிலும் இருக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்.

பிதாவே, உலகத்தோற்றத்துக்கு முன் நீர் என்னில் அன்பாயிருந்தபடியினால், நீர் எனக்குத் தந்த என்னுடைய மகிமையை நீர் எனக்குத் தந்தவர்கள் காணும்படியாக, நான் எங்கே இருக்கிறேனோ அங்கே அவர்களும் என்னுடனேகூட இருக்க விரும்புகிறேன்.

மேலும் கர்த்தர் மோசேயிடம் சொன்னதை கிறிஸ்துவில் நிறைவேற்றுகிறார்.  ஏனென்றால்   மாசாவினால் மோசேக்கு வந்த பொல்லாப்பினால் அவன் கானானில் பிரவேசிக்கக்கூடாமற் போனது.  ஆனால் கிறிஸ்துவினால் கர்த்தர் நம்மை உலகம், மாமிசம், பிசாசு இவற்றிலிருந்து விடுதலையாக்குகிறார்.  

அதனால் ஏசாயா 60:21,22 

உன் ஜனங்கள் யாவரும் நீதிமான்களும், என்றைக்கும் பூமியைச் சுதந்தரிக்குங் குடிகளும், நான் நட்ட கிளைகளும், நான் மகிமைப்படும்படி என் கரங்களின் கிரியைகளுமாயிருப்பார்கள்.

சின்னவன் ஆயிரமும், சிறியவன் பலத்த ஜாதியுமாவான்; கர்த்தராகிய நான் ஏற்றகாலத்தில் இதைத் தீவிரமாய் நடப்பிப்பேன்.

இவ்விதம்  கிறிஸ்துவினால் கர்த்தர் நம்மை தீவிரமாக நிறைவேற்றுவேன் என்று சொல்கிறார். பிரியமானவர்களே நம்மில் விசுவாசத்தில் வந்த குறைகளை அறிக்கைச் செய்து கர்த்தரின் சுதந்தரத்தைப் பெற்றுக்கொள்ள ஒப்புக்கொடுப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.