கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,
கிறிஸ்துவின் ராஜ்யம் கட்டுவதற்கு பதிலாக நாம் பாபிலோன் மகா
நகரம் நம் உள்ளத்தில் எழுப்புகிறோம். அதனால் நம்முடைய தேவனாகிய கர்த்தர் ,
சகரியா 2:6-9
ஓகோ, நீங்கள் எழும்பி வடதேசத்திலிருந்து ஓடிவாருங்கள் என்று
கர்த்தர் சொல்லுகிறார் ஆகாயத்து நான்கு திசைகளிலும் உங்களை நான் சிதறப்பண்ணினேன் என்று
கர்த்தர் சொல்லுகிறார்.
பாபிலோன் குமாரத்தியினிடத்தில் குடியிருக்கிற சீயோனே, உன்னை
விடுவித்துக்கொள்.
பிற்பாடு மகிமையுண்டாகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் உன்னை கொள்ளையிட்ட ஜாதிகளிடத்துக்கு
என்னை அனுப்பினார் உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்.
இதோ, நான் என் கையை அவர்களுக்கு விரோதமாக அசைப்பேன் அதினால்
அவர்கள் தங்கள் அடிமைகளுக்குக் கொள்ளையாவார்கள் அப்பொழுது சேனைகளின் கர்த்தர் என்னை அனுப்பினாரென்று அறிவீர்கள்.
ஆதியாகமம் 11:1,2
கர்த்தர் ஜனங்களை
சிதறடிக்கும் முன்பாக, “பூமியெங்கும் ஒரே பாஷையும், ஒரே விதமான பேச்சும் இருந்தது.
ஜனங்கள் கிழக்கேயிருந்து பிரயாணம்பண்ணுகையில், சிநெயார் தேசத்திலே
சமபூமியைக் கண்டு, அங்கே குடியிருந்தார்கள்.
அந்த சிநேயார் தேசத்தில் தான்
பாபிலோன் மாகாணம் உண்டாயிருந்தது அந்த இடத்தில் வைத்து தான் பெரிய கோபுரம் எழுப்ப வேண்டும்
என்று நினைத்து எழுப்பவும் தொடங்கினார்கள். அந்த இடத்தில் வைத்து தான் மனுஷர்களுடைய
நினைவுகளை அறிந்த தேவன் எல்லோரையும் சிதறடித்து, பாஷையை தாறுமாறாக்கினார்.
ஆனால்
சிதறி கிடக்கிற ஜனங்களை ஒன்று சேர்க்கும்படி நீங்கள் எழும்பி வடதேசத்திலிருந்து ஓடி
வாருங்கள் என்று சொல்லுகிறார்.
சகரியா 2:1-5
நான் என் கண்களை ஏறெடுத்துப் பார்த்தபோது, இதோ, தன் கையிலே
அளவுநூல் பிடித்திருந்த ஒரு புருஷனைக் கண்டேன்.
நீர் எவ்விடத்துக்குப் போகிறீர் என்று கேட்டேன் அதற்கு அவர்
: எருசலேமின் அகலம் இவ்வளவு என்றும் அதின் நீளம் இவ்வளவு என்றும் அறியும்படி அதை அளக்கிறதற்குப்
போகிறேன் என்றார்.
இதோ, என்னோடே பேசின தூதன் புறப்பட்டபோது, வேறொரு தூதன் அவரைச்
சந்திக்கும்படிப் புறப்பட்டு வந்தான்.
இவனை அவர் நோக்கி: நீ ஓடி இந்த வாலிபனிடத்தில் சொல்லவேண்டியது
என்னவென்றால், எருசலேம் தன் நடுவிலே கூடும் மனுஷரின் திரளினாலும் மிருகஜீவன்களின் திரளினாலும்
மதிலில்லாத பட்டணங்கள்போல் வாசஸ்தலமாகும்.
நான் அதற்குச் சுற்றிலும் அக்கினி மதிலாயிருந்து, அதின் நடுவில்
மகிமையாக இருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
அளவுநூல் பிடித்திருந்த புருஷன், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து.
வெளி 11:1,2
பின்பு கைக்கோலுக்கு ஒப்பான ஒரு அளவுகோல் என்னிடத்தில் கொடுக்கப்பட்டது.
அப்பொழுது தேவதூதன் நின்று, என்னை நோக்கி: நீ எழுந்து, தேவனுடைய ஆலயத்தையும், பலிபீடத்தையும்,
அதில் தொழுதுகொள்ளுகிறவர்களையும் அளந்துபார்.
ஆலயத்திற்குப் புறம்பே இருக்கிற பிரகாரம் புறஜாதியாருக்குக்
கொடுக்கப்பட்டபடியால் அதை அளவாமல் புறம்பாக்கிப்போடு; பரிசுத்த நகரத்தை அவர்கள் நாற்பத்திரண்டு
மாதமளவும் மிதிப்பார்கள். (3½ வருஷம்)
தேவன் சிதறபண்ணின மனுபுத்திரரை
ஒன்று சேர்க்கும்படியாகத் தான் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை தேவன் இவ்வுலகத்தில்
அனுப்பினார். உலகத்தில் அனுப்பி 3½ வருடம் அவருடைய சுவிசேஷம் உலகத்துக்கு அறிவிக்கப்பட்டது.
வெளி 14:6-8
பின்பு, வேறொரு தூதன் வானத்தின் மத்தியிலே பறக்கக்கண்டேன்
அவன் பூமியில் வாசம்பண்ணுகிற சகல ஜாதிகளுக்கும், கோத்திரத்தாருக்கும், பாஷைக்காரருக்கும்,
ஜனக்கூட்டத்தாருக்கும் அறிவிக்கதக்கதாக நித்திய சுவிசேஷத்தை உடையவனாயிருந்து,
மிகுந்த சத்தமிட்டு: தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள்
அவர் நியாயத்தீர்ப்புக் கொடுக்கும் வேளை வந்தது;
வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் நீருற்றுகளையும் உண்டாக்கினவரையே தொழுதுகொள்ளுங்கள்
என்று கூறினான்.
வேறொரு தூதன் பின்சென்று: பாபிலோன் மகாநகரம் விழுந்தது! விழுந்தது!
தன் வேசித்தனமாகிய உக்கிரமான மதுவைச் சகல ஜாதிகளுக்கும் குடிக்கக் கொடுத்தாளே! என்றான்.
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து
சகல ஜாதிகள், கோத்திரங்கள், பாஷைக்காரராகிய எல்லா ஜனக்கூட்டத்தையும் ஒன்று சேர்த்து
ஒரே மந்தையும், ஒரே மேய்ப்பனுமாக இருக்கும் படியாகவே இவ்வுலகத்திற்கு வந்தார்.
நம்முடைய கர்த்தராகிய இயேசு
கிறிஸ்து அநேக அற்புதங்களையும், மரித்த லாசருவை உயிரோடு எழுப்பினதையும் கண்டவர்களில்
யூதர்களில் அநேகர் அவரில் விசுவாசமுள்ளவர்களானார்கள்.
யோவான் 11:47-52
அப்பொழுது பிரதான ஆசாரியரும் பரிசேயரும் ஆலோசனைச் சங்கத்தைக்
கூடிவரச்செய்து, நாம் என்ன செய்கிறது? இந்த மனுஷன் அநேக அற்புதங்களைச் செய்கிறானே.
நாம் இவனை இப்படி விட்டுவிட்டால்,
எல்லாரும் இவனை விசுவாசிப்பார்கள் அப்பொழுது
ரோமர் வந்து நம்முடைய ஸ்தானத்தையும்
ஜனத்தையும் அழித்துப் போடுவார்களே என்றார்கள்.
அப்பொழுது அவர்களில்
ஒருவனும் அந்த வருஷத்துப் பிரதான ஆசாரியனுமாகிய காய்பா என்பவன் அவர்களை நோக்கி: உங்களுக்கு
ஒன்றுந் தெரியாது;
ஜனங்களெல்லாரும் கெட்டுப் போகாதபடிக்கு ஒரே மனுஷன் ஜனங்களுக்காக
மரிப்பது நமக்கு நலமாயிருக்குமென்று நீங்கள் சிந்தியாமலிருக்கிறீர்கள் என்றான்.
இதை அவன் சுயமாய்ச் சொல்லாமல், அந்த வருஷத்துப் பிரதான ஆசாரியனானபடியினாலே
இயேசு யூதஜனங்களுக்காக மரிக்கப்போகிறாரென்றும்,
அந்த ஜனங்களுக்காகமாத்திரமல்ல, சிதறியிருக்கிற தேவனுடைய பிள்ளைகளை
ஒன்றாகச் சேர்க்கிறதற்காகவும் மரிக்கப்போகிறாறென்றும், தீர்க்கதரிசனமாய் சொன்னான்.
-தொடர்ச்சி
நாளை.