தேவனுக்கே மகிமையுண்டாவதாக

வெளி 21: 7

ஜெயங்கொள்ளுகிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்; நான் அவன் தேவனாயிருப்பேன், அவன் என் குமாரனாயிருப்பான்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம், நம்முடைய விசுவாச யாத்திரையில்  பொல்லாதவர்களை குறித்து பயப்படக்கூடாது.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம், நம்முடைய விசுவாசத்தினால், கானான் தேசமாகிய பரலோக ராஜ்யத்தை சுதந்தரிக்க முடியும் என்பதனை குறித்து தியானித்தோம்.  ஆனால் கானானை சுற்றிப்பார்க்க சென்றவர்களில் இரண்டு பேர் மட்டும் நல்ல செய்தி சொன்னார்கள்.  மற்றவர்கள் துர்செய்தி பரப்பினார்கள்.  இதனை கேட்ட இஸ்ரவேல் சபையார் எல்லாரும்  கூக்குரலிட்டு புலம்பி அழுதுக்கொண்டிருந்தார்கள்.  மேலும் மோசேக்கும், ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்துக்கொண்டிருந்தார்கள் என்று தியானித்தோம்.  

ஆனால் இந்த நாளில் நாம் தியானிப்பது 

எண்ணாகமம் 14: 1 – 12

அப்பொழுது சபையார் எல்லாரும் கூக்குரலிட்டுப் புலம்பினார்கள்; ஜனங்கள் அன்று இராமுழுதும் அழுதுகொண்டிருந்தார்கள்.

இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்தார்கள். சபையார் எல்லாரும் அவர்களை நோக்கி: எகிப்துதேசத்திலே செத்துப்போனோமானால் நலமாயிருக்கும்; இந்த வனாந்தரத்திலே நாங்கள் செத்தாலும் நலம்.

நாங்கள் பட்டயத்தால் மடியும்படிக்கும், எங்கள் பெண்ஜாதிகளும் பிள்ளைகளும் கொள்ளையாகும்படிக்கும், கர்த்தர் எங்களை இந்த தேசத்துக்குக் கொண்டுவந்தது என்ன? எகிப்துக்குத் திரும்பிப்போகிறதே எங்களுக்கு உத்தமம் அல்லவோ என்றார்கள்.

பின்பு அவர்கள்: நாம் ஒரு தலைவனை ஏற்படுத்திக்கொண்டு எகிப்துக்குத் திரும்பிப்போவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.

அப்பொழுது மோசேயும் ஆரோனும் இஸ்ரவேல் புத்திரரின் சபையாராகிய எல்லாக் கூட்டத்தாருக்கு முன்பாகவும் முகங்குப்புற விழுந்தார்கள்.

தேசத்தைச் சுற்றிப்பார்த்தவர்களில் நூனின் குமாரனாகிய யோசுவாவும், எப்புன்னேயின் குமாரனாகிய காலேபும், தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு,

இஸ்ரவேல் புத்திரரின் சமஸ்த சபையையும் நோக்கி: நாங்கள் போய்ச் சுற்றிப்பார்த்து சோதித்த தேசம் மகா நல்ல தேசம்.

கர்த்தர் நம்மேல் பிரியமாயிருந்தால், அந்தத் தேசத்திலே நம்மைக் கொண்டுபோய், பாலும் தேனும் ஓடுகிற அந்தத் தேசத்தை நமக்குக் கொடுப்பார்.

கர்த்தருக்கு விரோதமாகமாத்திரம் கலகம்பண்ணாதிருங்கள்; அந்த தேசத்தின் ஜனங்களுக்கு நீங்கள் பயப்படவேண்டியதில்லை; அவர்கள் நமக்கு இரையாவார்கள்; அவர்களைக் காத்த நிழல் அவர்களை விட்டு விலகிப்போயிற்று; கர்த்தர் நம்மோடே இருக்கிறார்; அவர்களுக்குப் பயப்படவேண்டியதில்லை என்றார்கள்.

அப்பொழுது அவர்கள்மேல் கல்லெறியவேண்டும் என்று சபையார் எல்லாரும் சொன்னார்கள்; உடனே கர்த்தருடைய மகிமை ஆசரிப்புக் கூடாரத்தில் இஸ்ரவேல் புத்திரர் எல்லாருக்கும் முன்பாகக் காணப்பட்டது.

கர்த்தர் மோசேயை நோக்கி: எதுவரைக்கும் இந்த ஜனங்கள் எனக்குக் கோபம் உண்டாக்குவார்கள்? தங்களுக்குள்ளே நான் காட்டின சகல அடையாளங்களையும் அவர்கள் கண்டும், எதுவரைக்கும் என்னை விசுவாசியாதிருப்பார்கள்?

நான் அவர்களைக் கொள்ளைநோயினால் வாதித்து, சுதந்தரத்துக்குப் புறம்பாக்கிப்போட்டு, அவர்களைப்பார்க்கிலும் உன்னைப் பெரிதும் பலத்ததுமான ஜாதியாக்குவேன் என்றார்.

எப்படியெனில் நாங்கள் எகிப்து தேசத்தில் செத்து போனோமானால் நலமாயிருக்கும்.  நாங்கள் பட்டயத்தினால் மடியவும்,  எங்கள் பெண்ஜாதிகளும் பிள்ளைகளும் கொள்ளையாகும் படிக்கும், கர்த்தர் எங்களை இந்த தேசத்துக்குக் கொண்டு வந்தது என்ன?  எகிப்துக்கு திரும்பிப் போகிறதே எங்களுக்கு உத்தமம் அல்லவோ என்றார்கள்.  அல்லது நாம் ஒரு தலைவனை ஏற்ப்படுத்திக்கொண்டு எகிப்துக்கு திரும்பி போவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள்.  

இவ்விதமாக நம்மளிலும் அநேகர் விசுவாச யாத்திரையில் கஷ்டங்கள், நெருக்கங்கள், வேதனை, சஞ்சலம், உபத்திரவம்,  சோதனைகள் வரும் போது, நாம் இடறி ஏதாவது தேவனுக்கு விரோதமாக பேசி விடுகிறோம். அவ்விதமாக நாம் பேசுவோமானால் தேவனுக்கு விரோதமாக கலகம் பண்ணுகிறோம்.  ஆனால் இஸ்ரவேல் சபையார் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்தபோது, மோசேயும் ஆரோனும்  இஸ்ரவேல் சபைக்கு முன்பாக முகங்குப்புற விழுந்தார்கள்.  

அப்போது தேசத்தை சுற்றிபார்க்க சென்றவர்களில் யோசுவாவும், காலேபும் தங்கள் வஸ்திரங்களை கிழித்துக்கொண்டு  சமஸ்த சபையை நோக்கி சுற்றிப்பார்த்து சோதித்த தேசம் மகா நல்ல தேசம்.  கர்த்தர் நம்மேல் பிரியமாயிருந்தால் அந்த தேசத்திலே நம்மை கொண்டு போய், பாலும் தேனும் ஓடுகிற அந்த தேசத்தைக்கொடுப்பார்.  கர்த்தர் நம்மேல் பிரியமாயிருக்க வேண்டுமானால், நாம் அவருடைய சித்தம் செய்து, அவருடைய கட்டளை, கற்பனை, நியாயங்கள் இவைகளின் மேல் நாம் பிரியமாயிருக்க வேண்டும். 

யோசுவாவும் காலேபும் சபையாரிடம் கர்த்தருக்கு விரோதமாக மாத்திரம் கலகம் பண்ணாதிருங்கள்.  அந்த தேசத்து ஜனங்களுக்கு பயப்பட வேண்டியதில்லை .  அவர்கள் நமக்கு இரையாவார்கள்.  அவர்களை காத்த நிழல் அவர்களை விட்டு விலகி போனது.  கர்த்தர் நம்மோடே இருக்கிறார்.  இவ்விதமாக சொன்னதும் , அவர்கள் மேல் கல்லெறிய வேண்டும் என்று இஸ்ரவேல் சபை சொல்ல, கர்த்தருடைய மகிமை ஆசரிப்புக்கூடாரத்தில் இஸ்ரவேல் புத்திரர் எல்லாருக்கும் முன்பாக காணப்பட்டது. 

அப்போது கர்த்தர் எதுவரைக்கும்  இவர்கள்  எனக்கு கோபம் உண்டாக்குவார்கள்.  என்னுடைய அடையாளங்களை கண்டும் இவர்கள் என்னை விசுவாசியாதிருக்கிறார்கள் என்றும், அவர்களை கொள்ளை நோயினால் வாதித்து, சுதந்தரத்துக்கு புறம்பாக்கிப் போட்டு அவர்களை பார்க்கிலும் உன்னை பெரிதும் பலத்த ஜாதியாக்குவேன் என்றார். 

பிரியமானவர்களே நாம் தேவனை விசுவாசித்தால் மட்டுமே கிறிஸ்துவினால் அவருக்கு சுதந்தரராக முடியும். ஆனால் நாம் விசுவாசியாதிருப்போமானால் நம்மை அவருடைய சுதந்தரத்துக்கு புறம்பாக்கிப் போடுவார்.  ஆதலால் தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் மனுஷன் பிழைப்பான் என்று எழுதப்பட்டிருக்கிறதை வாசிக்கிறோம்.  அதனைப்பற்றிய  கருத்து என்னவெனில் 

உபாகமம் 8:1-3  

நீங்கள் பிழைத்துப் பெருகி, கர்த்தர் உங்கள் பிதாக்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த தேசத்திலே பிரவேசித்து, அதைச் சுதந்தரிக்கும்படி நான் இன்று உங்களுக்கு விதிக்கிற எல்லாக் கட்டளைகளின்படியும் செய்யத் சாவதானமாயிருப்பீர்களாக.

உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிறுமைப்படுத்தும்படிக்கும், தம்முடைய கட்டளைகளை நீ கைக்கொள்வாயோ கைக்கொள்ளமாட்டாயோ என்று அவர் உன்னைச் சோதித்து, உன் இருதயத்திலுள்ளதை நீ அறியும்படிக்கும், உன்னை இந்த நாற்பது வருஷமளவும் வனாந்தரத்திலே நடத்திவந்த எல்லா வழியையும் நினைப்பாயாக.

அவர் உன்னைச் சிறுமைப்படுத்தி, உன்னைப் பசியினால் வருத்தி, மனுஷன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல, கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்பதை உனக்கு உணர்த்தும்படிக்கு, நீயும் உன் பிதாக்களும் அறியாதிருந்த மன்னாவினால் உன்னைப் போஷித்தார்.

மேற்க்கூறிய வசனங்கள் இதனை விளக்குகிறது.  அவருடைய சுதந்தரத்தில் நம்மை பங்கடைய வைப்பதற்காக நம்மை சிறுமைப்படுத்தி,  பசியினால் வருந்த வைத்து, மனுஷன் அப்பத்தினால் மாத்திரமல்ல, கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்பதை கூறுகிறார்.  அல்லாமலும் 

சங்கீதம் 27:11-14  

கர்த்தாவே, உமது வழியை எனக்குப் போதித்து, என் எதிராளிகளினிமித்தம் செவ்வையான பாதையில் என்னை நடத்தும்.

என் சத்துருக்களின் இஷ்டத்துக்கு என்னை ஒப்புக்கொடாதேயும்; பொய்ச்சாட்சிகளும் ஆக்கிரமித்துச் சீறுகிறவர்களும் எனக்கு விரோதமாய் எழும்பியிருக்கிறார்கள்.

நானோ, ஜீவனுள்ளோர் தேசத்திலே கர்த்தருடைய நன்மையைக் காண்பேன் என்று விசுவாசியாதிருந்தால் கெட்டுப்போயிருப்பேன்.

கர்த்தருக்குக் காத்திரு; அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்; திடமனதாயிருந்து, கர்த்தருக்கே காத்திரு.

மேற்க்கூறிய வசனப்பிரகாரம் நாம் விசுவாசத்தினால் கர்த்தரிடத்தில் காத்திருந்து ஜீவனுள்ளோர் தேசத்தின் நன்மையை சுதந்தரிக்கிறவர்களாக காணப்படவேண்டும்.   அதனைக்குறித்து  

எபிரெயர்  10:35-39 

ஆகையால், மிகுந்த பலனுக்கேதுவான உங்கள் தைரியத்தை விட்டுவிடாதிருங்கள்.

நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படி செய்து, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெறும்படிக்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது.

வருகிறவர் இன்னுங் கொஞ்சக்காலத்தில் வருவார், தாமதம்பண்ணார்.

விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான், பின்வாங்கிப்போவானானால் அவன்மேல் என் ஆத்துமா பிரியமாயிராது என்கிறார்.

நாமோ கெட்டுப்போகப் பின்வாங்குகிறவர்களாயிராமல், ஆத்துமா ஈடேற விசுவாசிக்கிறவர்களாயிருக்கிறோம்.

இந்த வசனங்கள் நாம் பயப்படாதப்படிக்கு  மிகுந்த பலனுக்கேதுவான தைரியத்தை விட்டுவிடாதபடி இருக்கவேண்டும்.  ஆனால் இஸ்ரவேல் சபை ஏனாக்கின் குமாரராகிய இராட்சதர்களை அங்கு கண்டதால் பயந்து, கூக்குரலிட்டார்கள். ஆனால் கிறிஸ்துவினால் மீட்கபட்டால் பயம் நம்மை விட்டு மாறிப்போகும்.  அதனால் தேவனுடைய வார்த்தையானது 

எரேமியா 42:11,12 

நீங்கள் பயப்படுகிற பாபிலோன் ராஜாவுக்கு பயப்படவேண்டாம், அவனுக்குப் பயப்படாதிருப்பீர்களாக என்று கர்த்தர் சொல்லுகிறார், உங்களை இரட்சிக்கும்படிக்கும், உங்களை அவன் கைக்குத் தப்புவிக்கும்படிக்கும் நான் உங்களுடனே இருந்து,

அவன் உங்களுக்கு இரங்குகிறதற்கும், உங்கள் சுயதேசத்துக்கு உங்களைத் திரும்பிவரப்பண்ணுகிறதற்கும் உங்களுக்கு இரக்கஞ்செய்வேன்.

இந்த வசனங்களை நாம் தியானிப்போமானால் பாபிலோன் ராஜா என்பது உலகமான இராட்சதரை குறிக்கிறது. அதனால் நமக்கு தேவன் திருஷ்டாந்த படுத்துவது, நம் ஒவ்வொருவரையும் இவ்வித பொல்லாத ஆவியிலிருந்து விடுவித்து இரட்சித்து நம்முடைய சுய தேசமாகிய கானான் என்பது நமக்குள் கிரியை செய்கிற கிறிஸ்துவின் ஜீவனாகிய நித்திய ஜீவனை சுதந்தரிக்க செய்கிறார். 

அவ்விதம் நித்திய ஜீவனைப் பெற்று கொள்வோமானால் 

ஏசாயா 65:18,19

நான் சிருஷ்டிக்கிறதினாலே நீங்கள் என்றென்றைக்கும் மகிழ்ந்து களிகூர்ந்திருங்கள்; இதோ, எருசலேமைக் களிகூருதலாகவும், அதின் ஜனத்தை மகிழ்ச்சியாகவும் சிருஷ்டிக்கிறேன்.

நான் எருசலேமின்மேல் களிகூர்ந்து, என் ஜனத்தின்மேல் மகிழ்ச்சியாயிருப்பேன்; அழுகையின் சத்தமும், கூக்குரலின் சத்தமும் அதில் இனிக் கேட்கப்படுவதில்லை.

இந்த வசனங்களின் படி கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார்.  இவ்விதமாக நாம் பயப்படாத படி கர்த்தரிடத்தில் முழுமையும் விசுவாசமாயிருந்து நன்மையை சுதந்தரிப்போம். ஒப்புக்கொடுப்போம்.

கர்த்தர் ஆசீர்வதிப்பார். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.