கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே,
மேற் குறிப்பிட்டுள்ள (முந்தின பகுதி) யில் கூறப்பட்டுள்ள
ஏழு ஆவிகளாகிய ஏழு அக்கினி தீபங்கள் சிங்காசனத்திற்கு முன்பாக எரிந்து கொண்டிருந்தன.
இந்த ஏழு ஆவிகளும் கிறிஸ்து
என்பது நமக்கு புரிய வருகிறது. தேவனுடைய வார்த்தைகளை நாம் ஏற்றுக் கொள்ளும்போது, கிறிஸ்து
நம்மளில் பூரணப்படும் போது, இவ்வித ஏழு ஆவிகளும் நாம் பெற்றுக் கொள்கிறோம்.
ரோமர் 8:9-11
தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல்
ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல.
மேலும் கிறிஸ்து உங்களிலிருந்தால் சரீரமானது பாவத்தினிமித்தம்
மரித்ததாயும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாயும் இருக்கும்.
அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி
உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான
உங்கள் சரீரங்களையும் உயிர்பிப்பார்.
முந்தின நாட்களில் நோவாவையும்
அவன் குடும்பத்தையும் நமக்கு திருஷ்டாந்தபடுத்தி அவர்கள் பேழை ஜலத்தினால் காக்கப்பட்டதையும்
தேவன் நமக்கு விளக்கிக் காட்டுகிறார்.
1பேதுரு 3:21,22
அதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது, மாம்ச அழுக்கை நீக்குதலாயிராமல்,
தேவனைப்பற்றும் நல்மனசாட்சியின் உடன்படிக்கையாயிருந்து, இப்பொழுது நம்மையும் இயேசுகிறிஸ்துவினுடைய
உயிர்தெழுதலினால் இரட்சிக்கிறது;
அவர் பரலோகத்திற்குப்
போய், தேவனுடைய வலதுபாரிசத்தில் இருக்கிறார் தேவதூதர்களும் அதிகாரங்களும் வல்லமைகளும்
அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது.
நோவாவுடைய பேழைக்குள் காக்கப்பட்ட சந்ததிகளை
தேவன் மனுபுத்திரர் என்று சொல்லுகிறதை பார்க்கிறோம்.
பேழையினால் காக்கப்பட்ட சந்ததிகள்
பூமியிலே தேவன் சொன்னது போல் பலுகி பெருகி, திரளாய் வாத்தித்தது.
ஆதியாகமம் 11:1
பூமியெங்கும் ஒரே பாஷையும், ஒரே விதமான பேச்சும் இருந்தது.
ஆதியாகமம் 11:4
பின்னும் அவர்கள்: நாம் பூமியின் மீதெங்கும் சிதறிப்போகாதபடிக்கு,
நமக்கு ஒரு நகரத்தையும், வானத்தை அளாவும் சிகரமுள்ள ஒரு கோபுரத்தையும் கட்டி, நமக்குப்
பேர் உண்டாகப் பண்ணுவோம் வாருங்கள் என்று சொல்லிக்கொண்டார்கள்.
பேழையில் காக்கப்பட்டவர்கள்
சந்ததிகள் தங்களுக்கு பேர் வரவேண்டும் தேவனை
நினைக்காதப்படி தங்கள் விருப்பப் பிரகாரம் நகரத்தையும் கட்டி, வானத்தை அளாவும் சிகரமுள்ள
ஒரு கோபுரத்தையும் கட்டுவோம் என்று சொல்லி கொண்டதன் காரணமாக தேவன்,
ஆதியாகமம் 11:5-9
மனுபுத்திரர் கட்டுகிற நகரத்தையும் கோபுரத்தையும் பார்க்கிறதற்குக்
கர்த்தர் இறங்கினார்.
அப்பொழுது கர்த்தர் : இதோ, ஜனங்கள் ஒரே கூட்டமாய் இருக்கிறார்கள்
அவர்கள் அனைவருக்கும் ஒரே பாஷையும் இருக்கிறது; அவர்கள் இதைச் செய்யத் தொடங்கினார்கள்
இப்பொழுதும் தாங்கள் செய்ய நினைத்தது ஒன்றும் தடைபடமாட்டாது என்று இருக்கிறார்கள்.
நாம் இறங்கிப்போய், ஒருவர் பேசுவதை மற்றொருவர் அறியாதபடிக்கு, அங்கே அவர்கள் பாஷையைத் தாறுமாறக்குவோம்
என்றார்.
அப்படியே கர்த்தர்
அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியின்மீதெங்கும் சிதறிப்போகப்பண்ணினார் அப்பொழுது
நகரம் கட்டுகிறதை விட்டுவிட்டார்கள்.
பூமியெங்கும் வழங்கின பாஷையைக் கர்த்தர் அவ்விடத்தில் தாறுமாறாக்கினபடியால், அதின் பேர் பாபேல் என்னப்பட்டது; கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து
பூமியின்மீதெங்கும் சிதறிப்போகப்பண்ணினார்.
இவ்விதமாக தேவன் சிருஷ்டித்த
ஜனங்கள் நோவா காலத்தில் செய்ததை தான் இந்த நாட்களிலும் (மனுஷகுமாரன்) உலகத்தில் வந்த
பிறகும் செய்கிறார்கள். உலகத்தை இரட்சிக்கும் படியாகவே மனுஷகுமாரன் வந்தார். உலகத்தின்
பாவத்தை சுமந்து தீர்க்கும் தேவ ஆட்டுக்குட்டியாக இந்த உலகத்தில் வந்து பலியானார்.
பலியான ஆட்டுக்குட்டியை தேவன் மீண்டும் எழுப்பி நம் உள்ளத்தில் இரட்சிப்பை தரும்படியாக
நமக்குள் அவருடைய வார்த்தையை அனுப்பி, குமாரனை நமக்கு தந்து, நம்மை இவ்வுலக ஆசாபாசங்களிலிருந்து,
இவ்வுலக கிரியைகளாகிய அத்தனை பாவ சுபாவ பழக்கவழக்கங்கள், அக்கிரமங்கள், உலக வழிபாடுகளுக்கும்,
இவ்வுலக சாத்தானுடைய செயல்பாடுகளுக்கெல்லாம் விடுதலையாக்கி இரட்சிக்கும்படியாக தம்முடைய
குமாரனை தேவன் அனுப்பினார்.
ஆனால் நாமோ நம் இஷ்டபிரகாரம் தேவராஜ்யத்திற்கு பதிலாக நம்
உள்ளத்தை பாபிலோனுக்கு இடம் கொடுக்கிறோம்.
ஜெபிப்போம்.
-தொடர்ச்சி நாளை