கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, சிங்காசனத்திலிருந்து
ஏழு ஆவிகளாகிய ஏழு அக்கினி தீபங்கள் எரிந்துக் கொண்டிருக்கிறது. இந்த ஏழு ஆவிகளும்
அக்கினி தீபங்களாக நம்முடைய உள்ளத்தில் எழும்புகிறது.
ஏழு
ஆவிகளாகிய அக்கினி தீபங்கள்:
எபிரெயர் 9:14
நித்திய ஆவி
2கொரிந்தியர் 4:13 விசுவாசத்தின்
ஆவி
யோவான் 16:13 சத்திய
ஆவி
எபிரெயர் 10:29 கிருபையின் ஆவி
2தீமோத்தேயு 1:7 பலமும் அன்பும் தெளிந்த புத்தியுள்ள
ஆவி
1பேதுரு 3:4 சாந்தமும்
அமைதலுமுள்ள ஆவி
1பேதுரு 4:14 மகிமையின்
ஆவி
இவற்றை குறித்துதான், மத்தேயு 3:11 “மனந்திரும்புதலுக்கென்று நான்
ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானங் கொடுக்கிறேன் எனக்குப்பின் வருகிறவரோ என்னிலும் வல்லவராயிருக்கிறார்,
அவருடைய பாதரட்சைகளைச் சுமக்கிறதற்கு நான் பாத்திரன் அல்ல அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு
ஞானஸ்நானம் கொடுப்பார்”என்று
சொன்னவைகள் இவைகளே. (இவற்றில் ஏழு ஆவியும் அக்கினிகளாக
இருக்கிறது).
எபிரெயர் 9:14
நித்திய
ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம்
ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்த கிரியைகளறச் சுத்திகரிப்பது
எவ்வளவு நிச்சயம்!
நித்திய ஆவியாகிய கர்த்தராகிய இயேசுவின் இரத்தம் நம்முடைய
மனதில் இருக்கிற செத்த கிரியைகளை நீக்கி நம்மை சுத்திகரிக்கும். (தேவனுடைய ஊழியஞ்செய்கிறதற்கு
ஏதுவாயிருக்கிறது.
2கொரிந்தியர் 4:13,14
விசுவாசித்தேன்,
ஆகையால் பேசினேன் என்று எழுதியிருக்கிறபடி, நாங்களும் அந்த விசுவாசத்தின் ஆவியை உடையவர்களாயிருந்து,
விசுவாசிக்கிறபடியால் பேசுகிறோம்.
கர்த்தராகிய
இயேசுவை எழுப்பினவர் எங்களையும் இயேசுவைக்கொண்டு எழுப்பி, உங்களுடனேகூடத் தமக்குமுன்பாக
நிறுத்துவாரென்று அறிந்திருக்கிறோம்.
விசுவாசத்தின் ஆவி நம்மளில் இருந்தால் மட்டுமே நம்முடைய விசுவாசம்
கர்த்தராகிய இயேசுவை எழுப்புவார் என்ற விசுவாசம் வளரும். ஆதலால் விசுவாசத்தின் ஆவி
உள்ளவர்களாக நாம் இருக்க வேண்டும்.
யோவான்
16:13
சத்திய
ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார் அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள்
யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்.
சத்திய ஆவி நம்மளில் செயல்பட்டால் மாத்திரமே நாம் சகல சத்தியத்திலும்
வளர முடியும். சத்தியத்தை நாம் ஏற்றுக்கொள்வோம்.
எபிரெயர்
10:29
தேவனுடைய
குமாரனைக் காலின் கீழ் மிதித்து, தன்னைப் பரிசுத்தஞ்செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை
அசுத்தமென்றெண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் எவ்வளவு கொடிதான ஆக்கினைக்குப்
பாத்திரவானாயிருப்பான் என்பதை யோசித்துப்பாருங்கள்.
கிருபையின் ஆவி என்பது நம்மை பரிசுத்தப்படுத்துகிற உடன்படிக்கையாகிய
இயேசு கிறிஸ்துவின் இரத்தம்
2தீமோத்தேயு
1:7
தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல்,
பலமும் அன்பும் தெளிந்த புத்தயுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்.
மரணத்தையும்,
பாதாளத்தையும் ஜெயித்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினிடத்திலிருந்து பலமும் அன்பும்
தெளிந்த புத்தியுள்ள ஆவி புறப்படுகிறது. இந்த ஆவியினால் நம் மரண பயத்தை நீக்குகிறது.
தேவ அன்பும் தெளிந்த புத்தியும் நமக்குள்ளாக வளருகிறது.
1பேதுரு
3:4
அழியாத
அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே
உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது; அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது.
நம்முடைய உலக அலங்காரங்களை காட்டிலும் தேவனுடைய பார்வைக்கு
அருமையான கனிகளாகிய சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியே இருதயத்தில் மறைந்து இருக்கிறது.
1பேதுரு
4:14
நீங்கள்
கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் நிந்திக்கப்பட்டால் பாக்கியவான்கள் ஏனென்றால் தேவனுடைய
ஆவியாகிய மகிமையுள்ள ஆவியானவர் உங்கள் மேல்
தங்கியிருக்கிறார் அவர்களாலே தூஷிக்கபடுகிறார் உங்களாலே மகிமைப்படுகிறார்.
மகிமையின் அவியானவரே தேவனை மகிமைப்படுத்துகிறார்.
1பேதுரு 5:10,11
கிறிஸ்து
இயேசுவுக்குள் நம்மைத் தமது நித்திய மகிமைக்கு அழைத்தவராயிருக்கிற சகல கிருபையும் பொருந்திய
தேவன்தாமே கொஞ்சக்காலம் பாடநுபவிக்கிற உங்களைச் சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி,
நிலைநிறுத்துவாராக;
அவருக்கு
மகிமையும் வல்லமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென்.
அதைத்தான்
அன்பானவர்களே, யோவான் 17:24 “பிதாவே, உலகத்தோற்றத்துக்கு முன் நீர் என்னில் அன்பாயிருந்தபடியினால்,
நீர் எனக்குத் தந்த என்னுடைய மகிமையை நீர் எனக்குத் தந்தவர்கள் காணும்படியாக, நான்
எங்கே இருக்கிறேனோ அங்கே அவர்களும் என்னுடனே கூட இருக்க விரும்புகிறேன்”. இவ்விதமாக நம்முடைய தேவன்
நம்மை அவருடைய ஏழு ஆவிகளாகிய ஏழு அக்கினி தீபங்களால் நம்மை நிறைக்கிறவராக காணப்படுவோம்.
அப்போது தான் நாம் பரிசுத்தமாகப்படுவோம். ஜெபிப்போம்.
இவ்விதமாக கர்த்தர்
யாவரையும் ஆசீர்வதிப்பாராக.
-தொடர்ச்சி நாளை