Apr 30, 2020


                கர்த்தருக்குள் பிரியமானவர்களே முந்தின நாட்களில் நாம் தியானித்த தேவ வசன பிரகாரம், தேவன்  சுத்தமாக்கினவர்களை   நாம் அசுத்தம் என்று நீக்கி வைக்கக் கூடாது என்பதற்காக நோவாவிடத்தில் பேழைக்குள்  எல்லாவித ஜாதிகளான நாட்டு மிருகங்கள்காட்டு மிருகங்கள், ஜீவ ஜந்துக்கள், ஊரும் பிராணிகள் இப்படி எல்லா வித பூமியில் வாழுகிற ஜாதிகளை ஒரே பேழைக்குள்  பிரவேசிக்க சொல்லி பின் பேழையின் கதவை அடைத்ததை பார்க்கிறோம். அங்கு  தேவன் உடன்படிக்கை செய்ததை பார்த்தோம்.

அதைத்தான் பேதுருவிடத்திலும் தரிசனத்தில் விளக்கிக் காட்டுகிறார். தேவன் சுத்தபடுத்தினவர்களை  நாம் அசுத்தம் என்று மாற்றி நிறுத்தக்கூடாது. பேதுருக்கு தரிசனம் புரியாமல் இருந்த போது கொர்நேலியு அனுப்பினார்கள் வீட்டு வாசலில் வந்த போதுதான் தரிசனம் புரிந்தது. கொர்நேலியு தேவ பக்தியும்தேவனுக்கு பயந்தவனும்ஜனங்களுக்கு மிகுந்த தர்மங்கள் செய்கிறவனும்ஜெபம்பண்ணுகிறவனு மாயிருந்தான்.

அப்போஸ்தலர் 10:21

அப்பொழுது பேதுரு கொர்நேலியுவினால் தன்னிடத்தில் அனுப்பப்பட்ட மனுஷரிடத்திற்கு இறங்கிப்போய்: இதோ, நீங்கள் தேடுகிறவன் நான்தான், நீங்கள் வந்திருக்கிற காரியம் என்ன என்றான்.

பேதுரு, கொர்நேலியுடைய வீட்டுக்குள் பிரவேசிக்கிறான்.

அப்போஸ்தலர் 10:25

பேதுரு உள்ளே பிரவேசிக்கிறபொழுது, கொர்நேலியு அவனுக்கு எதிர்கொண்டுபோய், அவன் பாதத்தில் விழுந்து, பணிந்துகொண்டான்.

அப்போஸ்தலர் 10:26

பேதுரு அவனைத் தூக்கியெடுத்து; எழுந்திரும், நானும் ஒரு மனுஷன்தான் என்றான்.

அப்போஸ்தலர் 10:27, 28

அவனுடனே பேசிக்கொண்டு, உள்ளேபோய், அநேகர் கூடிவந்திருக்கிறதைக் கண்டு,

அவர்களை நோக்கி: அந்நிய ஜாதியானோடே கலந்து அவனிடத்தில் போக்குவரவாயிருப்பது யூதனானவனுக்கு விலக்கப்பட்டிருக்கிறதென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்; அப்படியிருந்தும், எந்த மனுஷனையும் தீட்டுள்ளவனென்றும் அசுத்தனென்றும் நான் சொல்லாதபடிக்கு தேவன் எனக்குக் காண்பித்திருக்கிறார்.

 

அன்பானவர்களேஇந்த நாளில் நாம் இப்போது வாசித்த பகுதி நம்முடைய ஆகாரத்தை பற்றியதல்ல என்பதை புரிய வேண்டும். நாம் எந்த ஜாதியாக இருந்தாலும் கர்த்தர் நம் எல்லோரையும் ஒன்று போல் நேசிக்கிற  தேவன். அவர் பட்சபாதமுள்ளவர்  அல்ல என்பதையும்நாமும் அவரைப்போல் எல்லோரையும் ஒன்று போல் (தேவனுடைய இரத்தத்தால் கழுவப்பட்டு சுத்திகரிக்கப்பட்டவர்கள் யாவரையும்) ஏற்றுக் கொள்கிறவர்களாக இருக்க வேண்டும் என்பதையும் நமக்கு விளக்கிக் காட்டுகிறார்.

தேவனுடைய ராஜ்யம் என்றாலே தேவன் மேல் விசுவாசம்  உள்ளவர்களாயிருக்கிறவர்கள், எல்லோரையும் எந்த வேற்றுமையும் இல்லாத படி ஒன்று சேர்க்கிற நாமம் தேவனுடைய ராஜ்யம்.

வெளி 11:16-19

அப்பொழுது தேவனுக்கு முன்பாகத் தங்கள் சிங்காசனங்கள்மேல் உட்கார்ந்திருந்த இருபத்துநான்கு மூப்பர்களும் முகங்குப்புற விழுந்து:

இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தராகிய தேவனே, உம்மை ஸ்தோத்திரிக்கிறோம்; தேவரீர் உமது மகா வல்லமையைக்கொண்டு ராஜ்யபாரம்பண்ணுகிறீர்.

ஜாதிகள் கோபித்தார்கள், அப்பொழுது உம்முடைய கோபம் மூண்டது; மரித்தோர் நியாயத்தீர்ப்படைகிறதற்கும், தீர்க்கதரிசிகளாகிய உம்முடைய ஊழியக்காரருக்கும் பரிசுத்தவான்களுக்கும் உமது நாமத்தின்மேல் பயபக்தியாயிருந்த சிறியோர் பெரியோருக்கும் பலனளிக்கிறதற்கும், பூமியைக் கெடுத்தவர்களைக் கெடுக்கிறதற்கும், காலம் வந்தது என்று சொல்லி, தேவனைத் தொழுதுகொண்டார்கள்.

அப்பொழுது பரலோகத்தில் தேவனுடைய ஆலயம் திறக்கப்பட்டது, அவருடைய ஆலயத்திலே அவருடைய உடன்படிக்கையின் பெட்டி காணப்பட்டது; அப்பொழுது மின்னல்களும், சத்தங்களும், இடிமுழக்கங்களும், பூமியதிர்ச்சியும், பெருங்கல்மழையும் உண்டாயின.

முந்தின தேவ வசனங்கள் வாசிக்கப்படும் போது பரலோகத்தில் தேவனுடைய ஆலயம் திறக்கப்படுவதை பார்க்கிறோம். 26.04.2020 தியதியில் உள்ள வசனங்கள் வாசிக்கப்பட வேண்டும். தேவனின் ஆலயம் (நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து) சிங்காசனத்தில் வீற்றிருக்கிறவர்  கர்த்தராகிய இயேசு கிறிஸ்துசிங்காசனத்திலிருந்து இடி முழக்கங்களும்சத்தங்களும் புறப்படுகிறது.

                                                                                                                                                             

தேவனுடைய ஏழு ஆவிகளாகிய ஏழு அக்கினி  தீபங்கள் எரிந்துக் கொண்டிருக்கிறது.

நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம் உள்ளத்தில் வீற்றிருக்கிறார். அவர் ராஜ்யபாரம் பண்ணுகிறார். ஏழு ஆவிகளாகிய ஏழு அக்கினி  தீபங்கள் எரிந்து கொண்டிருக்கும் என்பது நமக்குத் தெரிய வருகிறது. அன்பானவர்களே குறிக்கப்பட்டுள்ள ஏழு ஆவிகளாக ஏழு அக்கினி  தீபங்கள் சிங்காசனத்திற்கு முன்பாக எரிந்து கொண்டிருக்கிறது. ஏழு ஆவிகளாகிய அக்கினித் தீபங்கள் குறித்து மறுநாளில் பார்ப்போம்.

கர்த்தர் யாவரையும் ஆசீர்வதிப்பாராக.

 

- தொடர்ச்சி நாளை.