ஐக்கியப்படுதல்

சகோதரி. பி.கிறிஸ்டோபர் வாசினி
Apr 29, 2020


 கர்த்தருக்குள் பிரியமானவர்களேகழிந்த நாட்களில் நாம் பிதாவின் ராஜ்யம்அதில் நாம் பானம் பண்ணும் விதம், நசரேய விரதம் இவைகளை சிந்தித்தோம் தியானித்தோம். அதில் உள்ளான  கருத்துக்கள் நாம் அறிந்து கொள்ள வேண்டும். நம்முடைய பழைய மனுஷன் (முந்தின ஆதாம் )ஒழிந்து புதிய மனுஷர் (கர்த்தர்) நம் உள்ளத்தில் தோன்றுகிறார்அவர்தான் நசரேயனாகிய இயேசு கிறிஸ்து.

நியாயாதிபதிகள் 13:3-5

கர்த்தருடைய தூதனானவர் அந்த ஸ்திரீக்குத் தரிசனமாகி, அவளை நோக்கி: இதோ, பிள்ளைபெறாத மலடியான நீ கர்ப்பந்தரித்து, ஒரு குமாரனைப் பெறுவாய்.

ஆதலால் நீ திராட்சரசமும் மதுபானமும் குடியாதபடிக்கும், தீட்டானது ஒன்றும் புசியாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு.

நீ கர்ப்பந்தரித்து, ஒரு குமாரனைப் பெறுவாய்; அவன் தலையின்மேல் சவரகன் கத்தி படலாகாது; அந்தப் பிள்ளை பிறந்ததுமுதல் தேவனுக்கென்று நசரேயனாயிருப்பான்; அவன் இஸ்ரவேலைப் பெலிஸ்தரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிக்கத் தொடங்குவான் என்றார்.

நியாயாதிபதிகள் 13:13, 14

கர்த்தருடைய தூதனானவர் மனோவாவை நோக்கி: நான் ஸ்திரீயோடே சொன்ன யாவற்றிற்கும், அவள் எச்சரிக்கையாயிருந்து,

திராட்சச்செடியிலே உண்டாகிறதொன்றும் சாப்பிடாமலும், திராட்சரசமும் மதுபானமும் குடியாமலும், தீட்டானதொன்றும் புசியாமலும், நான் அவளுக்குக் கட்டளையிட்டதையெல்லாம் கைக்கொள்ளக்கடவள் என்றார்.

நம்முடைய நசரேயனாகிய இயேசு கிறிஸ்து நம் உள்ளத்தில் பிறப்பதற்காக நமக்குத் திரிஷ்டாந்தப்படுத்தினது தான் என்பது புரிய வருகிறது. நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தான்  நம்மை பெலிஸ்தரின்  கைக்கும்மற்றும் எல்லா சத்துருக்களின் கைக்கும் நீங்கலாக்கி விடுவித்து இரட்சிக்கிறவர்.

                பிரியமானவர்களே நாம் எப்படி தேவனுக்கு விரோதமாக செயல்படுகிறோம் என்பதை குறித்து தேவன் ஆமோஸ் 2:11, 12 -ல் கூறப்படுகிறது.

ஆமோஸ் 2:11, 12

உங்கள் குமாரரில் சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், உங்கள் வாலிபரில் சிலரை நசரேயராகவும் எழும்பப்பண்ணினேன்; இஸ்ரவேல் புத்திரரே, இப்படி நான் செய்யவில்லையா என்று கர்த்தர் கேட்கிறார்.

 

 

 நீங்களோ நசரேயருக்குத் திராட்சரசம் குடிக்கக் கொடுத்து, தீர்க்கதரிசிகளை நோக்கி: நீங்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லவேண்டாம் என்று கற்பித்தீர்கள்.

இதிலிருந்து நமக்குத் தெரியவருவது என்னவென்றால் நம் ஆத்துமாவில் தேவன் நமக்குத் தருகிற விடுதலையும், தேவன் நம்மை எழுப்புகிற விதமும், ஆனால் நாமோ தேவனுக்கு விரோதமாக உலகத்தார்  செய்வது போல எல்லா நேரமும் திராட்ச ரசம் குடிக்கிறோம்தீர்க்கதரிசனத்தை தடுக்கிறோம். தீட்டானதை புசிக்கிறோம்அதனால் தேவன் கோபம் உள்ளவராக  காணப்படுகிறார்.  அதற்குரிய தண்டனை தான் ஆமோஸ்  2:13 - 16 எழுதப்பட்டிருக்கிறது.

 அடுத்தபடியாக தேவன் ஆதியாகமம் 9:7-10 ல்  கூறிய பிரகாரம் உலகத்தில் (இப்பூமியில்)  உண்டாயிருக்கிற அனைவரோடுங்உண்டாக போகிற  அனைவரோடுங்  என் உடன்படிக்கை ஏற்படுத்துகிறேன் என்று சொல்கிறதை  பார்க்கிறோம். அதைத்  தான்,

 ஏசாயா 66:18 - 21

நான் அவர்கள் கிரியைகளையும், அவர்கள் நினைவுகளையும்  அறிந்திருக்கிறேன்; நான் சகல ஜாதியாரையும் பாஷைக்காரரையுங் கூட்டிச்சேர்க்குங்காலம் வரும்;அவர்கள் வந்து என் மகிமையைக் காண்பார்கள்.

நான் அவர்களில் ஒரு அடையாளத்தைக் கட்டளையிடுவேன்; அவர்களில் தப்பினவர்களை, என் கீர்த்தியைக் கேளாமலும், என் மகிமையைக் காணாமலுமிருக்கிற ஜாதிகளின் தேசங்களாகிய தர்ஷீசுக்கும், வில்வீரர் இருக்கிற பூலுக்கும், லூதுக்கும், தூபாலுக்கும், யாவானுக்கும், தூரத்திலுள்ள தீவுகளுக்கும் அனுப்புவேன்;அவர்கள் என் மகிமையை ஜாதிகளுக்குள்ளே அறிவிப்பார்கள்.

இஸ்ரவேல் புத்திரர் சுத்தமான பாத்திரத்தில் காணிக்கையைக் கர்த்தருடைய ஆலயத்துக்குக் கொண்டுவருகிறதுபோல, உங்கள் சகோதரரெல்லாரையும் அவர்கள் குதிரைகளின்மேலும், இரதங்களின்மேலும், குலாரிவண்டில்களின்மேலும், கோவேறுகழுதைகளின்மேலும், வேகமான ஒட்டகங்களின்மேலும், சகல ஜாதிகளிடத்திலுமிருந்து எருசலேமிலுள்ள கர்த்தருக்குக் காணிக்கையாக என் பரிசுத்த பர்வதத்துக்குக் கொண்டுவருவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

அவர்களிலும் சிலரை ஆசாரியராகவும் லேவியராகவும் தெரிந்துகொள்வேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

இதுதான் நோவாவிடத்தில் பேழையில் எல்லா ஜாதிகளையும்  சேர்த்துக்கொள்ள சொன்னதான  திருஷ்டாந்தம். நம்முடைய தேவனாகிய கர்த்தர் அவரிடத்தில் வருகிறவர்களில்  யாரையும் அவர் புறம்பே தள்ளுவதில்லை.

யோவான் 6:37

பிதாவானவர் எனக்குக் கொடுக்கிறயாவும் என்னிடத்தில் வரும்; என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை.

யோவான் 6:38

என் சித்தத்தின்படியல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்யவே நான் வானத்திலிருந்திறங்கி வந்தேன்.

யாரையும் அவர் புறம்பே தள்ளுவதில்லை என்பதை காட்டுவதாக  அப்போஸ்தலர் 10-ம் அதிகாரத்தில் கொர்நெலியு-வுக்கும், யோப்பா பட்டணத்தில் பேதுருவுக்கும் தரிசனமாகிறார்.

அப்போஸ்தலர் 10:5, 6

இப்பொழுது நீ யோப்பா பட்டணத்துக்கு மனுஷரை அனுப்பி, பேதுரு என்று மறுபேர்கொண்ட சீமோனை அழைப்பி,

அவன் தோல் பதனிடுகிறவனாகிய சீமோன் என்னும் ஒருவனிடத்திலே தங்கியிருக்கிறான்; அவனுடைய வீடு கடலோரத்திலிருக்கிறது. நீ செய்யவேண்டியதை அவன் உனக்குச் சொல்லுவான் என்றான்.

கொர்நேலியு தன்னுடனே பேசின தூதன் போன பின்பு தன் வீட்டு மனுஷரில் இரண்டு பேரையும்போர்  சேவகரில் தேவ பக்தியுள்ள ஒருவனையும்  அழைத்து எல்லாவற்றையும் விளக்கி சொல்லி யோப்பா பட்டணத்திற்கு பேதுருவினிடத்தில் அனுப்பி விடுவதை நாம் வாசிக்கிறோம்.

அப்போஸ்தலர் 10:9-16

மறுநாளிலே அவர்கள் பிரயாணப்பட்டு, அந்தப் பட்டணத்துக்குச் சமீபித்து வருகையில், பேதுரு ஆறாம்மணி நேரத்திலே ஜெபம்பண்ணும்படி மேல்வீட்டில் ஏறினான்.

அவன் மிகுந்த பசியடைந்து சாப்பிட மனதாயிருந்தான்; அதற்கு அவர்கள் ஆயத்தம்பண்ணுகையில், அவன் ஞானதிருஷ்டியடைந்து,

வானம் திறந்திருக்கிறதாகவும், நாலுமுனைகளும் கட்டப்பட்ட பெரிய துப்பட்டியைப்போல ஒருவிதமான கூடு தன்னிடத்தில் இறங்கித் தரையில் விடப்பட்டிருக்கிறதாகவும்,

 

 

அதிலே பூமியிலுள்ள சகலவிதமான நாலுகால் ஜீவன்களும், காட்டுமிருகங்களும், ஊரும் பிராணிகளும், ஆகாயத்துப் பறவைகளும் இருக்கிறதாகவும் கண்டான்.

அல்லாமலும்: பேதுருவே, எழுந்திருஅடித்துப் புசி என்று அவனுக்குச் சொல்லும் ஒரு சத்தம் உண்டாயிற்று.

அதற்குப் பேதுரு: அப்படியல்ல, ஆண்டவரே, தீட்டும் அசுத்தமுமாயிருக்கிற யாதொன்றையும் நான் ஒருக்காலும் புசித்ததில்லை என்றான்.

அப்பொழுது:தேவன் சுத்தமாக்கினவைகளை நீ தீட்டாக எண்ணாதே என்று இரண்டாந்தரமும் சத்தம் அவனுக்கு உண்டாயிற்று.

மூன்றாந்தரமும் அப்படியே உண்டாயிற்று. பின்பு அந்தக் கூடு திரும்ப வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன் விளக்கங்கள் தேவ சித்தமானால் நாளைக்கு பார்ப்போம். ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பாராக.

 

-தொடர்ச்சி நாளை.