பரிசுத்தமாகுதல்

சகோதரி. பி.கிறிஸ்டோபர் வாசினி
Apr 28, 2020


கர்த்தருக்குள் பிரியமானவர்களேநம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பரிசுத்த பந்தியை ஆயத்தப்படுத்தி சீஷர்களிடத்தில் கொடுக்கும்போது சொல்லுகிறதாவது,

மத்தேயு 26:29

இதுமுதல் இந்தத் திராட்சப்பழரசத்தை நவமானதாய் உங்களோடேகூட என் பிதாவின் ராஜ்யத்திலே நான் பானம்பண்ணும் நாள் வரைக்கும் இதைப் பானம் பண்ணுவதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

அதனால்தான் கர்த்தராகிய கிறிஸ்து சொல்வது  பிதாவின் வீட்டில் உங்களுக்காக ஒரு ஸ்தலம் ஆயத்தம் பண்ணின பின்பு நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடமாக சேர்த்துக் கொள்வேன் என்று சொன்ன கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மீண்டும் பெந்தேகோஸ்தே நாளில் இறங்கி காத்திருந்த யாவர் மேலும் இறங்கினார்.

அப்போஸ்தலர் 1:3-9

அவர் பாடுபட்டபின்பு, நாற்பது நாளளவும் அப்போஸ்தலருக்குத் தரிசனமாகி, தேவனுடைய ராஜ்யத்துக்குரியவைகளை அவர்களுடனே பேசி, அநேகம் தெளிவான திருஷ்டாந்தங்களினாலே அவர்களுக்குத் தம்மை உயிரோடிருக்கிறவராகக் காண்பித்தார்.

அன்றியும், அவர் அவர்களுடனே கூடி வந்திருக்கும்போது, அவர்களை நோக்கி: யோவான் ஜலத்தினாலே ஞானஸ்நானங் கொடுத்தான்; நீங்கள் சில நாளுக்குள்ளே பரிசுத்தஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள்.

ஆகையால் நீங்கள் எருசலேமை விட்டுப் போகாமல் என்னிடத்தில் கேள்விப்பட்ட பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருங்கள் என்று கட்டளையிட்டார்.

அப்பொழுது கூடிவந்திருந்தவர்கள் அவரை நோக்கி; ஆண்டவரே, இக்காலத்திலா ராஜ்யத்தை இஸ்ரவேலுக்குத் திரும்பக் கொடுப்பீர் என்று கேட்டார்கள்.

அதற்கு அவர்: பிதாவானவர் தம்முடைய ஆதீனத்திலே வைத்திருக்கிற காலங்களையும் வேளைகளையும் அறிகிறது உங்களுக்கு அடுத்ததல்ல.

பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.

இவைகளை அவர் சொன்னபின்பு, அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கையில், உயர எடுத்துக்கொள்ளப்பட்டார். அவர்கள் கண்களுக்கு மறைவாக ஒரு மேகம் அவரை எடுத்துக்கொண்டது.

 அதற்குப் பின்பு பெந்தேகோஸ்தே நாளில் இறங்கினார்.

 அதைத்தான் இயேசு சொல்கிறார் நாம் ஒவ்வொருவரும் பரிசுத்த ஆவியினால் பெலனடைய வேண்டும்.(பிதாவின் ராஜ்யம் ) அவ்விதமாக  மாறும் போது நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தேவனுடைய வலது பாரிசத்தில் நம்மையும் அவரோடு கூட உட்கார செய்து போஜன பான பந்தியை  நமக்கு ஆயத்தப் படுத்துகிறார்.

வெளி 3:20

இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்.

அன்பானவர்களே அதைத்தான் இயேசு சொல்கிறார். இது முதல் இந்த திராட்சைப்பழ ரசம் நவமானதாய் உங்களுடனேகூட என் பிதாவின் ராஜ்யத்தில்  நான் பானம் பண்ணும் நாள் வரைக்கும் இதை பானம் பண்ணுவதில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

அது போல் நாமும் அவர்  நமக்கு கற்றுத்தந்த மாதிரியின் பிரகாரம்  பிதாவின் ராஜ்யம்  நம்மிடத்தில்  வரும்படி காத்திருக்க வேண்டும். பரிசுத்தமாக நாம் காத்திருந்தால் பிதாவின் ராஜ்யம்  நமக்கு கிடைக்கும். நாம் கிறிஸ்துவினோடே  கூட பரிசுத்த பந்தியில் அமர முடியும். அப்படி பரிசுத்த பந்தியில் பங்கெடுக்கிற  நாம் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மிடத்தில் சொல்கிறார் இனி திராட்சைப் பழரசம் எப்போதாகிலும் நவமானதாய் பிதாவின் பரிசுத்த பந்தியில் மாத்திரமே நாம் பானம் பண்ண வேண்டும். மற்றபடி நாம் அதை மற்ற நேரங்களில் நம்முடைய சொந்த ஆகாரமாக  பானம் பண்ணக்கூடாது என்பது நமக்கு தெரிய வருகிறது.

ஆதலால்கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே நம்மை மிகவும் பரிசுத்தமாக காத்துக் கொள்ள வேண்டும்.

அதை, எண்ணாகமம் 6:2-7

நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: புருஷனாகிலும் ஸ்திரீயாகிலும் கர்த்தருக்கென்று விரதம் பண்ணிக்கொண்டவர்களாயிருக்கும்படி நசரேய விரதமாகிய ஒரு விசேஷித்த பொருத்தனையைப் பண்ணினால்,

அப்படிப்பட்டவன் திராட்சரசத்தையும் மதுபானத்தையும் விலக்கக்கடவன்; அவன் திராட்சரசத்தின் காடியையும் மற்ற மதுபானத்தின் காடியையும், திராட்சரசத்தினால் செய்த எவ்விதமான பானத்தையும் குடியாமலும், திராட்சப்பழங்களையாவது திராட்ச வற்றல்களையாவது புசியாமலும்,

தான் நசரேயனாயிருக்கும் நாளெல்லாம் திராட்சச்செடி விதைமுதல் தோல் வரையிலுள்ளவைகளினால் செய்யப்பட்ட யாதொன்றையும் புசியாமலும் இருக்கக்கடவன்.

அவன் நசரேய விரதங்காக்கும் நாளெல்லாம் சவரகன் கத்தி அவன் தலையின்மேல் படலாகாது; அவன் கர்த்தருக்கென்று விரதங்காக்கும் காலம் நிறைவேறுமளவும் பரிசுத்தமாயிருந்து, தன் தலைமயிரை வளரவிடக்கடவன்.

அவன் கர்த்தருக்கென்று விரதங்காக்கும் நாளெல்லாம் யாதொரு பிரேதத்தண்டையில் போகக்கூடாது.

அவன் தன் தேவனுக்கென்று செய்த நசரேய விரதம் அவன் தலைமேல் இருக்கிறபடியால், மரணமடைந்த தன் தகப்பனாலாகிலும் தாயினாலாகிலும் சகோதரனாலாகிலும் சகோதரியினாலாகிலும் தன்னனைத் தீட்டுப்படுத்தலாகாது.

எண்ணாகமம் 6:8

அவன் நசரேயனாயிருக்கும் நாளெல்லாம் கர்த்தருக்குப் பரிசுத்தமாயிருப்பான்.

 

நசரேயன் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து.

 

ஜெபிப்போம், கர்த்தர் யாவரையும் ஆசிர்வதிப்பாராக.

 

 

-தொடர்ச்சி நாளை.