கிறிஸ்துவுக்குள்
பிரியமானவர்களே, முந்தின
நாட்களில் உள்ள தேவ வசனம்
வாசித்து, தியானித்திருப்பீர்கள் என மிகவும் கர்த்தருக்குள் நம்பிக்கையாயிருக்கிறேன்.
மேலும்
உன்னதமான தேவனுடைய குமாரன், நம்முடைய
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம் உள்ளத்தில் பிறந்ததை குறித்து
நாம் தியானித்தோம்.
ஏசாயா
9:6, 7
நமக்கு
ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்;
கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம்
அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.
தாவீதின்
சிங்காசனத்தையும் அவனுடைய ராஜ்யத்தையும் அவர் திடப்படுத்தி, அதை
இதுமுதற்கொண்டு என்றென்றைக்கும் நியாயத்தினாலும் நீதியினாலும் நிலைப்படுத்தும்படிக்கு, அவருடைய கர்த்தத்துவத்தின் பெருக்கத்துக்கும், அதின் சமாதானத்துக்கும் முடிவில்லை; சேனைகளின் கர்த்தருடைய வைராக்கியம் இதைச் செய்யும்.
லூக்கா
1:30-33
தேவதூதன்
அவளை நோக்கி: மரியாளே, பயப்படாதே;நீ தேவனிடத்தில் கிருபைபெற்றாய்.
இதோ,
நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய்,
அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக.
அவர்
பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார்.
அவர்
யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது என்றான்.
நம்முடைய
தேவனாகிய கர்த்தர் நாம் ஒவ்வொருவருடைய
உள்ளத்தில் ராஜ்யப்பாரத்தை ஏற்படுத்துகிறார். நாம் ஒவ்வொருவருடைய உள்ளமும்
உலக ராஜ்யங்களாக இருக்கிறதினால் நம்முடைய பிதாவாகிய தேவன் பிதாவின் ராஜ்யம் நம்முடைய
உள்ளத்தில் ஸ்தாபிப்பதற்காக தேவனுடைய
வார்த்தையினால் அவருடைய மகிமையை நம் இருதயத்துக்குள் அனுப்பி
குமாரனனை தோன்றபண்ணி, நம்மை
அவருடைய ஆவியின் வளர்ச்சை யினால் ஆசீர்வதிக்கிறார்.
லூக்கா
2:52
இயேசுவானவர்
ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவகிருபையிலும், மனுஷர் தயவிலும் அதிகமதிகமாய் விருத்தியடைந்தார்.
இவ்விதமாக,
தேவன் நம் உள்ளம் ஆசீர்வதிக்கப்பட்டு
கொண்டிருக்கும்போது உலக ராஜ்யங்களை
நம்மிடத்தில் இருந்து மாற்றும் படியாக முதலாவது இரண்டு ஆபத்தை நம்முடைய வாழ்வில் கடந்து போக பண்ணி,
வெளி
11:14, 15
இரண்டாம்
ஆபத்து கடந்துபோயிற்று; இதோ, மூன்றாம் ஆபத்து
சீக்கிரமாய் வருகிறது.
ஏழாம்
தூதன் எக்காளம் ஊதினான், அப்பொழுது உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்யங்களாயின; அவர் சதாகாலங்களிலும் ராஜ்யபாரம்
பண்ணுவார் என்னும் கெம்பீர சத்தங்கள் வானத்தில் உண்டாயின.
இவ்விதமாக
தேவனுடைய ராஜ்யம் நமக்குள் ஸ்தாபிக்கப்படுகிறது.
பிரியமானவர்களே
அதைத்தான், லூக்கா
17:20-21
தேவனுடைய
ராஜ்யம் எப்பொழுது வருமென்று, பரிசேயர் அவரிடத்தில் கேட்டபொழுது, அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: தேவனுடைய
ராஜ்யம் பிரத்தியட்சமாய் வராது.
இதோ,
இங்கே என்றும், அதோ, அங்கே என்றும்
சொல்லப்படுகிறதற்கும் ஏதுவிராது;இதோ, தேவனுடைய ராஜ்யம்
உங்களுக்குள் இருக்கிறதே என்றார்.
இவ்விதமாக
நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தேவனுடைய இராஜ்யத்தை நாம் சுதந்தரிக்கும் படியாக
கூறுகிறதைப் பார்க்கிறோம்.
யோவான்
14:1-7
உங்கள்
இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்.
என்
பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு;
அப்படியில்லாதிருந்தால்,
நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக
ஆயத்தம்பண்ணப்போகிறேன்.
நான்
போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே
நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து
உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்.
நான்
போகிற இடத்தை அறிந்திருக்கிறீர்கள், வழியையும் அறிந்திருக்கிறீர்கள் என்றார்.
தோமா
அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் போகிற இடத்தை
அறியோமே, வழியை நாங்கள் எப்படி அறிவோம் என்றான்.
அதற்கு
இயேசு: நானே வழியும் சத்தியமும்
ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.
என்னை
அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள்,
இதுமுதல் நீங்கள் அவரை அறிந்தும் அவரைக்
கண்டும் இருக்கிறீர்கள் என்றார்.
நம்முடைய
பிதாவின் வீட்டில் நமக்கு ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணும் படியாகத்
தான் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் வந்து, நமக்காக
அநேக பாடுகள்
பட்டு, சிலுவையில்
மரித்து, அடக்கம்
பண்ணப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். உயிர்த்தெழுந்த இயேசு
முதல் முதல் மகதலேனா மரியாளுக்கு தரிசனமானார்.
மாற்கு
16:12
அதன்பின்பு
அவர்களில் இரண்டு பேர் ஒரு கிராமத்துக்கு
நடந்துபோகிறபொழுது அவர்களுக்கு மறுரூபமாய்த் தரிசனமானார்.
மாற்கு
16:14, 15
அதன்பின்பு
பதினொருவரும் போஜனபந்தியிலிருக்கையில் அவர்களுக்கு அவர் தரிசனமாகி, உயிர்த்தெழுந்திருந்த
தம்மைக் கண்டவர்களை அவர்கள் நம்பாமற்போனதினிமித்தம் அவர்களுடைய அவிசுவாசத்தைக்குறித்தும் இருதய கடினத்தைக்குறித்தும் அவர்களைக் கடிந்துகொண்டார்.
பின்பு,
அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப்
பிரசங்கியுங்கள்.
மாற்கு
16:16
விசுவாசமுள்ளவனாகி
ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்.
இவ்விதமாய்
நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இன்னும் சில காரியங்களை உபதேசித்துவிட்டு
பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டார்.
மாற்கு
16:19
இவ்விதமாய்க்
கர்த்தர் அவர்களுடனே பேசினபின்பு, பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, தேவனுடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்தார்.
இவ்விதமாக, எபேசியர்
2:7,8
கிறிஸ்து
இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் செய்தார்.
கிருபையினாலே
விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல,
இது தேவனுடைய ஈவு.
இவ்விதமாக
உன்னதங்களிலே அவரோட கூட உட்கார செய்தார்
என்றாலே நாம்
பாவத்துக்கு மரித்து நீதிக்கு அவரோடே கூட
அவருடைய ஆவியினால் நாம் பிழைத்து
எழும்பும்போது பிதாவின் ராஜ்யம் நமக்கு
கிடைக்கிறது அதை தான் இயேசு
கிறிஸ்து பிதாவின் வீட்டில் ஒரு ஸ்தலம் ஆயத்தம்
பண்ணப் போகிறேன் நான் ஸ்தலத்தை ஆயத்தம்
பண்ணின பின்பு நான் மறுபடியும் வந்து
உங்களை என்னிடத்தில் சேர்த்துக் கொள்வேன் என்றார் இவ்விதமாக நாம் கிறிஸ்துவோடு கூட
பிதாவின் வீட்டில் பரிசுத்தமாக இருப்போமானால் நமக்கு எந்த ஆபத்தும் நேரிடாது.
நாம் யாவரும் ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் ஆசீர்வதிப்பாராக.
-தொடர்ச்சி நாளை
.