போஜனம் பண்ணுதல்

சகோதரி. பி.கிறிஸ்டோபர் வாசினி
Apr 26, 2020


கர்த்தருக்குள் பிரியமானவர்களேமேகத்தில் தோன்றுகிற அந்த வில் தேவனுக்கும்நமக்கும் உண்டாகிற உடன்படிக்கையின் அடையாளம் என்பதை தேவன் எடுத்துக்காட்டுகிறார்.

எசேக்கியேல் 1:28

மழைபெய்யும் நாளில் மேகத்தில் வானவில் எப்படிக் காணப்படுகிறதோ, அப்படியே சுற்றிலுமுள்ள அந்தப் பிரகாசம் காணப்பட்டது; இதுவே கர்த்தருடைய மகிமையின் சாயலுக்குரிய தரிசனமாயிருந்தது; அதை நான் கண்டபோது முகங்குப்புற விழுந்தேன்; அப்பொழுது பேசுகிற ஒருவருடைய சத்தத்தைக் கேட்டேன்.

நம்முடைய பிதாவாகிய தேவன்அவருடைய வார்த்தையை  நமக்குள் அனுப்பி, அந்த வார்த்தைதான் தேவனுடைய மகிமையாகிய  இயேசு கிறிஸ்துநமக்குள் கிருபையும் சத்தியமும் நிறைந்ததாக வாசம் பண்ணுகிறார். தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையினாலும் கிறிஸ்து  மகிமைபடும் போது, இயேசு கிறிஸ்து மூலமாக நம்மளில் இருக்கிற  பாவ சுபாவம் மாற்றப்பட்டு புது  உடன்படிக்கையின் இரத்ததினால் உடன்படிக்கை  செய்கிறார்.

இவற்றை தேவன் தம்முடைய ஒரேபேறான குமாராகிய இயேசுகிறிஸ்து மூலமாக செய்கிறார்.

மத்தேயு 26:24-30

மனுஷகுமாரன் தம்மைக்குறித்து எழுதியிருக்கிறபடியே போகிறார்;ஆகிலும், எந்த மனுஷனால் மனுஷகுமாரன் காட்டிக்கொடுக்கப்படுகிறாரோ, அந்த மனுஷனுக்கு ஐயோ; அந்த மனுஷன் பிறவாதிருந்தானானால் அவனுக்கு நலமாயிருக்கும் என்றார்.

அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் அவரை நோக்கி: ரபீ, நானோ? என்றான், அதற்கு அவர்: நீ சொன்னபடிதான் என்றார்.

அவர்கள் போஜனம்பண்ணுகையில், இயேசு அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப் பிட்டு, சீஷர்களுக்குக் கொடுத்து: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாயிருக்கிறது என்றார்.

பின்பு, பாத்திரத்தையும் எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் எல்லாரும் இதிலே பானம்பண்ணுங்கள்,

இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது.

இதுமுதல் இந்தத் திராட்சப்பழரசத்தை நவமானதாய் உங்களோடேகூட என் பிதாவின் ராஜ்யத்திலே நான் பானம்பண்ணும் நாள் வரைக்கும் இதைப் பானம் பண்ணுவதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

அவர்கள் ஸ்தோத்திரப்பாட்டைப் பாடினபின்பு, ஒலிவமலைக்குப் புறப்பட்டுப்போனார்கள்.

இவற்றை குறித்து தான் தேவன் நோவாவிடம் உடன்படிக்கையின் அடையாளமாயிருக்கும் என்றார். மேலும்  ( பத்மு தீவின் தரிசனம் ).

வெளி 4:1-5

இவைகளுக்குப்பின்பு, இதோ, பரலோகத்தில் திறக்கப்பட்டிருந்த ஒரு வாசலைக் கண்டேன். முன்னே எக்காளசத்தம்போல என்னுடனே பேச நான் கேட்டிருந்த சத்தமானது: இங்கே ஏறிவா, இவைகளுக்குப்பின்பு சம்பவிக்கவேண்டியவைகளை உனக்குக் காண்பிப்பேன் என்று விளம்பினது.

உடனே ஆவிக்குள்ளானேன்; அப்பொழுது, இதோ, வானத்தில் ஒரு சிங்காசனம் வைக்கப்பட்டிருந்தது, அந்தச் சிங்காசனத்தின்மேல் ஒருவர் வீற்றிருந்தார்.

வீற்றிருந்தவர், பார்வைக்கு வச்சிரக்கல்லுக்கும் பதுமராகத்துக்கும் ஒப்பாயிருந்தார்; அந்தச் சிங்காசனத்தைச்சுற்றி ஒரு வானவில்லிருந்தது; அது பார்வைக்கு மரகதம்போல் தோன்றிற்று.

அந்தச் சிங்காசனத்தைச் சூழ இருபத்துநான்கு சிங்காசனங்களிருந்தன; இருபத்துநான்கு மூப்பர்கள் வெண்வஸ்திரந்தரித்து, தங்கள் சிரசுகளில் பொன்முடி சூடி, அந்தச் சிங்காசனங்களின்மேல் உட்கார்ந்திருக்கக்கண்டேன்.

அந்தச் சிங்காசனத்திலிருந்து மின்னல்களும் இடிமுழக்கங்களும் சத்தங்களும் புறப்பட்டன; தேவனுடைய ஏழு ஆவிகளாகிய ஏழு அக்கினி தீபங்கள் சிங்காசனத்திற்கு முன்பாக எரிந்துகொண்டிருந்தன.

என்னவென்றால், லூக்கா 1:31-35

இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக.

அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார்.

அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது என்றான்.

அதற்கு மரியாள் தேவதூதனை நோக்கி: இது எப்படியாகும்? புருஷனை அறியேனே என்றாள்.

தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக: பரிசுத்தஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்;ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்.

அதை தான், யோவான் 1:11-13

அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.

அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்.

அவர்கள், இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள்.

இதிலிருந்து நமக்கு என்ன முழுமையாக தெரியவருகிறதுகர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுடைய வார்த்தையினால் பிறந்தவர்.தேவன்  ஆவியாயிருக்கிறார். அதனால் தான் மரியாள்  என்னும் கன்னிகை, புருஷனை அறியேனே என்றாள்.

                அதற்கு தேவதூதன் பரிசுத்த ஆவி உன்மேல் வரும்உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும் ;ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது  தேவனுடைய குமாரன் (அவர்தான் கிறிஸ்து).

இந்த அனுகிரகத்திற்காக நாம் யாவரும்  ஜெபிப்போம். கர்த்தர் யாவரையும்   ஆசீர்வதிப்பார்.

 

- தொடர்ச்சி நாளை.