கிறிஸ்துவுக்குள்
பிரியமானவர்களே, மேற்கூறப்பட்டுள்ள
வசனங்களை வாசித்து தியானிக்கும் போது நமக்கு தெரிய
வருகிறது என்னவென்றால்,
ஆதியாகமம்
6:18
ஆனாலும் உன்னுடனே என் உடன்படிக்கையை ஏற்படுத்துவேன்;நீயும் உன்னோடேகூட உன் குமாரரும், உன்
மனைவியும், உன் குமாரரின் மனைவிகளும்,
பேழைக்குள் பிரவேசியுங்கள்.
இதனால்
நாம் மாத்திரமல்ல,
நம் குடும்பமாக கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டால் மாத்திரமே நாம் கிறிஸ்துவின் சரீரத்தால்
நாம் முழு குடும்பமும் பாதுகாப்பாகவும், தேவனுடைய
பிரியமான பிள்ளைகளாக நித்திய சுதந்திரத்தின் பிள்ளைகளாக இருப்போம்.
யோசுவா
24:14, 15
ஆகையால்
நீங்கள் கர்த்தருக்குப் பயந்து, அவரை உத்தமமும் உண்மையுமாய்ச்
சேவித்து, உங்கள் பிதாக்கள் நதிக்கு அப்புறத்திலும் எகிப்திலும் சேவித்த தேவர்களை அகற்றிவிட்டு, கர்த்தரைச் சேவியுங்கள்.
கர்த்தரைச்
சேவிக்கிறது உங்கள் பார்வைக்கு ஆகாததாய்க் கண்டால், பின்னை யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்;நதிக்கு அப்புறத்தில் உங்கள் பிதாக்கள் சேவித்த தேவர்களைச் சேவிப்பீர்களோ? நீங்கள் வாசம்பண்ணுகிற தேசத்துக் குடிகளாகிய எமோரியரின் தேவர்களைச் சேவிப்பீர்களோ? நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே
சேவிப்போம் என்றான்.
நாம்
ஒவ்வொருவரும் குடும்பமாக மனந்திரும்பி இரட்சிக்கப்பட்டு சத்தியத்தை கைக்கொண்டு, சத்தியத்திலும், ஆவியிலும்
தேவனுக்கு ஆராதனை செலுத்த வேண்டும்.
எசேக்கியேல்
14:19, 20
அல்லது
நான் அந்த தேசத்தில் கொள்ளைநோயை
அனுப்பி, அதிலுள்ள மனுஷரையும் மிருகங்களையும் நாசம்பண்ணும்படி அதின்மேல் இரத்தப்பழியாக என் உக்கிரத்தை ஊற்றும்போது,
நோவாவும்
தானியேலும் யோபும் அதின் நடுவில் இருந்தாலும், அவர்கள் தங்கள் நீதியினால் தங்கள் ஆத்துமாக்களை மாத்திரம் தப்புவிப்பார்களேயல்லாமல், குமாரனையாகிலும், குமாரத்தியையாகிலும் தப்புவிக்கமாட்டார்கள் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்
என்பதைக் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.
ஆதியாகமம்
7:22
வெட்டாந்தரையில்
உண்டான எல்லாவற்றிலும் நாசியிலே ஜீவசுவாசமுள்ளவைகள் எல்லாம் மாண்டுபோயின.
நோவாவும்,
அவனோடே பேழையிலிருந்த உயிர்கள் மாத்திரம்
காக்கப்பட்டன. தேவனாகிய கர்த்தருக்கு நோவா ஒரு பலிபீடம்
கட்டி, சுத்தமான பலியை கர்த்தருக்கு பலியிட்டான்.
ஆதியாகமம்
8:21, 22
சுகந்த
வாசனையைக் கர்த்தர் முகர்ந்தார். அப்பொழுது கர்த்தர்: இனி நான் மனுஷன்
நிமித்தம் பூமியைச் சபிப்பதில்லை; மனுஷனுடைய இருதயத்தின் நினைவுகள் அவன் சிறுவயதுதொடங்கிப் பொல்லாததாயிருக்கிறது;நான் இப்பொழுது
செய்ததுபோல, இனி சகல ஜீவன்களையும்
சங்கரிப்பதில்லை.
பூமியுள்ள
நாளளவும் விதைப்பும் அறுப்பும், சீதளமும் உஷ்ணமும், கோடைகாலமும் மாரிகாலமும், பகலும் இரவும் ஒழிவதில்லை என்று தம்முடைய உள்ளத்தில் சொன்னார்
ஆதியாகமம்
9:1-4
பின்பு
தேவன் நோவாவையும், அவன் குமாரரையும் ஆசீர்வதித்து:
நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்புங்கள்.
உங்களைப்பற்றிய
பயமும் அச்சமும் பூமியிலுள்ள சகல மிருகங்களுக்கும், ஆகாயத்திYள்ள சகல பறவைகளுக்கும் உண்டாயிருக்கும்;
பூமியிலே நடமாடுகிற யாவும், சமுத்திரத்தின் மச்சங்கள் யாவும், உங்களுக்குக் கையளிக்கப்பட்டன.
நடமாடுகிற ஜீவஜந்துக்கள் யாவும், உங்களுக்கு ஆகாரமாய் இருப்பதாக. பசும் பூண்டுகளை உங்களுக்குத் தந்ததுபோல, அவைகள் எல்லாவற்றையும் உங்களுக்குத் தந்தேன்.
மாம்சத்தை
அதின் உயிராகிய இரத்தத்தோடே புசிக்கவேண்டாம்.
பிரியமானவர்களே, நாம்
கிறிஸ்துவின் இரத்தம் புசிக்க வேண்டும் என்பதால் எந்த வேறு இரத்தத்தையும் அதின் மாமிசத்தோடே புசிக்கக்கூடாது என்று தேவன் நோவாவிடம்,
ஆதியாகமம்
9:4
மாம்சத்தை
அதின் உயிராகிய இரத்தத்தோடே புசிக்கவேண்டாம்.
ஏனென்றால்
இரத்தத்தில் தான் அதின் உயிர்
இருக்கும்.
ஆதியாகமம்
9:7-10
நீங்கள்
பலுகிப் பெருகி, பூமியிலே திரளாய் வர்த்தித்து விர்த்தியாகுங்கள் என்றார்.
பின்னும்
தேவன் நோவாவையும், அவன் குமாரரையும் நோக்கி:
நான்
உங்களோடும், உங்களுக்குப் பின்வரும் உங்கள் சந்ததியோடும்,
உங்களோடே
பேழையிலிருந்து புறப்பட்ட சகல ஜீவஜந்துக்கள்முதல் இனிப் பூமியில்
உண்டாகப்போகிற சகல ஜீவஜந்துக்கள் பரியந்தம்,
பறவைகளோடும், நாட்டு மிருகங்களோடும், உங்களிடத்தில் இருக்கிற பூமியிலுள்ள சகல காட்டு மிருகங்களோடும்
என் உடன்படிக்கையை ஏற்படுத்துகிறேன்.
கர்த்தர் இவ்விதமாக
உடன்படிக்கை ஏற்படுத்துவது, ஏனென்றால்
நம்முடைய பழைய பாவ சுபாவத்தை
அழித்துவிட்டு புதிய உடன்படிக்கை ஏற்படுத்துகிறார்.
நம்முடைய
தேவனாகிய கர்த்தர் இவ்விதமாக நம்முடைய பழைய மாம்ச கிரியைகள் அழித்து
அவருடைய அடையாளமாக,
ஆதியாகமம்
9:13
நான்
என் வில்லை மேகத்தில் வைத்தேன்; அது எனக்கும் பூமிக்கும்
உண்டான உடன்படிக்கைக்கு அடையாளமாயிருக்கும்.
ஆதியாகமம்
9:14
நான் பூமிக்கு மேலாய்
மேகத்தை வருவிக்கும்போது, அந்த வில் மேகத்தில்
தோன்றும்.
(அந்த வில் தான்
கர்த்தராகிய
இயேசு
கிறிஸ்து)
நம்முடைய தேவனுடைய அடையாளம்.
-தொடர்ச்சி நாளை.