தீவெட்டிகள் ஆயத்தமாகுதல்

சகோதரி. பி.கிறிஸ்டோபர் வாசினி
Apr 24, 2020


கர்த்தருக்குள் பிரியமானவர்களேமக்களுடைய பாவம் பூமியில் பெருகினதுஆனால் நோவாவுக்கோ  கர்த்தருடைய   கண்களில் கிருபை கிடைத்தது. நோவாவுடைய வம்சவரலாறை  நாம் வாசிப்போமானால் கர்த்தர்  நாம் தேவ சாயலாக மாறுவதற்கு ஒருவரை (கிறிஸ்து) இப்பூமியிலே தேவன் அனுப்புவதாகவும்அவரை க் கொண்டு நாம் மனந்திரும்பி பூமியின்  கொடுமைபாவம், அக்கிரமம், மீறுதல்  இவையெல்லாவற்றிலி ருந்து நம்மை விடுவித்து அவருடைய சரிரத்துக்குள்ளாக நாம் மறைந்து வாழும்  படியாகவும், எந்த போராட்டம் வந்தாலும் நாம் பரிசுத்த பர்வதத்தில் காக்கப்படுவோம்  என்பதை  தேவன் திருஷ்டாந்தப்படுத்துகிறார் என்பது புரிய வருகிறது.

ஆதியாகமம் 6:13, 14

அப்பொழுது தேவன் நோவாவை நோக்கி: மாம்சமான யாவரின் முடிவும் எனக்கு முன்பாக வந்தது; அவர்களாலே பூமி கொடுமையினால் நிறைந்தது; நான் அவர்களைப் பூமியோடுங்கூட அழித்துப்போடுவேன்.

நீ கொப்பேர் மரத்தால் உனக்கு ஒரு பேழையை உண்டாக்கு; அந்தப் பேழையிலே அறைகளை உண்டுபண்ணி, அதை உள்ளும் புறம்புமாகக்  கீல்பூசு.

இப்படியெல்லாம் தேவன் நோவாவிடத்தில் பேசி, பேழையின் அளவுகளையும் கூறினப்பின்பு,

ஆதியாகமம் 6:17

வானத்தின்கீழே ஜீவசுவாசமுள்ள சகல மாம்சஜந்துக்களையும் அழிக்க நான் பூமியின்மேல் ஜலப்பிரளயத்தை வரப்பண்ணுவேன்; பூமியிலுள்ள யாவும் மாண்டுபோம்.

மாம்ச கிரியைகளினால் பூமியில் பாவமும், அக்கிரமம் பெருகினது என்பது தெரிய வருகிறது. அதைத்தான்,

ஆதியாகமம் 6:1-4

மனுஷர் பூமியின் மேல்  பெருகத் துவக்கி, அவர்களுக்குக் குமாரத்திகள் பிறந்தபோது;

தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளை அதிக சௌந்தரியமுள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்டார்கள்.

அப்பொழுது கர்த்தர்: என் ஆவி என்றென்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை; அவன் மாம்சந்தானே, அவன் இருக்கப் போகிற நாட்கள் நூற்றிருபது வருஷம் என்றார்.

அந்நாட்களில் இராட்சதர் பூமியிலே இருந்தார்கள்; பின்பு தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளோடே கூடுகிறதினால், இவர்கள் அவர்களுக்குப் பிள்ளைகளைப் பெற்றபோது, இவர்களும் பூர்வத்தில் பேர்பெற்ற மனுஷராகிய பலவான்களானார்கள்.

இவ்விதமாக பூமியிலே அக்கிரமம்  அதிகரித்துக் கொண்டிருந்ததால் தேவன் பூமியில் வாழுகிற  மனுஷனுடைய ஆயுசு நாட்களை குறைத்து மனுஷன் தேவ ஆவியானவரால் நடத்தப்பட்டு, பழைய பாவம், அக்கிரமம்மீறுதல் எல்லாவற்றையும் பழைய பாவ சரீரம் அழிந்து, அது அடக்கம் பண்ணப்பட்டு புதிய சரீரமாக நாம் தேவ ஆவியினால் கிறிஸ்துவோடு உயிர்ப்பிக்கப்பட்டு என்றென்றைக்கும் மரியாமல் இருந்து தேவனை மகிமைப்படுத்தும் படியாக ஒரு திரிஷ்டாந்தத்துக்குள் காட்டுவதுதான் நோவாவுடைய பேழை

நோவாவுடைய பேழை  போய் தங்கினது  அரராத்  மலை. அரராத்  என்பது பரிசுத்த பர்வதம். பரிசுத்த பர்வதம் நம்முடைய தேவனாகிய கர்த்தர்  (கர்த்தராகிய இயேசு கிறிஸ்து).இதற்கு தான்  தேவன் பரிசுத்த ஆவியானவராகநம்மில் வந்து பாவத்தைக் குறித்தும்நீதியைக் குறித்தும்நியாயத் தீர்ப்பைக் குறித்தும் கண்டித்து உணர்த்துகிறார்.

பிரியமானவர்களே தேவனுடைய வார்த்தை கேட்ட  நோவா அப்படியே கீழ்ப்படிந்து உடனே தேவன் சொன்ன அளவின் படியெல்லாம் பேழையை  உண்டாக்குகிறான்.

ஆதியாகமம் 7:1

கர்த்தர் நோவாவை நோக்கி: நீயும் உன் வீட்டார் அனைவரும் பேழைக்குள் பிரவேசியுங்கள்; இந்தச் சந்ததியில் உன்னை எனக்கு முன்பாக நீதிமானாகக் கண்டேன்.

கர்த்தர் நோவாவிடத்தில் எல்லாவித மிருகஜீவன்களிலும், பறவைகளிலும்ஊரும்  பிராணிகள் பூமியில் இருக்கிற  எல்லா வித ஜந்துகளிலும் சுத்தமானதில்  எவ்வேழு ஜோடும்  சுத்தமில்லாததில்   ஒவ்வொரு ஜோடும்  பேழைக்குள்  சேர்க்க சொன்னார்நோவா தனக்கு கர்த்தர் கட்டளையிட்டபடியெல்லாம் செய்தான்.

ஆதியாகமம் 7:16

தேவன் அவனுக்குக் கட்டளையிட்டபடியே, ஆணும் பெண்ணுமாக சகலவித மாம்சஜந்துக்களும் உள்ளே பிரவேசித்தன; அப்பொழுது கர்த்தர் அவனை உள்ளே விட்டுக் கதவை அடைத்தார்.

அதைத்தான், மத்தேயு 25:1

அப்பொழுது, பரலோகராஜ்யம் தங்கள் தீவட்டிகளைப் பிடித்துக்கொண்டு, மணவாளனுக்கு எதிர்கொண்டுபோகப் புறப்பட்ட பத்துக் கன்னிகைகளுக்கு ஒப்பாயிருக்கும்.

                10 பேரில் 5 பேர் புத்தியுள்ளவர்கள், 5 பேர் புத்தியில்லாதவர்கள்.புத்தியுள்ள 5 பேரும் ஆண்டவருடைய வார்த்தைகளை கேட்டு இரட்சிக்கப்பட்டுஇரட்சிப்பை காத்துக் கொண்டார்கள். புத்தியில்லாத  5 பேரும் ஆண்டவருடைய வார்த்தைகளை கேட்டும் இரட்சிப்பை இழந்து கொண்டார்கள்.

மத்தேயு 25:5-10

மணவாளன் வரத் தாமதித்தபோது, அவர்கள் எல்லாரும் நித்திரைமயக்கமடைந்து  தூங்கிவிட்டார்கள்.

நடுராத்திரியிலே: இதோ, மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர்கொண்டுபோகப் புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டாயிற்று.

அப்பொழுது, அந்தக்  கன்னிகைகள் எல்லாரும் எழுந்திருந்து, தங்கள் தீவட்டிகளை ஆயத்தப்படுத்தினார்கள்.

புத்தியில்லாதவர்கள் புத்தியுள்ளவர்களை நோக்கி: உங்கள் எண்ணெயில் எங்களுக்குக் கொஞ்சங்கொடுங்கள், எங்கள் தீவட்டிகள் அணைந்துபோகிறதே என்றார்கள்.

புத்தியுள்ளவர்கள் பிரதியுத்தரமாக: அப்படியல்ல, எங்களுக்கும் உங்களுக்கும் போதாமலிராதபடி, நீங்கள் விற்கிறவர்களிடத்திற் போய், உங்களுக்காக வாங்கிக்கொள்ளுங்கள் என்றார்கள்.

அப்படியே அவர்கள் வாங்கப்போனபோது மணவாளன் வந்துவிட்டார்; ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடேகூடக் கலியாண வீட்டுக்குள் பிரவேசித்தார்கள்; கதவும் அடைக்கப்பட்டது.

எபேசியர் 5:14-17

ஆதலால், தூங்குகிற நீ விழித்து, மரித்தோரை விட்டு எழுந்திரு, அப்பொழுது கிறிஸ்து உன்னைப் பிரகாசிப்பிப் பாரென்று சொல்லியிருக்கிறார்.

ஆனபடியினாலே, நீங்கள் ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப்போலக் கவனமாய் நடந்துகொள்ளப்பார்த்து,

நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஐனப்படுத்திக்கொள்ளுங்கள்.

 

ஆகையால், நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள்.

 

ஜெபிப்போம், கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

-தொடர்ச்சி நாளை.