பழைய மனுஷனை களைந்து புதிய மனுஷனை தரிக்குதல்

சகோதரி. பி.கிறிஸ்டோபர் வாசினி
Apr 23, 2020


 


கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

பழைய (முந்தின மனுஷன்) ஆதாம் ஜீவாத்துமாவானான் என்றெழுதியிருக்கிறது. ஆதியாகமம் 2:7  தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்.

           

பிந்தின ஆதாம் உயிர்ப்பிக்கிற ஆவியானார்.ஆதாம் ஏவாளை தேவன் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்.

ஆதியாகமம் 1:27

தேவன் தம்முடையச் சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார்; அவனைத் தேவசாயலாகவேச் சிருஷ்டித்தார் ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.

ஆனால் தேவசாயலாக தேவனால், சிருஷ்டிக்கப்பட்டவர்கள் சர்ப்பத்தினால் வஞ்சிக்கப்பட்டுவிட்டதால் தேவ சாயலை இழந்து போனார்கள். அவர்களுக்கு மாம்ச கண்கள் திறக்கப்பட்டது.

ஆதியாகமம் 3:7

அப்பொழுது அவர்கள் இருவருடைய கண்களும் திறக்கப்பட்டது; அவர்கள் தாங்கள் நிர்வாணிகள் என்று அறிந்து, அத்தியிலைகளைத் தைத்து, தங்களுக்கு அரைக்கச்சைகளை உண்டுபண்ணினார்கள்.

ஆனால் தேவன் தோட்டத்தில் உலாவ வரும்போது, தேவனிடத்தில் நிற்க முடியாமல் ஆதாமும் ஏவாளும் கர்த்தருடைய சந்ததிக்கு விலகி தோட்டத்தில் விருட்சங்களுக்குள்ளே ஒழித்துக் கொண்டார்கள்.

அதனால் தேவன் அங்கு வைத்து 3 பேரையும் சபிக்கிறதை நாம் பார்க்கிறோம். தேவசாயல் நம்மை விட்டு போய்விட்டால் தேவன் நம்மில் கோபம் கொள்கிறவராக காணப்படுகிறார்.

அப்பொழுது தேவன் சபித்தது ஆதாமை ஆதியாகமம் 3:19 “நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்  நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் என்றார்”.

அதன் பின்பு ஆதாமுக்கும் ஏவாளுக்கும் பூமியிலே சந்ததிகள் உண்டாயின. காயீன், ஆபேல் இதைப் பற்றி வாசிக்கிறவர்களுக்கு புரியும். ஆதாம் ஏவாளை தேவன் தோட்டத்தை விட்டு துரத்தி மண்ணை பண்படுத்துமாறு அனுப்பினார். தோட்டத்திற்கு வெளியே போன பிற்பாடு பிறந்த பிள்ளைகள் ஒருவன் ஜீவனுள்ள காணிக்கையும், ஒருவன் ஜீவனற்ற காணிக்கையும் செலுத்துகிறார்கள். ஜீவனில்லாத காணிக்கையை தேவன் அங்கீகரிக்கவில்லை. ஜீவனுள்ள காணிக்கையை அங்கீகரித்தார். ஆனால் காயீனுக்கு ஆபேல் மேல் கோபம் வந்து, அவர்கள் இருவரும் வயல் வெளியில் இருக்கும்போது காயீன் ஆபேலை கொலை செய்கிறான், இதற்கு காரணம் என்ன என்றால் காயீனுக்கு எரிச்சல் காணப்படுகிறது. ஏன் என்றால் சர்ப்பத்தினால் வஞ்சிக்கப்பட்டு தேவனுடைய தோட்டத்துக்கு புறம்பே வந்து பெற்றெடுத்த பிள்ளைகள் (தேவ சாபம்).

அதன் பிறகு ஆதாமுக்கு சேத் என்ற குமாரன் பிறக்கிறான். சேத்துக்கும் ஒரு குமாரன் பிறக்கிறான். அவன் பெயர்  ஏனோஸ். அப்பொழுது மனுஷர்  கர்த்தருடைய நாமத்தைத் தொழுது கொள்ள ஆரம்பித்தார்கள்.மனுஷர்கள் பூமியின் மேல் பெருக துடங்கினார்கள்.

ஆதியாகமம் 6:5-8

மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும், கர்த்தர்  கண்டு,

தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர்  மனஸ்தாபப்பட்டார் அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது.

அப்பொழுது கர்த்தர் : நான் சிருஷ்டித்த மனுஷனைப் பூமியின்மேல் வைக்காமல், மனுஷன் முதற்கொண்டு, மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகாயத்துப் பறவைகள் பரியந்தமும் உண்டாயிருக்கிறவைகளை நிக்கிரகம்பண்ணுவேன்  நான் அவர்களை உண்டாக்கினது எனக்கு மனஸ்தாபமாயிருக்கிறது என்றார்.

நோவாவுக்கோ, கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது.

ஆதியாகமம் 6:11,12

பூமியானது தேவனுக்கு முன்பாகச் சீர்கெட்டதாயிருந்தது; பூமி கொடுமையினால் நிறைந்திருந்தது.

 

தேவன் பூமியைப் பார்த்தார் இதோ அது சீர்கெட்டதாயிருந்தது; மாம்சமான யாவரும் பூமியின்மேல் தங்கள் வழியைக் கெடுத்துக்கொண்டிருந்தார்கள்.

 

இவைதான் இப்போது மனுஷகுமாரன் நாளிலும் நடக்கிறது. நாம் கிறிஸ்துவோடு இணைக்கப்பட்ட பிறகு நாம் தேவசாயலை தரிக்கிறோம். ஆனால் தோட்டமாகிய நம்முடைய உள்ளம் (தேவன் உலாவுகிறார், நமக்கு உபதேசிக்கிறார்) பிசாசானவனால் வஞ்சிக்கப்பட்டு தேவனால் நமக்கு விலக்கி வைத்திருக்கிற காரியங்களை நாம் துணிகரமாக செய்கிறோம். நிர்விசாரமாக நடக்கிறோம். அதனால் தேவன் இந்த நாளில் முந்தின மனுஷனாகிய ஆதாம் ஏவாளுடைய கிரியைகளை அழித்து புதிய மனுஷர்  (கர்த்தராகிய இயேசுகிறிஸ்து) தரித்து கொள்ளும்படி நம்மை புதிதாக்கும்படியாக எதிர்பார்க்கிறார்.

 

 

நாம் ஜெபிப்போம்.

 

-தொடர்ச்சி நாளை