10. தீர்க்கதரிசனங்கள்:
கிறிஸ்துவுக்குள்
பிரியமானவர்களே, தீர்க்கதரிசனங்களை
அற்பமாய் எண்ணக்
கூடாது. தீர்க்கதரிசன வார்த்தைகளை நாம் சோதித்து பார்த்து
நலமானதை பிடித்துக்கொண்டு
பொல்லாங்காய் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டு
விட வேண்டும்.
பரிசுத்த
வேத புஸ்தகத்தில் நாம் வாசிக்கும்போது தேவன்
தம்முடைய பரிசுத்தவான்களை எழுப்பி
அவர்கள் மூலம் தேவனுடைய வார்த்தைகளை
பேசுகிறதை நாம் பார்க்கிறோம்.
எந்த தீர்க்கதரிசிகள் புஸ்தகத்தை நாம் தியானித்தாலும் தேவன்
தம்முடைய நீதியையும், நியாயத்தையும்
நம்மளில் நிலைநாட்டும்
படியாக எச்சரித்தும், கண்டித்தும் உணர்த்துகிறதை நாம் பார்க்கிறோம்.
வெளி
22:18, 19
இந்தப்
புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது:
ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார்.
ஒருவன்
இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்.
தீர்க்கதரிசனத்தை கர்த்தர் சொல்லுகிறது,
எரேமியா 23:28
சொப்பனங்கண்ட
தீர்க்கதரிசி சொப்பனத்தை விவரிப்பானாக; என் வார்த்தையுள்ளவனோ, என் வார்த்தையை
உண்மையாய்ச் சொல்வானாக; கோதுமைக்குமுன் பதர் எம்மாத்திரம்? என்று
கர்த்தர் சொல்லுகிறார்.
உண்மையான
தேவனுடைய வார்த்தை கோதுமை
என்றும், பொய் வார்த்தையை பதர் என்றும் சொல்கிறார்.
எரேமியா
23:29-32
என்
வார்த்தை அக்கினியைப்போலும், கன்மலையை நொறுக்கும் சம்மட்டியைப்போலும் இருக்கிறதல்லவோ? என்று கர்த்தர் சொல்லுகிறார்.
ஆகையால், இதோ,
ஒவ்வொருவராய்த் தன்தன் அயலாரிடத்தில் என் வார்த்தையைத் திருட்டுத்தனமாய்
எடுக்கிற தீர்க்கதரிசிகளுக்கு நான் விரோதி என்று
கர்த்தர் சொல்லுகிறார்.
இதோ,
தங்கள் நாவின் சொல்லையே வழங்கி: அவர் அதை உரைத்தார்
என்று சொல்லுகிற தீர்க்கதரிசிகளுக்கு நான் விரோதி என்று
கர்த்தர் சொல்லுகிறார்.
இதோ,
பொய்ச்சொப்பனங்களைத் தீர்க்கதரிசனமாகச் சொல்லி, அவைகளை விவரித்து, என் ஜனத்தைத் தங்கள்
பொய்களினாலும், தங்கள் வீம்புகளினாலும், மோசம்போக்குகிறவர்களுக்கு நான் விரோதி என்று
கர்த்தர் சொல்லுகிறார்;நான் அவர்களை அனுப்பினதுமில்லை,
அவர்களுக்குக் கற்பித்ததுமில்லை; அவர்கள் இந்த ஜனத்துக்கு ஒரு
பிரயோஜனமாய் இருப்பதுமில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார்.
எரேமியா
23:10, 11
தேசம்
விபசாரக்காரரால் நிறைந்திருக்கிறது, தேசம் சாபத்தினால் துக்கிக்கிறது, வனாந்தரத்தின் மேய்ச்சல்கள் வாடிப்போகிறது; அவர்கள் ஓட்டம் பொல்லாதது; அவர்கள் பெலன் அநியாயமாயிருக்கிறது.
தீர்க்கதரிசியும்
ஆசாரியனும் மாயக்காரராயிருக்கிறார்கள்; என் ஆலயத்திலும் அவர்களுடைய
பொல்லாப்பைக் கண்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
எரேமியா
23:12
ஆதலால்,
அவர்கள் வழி அவர்களுக்கு இருட்டிலே
சறுக்கலான வழியாயிருக்கும், துரத்துண்டு அதிலே விழுவார்கள்;அவர்கள் விசாரிக்கப்படும் வருஷத்திலே அவர்கள்மேல் பொல்லாப்பை வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
பிரியமானவர்களே
தேவன் நம்மோடு தீர்க்கதரிசிகள் இவ்விதமான தோற்றங்களில் எல்லாம் பேசுவார்கள் என்பதை
நமக்கு விளக்கிக்
காட்டுகிறது தான் இந்த வசனங்கள்.
எரேமியா
23:13-17
சமாரியாவின்
தீர்க்கதரிசிகளிலோ மதிகேட்டைக் கண்டேன்; பாகாலைக்கொண்டு தீர்க்கதரிசனஞ்சொல்லி இஸ்ரவேல்
என்னும் என் ஜனத்தை மோசம்போக்கினார்கள்.
எருசலேமின்
தீர்க்கதரிசிகளிலும் திடுக்கிடத்தக்க காரியத்தைக் காண்கிறேன்; விபசாரம்பண்ணி, வஞ்சகமாய் நடந்து, ஒருவனும் தன் பொல்லாப்பை விட்டுத்
திரும்பாதபடிக்குப் பொல்லாதவர்களின் கைகளைத் திடப்படுத்துகிறார்கள்; அவர்கள் எல்லாரும் எனக்குச் சோதோமைப்போலும், அதின் குடிகள் கொமோராவைப்போலும் இருக்கிறார்கள்.
ஆதலால்
சேனைகளின் கர்த்தர் தீர்க்கதரிசிகளைக்குறித்து: இதோ, நான் அவர்களுக்குப்
புசிக்க எட்டியையும், குடிக்கப் பிச்சுக்கலந்த தண்ணீரையும் கொடுப்பேன்; எருசலேமின் தீர்க்கதரிசிகளிலிருந்து மாயமானது தேசமெங்கும் பரம்பிற்றே என்று சொல்லுகிறார்.
உங்களுக்குத்
தீர்க்கதரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளைக் கேளாதிருங்கள்; அவர்கள் உங்களை வீண்பெருமை கொள்ளும்படி செய்கிறார்கள்; கர்த்தருடைய வாக்கை அல்ல, தாங்கள் யூகித்த தரிசனத்தைச் சொல்லுகிறார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
அவர்கள்
என்னை அசட்டை பண்ணுகிறவர்களை நோக்கி: உங்களுக்குச் சமாதானம் இருக்குமென்று கர்த்தர் சொன்னாரென்று சொல்லுகிறதுமல்லாமல்;தங்கள் இருதயத்தின் கடினத்திலே நடக்கிற யாவரையும் நோக்கி: உங்கள்மேல் பொல்லாப்புவராதென்றும் சொல்லுகிறார்கள்.
இவ்விதமாக
தீர்க்கதரிசனங் சொல்லுகிறவர்களை தேவன் துன்மார்க்கர் என்று சொல்லுகிறார்.
எரேமியா
23:19-21
இதோ,
கர்த்தருடைய பெருங்காற்றாகிய கொடிய புயல் புறப்பட்டது; அது துன்மார்க்கருடைய தலையின்மேல்
உக்கிரமாய் மோதும்.
கர்த்தர்
தம்முடைய இருதயத்தின் நினைவுகளை நடப்பித்து நிறைவேற்றுமளவும், அவருடைய கோபம் தணியாது; கடைசிநாட்களில் அதை நன்றாய் உணருவீர்கள்.
அந்தத்
தீர்க்கதரிசிகளை நான் அனுப்பாதிருந்தும் அவர்கள் ஓடினார்கள்;
அவர்களோடே நான் பேசாதிருந்தும் அவர்கள்
தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள்.
நம்முடைய தேவனாகிய கர்த்தர் அனுப்புகிற
தீர்க்கதரிசி
யார்?
உபாகமம்
18:15-22
உன்
தேவனாகிய கர்த்தர் என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உனக்காக
உன் நடுவே உன் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணுவார்;
அவருக்குச் செவிகொடுப்பீர்களாக.
ஓரேபிலே
சபை கூட்டப்பட்ட நாளில்: நான் சாகாதபடி என்
தேவனாகிய கர்த்தரின் சத்தத்தை இனி நான் கேளாமலும்,
இந்தப் பெரிய அக்கினியை இனி நான் காணாமலும்
இருப்பேனாக என்று உன் தேவனாகிய கர்த்தரை
நீ வேண்டிக்கொண்டதின்படியெல்லாம்
அவர் செய்வார்.
அப்பொழுது
கர்த்தர் என்னை நோக்கி: அவர்கள் சொன்னது சரியே.
உன்னைப்போல
ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள்
சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணி, என் வார்த்தைகளை அவர்
வாயில் அருளுவேன்; நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம்
அவர்களுக்குச் சொல்லுவார். (அவர் தான் கிறிஸ்து)
என்
நாமத்தினாலே அவர் சொல்லும் என்
வார்த்தைகளுக்குச் செவிகொடாதவன் எவனோ அவனை நான்
விசாரிப்பேன்.
சொல்லும்படி
நான் கட்டளையிடாத வார்த்தையை என் நாமத்தினாலே சொல்லத்
துணியும் தீர்க்கதரிசியும், வேறே தேவர்களின் நாமத்தினாலே
பேசும் தீர்க்கதரிசியும் சாகக்கடவன்.
கர்த்தர்
சொல்லாத வார்த்தை இன்னதென்று நான் எப்படி அறிவேன்
என்று நீ உன் இருதயத்தில்
சொல்வாயாகில்,
ஒரு தீர்க்கத்தரிசி கர்த்தரின்
நாமத்தினாலே சொல்லும் காரியம் நடவாமலும் நிறைவேறாமலும்போனால், அது கர்த்தர் சொல்லாத
வார்த்தை; அந்தத் தீர்க்கதரிசி அதைத் துணிகரத்தினால் சொன்னான்;அவனுக்கு நீ பயப்படவேண்டாம்.
( எடுத்துக்காட்டாக
சவுல் என்பவனை தேவனாகிய கர்த்தர் சாமுவேல் மூலம் இஸ்ரவேலுக்கு ராஜாவாக அபிஷேகம் பண்ணினார். )
1 சாமுவேல் 10:6-10
அப்பொழுது
கர்த்தருடைய ஆவி உன்மேல் இறங்குவார்;
நீ அவர்களோடே கூடத் தீர்க்கதரிசனம் சொல்லி, வேறு மனுஷனாவாய்.
இந்த
அடையாளங்கள் உனக்கு நேரிடும்போது, சமயத்துக்கு ஏற்றபடி நீ செய்; தேவன்
உன்னோடே இருக்கிறார்.
நீ எனக்கு முன்னே கில்காலுக்கு இறங்கிப்போ; சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தும்படிக்கு, நான் உன்னிடத்தில் வருவேன்;
நான் உன்னிடத்தில் வந்து, நீ செய்ய வேண்டியதை
உனக்கு அறிவிக்குமட்டும், ஏழுநாள் காத்திரு என்றான்.
அவன்
சாமுவேலை விட்டுப் போகும்படி திரும்பினபோது, தேவன் அவனுக்கு வேறே இருதயத்தைக் கொடுத்தார்;
அந்த அடையாளங்கள் எல்லாம் அன்றையதினமே நேரிட்டது.
அவர்கள்
அந்த மலைக்கு வந்தபோது, இதோ, தீர்க்கதரிசிகளின் கூட்டம் அவனுக்கு
எதிராக வந்தது; அப்பொழுது தேவனுடைய ஆவி அவன்மேல் இறங்கினதினால்,
அவனும் அவர்களுக்குள்ளே தீர்க்கதரிசனம் சொன்னான்.
கர்த்தருடைய
வார்த்தை தீர்க்கதரிசனமாக செல்ல வேண்டுமானால், சொல்லுகிறவர்களின்
இருதயம் புதிய இருதயமாக (கிறிஸ்துவின் இருதயமாக
இருக்க
வேண்டும்.)
இல்லாவிட்டால்
பொல்லாத ஆவி வஞ்சித்திருக்கும், தேவனுடைய
வார்த்தை என்று நாம் ஏமாந்து விடுவோம்.
தீர்க்கதரிசனத்தில்
பலவித தீர்க்கதரிசனங்களை குறித்து தேவன்
நமக்கு எழுதியிருக்கிறார்.
கர்த்தர் இஸ்ரவேலின்
ராஜாவாகிய ஆகாபிடத்தில் மிகுந்த
கோபமுடையவராக இருந்தார். ஏனென்றால்
அவன் திராட்சைதோட்டத்துக்கு விரோதமாக
செயல்பட்டு கொண்டிருந்தான்.
1 இராஜாக்கள் 22:20-23
அப்பொழுது
கர்த்தர்: ஆகாப் போய், கீலேயாத்திலுள்ள ராமோத்தில் விழும்படிக்கு, அவனுக்குப் போதனை செய்கிறவன் யார் என்று கேட்டதற்கு,
ஒருவன் இப்படியும் ஒருவன் அப்படியும் சொன்னார்கள்.
அப்பொழுது
ஒரு ஆவி புறப்பட்டு வந்து,
கர்த்தருக்கு முன்பாக நின்று: நான் அவனுக்குப் போதனை
செய்வேன் என்றது.
எதினால்
என்று கர்த்தர் அதைக் கேட்டார். அப்பொழுது அது: நான் போய்,
அவனுடைய தீர்க்கதரிசிகள் எல்லாரின் வாயிலும் பொய்யின் ஆவியாய் இருப்பேன் என்றது. அதற்கு அவர்: நீ அவனுக்குப் போதனைசெய்து
அப்படி நடக்கப்பண்ணுவாய்; போய் அப்படிச் செய் என்றார்.
ஆதலால்
கர்த்தர் பொய்யின் ஆவியை இந்த உம்முடைய தீர்க்கதரிசிகளாகிய
இவர்கள் எல்லாருடைய வாயிலும் கட்டளையிட்டர்; கர்த்தர் உம்மைக்குறித்துத் தீமையாகச் சொன்னார் என்றான்.
இவ்விதமாக
தேவனுக்குப் பிரியமில்லாமல் நடப்போமானால் தேவன் பொய்யின் ஆவியை நமக்குள்ளாகவும் அனுப்புவார்.
பொய்யின் ஆவியை அனுப்பி
நாம் வஞ்சிக்கப்பட நமக்குள் வஞ்சகத்தின் ஆவியையும்
அனுப்புவார். அதனால், நாம்
எப்போதும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். அதை தான்,
2 தெசலோனிக்கேயர் 2:10-12
கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே
அநீதியினால் உண்டாகும் சகலவித வஞ்சகத்தோடும் இருக்கும். இரட்சிக்கப்படத்தக்கதாய்ச் சத்தியத்தின்மேலுள்ள அன்பை அவர்கள் அங்கிகரியாமற்போனபடியால் அப்படி நடக்கும்.
ஆகையால்
சத்தியத்தை விசுவாசியாமல் அநீதியில் பிரியப்படுகிற யாவரும் ஆக்கினைக்குள்ளாக்கப்படும்படிக்கு,
அவர்கள்
பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய வஞ்சகத்தைத் தேவன் அவர்களுக்கு அனுப்புவார்.
ஜெபிப்போம். கர்த்தர்
யாவரையும்
ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.