Apr 19, 2020

கர்த்தருக்குள் பிரியமானவர்களே கழிந்த நாட்களில் நம்முடைய ஆவி,  ஆத்துமா சரீரம் முழுவதும் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாக  இருக்கும் படியாக எட்டுத் தலைப்புகளில் தேவ வசனத்தை தியானித்தோம்.  அவைகள் யாவருக்கும் பிரயோஜனமாயிருந்தக்கும் என கிறிஸ்துவுக்குள் நம்பிக்கையாயிருக்கிறேன் மேற்குறிக்கப்பட்டுள்ள தேவனுடைய வசனங்கள் மூலம் நாம் ஒவ்வொருவரும் நடந்து கொள்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களை குறித்துத்  தேவனுடைய சித்தமாயிருக்கிறது. அடுத்தபடியாக நாம் பார்ப்பது என்னவென்றால்,

9.ஆவியை அவித்து போடாதிருங்கள்:

ஏசாயா 42:1-8

இதோ, நான் ஆதரிக்கிற என் தாசன், நான் தெரிந்துகொண்டவரும், என் ஆத்துமாவுக்குப் பிரியமானவரும் இவரே; என் ஆவியை அவர்மேல் அமரப்பண்ணினேன்; அவர் புறஜாதிகளுக்கு நியாயத்தை வெளிப்படுத்துவார்.

அவர் கூக்குரலிடவுமாட்டார், தம்முடைய சத்தத்தை உயர்த்தவும் அதை வீதியிலே கேட்கப்பண்ணவுமாட்டார்.

அவர் நெரிந்தநாணலை முறியாமலும், மங்கியெரிகிற திரியை அணையாமலும், நியாயத்தை உண்மையாக வெளிப்படுத்துவார்.

அவர் நியாயத்தைப் பூமியிலே நிலைப்படுத்துமட்டும் இளக்கரிப்பதுமில்லை, பதறுவதுமில்லை, அவருடைய வேதத்துக்குத் தீவுகள் காத்திருக்கும்.

வானங்களைச் சிருஷ்டித்து, அவைகளை விரித்து, பூமியையும், அதிலே உற்பத்தியாகிறவைகளையும் பரப்பினவரும், அதில் இருக்கிற ஜனத்துக்குச் சுவாசத்தையும், அதில் நடமாடுகிறவர்களுக்கு ஆவியையும் கொடுக்கிறவருமான கர்த்தராகிய தேவன் சொல்லுகிறதாவது:

நீர் குருடருடைய கண்களைத் திறக்கவும், கட்டுண்டவர்களைக் காவலிலிருந்தும், இருளில் இருக்கிறவர்களைச் சிறைச்சாலையிலிருந்தும் விடுவிக்கவும்,

கர்த்தராகிய நான் நீதியின்படி உம்மை அழைத்து, உம்முடைய கையைப் பிடித்து, உம்மைத் தற்காத்து, உம்மை ஜனத்திற்கு உடன்படிக்கையாகவும், ஜாதிகளுக்கு ஒளியாகவும் வைக்கிறேன்.

நான் கர்த்தர்,  இது என் நாமம்; என் மகிமையை வேறொருவனுக்கும், என் துதியை விக்கிரகங்களுக்கும் கொடேன்.

இந்த வசனங்களை நாம் தியானிக்கும் போது தேவன் தம்முடைய ஆவியை தம்முடைய குமாரனில் அமரபண்ணியிருக்கிறார்.  அது தான் இயேசு கிறிஸ்து,

யோவான் 14:1-3

உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்.

என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன்.

நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்.

யோவான் 14:12-18

மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப்பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான்.

நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக, அதைச் செய்வேன்.

என் நாமத்தினாலே நீங்கள் எதைக் கேட்டாலும் அதை நான் செய்வேன்.

நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்.

நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்.

உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது;அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்.

 நான் உங்களைத் திக்கற்றவர்களாகவிடேன், உங்களிடத்தில் வருவேன்.

யோவான் 16:8-11

அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்.

அவர்கள் என்னை விசுவாசியாதபடியினாலே பாவத்தைக்குறித்தும்,

 

நீங்கள் இனி என்னைக் காணாதபடிக்கு நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினாலே நீதியைக்குறித்தும்,

இந்த உலகத்தின் அதிபதி நியாயந்தீர்க்கப்பட்டதினாலே நியாயத்தீர்ப்பைக்குறித்தும், கண்டித்து உணர்த்துவார்.

 இவ்விதமாக நம்முடைய கர்த்தரும்,  இரட்சகருமாயிருக்கிற  இயேசுகிறிஸ்து நெரிந்த நாணலை  முறிய விடாமலும், மங்கியெரிகிற திரியை அணையாமலும்,  நியாயத்தை உண்மையாக வெளிப்படுத்தி நம்மை அனுதினம் காத்துக் கொள்வார்.

யோவான் 17:24-26

பிதாவே, உலகத்தோற்றத்துக்கு முன் நீர் என்னில் அன்பாயிருந்தபடியினால், நீர் எனக்குத் தந்த என்னுடைய மகிமையை நீர் எனக்குத் தந்தவர்கள் காணும்படியாக, நான் எங்கே இருக்கிறேனோ அங்கே அவர்களும் என்னுடனேகூட இருக்க விரும்புகிறேன்.

நீதியுள்ள பிதாவே, உலகம் உம்மை அறியவில்லை, நான் உம்மை அறிந்திருக்கிறேன்; நீர் என்னை அனுப்பினதை இவர்களும் அறிந்திருக்கிறார்கள்.

நீர் என்னிடத்தில் வைத்த அன்பு அவர்களிடத்திலிருக்கும்படிக்கும், நானும் அவர்களிலிருக்கும்படிக்கும், உம்முடைய நாமத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்தினேன்; இன்னமும் தெரியப்படுத்துவேன் என்றார்.

 மேலும் சகோதர,  சகோதரிகளே நாம் நம்மை அனுதின தேவ  வசனத்தால் காத்துக் கொள்ளவேண்டும். அனுதினம் ஜெபத்திலும்,  பரிசுத்தத்திலும், வேத  வசன தியானிப்பிலும்  மிகவும் விழித்திருப்பவர்களாக காணப்பட வேண்டும், என்றால் நமக்குள்ளாக உள்ளான மனுஷனுடைய முகம் மலரும். அதுதான்,

நீதிமொழிகள் 15:13

மனமகிழ்ச்சி முகமலர்ச்சியைத் தரும்; மனோதுக்கத்தினாலே ஆவிமுறிந்துபோம்.

ஏசாயா 63:7-10

கர்த்தர் எங்களுக்குச் செய்தருளின எல்லாவற்றிற்கும் தக்கதாகவும், அவர் தம்முடைய இரக்கங்களின்படியும் தம்முடைய திரளான தயவுகளின்படியும், இஸ்ரவேல் வம்சத்துக்குச் செய்த மகா நன்மைக்குத்தக்கதாகவும், கர்த்தருடைய கிரியைகளையும், கர்த்தருடைய துதிகளையும் பிரஸ்தாபம்பண்ணுவேன்.

அவர்கள் என் ஜனந்தானென்றும், அவர்கள் வஞ்சனைசெய்யாதிருக்கும் பிள்ளைகளென்றும் சொல்லி, அவர்களுக்கு இரட்சகரானார்.

அவர்களுடைய எல்லா நெருக்கத்திலும் அவர் நெருக்கப்பட்டார்; அவருடைய சமுகத்தின் தூதனானவர் அவர்களை இரட்சித்தார்;அவர் தமது அன்பினிமித்தமும், தமது பரிதாபத்தினிமித்தமும் அவர்களை மீட்டு, பூர்வநாட்களிலெல்லாம் அவர்களைத் தூக்கிச்சுமந்துவந்தார்.

அவர்களோ கலகம்பண்ணி, அவருடைய பரிசுத்த ஆவியை விசனப்படுத்தினார்கள்; அதினால் அவர் அவர்களுக்குச் சத்துருவாய் மாறி, அவரே அவர்களுக்கு விரோதமாய் யுத்தம்பண்ணினார்.

இவற்றை வாசித்து தியானிக்கிற  பிரியமானவர்களே,  தேவன் நம்மை சத்துருவின் கையிலிருந்து விடுவித்து, நீங்களாக்கி  இரட்சித்த விதத்தை நாம் நன்றாக சிந்தித்து தேவன் நமக்கு தந்திருக்கிற  பரிசுத்த ஆவியை விசனபடுத்தாதபடி   ஜாக்கிரதையாக காத்துக்கொள்ள வேண்டும்.

அவருக்கு விரோதமாக கலகம் பண்ணினால் தேவனே நமக்கு சத்துருவாக மாறி விடுவார்.

            அதனால்,  கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே நாம் எந்த சோதனை நெருக்கங்கள் வந்தாலும் பரிசுத்த ஆவியை துக்கப் படுத்துகிற  செயல்களை செய்யாதபடி நம்மை பாதுகாக்க வேண்டும்.

எபேசியர் 4:30-32    

அன்றியும், நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்.

சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், துஷணமும், மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களை விட்டு நீங்கக்கடவது.

ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.

இவ்விதமாக நாம் அனுதினம் பரிசுத்தமாக காத்துக் கொள்வோம். ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் ஆசீர்வதிப்பார்.

 

-தொடர்ச்சி நாளை.