8.எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரம் செய்யுங்கள்:
அன்பானவர்களே
நாம் எல்லாரிடத்திலேயும் தேவனுக்கு எப்போதும் ஸ்தோத்திரம் செலுத்த வேண்டும் என்பது தேவன் நமக்கு நியமித்து தந்து இருக்கிற ஒரு முக்கியமான
கட்டளை என்று நாம் அறிந்து கொள்ள
வேண்டும். வேதபுத்தகத்தில் பார்க்கும்போது இவ்விதமாக நம்முடைய பழைய முற்பிதாக்கள்,
நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தேவனை ஸ்தோத்தரிக்கிறதை
நாம் பார்க்கிறோம். அந்த
இடங்கள் வரும் போது நம்முடைய உள்ளம்
மிகவும் சந்தோஷப் படும். நாம் எல்லோரும் எல்லா
நிலையிலும் தேவனுக்கு துதியும், ஸ்தோத்திரமும் அல்லேலூயா
என்ற ஆர்ப்பரிப்பும் தேவனுக்கு செலுத்தும்
போது நாம் அல்ல நம்மளில்
இருக்கிற கிறிஸ்து மூலம் தேவன் மகிமைபடுகிறார் அதனால்
நாம் எப்போதும் தேவனை ஸ்தோத்தரிப்பதற்கு கடனாளிகளhருக்கிறோம்.
சங்கீதம்
50:23
ஸ்தோத்திர
பலியிடுகிறவன் என்னை மகிமைப்படுத்துகிறான்; தன் வழியைச் செவ்வைப்படுத்துகிறவனுக்கு
தேவனுடைய இரட்சிப்பை வெளிப்படுத்துவேன் என்று சொல்லுகிறார்.
சங்கீதம்
50:14-15
நீ தேவனுக்கு ஸ்தோத்திரபலியிட்டு, உன்னதமானவருக்கு உன் பொருத்தனைகளைச் செலுத்தி;
ஆபத்துக்காலத்தில்
என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன்,
நீ என்னை மகிமைப்படுத்துவாய்.
ஆனால்
நாம் நமக்கு சோதனையோ, ஆபத்து
நேரிடும் நாட்களில் நாம் சோர்ந்து துக்கித்து இருப்போம்.
அப்படியல்ல தேவனுடைய வார்த்தை என்ன சொல்லுகிறது, எந்த
ஆபத்து காலமாக இருந்தாலும் முதலில் தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்துவோமானால், நம்முடைய
ஜெபம் உடனே தேவன் கேட்டு
நமக்கு தேவன் நல்ல மறுபடி நல்குகிறார். மீண்டும்
அந்த மறுபடியின் காரணமாக
நாம் தேவனுக்கு
மகிமை செலுத்துகிறோம் அதனால் நாம் ஒன்று சிந்திக்க
வேண்டும். நமக்கு ஒரு ஆபத்து வருகிறது
என்றால் தேவன் மகிமை படுவதற்கு அது ஏதுவாயிருக்கிறது. பெத்தானியாவில்
லாசரு மரித்தான் ஆனால், இயேசு கிறிஸ்து அங்கு வந்தது தாமதித்தது. ஆனால், இயேசு
கல்லை எடுத்துப் போடுங்கள் என்று தான் சொன்னார்.
யோவான்
11:41
அப்பொழுது
மரித்தவன் வைக்கப்பட்ட இடத்திலிருந்த கல்லை எடுத்துப் போட்டார்கள். இயேசு தம்முடைய கண்களை ஏறெடுத்து: பிதாவே, நீர் எனக்குச் செவிகொடுத்தபடியினால்
உம்மை ஸ்தோத்தரிக்கிறேன்.
நம்முடைய
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து எப்படி, தேவனை நாம் ஸ்தோத்தரிக்க வேண்டும்
என்று, நமக்கு கற்று தந்த இடம் தான்
இது.
யோவான்
12:13
குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு, அவருக்கு எதிர்கொண்டுபோகும்படி புறப்பட்டு: ஓசன்னா, கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற இஸ்ரவேலின் ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று ஆர்ப்பரித்தார்கள்.
சங்கீதம் 147:12
எருசலேமே,
கர்த்தரை ஸ்தோத்திரி; சீயோனே,
உன் தேவனைத் துதி.
ரோமர்
8:28
அன்றியும்,
அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில்
அன்புகூருகிறவர்களுக்குச்
சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.
அதனால்
நாம் எப்போதும் எல்லாவற்றிலேயும் தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்துகிறவர்களாய் இருக்க வேண்டும்.
வெளி
19:1
இவைகளுக்குப்பின்பு,
பரலோகத்தில் திரளான ஜனக்கூட்டம் இடுகிற ஆரவாரத்தைக் கேட்டேன். அவர்கள்: அல்லேலூயா. இரட்சணியமும் மகிமையும் கனமும் வல்லமையும் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியது; அவருடைய நியாயத்தீர்ப்புகள் சத்தியமும் நீதியுமானவைகள்.
வெளி
19:3-6
மறுபடியும்
அவர்கள்: அல்லேலூயா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள். அவளுடைய புகை என்றென்றைக்கும் எழும்புகிறது
என்றார்கள்.
இருபத்துநான்கு
மூப்பர்களும், நான்கு ஜீவன்களும் வணக்கமாய் விழுந்து: ஆமென், அல்லேலூயா, என்று சொல்லி, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும் தேவனைத் தொழுதுகொண்டார்கள்.
மேலும்,
நமது தேவனுடைய ஊழியக்காரரே, அவருக்குப் பயப்படுகிற சிறியோரும் பெரியோருமானவர்களே, நீங்கள் யாவரும் அவரைத் துதியுங்கள் என்று ஒரு சத்தம் சிங்காசனத்திலிருந்து
பிறந்தது.
அப்பொழுது
திரளான ஜனங்கள் இடும் ஆரவாரம்போலவும், பெருவெள்ள இரைச்சல்போலவும், பலத்த இடிமுழக்கம்போலவும், ஒரு சத்தமுண்டாகி: அல்லேலூயா,
சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் ராஜ்யபாரம்பண்ணுகிறார்.
சங்கீதம்
145:17-21
கர்த்தர்
தமது வழிகளிலெல்லாம் நீதியுள்ளவரும், தமது கிரியைகளிலெல்லாம் கிருபையுள்ளவருமாயிருக்கிறார்.
தம்மை
நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார்.
அவர்
தமக்குப் பயந்தவர்களுடைய விருப்பத்தின்படி செய்து, அவர்கள் கூப்பிடுதலைக் கேட்டு, அவர்களை இரட்சிக்கிறார்.
கர்த்தர்
தம்மில் அன்புகூருகிற யாவரையும் காப்பாற்றி, துன்மார்க்கர் யாவரையும் அழிப்பார்.
என்
வாய் கர்த்தரின் துதியைச் சொல்வதாக; மாம்சதேகமுள்ள யாவும் அவருடைய பரிசுத்த நாமத்தை எப்பொழுதும் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கக்கடவது.
பிரியமானவர்களே, எபிரெயர்
13:14, 15
நிலையான
நகரம் நமக்கு இங்கே இல்லை; வரப்போகிறதையே நாடித் தேடுகிறோம்.
ஆகையால்,
அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர்மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம்.
2 கொரிந்தியர் 4:13-15
விசுவாசித்தேன்,
ஆகையால் பேசினேன் என்று எழுதியிருக்கிறபடி, நாங்களும் அந்த விசுவாசத்தின் ஆவியை
உடையவர்களாயிருந்து, விசுவாசிக்கிறபடியால் பேசுகிறோம்.
கர்த்தராகிய
இயேசுவை எழுப்பினவர் எங்களையும் இயேசுவைக்கொண்டு எழுப்பி, உங்களுடனேகூடத் தமக்குமுன்பாக நிறுத்துவாரென்று அறிந்திருக்கிறோம்.
தேவனுடைய
மகிமை விளங்குவதற்கேதுவாகக் கிருபையானது அநேகருடைய ஸ்தோத்திரத்தினாலே பெருகும்படிக்கு, இவையெல்லாம் உங்கள்நிமித்தம் உண்டாயிருக்கிறது.
ஆதலால் பிரியமானவர்களே, நம்முடைய ஆவி ஆத்துமா, சரீரம்
முழுமையும் பரிசுத்தமாக காத்துக் கொள்வதற்கு நாம் எப்போதும் எல்லாவற்றிலேயும்
தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்துகிறth;fshயிருக்க வேண்டும். அப்போது தேவனுடைய மகிமை நம்மளில் விளங்கவும், மற்றவர்களுக்கு
பிரயோஜனப் படவும் நமக்குள்
கிருபையானது பெருகும். ஜெபிப்போம். கர்த்தர் யாவரையும்
ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி
நாளை