6. எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்:
கர்த்தருக்குள்
பிரியமானவர்களே எப்போதும் சந்தோஷமாயிருப்பது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள். நாம்
எப்பொழுதும் சந்தோஷமாயிருப்பது எப்படி?
பல
கவலைகள் நம்மை நெருக்குவதால் நமக்கு எப்போதும் எப்படி சந்தோஷமாயிருக்க முடியும் என்ற கேள்வி எழும்புகிறது.
பிரியமானவர்களே, உண்மையாகவே
நாம் இயேசு
கிறிஸ்துவை உள்ளத்தில் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டால் நம்முடைய உள்ளம் எப்போதும் கிறிஸ்துவைப் பற்றிய வசனங்களை நாம் ஏற்றுக்கொள்வோம். நம்முடைய
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொல்கிறார்.
யோவான்
16:20-24
மெய்யாகவே
மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்:
நீங்கள் அழுது புலம்புவீர்கள், உலகமோ சந்தோஷப்படும்; நீங்கள் துக்கப்படுவீர்கள், ஆனாலும் உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்.
ஸ்திரீயானவளுக்குப்
பிரசவகாலம் வந்திருக்கும்போது அவள் துக்கமடைகிறாள்; பிள்ளைபெற்றவுடனே
ஒரு மனுஷன் உலகத்தில் பிறந்தானென்கிற சந்தோஷத்தினால் அப்புறம் உபத்திரவத்தை நினையாள்.
அதுபோல
நீங்களும் இப்பொழுது துக்கமடைந்திருக்கிறீர்கள் நான் மறுபடியும் உங்களைக்
காண்பேன், அப்பொழுது உங்கள் இருதயம் சந்தோஷப்படும், உங்கள் சந்தோஷத்தை ஒருவனும் உங்களிடத்திலிருந்து எடுத்துப்போடமாட்டான்.
அந்த
நாளிலே நீங்கள் என்னிடத்தில் ஒன்றுங் கேட்கமாட்டீர்கள். மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்,
நீங்கள் என் நாமத்தினாலே பிதாவினிடத்தில்
கேட்டுக்கொள்வதெதுவோ அதை அவர் உங்களுக்குத்
தருவார்.
இதுவரைக்கும்
நீங்கள் என் நாமத்தினாலே ஒன்றும்
கேட்கவில்லை; கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள்.
நம்முடைய
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நீங்கள் என் நாமத்தினால் ஒன்றும்
கேட்கவில்லை என்று சொல்வது நாம் உலக ஆசீர்வாதத்தை
மட்டும் கேட்பதால் இயேசு கிறிஸ்து அவ்விதம் பேசுகிறார்.
யோவான்
16:23
அந்த
நாளிலே நீங்கள் என்னிடத்தில் ஒன்றுங் கேட்கமாட்டீர்கள். மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், என்று
இயேசு கிறிஸ்து சொல்வது காரணம் மறுபடியும் கொஞ்ச காலத்திலே என்னை காண்பீர்கள் என்றார். தேற்றரவாளன் வெளிப்படுவதை குறித்து இவ்விதம் கூறுகிறார். அதனால் தான் இயேசு கிறிஸ்து
மத்தேயு
6:33-34
முதலாவது
தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்.
(அப்போது வீணான
காரியங்களை
கேட்கமாட்டோம்).
ஆகையால்,
நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும்.
யோவான்
14:26
என்
நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த
ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன
எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்.
யோவான்
15:10
நான்
என் பிதாவின் கற்பனைகளைக் கைக்கொண்டு அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறதுபோல, நீங்களும் என் கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால்,
என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள்.
நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோடு நிலைத்திருந்தால் நாம் மிகுந்த
கனிகளைக் கொடுப்போம் அப்போது
பிதா நம்மளில் மகிமைப்படுவார். அதைத்தான்
இயேசு கிறிஸ்து,
யோவான்
15:11
என்னுடைய
சந்தோஷம் உங்களில் நிலைத்திருக்கும்படிக்கும், உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கும், இவைகளை உங்களுக்குச் சொன்னேன்.
நாம்
ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் நிறைவானது வரும்போது குறைவானது மாறிப்போகும் அந்த நிறைவானது தான்
பரிசுத்த ஆவியின் அபிஷேகம். பரிசுத்த ஆவியின் அபிஷேகம் அனுதினம் புதுபித்து கொண்டிருந்தால் உலகக்
கவலைகள், நெருக்கங்கள்
எல்லாம் நம்மை விட்டு நீங்கிப் போகும் அப்போது நம்முடைய உள்ளம் சந்தோஷத்தால் நிறையும்.
அதைத்தான்,
ரோமர்
14:17
தேவனுடைய
ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும்
பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது.
அது தான், பிலிப்பியர் 4:4
கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்.
என்று
எழுதப்பட்டிருக்கிறது.
நாம்
பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெற்று எப்போதும் சந்தோசமாயிருப்போம். யாவரும் ஜெபிப்போம். கர்த்தர் தாமே யாவரையும்
ஆசீர்வதிப்பாராக.
-தொடர்ச்சி
நாளை