கர்த்தருக்குள்
பிரியமானவர்களே,
4.நீடிய சாந்தம்,
சாந்தம்
என்பது ஆவிக்குரிய கனிகளில் ஒன்றாக இருக்கிறது. இது எல்லா மனுஷருக்குள்ளிலும்
தேவன் எதிர்பார்க்கிற காரியம்.
ஆனால், இதனை
வாசிக்கும் போது நம்மையே நாம்
ஆராய்ந்து பார்க்க கடனாளிகளாயிருக்கிறோம். இது நம்மை பரிசுத்தப்படுத்துகிற
ஒரு நல்ல
குணம் ஆக இருக்கிறது.
ஆவிக்குரிய நற்கிரியைகள் நம்மிடம் இருக்குமானால் இந்த நீடிய சாந்தம்
இருக்க வேண்டும் என்று தேவ வசனம் நமக்கு
அழகாக போதிக்கிறது.
எண்ணாகமம்
12:3 மோசேயானவன் பூமியிலுள்ள சகல மனிதரிலும் மிகுந்த
சாந்தகுணமுள்ளவனாயிருந்தான்.
மோசேயைப்
போல சாந்தகுணமுள்ள மனிதன் இதற்கு முன்பு இருந்ததுமில்லை.
என்று கர்த்தர் சொன்னார் இஸ்ரவேல் புத்திரர் 600, 000 புருஷர்கள் மாத்திரம், இவர்கis எகிப்தின் அடிமையிலிருந்து
மீட்டுக் கொண்டுவர கர்த்தர் தெரிந்தெடுத்த
ஒரு முக்கியமான பாத்திரம் மோசே.
கர்த்தர்
மோசேயை குறித்து சொல்லுகிற வார்த்தை,
எண்ணாகமம் 12:6-8
அப்பொழுது அவர்: என் வார்த்தைகளைக் கேளுங்கள்;
உங்களுக்குள்ளே ஒருவன் தீர்க்கதரிசியாயிருந்தால், கர்த்தராகிய நான் தரிசனத்தில் என்னை
அவனுக்கு வெளிப்படுத்தி, சொப்பனத்தில் அவனோடே பேசுவேன்.
என் தாசனாகிய மோசேயோ
அப்படிப்பட்டவன் அல்ல, என் வீட்டில் எங்கும்
அவன் உண்மையுள்ளவன்.
நான் அவனுடன் மறைபொருளாக
அல்ல, முகமுகமாகவும் பிரத்தியட்சமாகவும் பேசுகிறேன்; அவன் கர்த்தரின் சாயலைக்
காண்கிறான்; இப்படியிருக்க, நீங்கள் என் தாசனாகிய மோசேக்கு
விரோதமாய்ப் பேச, உங்களுக்குப் பயமில்லாமற்போனதென்ன
என்றார்.
இவ்விதமாக நம்முடைய தேவனாகிய கர்த்தர் மோசேயை குறித்து சாட்சி கூறுகிறார், காரணம்
மோசே பூமியிலுள்ள சகல மனிதரிலும் மிகுந்த சாந்தகுணமுள்ளவனாக இருந்தான்.
மோசேயை குறித்து
தேவன் மிகுந்த சாந்தகுணம் என்று சொல்லுகிறதை பார்க்கிறோம்.
மிகுந்த சாந்த குணம் இருந்தால்
பிள்ளைகள் தவிர ஆறு லட்சம்
புருஷர்களை எத்தனையோ நெருக்கத்தின் மத்தியிலும் மிகுந்த பொறுமையோடு நடத்தி வர முடிந்தது. ஜனங்களுக்காக
மிகவும் மன்றாடி வந்தான். ஆனால் ஜனங்களோ உணராதவர்களாக
இருந்தார்கள். தேவன் மோசேயோடே
முகமுகமாயும் பிரத்தியட்சமாயும் பேசிக்கொண்டிருந்தார்.
அதுபோல
கர்த்தருடைய வார்த்தை,
பிலிப்பியர் 4:5-7
உங்கள் சாந்தகுணம் எல்லா மனுஷருக்கும் தெரிந்திருப்பதாக. கர்த்தர் சமீபமாயிருக்கிறார்.
நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.
அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.
ஆதலால் பிரியமானவர்களே, சாந்தக்குணம்
நமக்கு எத்துன்பங்கள் வந்தாலும்
கிறிஸ்துவின் அன்பை விட்டு நாம் பிரியாமல் இருந்தால்
எத்துன்பத்தையும் நாம் சகிப்போம். அப்போது
நமக்குள் சாந்தகுணம் வரும். அந்த சாந்தகுணம்,
நமக்கு எல்லா தருணத்திலும் அதைக் காத்துக் கொள்வோமானால் நமக்கு நீடிய சாந்தம் கிடைக்கும்.
ஏசாயா 53:7
அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும்
இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை;
அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப்போலவும், தன்னை மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத்
திறவாதிருந்தார்.
( நீடிய சாந்தத்தை இது காட்டுகிறது )
மத்தேயு 5:5
சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்.
யாக்கோபு 1:19-21
ஆகையால், என் பிரியமான சகோதரரே,
யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயும் இருக்கக்கடவர்கள்;
மனுஷருடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாதே.
ஆகையால், நீங்கள் எல்லாவித அழுக்கையும் கொடிய துர்க்குணத்தையும் ஒழித்துவிட்டு, உங்கள் உள்ளத்தில் நாட்டப்பட்டதாயும் உங்கள் ஆத்துமாக்களை இரட்சிக்க வல்லமையுள்ளதாயுமிருக்கிற வசனத்தைச் சாந்தமாய் ஏற்றுக்கொள்ளுங்கள்.
பிரியமானவர்களே, நம்முடைய
உள்ளத்தில் சாந்தகுணம் இருந்தால் தான், துர்க்குணம், பொல்லாப்பு நம்மை
விட்டு மாறும், நாம்
கேட்கிற, வாசிக்கிற வசனத்தை நாம் அனுதினம் சாந்தமாய்
ஏற்றுக்கொள்ள முடியும். பொல்லாப்பு , துர்குணத்தை தேவன் பழைய
புளித்த மா என்று கூறுகிறதை
பார்க்கிறோம்.
1 கொரிந்தியர்
5:6-8
நீங்கள்
மேன்மைபாராட்டுகிறது நல்லதல்ல; கொஞ்சம் புளித்தமாவு பிசைந்த
மாவு முழுவதையும்
புளிப்பாக்குமென்று அறியீர்களா?
( ஆகையால், நீங்கள்
புளிப்பில்லாதவர்களிருக்கிறப்படியே
புதிதாய்ப் பிசைந்த மா
முழுவதையும்
புளிப்பாக்குமென்று
அறியீர்களா?
)
ஆகையால், நீங்கள் புளிப்பில்லாதவர்களாயிருக்கிறபடியே,
புதிதாய்ப் பிசைந்த மாவாயிருக்கும்படிக்கு, பழைய புளித்த மாவைப்
புறம்பே கழித்துப்போடுங்கள். ஏனெனில் நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காகப் பலியிடப்பட்டிருக்கிறாரே.
ஆகையால் பழைய புளித்தமாவோடே அல்ல,
துர்க்குணம் பொல்லாப்பு என்னும் புளித்தமாவோடும் அல்ல, துப்புரவு உண்மை என்னும் புளிப்பில்லாத அப்பத்தோடே பண்டிகையை ஆசரிக்கக்கடவோம்.
ஆதலால் பிரியமானவரே, நம்முடைய
எல்லா வித பழைய வாழ்க்கையை
மாற்றி புதிய ஒரு இருதயம் நமக்கு
அதிகமாக தேவன் இந்நாட்களில் தரும்படியாக நாம்
எப்போதும் ஜெபிக்கிறவர்களாக இருக்க
வேண்டும். நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, பரிசேயர்,
சதுசேயர் என்பவர்களின் உபதேசத்தை புளித்த மா என்று சொல்கிறார்.
நம்முடைய வாழ்க்கையில் நாம் இயேசு கிறிஸ்துவை
தரித்துக் கொண்டோமானால் நீடிய சாந்தம் நமக்கு கட்டாயம்
இருக்க வேண்டும் அது தான் இரட்சிப்பு.
சங்கீதம் 149:4-5
கர்த்தர் தம்முடைய ஜனத்தின் மேல் பிரியம் வைக்கிறார்.
சாந்தகுணமுள்ளவர்களை இரட்சிப்பினால் அலங்கரிப்பார்.
பரிசுத்தவான்கள் மகிமையோடே களிகூர்ந்து, தங்கள் படுக்கைகளின்மேல் கெம்பீரிப்பார்கள்.
நீடிய சாந்தகுணத்தை
தேவன் நமக்குத்
தந்து யாவரையும் ஆசீர்வதிப்பாராக. கர்த்தர்தாமே யாவரையும் ஆசீர்வதிப்பார் நாம் யாவரும் பரிசுத்தமாகுவோம்.
- தொடர்ச்சி நாளை.