விசுவாச ஓட்டம் ஓடுதல்

சகோதரி. பி.கிறிஸ்டோபர் வாசினி
Apr 13, 2020


கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

 எபிரெயர் 7:15-19 

அல்லாமலும், மெல்கிசேதேக்குக்கு ஒப்பாய் வேறொரு ஆசாரியர் எழும்புகிறார் என்று சொல்லியிருப்பதினால், மேற்சொல்லியது மிகவும் பிரசித்தமாய் விளங்குகிறது.

 அவர் மாம்ச சம்பந்தமான கட்டளையாகிய நியாயப்பிரமாணத்தின்படி ஆசாரியராகாமல்,

நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று சொல்லிய சாட்சிக்குத்தக்கதாக அழியாத ஜீவனுக்குரிய வல்லமையின்படியே ஆசாரியரானார்.

 முந்தின கட்டளை பெலவீனமுள்ளதும் பயனற்றதுமாயிருந்ததினிமித்தம் மாற்றப்பட்டது.

நியாயப்பிரமாணமானது ஒன்றையும் பூரணப்படுத்தவில்லை, அதிக நன்மையான நம்பிக்கையை வருவிப்பதோ பூரணப்படுத்துகிறது. அந்த நம்பிக்கையினாலே தேவனிடத்தில் சேருகிறோம்.

 இவ்விதமாக தேவன் நமக்குள் பூரணரான  குமாரனை தந்து,  தெரிந்துக்  கொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரிய கூட்டமாயும், பரிசுத்த  ஜாதியாயும், அவருக்கு சொந்த ஜனமாகவும்  நாம் மாற்றப்படும் போது நாம் விசுவாசத்தில் உறுதிப்படுகிறோம்.

 இவர்களைப் பார்த்து தேவனுடைய வார்த்தை

1 பேதுரு 2:10

முன்னே நீங்கள் தேவனுடைய ஜனங்களாயிருக்கவில்லை. இப்பொழுதோ அவருடைய ஜனங்களாயிருக்கிறீர்கள்; முன்னே நீங்கள் இரக்கம் பெறாதவர்களாயிருந்தீர்கள், இப்பொழுதோ இரக்கம் பெற்றவர்களாயிருக்கிறீர்கள்.

 

விசுவாசத்தில் பலப்பட்டவர்கள், விசுவாசத்தில் பலவீனர்களிடத்தில் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும்?

 ரோமர் 14:1

விசுவாசத்தில் பலவீனமுள்ளவனைச் சேர்த்துக்கொள்ளுங்கள்;ஆனாலும் அவனுடைய மன ஐயங்களைக் குற்றமாய் நிர்ணயிக்காமலிருங்கள்.

 

ரோமர் 14:9                                                                                          

கிறிஸ்துவும் மரித்தோர்மேலும் ஜீவனுள்ளோர்மேலும் ஆண்டவராயிருக்கும்பொருட்டு, மரித்தும் எழுந்தும் பிழைத்துமிருக்கிறார்.

அதனால்,  விசுவாசத்தில்  பலவீனமாக இருக்கிற சகோதர்களை அற்பமாக எண்ணக்கூடாது.

ரோமர் 14:10-13

இப்படியிருக்க, நீ உன் சகோதரனைக் குற்றவாளியென்று தீர்க்கிறதென்ன? நீ உன் சகோதரனை அற்பமாய் எண்ணுகிறதென்ன? நாமெல்லாரும் கிறிஸ்துவினுடைய நியாயாசனத்திற்கு முன்பாக நிற்போமே.

அந்தப்படி: முழுங்கால் யாவும் எனக்கு முன்பாக முடங்கும், நாவு யாவும் தேவனை அறிக்கைபண்ணும் என்று என்ஜீவனைக்கொண்டு உரைக்கிறேன் என்பதாய்க் கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறது.

ஆதலால் நம்மில் ஒவ்வொருவனும் தன்னைக்குறித்துத் தேவனுக்குக் கணக்கொப்புவிப்பான்.

இப்படியிருக்க, நாம் இனிமேல் ஒருவரையொருவர் குற்றவாளிகளென்று தீர்க்காதிருப்போமாக. ஒருவனும் தன் சகோதரனுக்கு முன்பாகத் தடுக்கலையும் இடறலையும் போடலாகாதென்றே தீர்மானித்துக்கொள்ளுங்கள்.

ரோமர் 15:1-4

அன்றியும், பலமுள்ளவர்களாகிய நாம் நமக்கே பிரியமாய் நடவாமல், பலவீனருடைய பலவீனங்களைத் தாங்கவேண்டும்.

நம்மில் ஒவ்வொருவனும் பிறனுடைய பக்திவிருத்திக்கேதுவான நன்மையுண்டாகும்படி அவனுக்குப் பிரியமாய் நடக்கக்கடவன்.

 கிறிஸ்துவும் தமக்கே பிரியமாய் நடவாமல்: உம்மை நிந்திக்கிறவர்களுடைய நிந்தைகள் என்மேல் விழுந்தது என்று எழுதியிருக்கிறபடியே நடந்தார்.

தேவவசனத்தினால் உண்டாகும் பொறுமையினாலும் ஆறுதலினாலும் நாம் நம்பிக்கையுள்ளவர்களாகும்படிக்கு, முன்பு எழுதியிருக்கிறவைகளெல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது.

ஆகையால் பிரியமானவர்களே விசுவாசத்தில் பலவீனர்களை தேவ வசனத்தினாலும்,  ஜெபத்தினாலும் நாம் பலவீனர்களை தாங்கவேண்டுவது  மிகவும் அவசியமாக இருக்கிறது.

 

நம்முடைய தேவன் இஸ்ரவேல் புத்திரரோடு சொன்னது:

சங்கீதம் 105:11

உங்கள் சுதந்தரபாகமான கானான் தேசத்தை உனக்குத் தருவேன் என்றார்.

அந்த கானான் தேசம் நமக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு திருஷ்டாந்தபடுத்தியது. கானான் தேசத்தைச் சுதந்தரிக்கும் படியாக இஸ்ரவேலரை  தேவன் எகிப்தின் அடிமைலிருந்து  மீட்டுக் கொண்டு வந்தார் என்பது நம்மெல்லாருக்கும் தெரியும். அவர்களுடைய யாத்திரைகளில் அநேகர் வழியிலே அழிந்து போகிறார்கள்.காரணம் அவர்கள்  தேவனுக்கு பிரியமில்லாத காரியங்களை சிந்தித்தார்கள், முறுமுறுத்தார்கள்,  செய்தார்கள். அதனால்,  வழியிலே அழிந்து போகிறார்கள். காரணம் நம்மை அழைத்து வந்தவர் உண்மையுள்ளவர்,  அவர்  நம்மை கொண்டு சேர்ப்பார் என்று நம்பாததினால்,  மற்றும்  எகிப்தின் செயல்களை,  மீண்டும் நினைத்தார்கள்,  அதனை முறு  முறுத்து  சொல்லிக்கொண்டார். அதனால் தேவன் கோபம் உடையவராக அநேக பேர்  அழிக்கப்பட்டவர்கள். கானான் தேசம் பாலும் தேனும் ஓடுகிற தேசம்.

கர்த்தர் சொல்லுகிறது,

உபாகமம் 7:1

நீ சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் உன் தேவனாகிய கர்த்தர் உன்னைப் பிரவேசிக்கப்பண்ணி, உன்னைப்பார்க்கிலும் ஜனம் பெருத்த ஜாதிகளாகிய ஏத்தியர், கிர்காசியர், எமோரியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் என்னும் ஏழு பலத்த ஜாதிகளை உனக்கு முன்பாகத் துரத்தி,

கர்த்தர் மோசேயிடம்,

எண்ணாகமம் 33:52, 53

அத்தேசத்துக் குடிகளையெல்லாம் உங்களுக்கு முன்பாகத் துரத்திவிட்டு, அவர்களுடைய எல்லாச் சிலைகளையும் வார்ப்பிக்கப்பட்ட அவர்களுடைய எல்லா விக்கிரகங்களையும் அழித்து, அவர்கள் மேடைகளையெல்லாம் நிர்மூலமாக்கி,

தேசத்திலுள்ளவர்களைத் துரத்திவிட்டு, அதிலே குடியிருக்கக்கடவீர்கள்; அந்த தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி அதை உங்களுக்குக் கொடுத்தேன்.

இவற்றை தேவன் திருஷ்டாந்தபடுத்தினது.நாம் பாலும் தேனும் ஓடுகிற தேசமாகிய கிறிஸ்துவை சுதந்தரிக்கும் படியாகவும், அப்படி நாம் சுதந்தரித்தால் நாமே அந்த தேசம் என்பதையும் காட்டுகிறார்.

நம்முடைய ஆத்துமா எவ்விதத்தில் சுதந்தரிக்க வேண்டும் நமக்குள் இருக்கிற (ஜாதியின்  கிரியையை )தேவ வசனமாக நமக்குள் தேவனுடைய வார்த்தை கடந்து வரும்போது விசுவாசித்து நாம் ஏற்றுக் கொள்ளும்போது ஜாதிகளாகிய பிசாசின் செயல்களை தேவன் நம்மை விட்டுத் துரத்துகிறார்.

 அப்போது அந்த தேசத்தை சுதந்தரிக்க முடியும் விசுவாசத்தில் உறுதியோடு இருந்தால் மாத்திரமே முடியும் இஸ்ரவேல் புத்திரரில் 2 பேர் மாத்திரமே கானானுக்குள் பிரவேசித்தார்கள். அங்கு போனவர்களில் மற்றவர்களுடைய விசுவாசத்தினால் பின்வாங்கி போனார்கள் மற்றும் யோசுவாவும்காலேப் தங்களில்  இருந்த விசுவாசத்தினால் அதை எளிதாய் சுதந்தரித்தார்கள்

அதனால் நம்முடைய தேவனாகிய கர்த்தர்

யோவான் 3:16

 தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

இதனால் நாம் யாரும் அழிந்து போகாதப்படிக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்து

யோவான் 16:7-11

நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன்.

அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்.

அவர்கள் என்னை விசுவாசியாதபடியினாலே பாவத்தைக்குறித்தும்,

நீங்கள் இனி என்னைக் காணாதபடிக்கு நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினாலே நீதியைக்குறித்தும்,

இந்த உலகத்தின் அதிபதி நியாயந்தீர்க்கப்பட்டதினாலே நியாயத்தீர்ப்பைக் குறித்தும், கண்டித்து உணர்த்துவார்.

இவ்விதமாக கண்டித்து உணர்த்தும்போது நாம் உணர்வடைவோமானால் நாம் பிழைப்போம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஆசீர்வாதம் உங்கள் அனைவரோடும் இருப்பதாக.

 

                         - தொடர்ச்சி நாளை