மேலும்
கர்த்தருக்குள் பிரியமானவர்களே,
முந்தின தேவ
செய்தியை வாசித்து சிந்தித்து தியானித்து இருப்பீர்கள் என்று கர்த்தருக்குள் மிகவும் நம்பிக்கையாயிருக்கிறேன். வாசித்து தியானித்த ஒவ்வொரு உள்ளத்திலும் புதிய மாற்றமும் வளர்ச்சியும் பெலனும்
நம்முடைய தேவனாகிய கர்த்தர் தந்திருப்பார் என்று கர்த்தருக்குள் மிகவும் உங்களை குறித்து
சந்தோஷப்படுகிறேன்.
இன்றைக்கு 3- வதான வார்த்தை
3.பலவீனரை
தாங்குங்கள்
பலவீனர்
யார்?
விசுவாசத்தில்
பலவீனர்கள் அவர்கள்
தீத்து 1:16
அவர்கள் தேவனை அறிந்திருக்கிறோமென்று
அறிக்கைபண்னுகிறார்கள் கிரியைகளினாலோ அவரை மறுதலிக்கிறார்கள்; அவர்கள் அருவருக்கப்படத்தக்கவர்களும்
கீழ்ப்படியாதவர்களும் எந்த நற்கிரியையுஞ்செய்ய ஆகாதவர்களுமாயிருக்கிறார்கள்.
தீத்து 1:12-14
கிரேத்தாதீவார் ஓயாப்பொய்யர் துஷ்டமிருகங்கள்
பெருவயிற்றுச் சோம்பேறிகள் என்று அவர்களிலொருவனாகிய அவர்கள் தீர்க்கத்தரிசியானவனே சொல்லியிருக்கிறான்.
இந்தச் சாட்சி உண்மையாயிருக்கிறது; இது
முகாந்தரமாக அவர்கள் யூதருடைய கட்டுக்கதைகளுக்கும் சத்தியத்தை விட்டு விலகுகிற மனுஷருடைய
கற்பனைகளுக்கும் செவிகொடாமல்
விசுவாசத்தினாலே ஆரோக்கியமுள்ளவர்களாயிருக்கும்படி
நீ அவர்களை கண்டிப்பாய்க் கடிந்துக்கொள்.
(இவற்றிலிருந்து
நமக்கு என்ன தெரியவருகிறது பொய் பேசுகிறவர்கள் தேவனுக்கு பிரியமில்லாத துர் கிரியைகளை
செய்கிறவர்கள் கட்டுக்கதைகளுக்கு செவிசாய்க்கிறவர்கள் மனுஷனுடைய கற்பனைக்கு கீழ்ப்படிகிறவர்கள் அவிசுவாசிகள்)( விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்)
தீத்து 1:15
சுத்தமுள்ளவர்களுக்குச்
சகலமும் சுத்தமாயிருக்கும் அசுத்தமுள்ளவர்களுக்கும் அவிசுவாசமுள்ளவர்களுக்கும் ஒன்றும்
சுத்தமாயிராது; அவர்களுடைய புத்தியும் மனச்சாட்சியும் அசுத்தமாயிருக்கும்.
இவ்விதமாக
அசுத்தமான காரியங்களை செய்யும்போது விசுவாசத்தில் பலவீனராக ஆகிவிடுகிறோம் விசுவாசத்தில்
வளர முடியாது அவர்கள்தான் பலவீனர்கள் இவ்விதமான பலவீனர்களை தேவ வசனத்தினால் நாம் ஒருவரையொருவர் தாங்கி புத்தி சொல்ல வேண்டும்
அப்படிப்பட்டவர்களை உறுதிப்படுத்துவதற்கு நாம் கிறிஸ்துவுக்குள் முன்வரவேண்டும்.
மாம்ச
சிந்தை பலவீனம் உள்ளது ஆவிக்குரிய சிந்தையானது விசுவாசத்தில் பலம் உள்ளது விசுவாசத்திலே
ஏன் பலவீனர்கள் காணப்படுகிறார்கள் அது எப்படி
1 கொரிந்தியர் 15:35, 36
ஆகிலும், மரித்தோர் எப்படி எழுந்திருப்பார்கள், எப்படிப்பட்ட சரீரத்தோடே வருவார்களென்று ஒருவன்
சொல்வானாகில்
புத்தியீனனே, நீ விதைக்கிற விதை செத்தாலொழிய உயிர்க்கமாட்டாதே.
(தேவன் விதைக்கேற்ற மேனியை கொடுக்கிறார்).
மேனிகளின்
வித்தியாசத்தை தேவன் எடுத்துக் காட்டுகிறார். நாம் எவ்விதத்தில் நம்முடைய ஆவி ஆத்துமா
சரீரத்தை முழுமையும் ஒப்புக் கொடுக்கிற விதத்தில்
நம்முடைய பழைய சரீரம் விதைக்கப்பட்டு புதிய சரீரம் எழும்புகிறது.புதிய சரீரம் ஆவிக்குரிய
சரீரம் வானத்திலிருந்து வந்த கர்த்தர்.
ஞானஸ்நானத்தின் போதே இவ்வித காரியம் நிகழ்கிறது பழைய வாழ்க்கை எல்லாம்
மரித்து புதிய ஜீவனாக எழும்ப வேண்டும் எழும்புதலில் தேவன் எடுத்துக்காட்டுகிற காரியம்.
1 கொரிந்தியர் 15:40-44
வானத்துக்குரிய மேனிகளுமுண்டு, பூமிக்குரிய
மேனிகளுமுண்டு; வானத்துக்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறே, பூமிக்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறே;
சூரியனுடைய மகிமையும் வேறே, சந்திரனுடைய மகிமையும் வேறே, நட்சத்திரங்களுடைய மகிமையும் வேறே. மகிமையிலே நட்சத்திரத்துக்கு
நட்சத்திரம் விசேஷித்திருக்கிறது.
மரித்தோரின் உயிர்த்தெழுதலும் அப்படியே
இருக்கும். அழிவுள்ளதாய் விதைக்கப்படும், அழிவில்லாததாய்
எழுந்திருக்கும்.
கனவீனமுள்ளதாய் விதைக்கப்படும், மகிமையுள்ளதாய் எழுந்திருக்கும். பலவீனமுள்ளதாய்
விதைக்கப்படும், பலமுள்ளதாய் எழுந்திருக்கும்.
ஜென்மசரீரம் விதைக்கப்படும், ஆவிக்குரிய சரீரம் எழுந்திருக்கும். ஜென்மசரீரமுமுண்டு, அவிக்குரிய சரீரமுமுண்டு.
நம்மை
தாழ்த்தி ஒப்புக்கொடுத்து சகல பாவத்துக்கும் நாம் மரிக்காவிட்டால், நம்முடைய பாவ சரீரம் கிறிஸ்துவோடு கூட சிலுவையில்
ஞானஸ்நானத்தினால் அடிக்கப்பட்டு அடக்கம் பண்ண படாவிட்டால் நாம் எழும்பும் போது ஜென்ம சுபாவத்தோடே ( ஜென்ம சரீரத்தோடே ) எழும்புவோம்.
அவர்கள்தான் விசுவாச பலவீனர்கள். விசுவாசத்தில்
பலவீனர்கள் அநேகர் சோதனைகள் வரும்போது சோர்ந்து
போவார்கள்இ இடறி விழுந்து விடுவார்கள். அது மட்டுமல்லாமல் பின்வாங்கிப் போவார்கள்.அவர்களை நாம் தேவ வசனத்தால் தாங்க வேண்டும். அப்போது அந்த தேவ வசனம்
அவர்களை (பலவீனரை ) தாங்கும்; அதுமாத்திரமல்ல நம்மையும் ஒன்று கூட தாங்கும், நாமும்
ஒன்று கூட பரிசுத்தபடுவதற்கு ஏதுவாகும்.
யாக்கோபு 3:11, 12
ஒரே ஊற்றுக்கண்ணிலிருந்து தித்திப்பும்
கசப்புமான தண்ணீர் சுரக்குமா?
என் சகோதரரே, அத்திமரம் ஒலிவப்பழங்களையும்,
திராட்சச்செடி அத்திப்பழங்களையும் கொடுக்குமா? அப்படியே உவர்ப்பான நீருற்றுத் தித்திப்பான
ஜலத்தைக் கொடுக்கமாட்டாது.
கர்த்தருக்குள்
பிரியமானவர்களே, உங்களுக்கு முன் எழுதிய வசனங்கள்
புரிந்து இருக்கும் என நினைக்கிறேன். நன்மை செய்யவேண்டும் என்று இருக்கிற உள்ளத்திலிருந்து
தீமை வரக்கூடாது.
விசுவாச
பலமுள்ளவர்கள்:
யாக்கோபு 3:13
உங்களில்
ஞானியும் விவேகியுமாயிருக்கிறவன் எவனோ, அவன்
ஞானத்திற்குரிய சாந்தத்தோடே தன் கிரியைகளை நல்ல நடக்கையினாலே காண்பிக்கக்கடவன்.
ஞானஸ்நானத்திற்கு பிறகு ஜென்ம சுபாவம் நம்மிடத்தில் இருந்தால் அவர்கள்
விசுவாச பெலவீனர்கள் (மாம்ச சிந்தை )அவர்களை வசனத்தால் தாங்க வேண்டும்.
யாக்கோபு 3:14,15
உங்கள்
இருதயத்திலே கசப்பான வைராக்கியத்தையும் விரோதத்தையும் வைத்தீர்களானால், நீங்கள் பெருமை பாராட்டாதிருங்கள். சத்தியத்திற்கு
விரோதமாய்ப் பொய்சொல்லாமலுமிருங்கள்.
இப்படிப்பட்ட ஞானம் பரத்திலிருந்து இறங்கிவருகிற
ஞானமாயிராமல், லௌகிக சம்பந்தமானதும், ஜென்மசுபாவத்துக்குரியதும், பேய்த்தனத்துக்கடுத்ததுமாயிருக்கிறது.
யாக்கோபு 3:16
வைராக்கியம் விரோதமும் எங்கே உண்டோ, அங்கே கலகமும் சகல துர்ச் செய்கைகளுமுண்டு.
விசுவாசத்தில்
பலமுள்ளவர்கள் :
யாக்கோபு 3:17, 18
பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது
சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும் சாந்தமும்
இணக்கமுள்ளதாயும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும்
நிறைந்ததாயும், பட்சபாதமில்லாததாயும், மாயமற்றதாயுமிருக்கிறது.
நீதியாகிய கனியானது சமாதானத்தை நடப்பிக்கிறவர்களாலே
சமாதானத்திலே விதைக்கப்படுகிறது.
(இவை தான்
ஆவிக்குரிய செயல்கள் )
எபிரெயர் 7:28
நியாயப்பிரமாணமானது பெலவீனமுள்ள மனுஷர்களைப்
பிரதான ஆசாரியராக ஏற்படுத்துகிறது. நியாயப்பிரமாணத்திற்குப்பின்பு உண்டான ஆணையோடே விளங்கிய
வசனமோ என்றென்றைக்கும் பூரணரான குமாரனை ஏற்படுத்துகிறது.
இப்போது நம்முடைய
ஆசாரியர், பிரதான ஆசாரியர் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து.
விசுவாசத்தில்
இடறி போகிறதற்கு காரணம் :
1 பேதுரு
2:7
ஆகையால் விசுவாசிக்கிற உங்களுக்கு அது
விலையேறப்பெற்றது. கீழ்ப்படியாமலிருக்கிறவர்களுக்கோ வீட்டைக் கட்டுகிறவர்களால் தள்ளப்பட்ட
பிரதான மூலைக்கல்லாகிய அந்தக் கல் இடறுதற்கேதுவான கல்லும் விழுதற்கேதுவான கன்மலையுமாயிற்று;
அவர்கள் திரு
வசனத்திற்கு கீழ்படியாதவர்களாயிருந்து இடறுகிறார்கள்.
அதற்கென்றே நியமிக்கப்பட்ட வர்களாக யுமிருக்கிறார்கள்.
விசுவாசத்தில்
உறுதியாய் இருக்கிறவர்களை தேவன் கூறுகிறது
என்னவென்றால்,
1 பேதுரு 2:9
நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு
வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்.
நமக்குள் பூரணரான குமாரன் வெளிப்பட்டு,
எபிரெயர் 8:1, 2
மேற்சொல்லியவைகளின் முக்கியமான பொருளென்னவெனில்.
பரலோகத்திலுள்ள மகத்துவ ஆசனத்தின் வலதுபாரிசத்திலே உட்கார்ந்திருக்கிறவருமாய்,
பரிசுத்த ஸ்தலத்திலும், மனுஷரால் அல்ல கர்த்தரால் ஸ்தாபிக்கப்பட்ட மெய்யான
கூடாரத்திலும் ஆசாரிய ஊழியஞ்செய்கிறவருமாயிருக்கிற
பிரதான ஆசாரியர் நமக்கு உண்டு.( அவர்தான் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து).
ஜெபிப்போம்
- மேலும் தொடர்ச்சி.