கிறிஸ்துவுக்குள்
பிரியமானவர்களே,
நாம் பழைய
ஏற்பாடு பரிசுத்த புஸ்தகத்தை வாசிக்கும் போது இஸ்ரவேல் என்பது சபை என்றும், அந்த இஸ்ரவேல் சபையை தேவன் எகிப்திலிருந்து (பார்வோனின்) அடிமையிலிருந்து அவர்களை எகிப்த்தின்
உபத்திரவதிலிருந்து தம்முடைய தாசனாகிய மோசையையும், ஆரோனையும்,
எகிப்த்திற்கு அனுப்பி, எகிப்தை வாதைகளால்
வாதித்து பின் மோசையையும் ஆரோனையும் நோக்கி கர்த்தர் சொல்லுகிறார், இஸ்ரவேல் சபையாரை நோக்கி நீங்கள் பழுதற்ற ஒரு ஆட்டுகுட்டியை
அடித்து பஸ்காவை ஆயத்தபடுத்த சொல்கிறார் அதன் பின்பு அதின் இரத்ததை வாசல் நிலைகால்களிலும் மேற்சட்டத்திலும் வாசலின் நிலைக்கால்கள் இரண்டிலும் தெளியுங்கள் விடியற்காலம்
வரையும் உங்களில் ஒருவரும் வீட்டுவாசலை விட்டு புறப்படவேண்டாம் கர்த்தருடைய வார்த்தை
யாத்திராகமம் 12:12,13
அந்த ராத்திரியிலே நான் எகிப்துதேசமெங்கும்
கடந்துபோய், எகிப்து தேசத்திலுள்ள மனிதர்முதல்
மிருகஜீவன்கள்மட்டும், முதற்பேறாயிருக்கிறவைகளையெல்லாம்
அதம்பண்ணி, எகிப்து தேவர்களின்மேல் நீதியைச்
செலுத்துவேன்; நானே கர்த்தர்.
நீங்கள் இருக்கும் வீடுகளில் அந்த இரத்தம்
உங்களுக்காக அடையாளமாய் இருக்கும். அந்த இரத்தத்தை நான் கண்டு, உங்களைக் கடந்துபோவேன். நான் எகிப்து தேசத்தை அழிக்கும்போது, அழிக்கும் வாதை உங்களுக்குள்ளே வராதிருக்கும்.
இவ்விதமாக
இஸ்ரவேல் சபையை மீட்டு, எகிப்த்தியரை அதம் பண்ணினார்.
யாத்திராகமம் 12:29
நடுராத்திரியிலே சிங்காசனத்தின் மேல்
வீற்றிருக்கும் பார்வோனுடைய தலைப்பிள்ளைமுதல் காவல் கிடங்கிலிருக்கும் சிறைப்பட்டவனின்
தலைப்பிள்ளை வரைக்கும், எகிப்து தேசத்தில்
இருந்த முதற்பேறனைத்தையும் மிருகஜீவன்களின் தலையீற்றனைத்தையும் கர்த்தர் அழித்தார்.
மகா கூக்குரல்
எகிப்த்திலே உண்டாயிற்று, சாவில்லாத ஒரு வீடும்
இருந்ததில்லை.
யாத்திராகமம் 12:31
இராத்திரியிலே அவன் மோசேயையும் ஆரோனையும்
அழைப்பித்து: நீங்களும் இஸ்ரவேல் புத்திரரும் எழுந்து, என் ஜனங்களை விட்டுப் புறப்பட்டுப்போய், நீங்கள் சொன்னபடியே கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள்.
இது
தான் தேவசபையை எகிப்த்திலிருந்து அழைத்து வருவதன் திருஷ்டாந்தம் (தேவசபை எப்படி திடப்படும்)
நாம் எப்படி திடப்படுத்த பட வேண்டும் என்கிற அடையாளம் தான் முன்னால் எழுதப்பட்டவை.
அடுத்தபடியாக,
மத்தேயு 2:19-21
ஏரோது இறந்தபின்பு, கர்த்தடைUய தூதன் எகிப்திலே யோசேப்புக்குச் சொப்பனத்தில்
காணப்பட்டு:
நீ எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேல் தேசத்துக்குப் போ; பிள்ளையின் பிராணணை
வாங்கத்தேடினவர்கள் இறந்து போனார்கள் என்றான்.
அவன் எழுந்து பிள்ளையையும் அதின் தாயையும்
கூட்டிக்கொண்டு இஸ்ரவேல் தேசத்திற்கு வந்தான்.
இவ்விதமாக
எகிப்த்தின் அடிமையில் வசித்த நம்மை கிறிஸ்துவின் மூலம் இரட்சித்தார்.அதை தான்,
சங்கீதம் 80:8
நீர் எகிப்திலிருந்து ஒரு திராட்சக்கொடியைக்
கொண்டுவந்து, ஜாதிகளைத் துரத்திவிட்டு, அதை நாட்டினீர்.
நம்முடைய தேவனாகிய
கர்த்தர் இயேசு கிறிஸ்துவை நம்முடைய உள்ளத்தில் அனுப்பி, நம்முடைய வாழ்க்கையில் இருந்த ஜாதியுடைய கிரியை
அழித்து, கிறிஸ்துவை கடாட்சித்தார்.
ஆனால் நாமே
அநேக நேரங்களில் தேவனை விட்டு பற்பல காரியங்களினிமித்தம் சோரம் போகிறோம். அதனால் தேவன்
நம்மளில் போட்டிருந்த அடைப்புகளை எடுத்துப் போடுகிறார். அதை தான்,
ஏசாயா 5:1, 2
இப்பொழுது
நான் என் நேசரிடத்தில் அவருடைய திராட்சத்தோட்டத்தைக் குறித்து என் நேசருக்கேற்ற ஒரு
பாட்டைப் பாடுவேன், என் நேசருக்கு மகா செழிப்பான
மேட்டிலே ஒரு திராட்சத்தோட்டம் உண்டு.
அவர் அதை வேலியடைத்து, அதிலுள்ள கற்களைப் பொறுக்கி, அதிலே நற்குல திராட்சச்செடிகளை
நட்டு, அதின் நடுவில் ஒரு கோபுரத்தைக்கட்டி,
அதில் ஆலையையும் உண்டுபண்ணி, அது நல்ல
திராட்சப்பழங்களைத் தருமென்று காத்திருந்தார்,
அதுவோ கசப்பான பழங்களைத் தந்தது. (நம்முடைய பொல்லாத செயல் -கசப்பு ) பொல்லாத
செயல்களினிமித்தம் தேவன் நம்மை சுற்றியிருந்த அடைப்பை எடுத்து போடுகிறார்.
அதைத்
தான், சங்கீதம் 80:12
இப்பொழுதோ வழிநடக்கிற யாவரும் அதைப் பறிக்கும்படியாக, அதின் அடைப்புகளை ஏன் தகர்த்துப்போட்டீர்?
அடைப்புகள்
தகர்த்துப் போடுகிறதினால்,
சங்கீதம் 80:13
காட்டுப்பன்றி அதை உழுது போடுகிறது, வெளியின் மிருகங்கள் அதை மேய்ந்துபோடுகிறது(நாம்
வெளி உலகத்திற்கும், பிசாசின் கிரியைகளுக்கும், பல மாம்சசிந்தைக்கு இடம் கொடுக்கிறோம்).
அதனால் நாம்
திடனற்றவர்களாக ஆகிவிடுகிறோம். திராட்ச்சை செடியாக கிறிஸ்து நம்மளில் இருந்து கண்ணீர்
விடுகிறவராகயிருக்கிறார்.
மீண்டும் நம்மை
புதுப்பித்து மனந்திரும்பினோமானால்,
சங்கீதம் 80:14
சேனைகளின் தேவனே, திரும்பி வாரும், வானத்திலிருந்து கண்ணோக்கிப்பார்த்து, இந்தத் திராட்சச்செடியை விசாரித்தருளும்,
எபிரெயர் 10:38, 39
விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான், பின்வாங்கிப்போவானானால் அவன்மேல் என் ஆத்துமா பிரியமாயிராது
என்கிறார்.
நாமோ கெட்டுப்போகப் பின்வாங்குகிறவர்களாயிராமல், ஆத்துமா ஈடேற விசுவாசிக்கிறவர்களாயிருக்கிறோம்.
பின் வாங்குதல்
என்றால் அநேக பேருக்கு தெரியாமல் இருக்கிறது. தேவன் கொடுத்திருக்கிற கட்டளை கற்பனைகளை, நியாயபிராமணத்தை அறிந்தும், கேட்டும்,
தங்கள் சூழ்நிலைமை இப்படி வந்ததினால் இந்த காரியத்தை செய்ய வேண்டுமே என்று சொல்லி
சூழ்நிலைக்கேற்றவாறு தங்கள் இருதயத்தின் யோசனையின் படி நடந்து தேவனை விட்டு தூரமாகி
விடுகிறவர்களும் மற்றும் ஜீவனுள்ள தேவனை அறிந்து விட்டு அந்நிய தேவனை நோக்கி கையெடுக்கிறவர்களும்
பின்வாங்கி போகிறவர்களும் இவர்கள் தான் திடனற்றவர்கள். இப்படிப்பட்டவர்களை தேற்றவேண்டுமானால்
திடப்படுத்துகிறவர்கள் இவையெல்லாவற்றிலும் திடனோடு வெற்றி பெற வேண்டும். இவையெல்லாவற்றிலும்
இயேசு கிறிஸ்து சிலுவையில் வெற்றி சிறந்தார. அவர் தான் திட அஸ்திபாரம்.
சங்கீதம் 80:15-17
உம்முடைய வலதுகரம் நாட்டின கொடியையும், உமக்கு நீர் திடப்படுத்தின கிளையையும் கடாட்சித்தருளும்.
அது அக்கினியால் சுடப்பட்டும் வெட்டுண்டும்
போயிற்று; உம்முடைய முகத்தின் பயமுறுத்தலால் அழிந்து போகிறார்கள்.
உமது கரம் உமது வலதுபாரிசத்துப் புருஷன்மீதிலும், உமக்கு நீர் திடப்படுத்தின மனுஷகுமாரன்மீதிலும்
இருப்பதாக.
இவ்விதமாக
இந்த நாளில் நம்மை நாமே ஒன்றுக்கூட சிந்தித்து ஒப்புக் கொடுப்போமானால் தம்முடைய கரத்தை
நம்மேல் வைத்து நம்மை ஆசீர்வதிக்கிறார்.
சங்கீதம் 80:18-19
அப்பொழுது உம்மைவிட்டுப் பின்வாங்கமாட்டோம்;
எங்களை உயிர்ப்பியும், அப்பொழுது உமது நாமத்தைத்
தொழுதுகொள்ளுவோம்.
சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே எங்களைத் திருப்பிக்கொண்டுவாரும்; உமது முகத்தைப்
பிரகாசிக்கப்பண்ணும், அப்பொழுது இரட்சிக்கப்படுவோம்.
இவ்விதமாக
கர்த்தருக்கு பயந்து நடக்கிற மனுஷன் பாக்கியவான்.
சங்கீதம் 112:7
துர்ச்செய்தியைக் கேட்கிறதினால் பயப்படான்;
அவன் இருதயம் கர்த்தரை நம்பித் திடனாயிருக்கும்.
சங்கீதம் 125:1
கர்த்தரை நம்புகிறவர்கள் என்றென்றைக்கும்
அசையாமல் நிலைத்திருக்கும் சீயோன் பர்வதத்தைப்போல் இருப்பார்கள்.
தேவஜனமே, பிரியமானவர்களே ஒவ்வொரு நாளிலும் தேவ வசனம் தியானித்து, ஜெபித்து நாம் தேவனிடத்தில் ஐக்கியப்படுவோம். பின்
வாங்குகிறவர்களை குறித்து,
செப்பனியா
1: 6 -ல் கர்த்தரை விட்டு ப்பின்வாங்குகிறவர்களையும், கர்த்தரைத்
தேடாமலும் அவரை குறித்து விசாரியாமலுமிருக்கிறவர்களையும் இவ்விடத்தில் இராதப்படிக்கு
சங்காரம் பண்ணுவேன்.
ஆனால் பிரியமானவர்களே,
நாம் எந்த சூழ்நிலைகள் வந்தாலும் பின்வாங்கமாட்டோம் என்று தேவனிடத்தில் உறுதிப் படுத்துவோமானால்
கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார்.
சங்கீதம் 125:2
பர்வதங்கள் எருசலேமைச் சுற்றிலும் இருக்குமாப்போல், கர்த்தர் இதுமுதல் என்றென்றைக்கும் தம்முடைய ஜனத்தைச்
சுற்றிலும் இருக்கிறார்.
2தீமோத்தேயு 2:19
ஆகிலும் தேவனுடைய உறுதியான அஸ்திபாரம்
நிலைத்திருக்கிறது. கர்த்தர் தம்முடையவர்களை அறிவாரென்பதும், கிறிஸ்துவின் நாமத்தைச் சொல்லுகிற எவனும் அநியாயத்தைவிட்டு
விலகக்கடவனென்பதும், அதற்கு முத்திரையாயிருக்கிறது.
திடனற்றவர்களை
எழுதியிருக்கிற தேவனுடைய சத்திய வார்த்தைகளால் நாம் தேற்றவேண்டும்.தேற்றுகிறவர்கள்
எல்லாவித அநியாய செயல்களை விட்டு விலக வேண்டும் இவ்விதமாக இருந்தால் நம் பரிசுத்ததை
காத்துக்கொள்வோம். ஒப்புக்கொடுத்து ஜெபிப்போம்.
கர்த்தர் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக.
-தொடர்ச்சி நாளை