தேவனுக்கே மகிமையுண்டாவதாக

II இராஜாக்கள் 5: 10

அப்பொழுது எலிசா: அவனிடத்தில் ஆள் அனுப்பி, நீ போய், யோர்தானில் ஏழுதரம் ஸ்நானம்பண்ணு; அப்பொழுது உன் மாம்சம் மாறி, நீ சுத்தமாவாய் என்று சொல்லச் சொன்னான்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்மேல் பாவத்தினால் உண்டாகிற சாபம் வராதபடி பாதுகாக்க வேண்டும்

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், இரண்டு வித குஷ்டங்களை குறித்து நாம் தியானித்தோம். ஒன்று சரீரத்தில் புண் வந்து, அதிலிருந்து எழும்புகிற குஷ்டம். இரண்டாவது சரீரத்தின் மேல் நெருப்புப்பட்டதினால், அந்த வேக்காட்டில் எழும்புகிற குஷ்டத்தையும் குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக லேவியராகமம் 13: 29 – 59 யில் புருஷனுக்காகிலும் ஸ்திரீக்காகிலும் தலையிலாவது, தாடியிலாவது சொறி உண்டானால் ஆசாரியன் அதனை பார்த்து அந்த இடத்தின் தோல் மற்ற தோலை காட்டிலும் பள்ளமாகவும், மயிர் பொன் நிறமாகவும், மிருதுவாகவும் இருக்கக்கண்டால்  ஆசாரியன் அவனை தீடடுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்.இப்படி தலையிலும், தாடியிலும் இருப்பது சொறி குஷ்டம். அல்லாமலும் சொறி குஷ்டத்தை பார்க்கும் போது அந்த இடம் மற்ற இடத்தை காட்டிலும் பள்ளமாயிராமலும், கறுத்த மயிர் இல்லாமலும் இருந்தால் ஏழு நாள் ஆசரியன் அவனை அடைத்து வைத்து பார்க்க கடவன்.   

அந்த சொறி இடங்கொள்ளாமலும், அதிலே பொன்நிற மயிர் இல்லாமலும், மற்ற இடங்களை காட்டிலும் பள்ளமில்லாமல் இருந்தால், அந்த சொறியுள்ள இடந்தவிர மற்ற இடமெல்லாம் சிரைத்து, பின்பு ஆசாரியன் இரண்டாம் முறையாக அடைத்து வைத்தால்  அந்த தோல் மற்ற தோலை பார்க்கிலும் பள்ளமில்லாமலும், அந்த சொறி தோலில் இல்லாமலும் இருந்தால் அவன் சுத்தமுள்ளவன் என்று தீர்க்க கடவன் என்று கர்த்தர் சொல்கிறார். அந்த சொறி தோலில் இடங்கொண்டதினால், மற்றும் பொன்நிற மயிர் இருந்தால் அவன் தீட்டுள்ளவன்.  

ஆனால் அந்த இடத்தில்  சொறி நீங்கி கறுப்பு மயிர் முளைத்ததேயாகில், சொறி சொஸ்தமாயிற்று.அவன் சுத்தமுள்ளவன் என்று தீர்க்க கடவன் என்று கர்த்தர் சொல்கிறார். இவை ஐந்தாம் வகை குஷ்டம். புருஷனுக்காகிலும், ஸ்திரீக்காகிலும்  அவர்கள் சரீரத்தின் மேல் வெள்ளை புள்ளிகள் உண்டாயிருந்தால், அந்த வெள்ளை புள்ளிகள் மங்கல் நிறமாகயிருந்தால் அதுதோலில் எழும்புகிற வெள்ளைதேமல்.  அப்படிபட்டவர்கள் சுத்தமுள்ளவர்கள். 

ஒருவனுடைய தலைமயிர் உதிர்ந்தாலும் மொட்டையானாலும் அவர்கள் சுத்தமுள்ளவர்கள்.  மொட்டை தலையிலாவது, அரை மொட்டையிலாவது சிவப்பு கலந்த வெண்மையான படர் உண்டானால் அதில் எழும்புகிற குஷ்டம். மற்றும் மொட்டை தலையிலாவது, அரை மொட்டையிலாவது அவனுடைய அங்கங்களின் மேல் உண்டாகும் குஷ்டத்தை போல பின்பு சிவப்பு கலந்த வெண்மையான தடிப்பு இருக்க கண்டால் அவன் குஷ்டரோகி என்று கர்த்தர்அவனை தீர்க்கிறார்.  .அவன் வியாதி அவன் தலையிலே இருக்கிறது.  அந்த வியாதி உள்ள குஷ்டரோகி தன் வஸ்திரம் கிழிந்தவனாகவும். தன் தலையை மூடாதவனாகவும் இருந்து தன் தாடியை மட்டும் மூடிக்கொண்டு தீட்டு தீட்டு என்று  சத்தமிட்டு கூறவேண்டும். இந்த வியாதி இருந்தவன் தீட்டுள்ளவனாக இருக்கிறபடியினால் அவன் குடியிருப்பு தனியே இருக்க வேண்டும்.  

அப்படியே ஆடடு மயிர் லஸ்திரத்திலேயாவது பஞ்சுநூல் வஸ்திரத்திலேயாவது, ஆட்டு மயிர், பஞ்சு நூல், பாவிலாவது ஊடையிலாவது தோலிலாவது தோலினால் செய்த  எந்த வஸ்துவிலாவது குஷ்டதோஷம்காணப்படடால் அது குஷ்டம் தான. ஆனால் ஆசாரியன் அதனை கண்டு  ஏழு நாள் அடைத்து வைத்த பிறகு  அந்த தோஷம் இருந்த வஸ்துக்களில் அது அதிகரித்திருந்தால் அது அரிக்கிற குஷ்டம். இது ஆறாம் வகை குஷ்டம்.  

இந்த தோஷம் இருக்கிற வஸ்துக்களை சுட்டெரிக்க வேண்டும். மேலும் வஸ்திரத்தின்  பாவிலாவது ஊடையிலாவது எந்த வஸ்துகளிலாவது தோஷம் படவில்லை என்று கண்டால் இரண்டாவது ஏழு முறை அடைத்து வைத்து கழுவப்பட்டபின்பு அந்த தோஷம் அதிகபடாமலுந்தாலும், நிறம் மாறாமல் இருந்தாலும் அது தீட்டாயிருக்கும்.  அதை அக்கினியில் சுட்டெரிக்க வேண்டும்.  அவ்வஸ்திரத்தின் உட்புறமும், வெளிபுறமும் உருவ அரிக்கும்.

கழுவப்பட்ட பின்பு அது குறுகிற்றென்று ஆசாரியன் கண்டால் ,அந்த வஸ்துக்களாகிய வஸ்திரத்திலாவது, தோலிலாவது,பாவிலாவது, ஊடையிலாவது,  இராதபடிக்கு எடுத்துப்போட வேண்டும். மேலும் மேலே எழுதப்பட்ட வஸ்துக்களில் காணப்பட்டால் அது படருகிற தோஷம்.  அது உள்ளதை அக்கினியில் சுட்டெரிக்க வேண்டும்.  ஆனால் அந்த வஸ்துக்கள் கழுவப்பட்ட பின்பு அதை விட்டு போயிற்றானால் இரண்டாம் முறை கழுவ வேண்டும். அப்பொழுது அது சுத்தமாயிருக்கும். இவைதான் சுத்தமென்றாவது, தீட்டென்றாவது தீர்க்கிறதற்க்கு உள்ள பிரமாணம்.  

ஆதலால் பிரியமானவர்களே, இதனை வாசித்து, தியானித்து தேவனுடைய பிரமாணங்கள் காத்துக்கொண்டு பாவங்களால் நம்முடைய உள்ளான மனுஷன் சாபத்தினால் அழிந்துபோகாதபடி, தோலில் சொறி குஷ்டம் பிடிக்காதபடி நாம் தினமும் கிறிஸ்துவின் வசனத்தினால் கழுவி சுத்திகரித்து உள்ளான மனுஷனில் பரிசுத்தம் பெற்றுக்கொள்வோம். ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.     கர்த்தர் ஆசீர்வதிப்பார். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

 -தொடர்ச்சி நாளை.