தேவனுக்கே மகிமையுண்டாவதாக

ரோமர் 7: 22

உள்ளான மனுஷனுக்கேற்றபடி தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்மேல் பிரியமாயிருக்கிறேன்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபை அவரவர் தங்கள் பாவங்களை  அறிக்கையிட்டு கர்த்தரிடத்திலிருந்து சுத்திகரிப்பை பெற்றுக்கொள்ள வேண்டும்

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபை எவ்விதம் பாவ அழுக்கு கழுவி சுத்திகரிக்க வேண்டும் என்றும், சுவிசேஷத்தில் நாம் வாசிக்கும் போது பாவப்பெருக்கினால் வந்த குஷ்டரோகிகளை நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வார்த்தையினால் சுகமளித்ததை நாம் வாசிக்க முடிகிறது. மேலும் இயேசு கிறிஸ்து அவர்களிடம் உங்கள் விசுவாசம் உங்களை இரட்சித்தது என்று கூறுகிறார்.  மற்றும் மூன்றுவித குஷ்டரோகத்தை குறித்து தியானித்தோம்.  

ஆனால் அடுத்தபடியாக நாம் தியானிப்பது 

லேவியராகமம் 13:18-34

சரீரத்தின்மேல் புண் உண்டாயிருந்து ஆறிப்போய்,

அவ்விடத்திலே ஒரு வெள்ளைத்தடிப்பாவது சிவப்புக்கலந்த ஒரு வெள்ளைப்படராவது உண்டானால், அதை ஆசாரியனுக்குக் காண்பிக்கவேண்டும்.

ஆசாரியன் அதைப் பார்த்து, அவ்விடம் மற்றத் தோலைப்பார்க்கிலும் குழிந்திருக்கவும், அதின் மயிர் வெள்ளையாக மாறியிருக்கவும் கண்டால், ஆசாரியன் அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்க்கவேண்டும்; அது புண்ணில் எழும்பின குஷ்டம்.

ஆசாரியன் அதைப் பார்த்து, அதில் வெள்ளைமயிர் இல்லை என்றும், அது மற்றத் தோலைப்பார்க்கிலும் குழிந்திராமல் சுருங்கியிருக்கிறது என்றும் கண்டானாகில், அவனை ஏழுநாள் அடைத்துவைத்து,

அது தோலில் அதிகமாய்ப் படர்ந்திருக்கக்கண்டால், அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்; அது குஷ்டந்தான்.

அந்த வெள்ளைப்படர் அதிகப்படாமல், அவ்வளவில் நின்றிருக்குமாகில், அது புண்ணின் தழும்பாயிருக்கும்; ஆகையால், ஆசாரியன் அவனைச் சுத்தமுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்.

ஒருவனுடைய சரீரத்தின்மேல் நெருப்புப்பட்டதினாலே வெந்து, அந்த வேக்காடு ஆறிப்போன இடத்திலே சிவப்பான படராவது வெண்மையான படராவது உண்டானால்,

ஆசாரியன் அதைப் பார்க்கக்கடவன்; அந்தப் படரிலே மயிர் வெண்மையாக மாறி, அவ்விடம் மற்றத் தோலைப்பார்க்கிலும் பள்ளமாயிருந்தால், அது வேக்காட்டினால் எழும்பின குஷ்டம்; ஆகையால், ஆசாரியன் அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்; அது குஷ்டரோகந்தான்.

ஆசாரியன் அதைப் பார்க்கிறபோது, படரிலே வெள்ளைமயிர் இல்லை என்றும், அது மற்றத் தோலைப்பார்க்கிலும் குழிந்திராமல், சுருங்கியிருக்கிறது என்றும் கண்டானாகில், அவனை ஏழுநாள் அடைத்துவைத்து,

ஏழாம்நாளில் அவனைப் பார்க்கக்கடவன்; அது தோலில் அதிகமாய்ப் படர்ந்திருந்தால், ஆசாரியன் அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்; அது குஷ்டரோகம்.

படரானது தோலில் பெருகாமல், அவ்வளவில் நின்று சுருங்கியிருந்ததாகில், அது சூட்டினால் உண்டான தழும்பு; ஆசாரியன் அவனைச் சுத்தமுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்; அது சூட்டினால் வந்த வேக்காடு.

புருஷனுக்காகிலும் ஸ்திரீக்காகிலும் தலையிலாவது தாடியிலாவது ஒரு சொறி உண்டானால்,

ஆசாரியன் அதைப் பார்த்து, அவ்விடம் மற்றத் தோலைப்பார்க்கிலும் பள்ளமும் அதிலே மயிர் பொன் நிறமும் மிருதுவுமாயிருக்கக்கண்டால், ஆசாரியன் அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்; அது தலையிலும் தாடியிலும் உண்டாகிற சொறிகுஷ்டம்.

ஆசாரியன் அந்தச் சொறிகுஷ்டத்தைப் பார்க்கும்போது, அவ்விடம் மற்றத் தோலைப்பார்க்கிலும் பள்ளமாயிராமலும், அதிலே கறுத்தமயிர் இல்லாமலும் இருக்கக்கண்டால், ஆசாரியன் அவனை ஏழு நாள் அடைத்துவைத்து,

ஏழாம்நாளில் ஆசாரியன் அதைப் பார்க்கக்கடவன்; அந்தச் சொறி இடங்கொள்ளாமலும் அதிலே பொன்நிறமயிர் இல்லாமலும், அவ்விடம் மற்றத்தோலைப் பார்க்கிலும் பள்ளமில்லாமலும் இருந்தால்,

அந்தச் சொறியுள்ள இடந்தவிர, மற்ற யாவையும் அவன் சிரைத்துக்கொள்ளக்கடவன்; பின்பு, ஆசாரியன் இரண்டாந்தரம் அவனை ஏழு நாள் அடைத்துவைத்து,

ஏழாம் நாளில் அதைப் பார்க்கக்கடவன்; சொறி தோலில் இடங்கொள்ளாமலும், அவ்விடம் மற்றத் தோலைப்பார்க்கிலும் பள்ளமில்லாமலும் இருந்தால், ஆசாரியன் அவனைச் சுத்தமுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்; அவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்தபின் சுத்தமாயிருப்பான்.

ஒரு மனிதனுடைய சரீரத்தின்மேல் புண் உண்டாயிருந்து அது ஆறின பின்பு அந்த இடத்தில் வெள்ளை தடிப்போ அல்லது சிவப்பு கலந்த வெள்ளை படரோ உண்டானால் ஆசாரியனிடம் காண்பிக்க வேண்டும். பின்பு அந்த இடம் மற்ற தோலை பார்க்கிலும் குழிந்திருதால் அல்லது மயிர் வெளுத்திருந்தாலும் அவன் குற்றமுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்.    அது புண்ணில் எழும்பிய குஷ்டம்.  இவ்விதம் உள்ளவர்களை ஆசாரியன் ஏழு நாள் அடைத்து வைக்க வேண்டும். 

பின்பு ஆசாரியன் அதனை பார்த்து தோல் வெள்ளை மயிர் இல்லை என்றும் அதின் தோல் குழிந்திராமல் சுருங்கியிருந்தால் ஆசாரியன்  ஏழு நாள் அடைத்து வைத்து பின்பு அதனை சோதித்தறிய வேண்டும்.  அப்போது அது தோலில் அதிகமாக படர்ந்திருக்க கண்டால் அவனை தீட்டுள்ளவன் என்று தீர்க்கக்கடவர். அது குஷ்டந்தான். அந்த வெள்ளைபடர் படராமலும் அதே அளவில் நின்றிருந்தால் அது புண்ணின் தழும்பாயிருக்கும்.  அவ்விதம் உள்ளவர்கள் சுத்தமுள்ளவர்கள் என்று தீர்க்கப்படுகிறார்கள். 

அதே போல் ஒரு மனிதனுடைய சரீரத்தில் நெருப்புப்பட்டு வெந்துப்போனால் மேற்க்கூறப்பட்ட அடையாளம் போல் காணப்படும் என்று கூறப்படுகிறது.  இது நான்காம் வகையான குஷ்டம்.

பிரியமானவர்களே கர்த்தர் சொல்வது நம்முடைய ஒவ்வொரு  பாவத்திற்கும் ஏழுமுறை சுத்திகரிப்பை  தேவன் நமக்கு திருஷ்டாந்தப்படுத்துகிறார்.  ஒரு மனிதனுடைய வாழ்வில் குஷ்டரோகம் என்ற நோய் பாவத்தினால் வருகிறது என்பது நிச்சயம்.  இதனை கர்த்தர் எதற்காக திருஷ்டாந்தப்படுத்துகிறாரென்றால் ஒரு மணவாட்டி சபை பாவம் செய்தால் உள்ளான மனுஷனுடைய சாயல் இவ்விதமாக மாறும்.  

ஆதலால் நாம் அவரவருடைய பாவங்களை அவரவர் தனிதனியே அறிக்கைப்பண்ணி நாம் நம்முடைய உள்ளான மனுஷனில் பரிசுத்தம் பெற்றுக்கொள்ளும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.     கர்த்தர் ஆசீர்வதிப்பார். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

 -தொடர்ச்சி நாளை.