தேவனுக்கே மகிமையுண்டாவதாக

நீதிமொழிகள் 20: 9

என் இருதயத்தைச் சுத்தமாக்கினேன், என் பாவமறத் துப்புரவானேன் என்று சொல்லத்தக்கவன் யார்?

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபை பாவத்தினால் வருகிற குஷ்டரோகம் கண்டறிதல் 

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், ஜெயமெடுத்த மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமாவை, முதற்கனியாக கர்த்தருக்கு முழுமையும்  ஒப்புக்கொடுக்கும் படியாகவும்,  அதன் திருஷ்டாந்த விளக்கத்திற்காக அன்னாள் முதற்கனியாக பெற்றெடுத்த மகனாகிய சாமுவேலை பால்மறந்த பின்பு கர்த்தருக்காக ஆலயத்தில் ஒப்புக்கொடுக்கிறதை பார்க்கிறோம்.  

மேலும் கர்த்தர் ஆபிரகாமிடத்தில் உன் புத்திரனும், உன் ஏக சுதனும், உன் நேச குமாரனாகிய ஈசாக்கை அழைத்துக் கொண்டு போய் மோரியா தேசத்திலுள்ள மலைகள் ஒன்றின் மேல் தகன பலியாக பலியிடு என்ற போது, ஆபிரகாம் அந்த பிரகாரமே கீழ்படிந்து செய்தான். இவையெல்லாம் நம்முடைய ஆத்துமாவை தேவனுக்கென்று முழுமையும் ஒப்புக்கொடுத்து இரட்சிப்பை பெற்றுக்கொள்ளும்படியாக தேவன் நமக்கு திருஷ்டாந்தத்திற்கு என்று இவைகள் எல்லம் நமக்கு விளக்கி காட்டபடுகிறது என்று தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிக்கபோகிற காரியங்கள் என்னவென்றால் மனிதனுடைய சரீரத்தில் குஷ்டரோகமாகிய நோயை கண்டறிதலும், அந்த நோய் படராதபடி பாதுக்காக்கிற விதமும் தியானிக்க போகிறோம்.  கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி சொல்கிறது என்னவென்றால் 

லேவியராகமம் 13: 2-8

ஒரு மனிதனுடைய சரீரத்தின்மேல் குஷ்டரோகம்போலிருக்கிற ஒரு தடிப்பாவது அசறாவது வெள்ளைப்படராவது உண்டானால், அவன் ஆசாரியனாகிய ஆரோனிடத்திலாகிலும், ஆசாரியராகிய அவன் குமாரரில் ஒருவனிடத்திலாகிலும் கொண்டுவரப்படக்கடவன்.

அப்பொழுது ஆசாரியன் அவன் சரீரத்தின்மேல் இருக்கிற ரோகத்தைப் பார்க்கவேண்டும்; ரோகம் இருக்கும் இடத்தில் மயிர் வெளுத்தும், ரோகமுள்ள இடம் அவனுடைய மற்றச் சரீரத்தைப்பார்க்கிலும் அதிகமாய்க் குழிந்தும் இருந்தால் அது குஷ்டரோகம்; ஆசாரியன் அவனைப் பார்த்தபின்பு, அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்.

அவன் சரீரத்தின்மேல் வெள்ளைப் படர்ந்திருந்தாலும், அவ்விடம் அவனுடைய மற்றத் தோலைப்பார்க்கிலும் அதிக பள்ளமாயிராமலும், அதின் மயிர் வெள்ளையாக மாறாமலும் இருந்தால், ஆசாரியன் அவனை ஏழுநாள் அடைத்துவைத்து,

ஏழாம் நாளில் அவனைப் பார்க்கக்கடவன்; தோலில் ரோகம் அதிகப்படாமல், அவன் பார்வைக்கு ரோகம் நின்றிருந்தால், ஆசாரியன் இரண்டாந்தரம் அவனை ஏழுநாள் அடைத்துவைத்து,

இரண்டாந்தரம் அவனை ஏழாம்நாளில் பார்க்கக்கடவன்; தோலில் ரோகம் அதிகப்படாமல் சுருங்கியிருந்தால், ஆசாரியன் அவனைச் சுத்தமுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்; அது அசறு; அவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்துச் சுத்தமாயிருப்பானாக.

தன்னைச் சுத்தமுள்ளவன் என்று தீர்க்கிறதற்கு அவன் தன்னை ஆசாரியனுக்குக் காண்பித்தபின்பு, அசறு தோலில் அதிகமாய்ப் படர்ந்திருந்தால், அவன் மறுபடியும் ஆசாரியனுக்குத் தன்னைக் காண்பிக்கக்கடவன்.

அப்பொழுது அசறு தோலிலே படர்ந்தது என்று ஆசாரியன் கண்டால், ஆசாரியன் அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்; அது குஷ்டரோகம்.

மனுஷனுடைய சரீரத்தில் குஷ்டரோகம் போலிருக்கிற ஒரு தடிப்போ, அசறோ, வெள்ளை படரோ உண்டானால் அவனை ஆசாரியனிடத்திலோ, அவன் குமாரன் ஒருவரிடத்திலோ கொண்டு வரவேண்டும். ஆசாரியன் அந்த ரோகத்தை பார்த்த பின்பு, ரோகம் இருந்த இடம் வெளுத்தும் , மற்ற இடத்தை விட குழிந்தும் இருந்தால் அது குஷ்டரோகம்.  அவ்விதம் சரீரம் உள்ளவர்கள் தீட்டுள்ளவர்கள் என்று தீர்க்கக்கடவன் என்று கர்த்தர் சொல்கிறார்.   

ஆனால் அவன் சரீரம் வெள்ளை படர்ந்திருந்தாலும், ஆனால் ரோகம் இருக்கிற இடம் அந்த இடத்தை காட்டிலும் அதிக பள்ளமாயிராமலும், அதின் மயிர் வெள்ளையாக மாறாமலும் இருந்தால் ஏழு நாள் அடைத்துவைத்து, ஏழாம் நாளில் அவனை பார்க்க வேண்டும்.  தோலில் ரோகம் அதிகப்படாமல், நின்றிருந்தால் ஆசாரியன் அவனை இரண்டாந்தரம்  ஏழு நாள் அடைத்து வைத்து, பின்பு பார்க்க கடவன்.  தோலில் அதிகப்படாமல் சுருங்கியிருந்தால், ஆசாரியன் அவனை சுத்தமுள்ளவன் என்று தீர்த்து, பின்பு தன் வஸ்திரங்களைத் தோய்த்து சுத்தமாயிருப்பானாக.  சுத்தமுள்ளவன் என்று ஆசாரியனுக்கு காண்பித்த பின்பு அசறு தோலில் அதிகமாக படர்ந்திருந்தால் அவன் மறுபடியும் தன்னை ஆசாரியனுக்கு காண்பிக்க கடவன்.  அப்போது அந்த அசறு தோலிலே படரந்திருந்தால் அதனை ஆசாரியன் கண்டு அது குஷ்டரோகம் என்று தீர்க்கக்கடவன். 

இது முதல் வகை குஷ்டரோகம்.  குஷ்டரோகம்  என்பது ஒருவகை நோய். இந்த நோய் ஒரு இடத்தில் சரீரத்தில் காணப்பட்டால் சரீரம் முழுவதும் பரவும் தன்மை உள்ளது.  இதனை நமக்கு தேவன் எதற்கு காட்டுகிறாரென்றால் நம்முடைய உள்ளான மனுஷன்  பரிசுத்தப்படவேண்டும்.  இந்த நோயானது பாவத்தின் காரணமாகவோ, தேவன் சபித்தாலோ அல்லது மனம் மேட்டிமையானதின் காரணம் கர்த்தருக்கு சித்தமில்லாமல் தூபம் காட்டினாலோ தேவன் அடித்தாலும் குஷ்டரோகம் வரும்.  

முந்தின  நாட்களில், இயேசு கிறிஸ்து உலகத்தில் சுற்றி திரிந்த நாட்களில் குஷ்டரோகமாகிய நோய் ஒருவருக்கு வந்து விட்டாலும், அந்த நோயிலிருந்நு விடுதலையானாலும் எல்லாரும் தங்களை ஆசாரியருக்கு காண்பிக்க வேண்டும். ஆனால் இப்போது நம்முடைய ஆசாரியர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. ஆனால் நம்முடைய உள்ளான மனுஷன் பாவம், அக்கிரமம், மீறுதல் இவைகளால் அசுத்தமானால் நம்முடைய ஆத்துமாவின் தோல் அழுகி போகிறது. அதனால்தான் இஸ்ரவேல் ஜனங்களை எலும்பு என்றும், இந்த எலும்புகள் உயிரடையுமா என்றும் கேட்கிறார்.  

ஆனால் கர்த்தரின் ஆவி எலும்பில் பிரவேசித்தால் நரம்புகளை சேர்த்து மாம்சத்தை உண்டாக்கி, தோலினால் மூடுகிறது. பாவத்திலிருந்து விடுதலை ஆகும் போது இவ்விதம் சம்பவிக்கிறது.   அதனை காண்கிறவர் நம்முடைய ஆசாரியராகிய உயிர்தெழுந்த கிறிஸ்து. அவ்விதமான அழுக்கை கழுவ நாம் ஏழு முறை சுத்திகரிப்பை கர்த்தர் நமக்கு திருஷ்டாந்த படுத்துகிறார்.   மேலும் மனமேட்டிமையானது உசியா ராஜாவுக்கு வந்ததால்,தேவனுடைய அழைப்பை பெறாமல் தூபப்பீடத்தில் தூபம் காட்டும்படியாக தேவாலயத்திற்குள் பிரவேசித்தான், கர்த்தர் அவனை அடித்தார்.  

2 நாளாகமம் 26:16-21  

அவன் பலப்பட்டபோது, தனக்குக் கேடுண்டாகுமட்டும், அவனுடைய மனம் மேட்டிமையாகி, தன் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாக மீறுதல் செய்து, தூபபீடத்தின்மேல் தூபங்காட்ட கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசித்தான்.

ஆசாரியனாகிய அசரியாவும், அவனோடேகூடக் கர்த்தரின் ஆசாரியரான பராக்கிரமசாலிகளாகிய எண்பதுபேரும், அவன் பிறகே உட்பிரவேசித்து,

ராஜாவாகிய உசியாவோடு எதிர்த்து நின்று: உசியாவே, கர்த்தருக்குத் தூபங்காட்டுகிறது உமக்கு அடுத்ததல்ல; தூபங்காட்டுகிறது பரிசுத்தமாக்கப்பட்ட ஆரோனின் குமாரராகிய ஆசாரியருக்கே அடுக்கும்; பரிசுத்த ஸ்தலத்தை விட்டு வெளியே போம்; மீறுதல் செய்தீர்; இது தேவனாகிய கர்த்தராலே உமக்கு மேன்மையாக லபியாது என்றார்கள்.

அப்பொழுது உசியா கோபங்கொண்டான்; அவன் தூபகலசத்தைத் தன் கையிலே பிடித்து, ஆசாரியரோடே கோபமாய்ப் பேசுகிறபோது, ஆசாரியருக்கு முன்பாகக் கர்த்தருடைய ஆலயத்திலே தூபபீடத்தின் முன்நிற்கிற அவனுடைய நெற்றியிலே குஷ்டரோகம் தோன்றிற்று.

பிரதான ஆசாரியனாகிய அசரியாவும் சகல ஆசாரியரும் அவனைப் பார்க்கும்போது, இதோ, அவன் தன் நெற்றியிலே குஷ்டரோகம் பிடித்தவனென்று கண்டு, அவனைத் தீவிரமாய் அங்கேயிருந்து வெளிப்படப்பண்ணினார்கள்; கர்த்தர் தன்னை அடித்ததினால் அவன் தானும் வெளியேபோகத் தீவிரப்பட்டான்.

ராஜாவாகிய உசியா தன் மரணநாள்மட்டும் குஷ்டரோகியாயிருந்து, கர்த்தருடைய ஆலயத்துக்குப் புறம்பாக்கப்பட்டபடியினால், ஒரு தனித்த வீட்டிலே குஷ்டரோகியாய் வாசம்பண்ணினான்; அவன் குமாரனாகிய யோதாம் ராஜாவின் அரமனை விசாரிப்புக்காரனாயிருந்து, தேசத்தின் ஜனங்களை நியாயம்விசாரித்தான்.

இதனை நாம் வாசிக்கும் போது நமக்கு தெரியவருவதென்றால் மனமேட்டிமை உள்ள உள்ளம் பாவத்தால் நிறைந்து குஷ்டமாக காணப்படும்.  இதனை வாசிக்கிற அன்பானவர்களே நம்மை நாமே சோதித்து அறிந்து கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவி சுத்திகரிக்க பட்டு மீண்டும் புதுபித்து நம்மை தாழ்த்தி பாவத்திலிருந்து விடுதலை பெற்றுக்கொள்வோம்.  ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.    கர்த்தர் ஆசீர்வதிப்பார். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

 -தொடர்ச்சி நாளை.