தேவனுக்கே மகிமையுண்டாவதாக

வெளி 21: 7

ஜெயங்கொள்ளுகிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்; நான் அவன் தேவனாயிருப்பேன், அவன் என் குமாரனாயிருப்பான்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

ஜெயமெடுத்த மணவாட்டி சபை எவ்விதம் தேற்றப்படுகிறது

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், ஆண் பிள்ளைகளையாவது, பெண் பிள்ளைகளையாவது பெற்றவர்கள் பரிசுத்த சந்நிதியில் எப்போது வரவேண்டும் என்றும், எப்படி வரவேண்டும் என்றும் கர்த்தர் நமக்கு சில பிரமாணங்கள் கட்டளையாக வைத்திருக்கிறார்.  அதனை நாம் கைக்கொண்டால் மட்டுமே கர்த்தர் நம்மை சுத்திகரித்து அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் பங்குக் கொள்ள வைக்கிறார். மேலும் ஆண்பிள்ளை என்று சொல்லும் போது ஜெயமெடுத்த சபையையும், பெண் பிள்ளையை பெற்றெடுப்பது விசுவாசத்தில் உள்ள பலவீனத்தை காட்டுகிறது.   அதனால் ஆண் பிள்ளைகளை பெற்றெடுத்தவர்களுக்கு நாற்பது நாட்களும், பெண் பிள்ளைகளை பெற்றெடுத்தவர்களுக்கு எண்பது நாட்களும் அவர்களுடைய சுத்திகரிப்பின் நாளாகயிருக்கிறது.  

ஆண்பிள்ளைகளை பெற்றெடுத்தல் உலக வாழ்க்கையை ஜெயித்த கிறிஸ்துவுக்கு திருஷ்டாந்தப்படுத்தப்படுகிறது.  நம்முடைய ஆத்துமா கிறிஸ்துவின் உயிர்தெழுதலினால் கிருபையினால் இரட்சிக்கப்பட்டு கிறிஸ்துவின் சபையாக எழும்புகிறது. அதனால் தான் முதற்கனியாகிய  ஆண்பிள்ளையை பெற்றவர்கள் கர்த்தருக்கென்று குழந்தையை ஓப்புக் கொடுப்பது கர்த்தரின் கட்டளையாக இருக்கிறது.  அதனால் தான் அன்னாள் முதற்பலனை கர்த்தருக்கென்று காணிக்கையாக ஒப்புவிக்கிறாள்.   அவள் எப்படி ஒப்புவிக்கிறாள் என்றால் 

1சாமு 1: 26-28

அப்பொழுது அவள்: என் ஆண்டவனே, இங்கே உம்மண்டையிலே நின்று கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணின ஸ்திரீ நான் தான் என்று என் ஆண்டவனாகிய உம்முடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்.

இந்தப் பிள்ளைக்காக விண்ணப்பம்பண்ணினேன்; நான் கர்த்தரிடத்தில் கேட்ட என் விண்ணப்பத்தின்படி எனக்குக் கட்டளையிட்டார்.

ஆகையால் அவன் கர்த்தருக்கென்று கேட்கப்பட்டபடியினால், அவன் உயிரோடிருக்கும் சகல நாளும் அவனைக் கர்த்தருக்கே ஒப்புக்கொடுக்கிறேன் என்றாள்; அவன் அங்கே கர்த்தரைப் பணிந்துகொண்டான்.

அவ்விதமாக அவள் குழந்தையை கர்த்தருக்கென்று ஒப்புவித்த பிறகு 1சாமுவேல் 2:1-10

அப்பொழுது அன்னாள் ஜெபம்பண்ணி: என் இருதயம் கர்த்தருக்குள் களிகூருகிறது; என் கொம்பு கர்த்தருக்குள் உயர்ந்திருக்கிறது; என் பகைஞரின்மேல் என் வாய் திறந்திருக்கிறது; உம்முடைய இரட்சிப்பினாலே சந்தோஷப்படுகிறேன்.

கர்த்தரைப்போலப் பரிசுத்தமுள்ளவர் இல்லை; உம்மையல்லாமல் வேறொருவரும் இல்லை; எங்கள் தேவனைப்போல ஒரு கன்மலையும் இல்லை.

இனி மேட்டிமையான பேச்சைப் பேசாதிருங்கள்; அகந்தையான பேச்சு உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்; கர்த்தர் ஞானமுள்ள தேவன்; அவர் செய்கைகள் யதார்த்தமல்லவோ?

பலவான்களின் வில் முறிந்தது; தள்ளாடினவர்களோ பலத்தினால் இடைகட்டப்பட்டார்கள்.

திருப்தியாயிருந்தவர்கள் அப்பத்துக்காக கூலிவேலை செய்கிறார்கள்; பசியாயிருந்தவர்களோ இனிப் பசியாயிரார்கள்; மலடியாயிருந்தவள் ஏழு பெற்றாள்; அநேகம் பிள்ளைகளைப் பெற்றவளோ பலட்சயப்பட்டாள்.

கர்த்தர் கொல்லுகிறவரும் உயிர்ப்பிக்கிறவருமாயிருக்கிறார்; அவரே பாதாளத்தில் இறங்கவும் அதிலிருந்து ஏறவும்பண்ணுகிறவர்.

கர்த்தர் தரித்திரம் அடையச்செய்கிறவரும், ஐசுவரியம் அடையப்பண்ணுகிறவருமாயிருக்கிறார்; அவர் தாழ்த்துகிறவரும், உயர்த்துகிறவருமானவர்.

அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்; அவர்களைப் பிரபுக்களோடே உட்காரவும், மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கவும் பண்ணுகிறார்; பூமியின் அஸ்திபாரங்கள் கர்த்தருடையவைகள்; அவரே அவைகளின்மேல் பூச்சக்கரத்தை வைத்தார்.

அவர் தமது பரிசுத்தவான்களின் பாதங்களைக் காப்பார்; துன்மார்க்கர் இருளிலே மௌனமாவார்கள்; பெலத்தினால் ஒருவனும் மேற்கொள்வதில்லை.

கர்த்தரோடே வழக்காடுகிறவர்கள் நொறுக்கப்படுவார்கள்; வானத்திலிருந்து அவர்கள்மேல் முழங்குவார்; கர்த்தர் பூமியின் கடையாந்தரங்களை நியாயந்தீர்த்து, தாம் ஏற்படுத்தின ராஜாவுக்குப் பெலன் அளித்து, தாம் அபிஷேகம்பண்ணினவரின் கொம்பை உயரப்பண்ணுவார் என்று துதித்தாள்.

இந்த வசனங்களை நாம் தியானிக்கையில் அன்னாள் பெற்றெடுத்தது ஆத்மாவின் இரட்சிப்பும், அதனால் அவள் கர்த்தருக்குள் களிகூருகிறதையும், கர்த்தரின் தயயை நம்மேல் வருகிறதையும் சொல்லி, தேவனை துதிக்கிறாள்.  மேலும் 

1தீமோத்தேயு 2:15

அப்படியிருந்தும், தெளிந்த புத்தியோடு விசுவாசத்திலும் அன்பிலும் பரிசுத்தத்திலும் நிலைகொண்டிருந்தால், பிள்ளைப்பேற்றினாலே இரட்சிக்கப்படுவாள்.

இதன் கருத்துக்களை நாம் தியானிக்கும் போது பிள்ளைப்பேறு என்பது இரட்சிப்புக்கு திருஷ்டாந்தம்.  அல்லாமலும் 

ஏசாயா 66:7-14

பிரசவவேதனைப்படுமுன் பெற்றாள், கர்ப்பவேதனை வருமுன் ஆண்பிள்ளையைப் பெற்றாள்.

இப்படிப்பட்டவைகளைக் கேள்விப்பட்டது யார்? இப்படிப்பட்டவைகளைக் கண்டது யார்? ஒரு தேசத்துக்கு ஒரேநாளில் பிள்ளைப்பேறு வருமோ? ஒரு ஜாதி ஒருமிக்கப் பிறக்குமோ? சீயோனோவெனில், ஒருமிக்க வேதனைப்பட்டும், தன் குமாரரைப் பெற்றும் இருக்கிறது.

பெறப்பண்ணுகிறவராகிய நான் பெறச்செய்யாமல் இருப்பேனோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; பிரசவிக்கப்பண்ணுகிறவராகிய நான் பிரசவத்தைத் தடுப்பேனோ என்று உன் தேவன் சொல்லுகிறார்.

எருசலேமை நேசிக்கிற நீங்களெல்லாரும் அவளோடேகூடச் சந்தோஷப்பட்டு, அவளைக்குறித்துக் களிகூருங்கள்; அவள்நிமித்தம் துக்கித்திருந்த நீங்களெல்லாரும் அவளோடேகூட மிகவும் மகிழுங்கள்.

நீங்கள் அவளுடைய ஆறுதல்களின் முலைப்பாலை உண்டு திருப்தியாகி, நீங்கள் சூப்பிக்குடித்து, அவளுடைய மகிமையின் பிரகாசத்தினால் மனமகிழ்ச்சியாகுங்கள்;

கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் சமாதானத்தை ஒரு நதியைப்போலவும், ஜாதிகளின் மகிமையைப் புரண்டு ஓடுகிற ஆற்றைப்போலவும் அவளிடமாகப் பாயும்படி செய்கிறேன்; அப்பொழுது நீங்கள் முலைப்பால் குடிப்பீர்கள்; இடுப்பில் வைத்துச் சுமக்கப்படுவீர்கள்; முழங்காலில் வைத்துத் தாலாட்டப்படுவீர்கள்.

ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்; நீங்கள் எருசலேமிலே தேற்றப்படுவீர்கள்.

நீங்கள் அதைக் காணும்போது, உங்கள் இருதயம் மகிழ்ந்து, உங்கள் எலும்புகள் பசும்புல்லைப்போலச் செழிக்கும்; அப்பொழுது கர்த்தருடைய ஊழியக்காரரிடத்தில் அவருடைய கரமும், அவருடைய சத்துருக்களிடத்தில் அவருடைய சினமும் அறியப்படும்.

பிரசவ வேதனைபடுமுன் பெற்றாள், கர்ப்ப வேதனை வருமுன் பெற்றாள்,  இந்த இரண்டு கருத்துக்களும்  யாராலும் கேள்விபடவும் முடியாது, காணவும் முடியாது. அது போல் தேவன் நம்மிடத்தில் கேட்பது  ஒரே நாளில் பிள்ளை பேறு வருமோ? வராது. அதென்னவெனில் தேசம் என்பது நாம்தான்.  யாரும் ஒரே நாளில் ஆத்துமாவின் முழுமையான இரட்சிப்பை பெற்றுக் கொள்ள முடியாது.   ஆனால் சீயோனோவெனில் ஒருமிக்க வேதனை பட்டும், தன் குமாரரை பெற்றும் இருக்கிறது. இதன் பொருள் என்னவென்றால் கிறிஸ்து ஒருமிக்க வேதனை பட்டும் தன் குமாரரை பெற்றும் இருக்கிறார். அது சிலுவையில் பாடு மரணத்தோடு, தன் சந்ததியை கண்டு நீடித்த நாளாயிருப்பார் என்று எழுதப்பட்டிருக்கிறது.  அதனால் கர்த்தர் சொல்லுகிறது, பெறப்பண்ணுதலை பெறப்பண்ணாமல் இருக்கமாட்டார்.  பிரசவிக்க பண்ணுகிற கர்த்தர் பிரசவத்தை தடுக்க மாட்டார்.  

ஆதலால் யாவரும் தேவ வசனத்தை நன்றாக உட்கொண்டு, கீழ்படிந்து, அவரோடு கூட வசித்து ஆத்மாவில் மகிமையை பெற்றுக்கொண்டு மனமகிழ்ச்சியாயிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.    அவ்விதம் இருப்போமானால், சமாதானம் நதியை போல பாயும்.  நாம் அவருடைய வசனமாகிய பால் குடிப்போம்.  மேலும் நம்மை இடுப்பில் வைத்து சுமக்கிறார்.  முழங்காலில் தாலாட்டுகிறார்.  

இடுப்பில் வைத்து சுமந்து செல்கிறாரென்றால் நாம் அவர் பாதத்தில் உட்கார்ந்து தேவ வசனம் கேட்பதும், முழங்காலில் தாலாட்டுகிறாரென்றால் நாம் முழங்காலில் அவர் பாதத்தில் நின்று ஜெபிப்போமானால் கிறிஸ்து நம்மை தாலாட்டி வளர்த்துவார். நாம் விழுந்து விடாதபடி கிருபையில் அனுதினம் வளருவோம்.   ஒரு தாயானவள் குழந்தையை தேற்றுவது போல் நம்முடைய கஷ்டங்கள் வரும் போது நம்மை தேற்றுவார்.  அப்போது நம்முடைய இருதயம் மகிழும்.  நம்முடைய எலும்பாகிய ஆத்துமா பசும் புல்லை போல் செழிக்கும்.  இவையனைத்தும் கர்த்தரின் சபையை குறித்த சாட்சிகளாகும். 

கர்த்தர் தம்முடைய ஊழியக்காரர்களை இவ்விதமே ஆசீர்வதிக்கிறார். நாமும் இந்த ஆசீர்வாதங்களுக்காக ஒப்புக்கொடுப்போம்.  

ஜெபிப்போம்.     கர்த்தர் ஆசீர்வதிப்பார். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

 -தொடர்ச்சி நாளை.